6th tamil model notes of lesson
lesson plan February 23
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
எல்லாரும் இன்புற – கற்கண்டு, வாழ்வியல்
5.உட்பாடத்தலைப்பு
நால்வகைச்சொற்கள்,
திருக்குறள்
6.பக்கஎண்
7.கற்றல் விளைவுகள்
T-620 பல இதழ்களுக்காகவும்
நோக்கங்களுக்காகவும் சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதுதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
சொற்களின் வகைகளை
அறிந்து பயன்படுத்துதல்.
9.நுண்திறன்கள்
நால்வகைச் சொற்களை
அறியும் திறன்.
திருக்குறளின்
அறக்கருத்துகள் குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2022/01/3-1-naalvagai-sorkal-tamil-ilakanam.html
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_58.html
https://tamilthugal.blogspot.com/2023/01/3-1-6th-tamil-mindmap-term-3-unit-1_18.html
https://tamilthugal.blogspot.com/2020/08/6-3-1-6th-tamil-ilakanam-term-3-unit-1.html
https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video-6-3_9.html
https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_97.html
https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_6.html
https://tamilthugal.blogspot.com/2018/12/thiruvalluvar.html
11.ஆயத்தப்படுத்துதல்
பல்வேறு சொற்களைக்
கூறச்செய்தல்.
திருக்குறள் குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.
12.அறிமுகம்
நால்வகைச் சொற்களை
அறிமுகப்படுத்துதல்.
திருக்குறளின் சிறப்புகளைக் கூறுதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
சொல் குறித்துக் கூறுதல். பெயர், வினை, இடை, உரிச்சொற்கள் குறித்து
மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
உதாரணங்களுடன்
விளக்குதல்.
சொற்களைக்
கொடுத்து வகைகளை அறியச் செய்தல்.
நால்வகைச்
சொற்களை அறிந்து பயன்படுத்துதல்.
திருக்குறள் குறித்து
மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். குறள்களின் பொருளை விளக்குதல். வாழ்வைச்
செம்மைப்படுத்தும் அறம் குறித்து அறியச் செய்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பசியோடிருப்பவருக்கு உதவும் பண்பைப் பெறுதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
சொற்களின் வகைகளை மாணவர்களிடம் உணர்த்துதல். சொல் பற்றி
அறிந்து இனங்காணச் செய்தல். சொந்தமாகச் சொற்களை எழுதுதல்.
திருக்குறள் குறித்து விளக்குதல். குறள் கூறும் பல்வேறு
அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – சொல் என்றால் என்ன?
ஏழைகளுக்கு உதவி செய்வதே ..............................
ந.சி.வி – சொற்களின் வகைகளை எழுதுக.
உ.சி.வி – உனக்குப் பிடித்த குறளையும் அதன் பொருளையும் எழுதுக.
நீ அறிந்த உரிச்சொற்களை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும்
கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
சொல் குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.
திருக்குறள் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.


