விடுதலைப்
போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு
“பெண்ணடிமை
பேசும் மட்டும் வாழும் திருநாட்டு
மண்ணடிமை
தீர்ந்து வருதல் முயற்கொம்பே" ஆம்! இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கு வித்திட்ட எண்ணற்ற தியாகிகளின் வரிசையில்
தமிழகத்திற்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் உண்டு. அதிலும் தமிழகப் பெண்களின் பங்கு போற்றுதற்குரியது.
வணிகம் செய்ய வந்த வெள்ளையர்கள் சூழ்ச்சியால் தன் கணவர் முத்துவடுகநாதரைக் கொன்றுவிட்டதைக்கண்டு
வெள்ளையரை வென்று வஞ்சம் தீர்ப்பேன் என்று சூளுரைத்தார் வீரமங்கை வேலுநாச்சியார். மருதிருவரின் உதவியோடு ஹைதர் அலியின் படை உதவி
கொண்டு பரங்கியரை வென்று பழி தீர்த்தார். தமிழ்த்துகள்
காந்தியடிகளுக்கு தென்னாப்பிரிக்காவில் தமிழ் கற்றுக் கொடுத்தார் தில்லையாடி வள்ளியம்மை. அறப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்களில்
முக்கியமானவர் அவர். காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கம் மற்றும் நீலன் சிலை
அகற்றும் போராட்டத்தில் கடலூர்
அஞ்சலை அம்மாளின் பங்கு
மிகவும் முக்கியமானதாகும். தன்னைச் சிறையில் அடைத்த போதும் தன்னுடைய செல்லப் பெண் அம்மாக்கண்ணு என்பவரைச் சிறையிலேயே வளர்த்தார். இதைக் கேள்விப்பட்ட
காந்தியடிகள் நேரில் சென்று சந்தித்தார். அம்மாக் கண்ணுக்கு காந்தியடிகள் லீலாவதி என்று பெயரிட்டு வளர்த்தார். தமிழ்த்துகள்
1931இல்
மகளிர் காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்
கடலூர் அஞ்சலை அம்மாள். காந்தியடிகள் தமிழ்நாடு வந்த போது அவரைச் சந்திக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
மாறுவேடத்தில் குதிரை வண்டியில் சென்று சந்தித்தார் அஞ்சலை அம்மாள். இதனால் அவரைத்
தென்னாட்டின் ஜான்சிராணி என்று அழைக்கிறோம். அதுமட்டுமல்ல தேவதாசி முறை
ஒழிப்பிற்குக் காரணமாக இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் 1925இல் பெரியாருடன் இணைந்து
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார். தமிழ்த்துகள்
அசலாம்பிகை
அம்மையார் தன்னுடைய
சகோதரி ருக்மணி அவர்களுடன் சேர்ந்து இரட்டைப்புலவர்களாக வலம்
வந்தார். பத்தொன்பதாம்
நூற்றாண்டின் ஒளவை என்று பெயர் பெற்றார். அவர் காந்தியைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு காந்திபுராணம் இயற்றியவர். தேசப்பிதா என்று நாமெல்லாம் அழைக்கும்
முன்னரே காந்தியடிகளுக்குப் புகழ்மாலை சூட்டி பெருமைப்படுத்தியவர். கள்ளுக்கடை மறியல்
போராட்டம் கதர் இயக்கம் என்று தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பெரியாருக்கு அவருடைய சகோதரி
கண்ணம்மையாரும் நாகம்மையாரும் இரு கண்களாகச் செயல்பட்டனர். அம்புஜத்தம்மாள் என்பவர் வை.மு.கோதைநாயகி, ருக்மணி லட்சுமிபதியுடன்
இணைந்து காந்தியடிகள் அறிவித்த பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தமிழ்த்துகள்
இம் என்றால் வனவாசம் ஏன்? என்றால் சிறைவாசம் என்று இருந்த அந்தக் காலகட்டத்தில்
சென்னை மாநகராட்சியின் துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்குத் திறமையாளராக
இருந்தார் அன்னை மீனாம்பாள்
சிவராஜ் அவர்கள்.
ரங்கூனில் இருந்து வந்து தமிழகத்தில் இந்தி எதிர்ப்பைச் செய்த போராளி இவர். மணலூர் மணியம்மா என்பவரின் தியாகம் இவர்களில் இருந்து வேறுபட்டது.
ஆம்! காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து பாடுபட்டவர். பண்ணையடிமைகளை மீட்டெடுக்கவும்
விவசாயக் கூலிகள் நிலை உயரவும் கையில் சிலம்போடு ஆண் போல் எங்கும் கூட்டங்கள் நடத்தி
வெள்ளையரையும் பெருந்தனக்காரர்களையும் மிரட்டினார். பொதுவுடமைக் கட்சியின் அசைக்க முடியாத
நம்பிக்கையாக தஞ்சைப்பகுதியில் உலா வந்தார். தமிழ்த்துகள்
சரஸ்வதி
ராஜாமணி அம்மையார் பத்து வயதுச் சிறுமியாக இருக்கும் போதே போராட்டத்தில் ஈடுபட்டார். கொல்கத்தாவில்
இருந்து கிளம்பிய புரட்சிப்புயல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்திற்கு
நிதி உதவி கோரிய போது தன்னுடைய நகைகளை எல்லாம் அவருக்குத் தந்து உதவினார். நகையைக்
கொடுத்தவர் பத்து வயதுச் சிறுமி தான் என்று நேதாஜி கேள்வியுற்ற போது நகைகளைத் திரும்ப அளிக்க முன்வந்தார். ஆனால்
சரஸ்வதியோ மறுத்துவிட்டார். பின்னாளில் இந்திய தேசிய ராணுவத்தின் உளவுப் பிரிவில் போராளியாக
அவர் சேர்ந்தார். தமிழ்த்துகள்
இன்னும் எத்தனை எத்தனை பெண்மணிகள் தமிழகத்திலிருந்து வெள்ளையரை எதிர்க்கக் கிளம்பினார்கள்
என்பது கணக்கில் அடங்காதது. காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் ஒவ்வொரு முறையும் அறப்போருக்கு
அழைக்கும் போதெல்லாம் பெரும் பங்காய் நம் தமிழகப் பெண்கள் போராட்டங்களில் கலந்துகொண்டு
சிறை சென்றிருக்கிறார்கள்.
புலியை
முறத்தால் விரட்டிய வீரப்பெண்கள் பரம்பரையில் வந்தவர்கள் இவர்கள் முதல் நாள் போரில் தந்தை இறந்துவிட
அடுத்த நாள் போரில் தன் கணவன் இறந்து விட அன்றைய போருக்கு விளையாடிக் கொண்டிருக்கும்
தன் மகனின் கையில் வாளைக் கொடுத்து போருக்குச் செல் என்று சொன்ன புறநானூற்றுத் தாயின் வழி வந்தவர்கள் .
எங்கள்
பகைவர் எங்கோ மறைந்தார்; தமிழ்த்துகள்
இங்குள்ள
தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற புரட்சிக் கனல் சுட்டெரித்த பாவேந்தரின் வரிகளுக்கு இலக்கணமான இவ்வீரப் பெண்களின் நினைவைப்
போற்றுவோம் தமிழர்கள் வீரத்திலும் ஈரத்திலும் வித்தாய் இருக்கிறார்கள் என்பதை இவ்வுலகிற்குச்
சொல்வோம்!
- கவிஞர் கல்லூரணி மு.முத்து முருகன். தமிழ்த்துகள்