கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, March 02, 2022

இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு ஒன்பதாம் வகுப்பு தமிழ்க் கட்டுரை 9th tamil katturai INA Tamilar panku

 இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் கட்டுரை வழி நிறுவுக

இந்திய தேசிய ராணுவப் படைத் தலைவராக இருந்த தில்லான் இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆன்மாவும் தமிழர்கள்தான் என்றார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியரிடம் சரணடைந்த ஆங்கிலேயப் படைகளில் இந்திய வீரர்களும் இருந்தனர். அவ் வீரர்களைக் கொண்டு 1942 இல் ஜப்பானியர்கள் மோகன் சிங் என்பவர் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் என்ற படையை உருவாக்கினர்.

மலேயா, பர்மா போன்ற நாடுகளுக்குப் பிழைப்பிற்காகச் சென்ற தமிழர்கள் பலர் இப் படையில் சேர்ந்தனர். அதில் ஒற்றர் படைப் பிரிவும் இருந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனியிலிருந்து 1943 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் நாள் சிங்கப்பூர் வந்து இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை ஏற்றார். அங்கு அவர் உரையாற்றிய மாபெரும் கூட்டத்தில் டெல்லி நோக்கி செல்லுங்கள் என போர் முழக்கம் செய்தார். தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி இந்திய தேசிய ராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்குரியவர் பசும்பொன் முத்துராமலிங்கனார்.                                                தமிழ்த்துகள்

நேதாஜி அமைத்த ஜான்சிராணி பெண்கள் படையில் கேப்டன் லட்சுமி, ஜானகி, ராஜாமணி முதலான தமிழர்கள் தலைசிறந்த தலைவர்களாக விளங்கினர். நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் கேப்டன் லட்சுமி, சிதம்பரம் லோகநாதன் முதலான தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். டோக்கியோ கேடட்ஸ் என்று சொல்லப்படக்கூடிய 45 வீர இளைஞர்கள் பெரும்பாலோர் தமிழர்களே. அதில் பயிற்சி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் கேப்டன் தாசன் ஆவார். சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராக பணியாற்றிய பெருமைக்குரியவர் இவர்.                                                           தமிழ்த்துகள்

மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என்று ஆங்கில பிரதமர் சர்ச்சில் கோபம் கொண்டார். அதற்கு இந்தத் தமிழினம் தான் ஆங்கிலேயரை அழிக்கும் என்று பதில் கூறினார் நேதாஜி. இந்திய தேசிய ராணுவம் 1944 மார்ச் 18 அன்று மணிப்பூரில் மூவண்ணக் கொடியை ஏற்றியது. அமெரிக்கர்களும் ஆங்கிலேயர்களும் சேர்ந்து இவ்வெற்றியை நிலைக்க விடவில்லை இராமு என்ற இளைஞர் 1944ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். நாட்டிற்காக உயிர் நீத்த முழு நிலவைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திகள் தான் என்றார் மரண தண்டனை பெற்ற அப்துல் காதர்.

இந்திய விடுதலைப் போராட்டத்திலும் சரி இந்திய தேசிய ராணுவத்திலும் சரி தன்மானமுள்ள தமிழர்களின் பங்கு மிகச்சிறப்பாக இருந்திருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.             தமிழ்த்துகள்

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி.

தமிழ்த்துகள்

Blog Archive