கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, March 04, 2022

11ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு கால அட்டவணை ஏப்ரல் 2022 +1 revision exam time table 11th

பத்தாம் வகுப்பு தமிழ் திருப்புதல் மாதிரி வினாத்தாள் 2022 இயல் 1-6 tenth TAMIL MODEL QUESTION PAPER 3

பத்தாம் வகுப்பு இரண்டாம் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 3 விருதுநகர் மாவட்டம் 10th II revision exam model question paper 3 pdf


பதிவிறக்கு/DOWNLOAD

 TENTH TAMIL SECOND REVISION TEST MARCH 2022 MODEL QUESTION PAPER PDF👆

திருவிழாவைக் காண வருமாறு உறவினருக்குக் கடிதம் ஏழாம் வகுப்பு தமிழ் 7th tamil letter writing relatives inviting letter

என்னைக் கவர்ந்த நூல் திருக்குறள் ஏழாம் வகுப்பு தமிழ்க் கட்டுரை ENNAI KAVARNTHA NOOL THIRUKURAL 7TH KATTURAI

Wednesday, March 02, 2022

9ஆம் வகுப்பு தமிழ் இயல் 4, 5, 6 வினாடிவினா 25 மதிப்பெண்கள் 9th tamil online exam 25 marks quiz unit 4,5,6



தயாரிப்பு
திரு.மு.முத்துமுருகன், கல்லூரணி.

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு 2022 முக்கிய வினா விடைகள் pdf TENTH TAMIL SECOND REVISION EXAM IMPORTANT QUESTIONS AND ANSWERS

 

பதிவிறக்கு/DOWNLOAD

இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு ஒன்பதாம் வகுப்பு தமிழ்க் கட்டுரை 9th tamil katturai INA Tamilar panku

 இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் கட்டுரை வழி நிறுவுக

இந்திய தேசிய ராணுவப் படைத் தலைவராக இருந்த தில்லான் இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆன்மாவும் தமிழர்கள்தான் என்றார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியரிடம் சரணடைந்த ஆங்கிலேயப் படைகளில் இந்திய வீரர்களும் இருந்தனர். அவ் வீரர்களைக் கொண்டு 1942 இல் ஜப்பானியர்கள் மோகன் சிங் என்பவர் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் என்ற படையை உருவாக்கினர்.

மலேயா, பர்மா போன்ற நாடுகளுக்குப் பிழைப்பிற்காகச் சென்ற தமிழர்கள் பலர் இப் படையில் சேர்ந்தனர். அதில் ஒற்றர் படைப் பிரிவும் இருந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனியிலிருந்து 1943 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் நாள் சிங்கப்பூர் வந்து இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை ஏற்றார். அங்கு அவர் உரையாற்றிய மாபெரும் கூட்டத்தில் டெல்லி நோக்கி செல்லுங்கள் என போர் முழக்கம் செய்தார். தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி இந்திய தேசிய ராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்குரியவர் பசும்பொன் முத்துராமலிங்கனார்.                                                தமிழ்த்துகள்

நேதாஜி அமைத்த ஜான்சிராணி பெண்கள் படையில் கேப்டன் லட்சுமி, ஜானகி, ராஜாமணி முதலான தமிழர்கள் தலைசிறந்த தலைவர்களாக விளங்கினர். நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் கேப்டன் லட்சுமி, சிதம்பரம் லோகநாதன் முதலான தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். டோக்கியோ கேடட்ஸ் என்று சொல்லப்படக்கூடிய 45 வீர இளைஞர்கள் பெரும்பாலோர் தமிழர்களே. அதில் பயிற்சி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் கேப்டன் தாசன் ஆவார். சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராக பணியாற்றிய பெருமைக்குரியவர் இவர்.                                                           தமிழ்த்துகள்

மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என்று ஆங்கில பிரதமர் சர்ச்சில் கோபம் கொண்டார். அதற்கு இந்தத் தமிழினம் தான் ஆங்கிலேயரை அழிக்கும் என்று பதில் கூறினார் நேதாஜி. இந்திய தேசிய ராணுவம் 1944 மார்ச் 18 அன்று மணிப்பூரில் மூவண்ணக் கொடியை ஏற்றியது. அமெரிக்கர்களும் ஆங்கிலேயர்களும் சேர்ந்து இவ்வெற்றியை நிலைக்க விடவில்லை இராமு என்ற இளைஞர் 1944ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். நாட்டிற்காக உயிர் நீத்த முழு நிலவைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திகள் தான் என்றார் மரண தண்டனை பெற்ற அப்துல் காதர்.

இந்திய விடுதலைப் போராட்டத்திலும் சரி இந்திய தேசிய ராணுவத்திலும் சரி தன்மானமுள்ள தமிழர்களின் பங்கு மிகச்சிறப்பாக இருந்திருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.             தமிழ்த்துகள்

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி.

விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு தமிழ்க்கட்டுரை வகுப்பு 6 tamil katturai 6th standard tamil women freedom fighters

 

விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு

“பெண்ணடிமை பேசும் மட்டும் வாழும் திருநாட்டு

மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே" ஆம்! இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கு வித்திட்ட எண்ணற்ற தியாகிகளின் வரிசையில் தமிழகத்திற்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் உண்டு. அதிலும் தமிழகப் பெண்களின் பங்கு போற்றுதற்குரியது. வணிகம் செய்ய வந்த வெள்ளையர்கள் சூழ்ச்சியால் தன் கணவர் முத்துவடுகநாதரைக் கொன்றுவிட்டதைக்கண்டு வெள்ளையரை வென்று வஞ்சம் தீர்ப்பேன் என்று சூளுரைத்தார் வீரமங்கை வேலுநாச்சியார். மருதிருவரின் உதவியோடு ஹைதர் அலியின் படை உதவி கொண்டு பரங்கியரை வென்று பழி தீர்த்தார்.                   தமிழ்த்துகள்

காந்தியடிகளுக்கு தென்னாப்பிரிக்காவில் தமிழ் கற்றுக் கொடுத்தார் தில்லையாடி வள்ளியம்மை. அறப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்களில் முக்கியமானவர் அவர். காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கம் மற்றும் நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் கடலூர் அஞ்சலை அம்மாளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். தன்னைச் சிறையில் அடைத்த போதும் தன்னுடைய செல்லப் பெண் அம்மாக்கண்ணு என்பவரைச் சிறையிலேயே வளர்த்தார். இதைக் கேள்விப்பட்ட காந்தியடிகள் நேரில் சென்று சந்தித்தார். அம்மாக் கண்ணுக்கு காந்தியடிகள் லீலாவதி என்று பெயரிட்டு வளர்த்தார்.                                         தமிழ்த்துகள்

1931இல் மகளிர் காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார் கடலூர் அஞ்சலை அம்மாள். காந்தியடிகள் தமிழ்நாடு வந்த போது அவரைச் சந்திக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. மாறுவேடத்தில் குதிரை வண்டியில் சென்று சந்தித்தார் அஞ்சலை அம்மாள். இதனால் அவரைத் தென்னாட்டின் ஜான்சிராணி என்று அழைக்கிறோம். அதுமட்டுமல்ல தேவதாசி முறை ஒழிப்பிற்குக் காரணமாக இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் 1925இல் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.                                                        தமிழ்த்துகள்

அசலாம்பிகை அம்மையார் தன்னுடைய சகோதரி ருக்மணி அவர்களுடன் சேர்ந்து இரட்டைப்புலவர்களாக வலம் வந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒளவை என்று பெயர் பெற்றார். அவர் காந்தியைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு காந்திபுராணம் இயற்றியவர். தேசப்பிதா என்று நாமெல்லாம் அழைக்கும் முன்னரே காந்தியடிகளுக்குப் புகழ்மாலை சூட்டி பெருமைப்படுத்தியவர். கள்ளுக்கடை மறியல் போராட்டம் கதர் இயக்கம் என்று தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பெரியாருக்கு அவருடைய சகோதரி கண்ணம்மையாரும் நாகம்மையாரும் இரு கண்களாகச் செயல்பட்டனர். அம்புஜத்தம்மாள் என்பவர் வை.மு.கோதைநாயகி, ருக்மணி லட்சுமிபதியுடன் இணைந்து காந்தியடிகள் அறிவித்த பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.           தமிழ்த்துகள்

இம் என்றால் வனவாசம் ஏன்? என்றால் சிறைவாசம் என்று இருந்த அந்தக் காலகட்டத்தில் சென்னை மாநகராட்சியின் துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்குத் திறமையாளராக இருந்தார் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள். ரங்கூனில் இருந்து வந்து தமிழகத்தில் இந்தி எதிர்ப்பைச் செய்த போராளி இவர். மணலூர் மணியம்மா என்பவரின் தியாகம் இவர்களில் இருந்து வேறுபட்டது. ஆம்! காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து பாடுபட்டவர். பண்ணையடிமைகளை மீட்டெடுக்கவும் விவசாயக் கூலிகள் நிலை உயரவும் கையில் சிலம்போடு ஆண் போல் எங்கும் கூட்டங்கள் நடத்தி வெள்ளையரையும் பெருந்தனக்காரர்களையும் மிரட்டினார். பொதுவுடமைக் கட்சியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக தஞ்சைப்பகுதியில் உலா வந்தார்.                      தமிழ்த்துகள்

சரஸ்வதி ராஜாமணி அம்மையார் பத்து வயதுச் சிறுமியாக இருக்கும் போதே போராட்டத்தில் ஈடுபட்டார். கொல்கத்தாவில் இருந்து கிளம்பிய புரட்சிப்புயல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்திற்கு நிதி உதவி கோரிய போது தன்னுடைய நகைகளை எல்லாம் அவருக்குத் தந்து உதவினார். நகையைக் கொடுத்தவர் பத்து வயதுச் சிறுமி தான் என்று நேதாஜி கேள்வியுற்ற போது நகைகளைத் திரும்ப அளிக்க முன்வந்தார். ஆனால் சரஸ்வதியோ மறுத்துவிட்டார். பின்னாளில் இந்திய தேசிய ராணுவத்தின் உளவுப் பிரிவில் போராளியாக அவர் சேர்ந்தார்.          தமிழ்த்துகள்

இன்னும் எத்தனை எத்தனை பெண்மணிகள் தமிழகத்திலிருந்து வெள்ளையரை எதிர்க்கக் கிளம்பினார்கள் என்பது கணக்கில் அடங்காதது. காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் ஒவ்வொரு முறையும் அறப்போருக்கு அழைக்கும் போதெல்லாம் பெரும் பங்காய் நம் தமிழகப் பெண்கள் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றிருக்கிறார்கள்.

புலியை முறத்தால் விரட்டிய வீரப்பெண்கள் பரம்பரையில் வந்தவர்கள் இவர்கள் முதல் நாள் போரில் தந்தை இறந்துவிட அடுத்த நாள் போரில் தன் கணவன் இறந்து விட அன்றைய போருக்கு விளையாடிக் கொண்டிருக்கும் தன் மகனின் கையில் வாளைக் கொடுத்து போருக்குச் செல் என்று சொன்ன புறநானூற்றுத் தாயின் வழி வந்தவர்கள் .

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்;                               தமிழ்த்துகள்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற புரட்சிக் கனல் சுட்டெரித்த பாவேந்தரின் வரிகளுக்கு இலக்கணமான இவ்வீரப் பெண்களின் நினைவைப் போற்றுவோம் தமிழர்கள் வீரத்திலும் ஈரத்திலும் வித்தாய் இருக்கிறார்கள் என்பதை இவ்வுலகிற்குச் சொல்வோம்!

-     கவிஞர் கல்லூரணி மு.முத்து முருகன்.                 தமிழ்த்துகள்

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 6th model notes of lesson tamil ஆசிய ஜோதி

7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 7th model notes of lesson tamil கண்ணியமிகு தலைவர் காயிதே மில்லத்

8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 8th model notes of lesson tamil சட்டமேதை அம்பேத்கர்

9ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 9th model notes of lesson tamil சீவக சிந்தாமணி

12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை மே 2022 hsc 12th +2 govt public exam time table May 22

11ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை மே 2022 11th +1 govt public exam time table May 22

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை மே 2022 10th sslc govt public exam time table May 22

10,11,12 பொதுத் தேர்வு கால அட்டவணை 2021-22 10th +1 +2 public exam time table

தமிழ்த்துகள்

Blog Archive