கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, September 02, 2024

நான் ஆசிரியரானால்... தமிழ்க் கட்டுரை, பேச்சு ஆசிரியர் தினம்

 If I am a teacher... Tamil Essay, Speech Teacher's Day

நான் ஆசிரியரானால்...

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

முன்னுரை                     தமிழ்த்துகள்

கேடில் விழுச்செல்வம் கல்வி என்றும் கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்றும் கூறுகிறார் திருவள்ளுவர். கல்வியைப் பரப்புகிறவன் தேவனால் போற்றப்படுகிறான் என்கிறது விவிலியம். கல்வியைப் பரப்புகிறவன் பாவங்களிலிருந்து விடுதலை பெறுகிறான் என்பது நபிகள் வாக்கு. எனவே நான் ஆசிரியர் பணியை விரும்புகிறேன். நான் ஆசிரியரானால் எவ்வாறெல்லாம் செயல்படுவேன் என்பதை இக்கட்டுரையில் காண்போம். தமிழ்த்துகள்

ஒழுக்கத்திற்கு முதலிடம்                   தமிழ்த்துகள்

            ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்றார் வள்ளுவர். ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை என்கிறது முதுமொழிக்காஞ்சி. எனவே மாணவர்களை ஒழுக்கத்தில் சிறந்து விளங்கச்செய்வேன். ஒழுக்கம் தவறும் மாணவரை பெற்றோர் உதவியுடன் கண்டிக்கத் தயங்கமாட்டேன்.         தமிழ்த்துகள்

நற்பண்புகள் தமிழ்த்துகள்

காலந்தவறாமை, கடமையுணர்வு, நேர்மை, பணிவு, நல்லன செய்வதில் துணிவு, பிறரிடம் அன்பு, சுறுசுறுப்பு போன்ற நற்பண்புகளை மாணவரிடையே வளரச் செய்வேன். இயன்றவரை பிறருக்கு உதவுதலை இயல்பான குணமாக மாற்றுவேன். நற்பண்புகள் நிறைந்த மாணவர்களை உருவாக்க முயல்வேன்.             தமிழ்த்துகள்

படிப்பில் கவனம்                       தமிழ்த்துகள்

மாணாக்கர் சிலரின் உடல்மட்டும் வகுப்பில் இருக்கும். கண்ணும், கருத்தும். எங்கெங்கோ அலையும். எனவே மாணவர்களை ஒழுங்காக அமரச் செய்து பாடத்தைக் கவனிக்கச் செய்வேன். படிப்பில் முழு கவனமும் செலுத்துமாறு கற்றுத் தருவேன். மாணவர்கள் விரும்பும் முறையில் கற்பிப்பேன்.                     தமிழ்த்துகள்

பயிற்சி              தமிழ்த்துகள்

கற்பித்த பாடங்களில் இருந்து நாள்தோறும் பயிற்சிகளைக் கொடுத்து செய்து வருமாறு கூறுவேன். வாய்மொழித் தேர்வுகளும் வாரத் தேர்வுகளும் நடத்தி, மாணவர்கள் பாடங்களில் தெளிவுபெற பயிற்சி அளிப்பேன்.

பெற்றோருடன் தொடர்பு                    தமிழ்த்துகள்

படிப்பில் பின் தங்கும் மாணவர்களை முன்னேற்ற அவர்களின் பெற்றோரை அழைத்து வருமாறு கூறுவேன். அவர்களிடம் மாணவர்கள் நிலை பற்றிக் கூறி, அவர்களின் ஒத்துழைப்புடன் மாணவரின் கல்வி முன்னேற்றத்திற்கு வழி செய்வேன். இல்லத்தில் மாணவர்களின் கற்றலைக் கவனிக்க பெற்றோருக்கு வழிகாட்டுவேன். தமிழ்த்துகள்

பிற சாதனைகள்                                       தமிழ்த்துகள்

            கல்வித்துறையின் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்கச் செய்து வெற்றி பெற வழிகாட்டுவேன். ஊக்கத்தொகை பெற நடைபெறும் திறனறித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றிபெற பயிற்சி அளிப்பேன். கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற பிற சாதனைகளைச் செய்ய அனைத்து ஆசிரியர்களுடன் இணைந்து பயிற்சி அளிப்பேன். மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த உதவுவேன்.                    தமிழ்த்துகள்

முடிவுரை                         தமிழ்த்துகள்

'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதற்கேற்ப ஆசிரியர் பணியாற்றி என் மாணாக்கரை அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கச் செய்வேன். ஆசிரியர் பணி அறப் பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்பார்கள். எனவே ஆசிரியர் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை மனப்பான்மையுடன் செய்து சிறந்த தலைமுறையை உருவாக்குவேன்.    தமிழ்த்துகள்

 

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்

தமிழ்ப் பொன்மொழி நம்பிக்கை tamil golden words quotes hope education

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்02-09-2024. திங்கள்.

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

02-09-2024. திங்கள்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 
இயல் : அரசியல் ;

அதிகாரம் : இடுக்கண் அழியாமை; 
குறள் எண் : 624.

குறள் :

மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்பாடு உடைத்து.

பொருள்:

தடைபட்ட இடங்களில் எல்லாம்,(வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்ற துன்பமே துன்பப்படுவதாகும்.

பழமொழி :

உள்ளங்கை நெல்லிக்கனி போல. 
As clear as a bell.

இரண்டொழுக்க பண்புகள்:

1) எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.

2) ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.

பொன்மொழி :

* வெற்றி என்பது நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு ஏறினீர்கள் என்பதல்ல, ஆனால் நீங்கள் எப்படி உலகிற்கு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதாகும். 
- ராய் டி. பென்னட்.

பொது அறிவு:

1. அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை?

27

2. இனிமைத் தமிழ் மொழி எது?-எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?

பாரதிதாசன்

English words & meanings

Huge -பெரும்

Colossal -மாபெரும்

வேளாண்மையும் வாழ்வும் :

மழைக்குப் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. "தூறல்" - பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.

செப்டம்பர் 02

உலகத் தேங்காய் நாள்

உலகத் தேங்காய் நாள் (world coconut day) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.

✓ 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும
மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது. வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது

நீதிக்கதை - 
தன்னம்பிக்கை உள்ள தவளை

ஒரு அழகிய குளத்தின் அருகில் இரண்டு தவளைகள் வசித்து வந்தன. அவர்கள் நல்ல நண்பர்களாக ஒன்றாக வளர்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் வயலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது மழை வந்தது. அப்போது பெரிய தவளை, "நண்பா மிகவும் மழை பெய்கிறது எனவே எங்கேயாவது ஒதுங்குவதற்கு இடம் தேடலாம்" என்றது. அடுத்த தவளை அதற்கு சம்மதித்தது. மழையில் இருந்து ஒதுங்க, அவர்கள் இருவரும் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் நுழைந்தன. அந்த வீட்டின் சமையல் அறைக்குள் நுழைந்தனர். புது இடம் மிகவும் குழப்பமாக இருந்ததால் இரு தவளைகளும் அங்கேயும் இங்கேயும் குதித்துக்கொண்டு இருந்தன.

திடீரென்று நிலைதடுமாறி நிறைய பால் இருந்த பெரிய பாத்திரத்திற்குள் இரு தவளைகளும் விழுந்தன. எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் அந்த பாத்திரத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை. முயற்சியிலிருந்து தோல்வியடைந்த ஒரு தவளை இனி வெளியே வர முடியும் என்னும் நம்பிக்கையை இழந்தது. இறுதியில் அந்த தவளை பாலில் மூழ்கி இறந்து விட்டது.

மற்றோர் தவளை தன்னம்பிக்கையை இழக்காமல் பாலில் நீந்திக் கொண்டே இருந்தது. பாலில் விடாமல் குதித்துக் கொண்டு மீண்டும் முயற்சியை தொடர்ந்தது.அப்போது பால் தயிராக மாறத் தொடங்கியது . சிறிது நேரம் கழித்து தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதித்து தப்பியது.

நீதி : முயற்சி திருவினையாக்கும்.

இன்றைய செய்திகள் - 02.09.2024

ரூ.400 கோடி முதலீடு; 500 பேருக்கு வேலைவாய்ப்பு: அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்.

* தென்னிந்திய மாநிலங்களில் தமிழகத்தில் தான் அதிகளவிலான நபர்கள் இந்தி மொழியை கற்றுக் கொள்வதாக இந்தி பிரச்சார சபா தகவல் தெரிவித்துள்ளது.

* சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி மற்றும் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலங்கானாவில் கனமழையால் கடும் பாதிப்பு: 8 பேர் பலி; ரயில்கள் ரத்து.

சூரியனை விட 5 லட்சம் கோடி மடங்கு அதிக பிரகாசத்துடன் ஒளிரும் தன்மை கொண்ட பெரிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

*அமெரிக்க ஓபன் டென்னிஸ்: போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்.

துரந்த் கோப்பை கால்பந்து: மோகன் பகானை வீழ்த்தி நார்த்ஈஸ்ட் யுனைடெட் சாம்பியன்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 19 சிக்சர்கள் அடித்து 165 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்த ஆயுஷ் பதோனி.

Today's Headlines - 02.09.2024

400 crore investment; Employment for 500 people: Agreement signed in presence of CM Stalin in USA.

The Hindi Prachara Sabha has reported that Tamil Nadu has the highest number of people learning Hindi among the South Indian states.

Following the warning from Chennai Meteorological Centre, storm warning flag number 1 has been hoisted at Thoothukudi and Pampan port.

Heavy rains hit Andhra, Telangana: 8 dead; Trains were cancelled.

Scientists have discovered a supermassive black hole with a luminosity of 5 trillion times that of the Sun.

US Open Tennis: Bopanna pair advanced to quarter finals.

Durant Cup Football: Northeast United thrash Mohan Baghan and bags championship.

Ayush Badoni has created a new world record in the history of T20 cricket by hitting 19 sixes and scoring 165 runs.

Sunday, September 01, 2024

நான் ஆசிரியரானால்... கவிதை, கட்டுரை, பேச்சு ஆசிரியர் தினம்


teachers day special If I were a teacher

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 9

6th Tamil Model Notes of lesson

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

09-09-2024 முதல் 13-09-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

1-3

மதிப்பீடு

          முதல் பருவ தொகுத்தறித் தேர்விற்கு மாணவர்களைத் தயார் செய்தல்.

திருப்புதல் வினாக்கள்

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                 தமிழ்த்துகள்

1. அவ்வுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .................................

அ அவ்வு + ருவம்    ஆ அ + உருவம்      இ அவ் + வுருவம்               ஈ அ + வுருவம்

2. ஏற்றத் தாழ்வற்ற .............................. அமைய வேண்டும்.

அ. சமூகம்               ஆ.வீடு                   இ.நாடு                             ஈ.தெரு

3. ஒருவர்க்குச் சிறந்த அணி ............          தமிழ்த்துகள்

அ. மாலை              ஆ.காதணி              இ.இன்சொல்                    ஈ.வன்சொல்

4. சித்தம் என்பதன் பொருள் .................................

அ. உள்ளம்             ஆ.மணம்               இ.குணம்                          ஈ.வனம்

ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புக.

5. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை .................     தமிழ்த்துகள்

6. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ..........................

இ. பொருத்துக.

7. விளைவுக்கு                  -        பால்

8. அறிவுக்கு                     -        வேல்

9. இளமைக்கு                   -        நீர்

10. புலவர்க்கு                    -        தோள்                              தமிழ்த்துகள்

11. மொழிக்கு இறுதியில் வாரா மெய்யெழுத்துகள் யாவை?

12. செயற்கைக்கோள் எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது?                தமிழ்த்துகள்

13. தமிழ் எழுத்துகளுக்குரிய மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக.

14. தமிழ்மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

15. டீப் புளூ – மீத்திறன் கணினி பற்றி எழுதுக.    தமிழ்த்துகள்

16. தமிழ் ஏன் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது?

17. உயிருள்ள உடல் எது?   

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 9

  7th Tamil Model Notes of lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

09-09-2024 முதல் 13-09-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

1-3

மதிப்பீடு

          முதல் பருவ தொகுத்தறித் தேர்விற்கு மாணவர்களைத் தயார் செய்தல்.

திருப்புதல் வினாக்கள்

தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.

கரடி அனைத்துண்ணி என அழைக்கப்படுவது ஏன்?             தமிழ்த்துகள்

பச்சை மயில் ... எனத் தொடங்கும் காடு பாடலை அடிபிறழாமல் எழுதுக.              தமிழ்த்துகள்

தொகைச் சொற்களை விரித்து எழுதுக.

அ.முக்கனி,             

ஆ.அறுசுவை.                  

இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.                 தமிழ்த்துகள்

அ.நீதிமன்றத்தில் தொடுப்பது ...................,               

ஆ.நீச்சத் தண்ணி குடி என்பது பேச்சு ...................

கலைச்சொல் அறிந்து எழுதுக.                     

அ.Puppetry                        

ஆ.Media

அ. குற்றியலிகரம் என்றால் என்ன?                                  அல்லது

ஆ.குற்றியலுகரம் என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.          தமிழ்த்துகள்

இரண்டல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .................................

அ இரண்டு + டல்ல  ஆ இரண் + அல்ல   இ இரண்டு + இல்ல        ஈ இரண்டு + அல்ல

...... செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.

அ. மன்னன்                                         ஆ.பொறாமைஇல்லாதவன் தமிழ்த்துகள்

இ.பொறாமைஉள்ளவன்                        ஈ.செல்வந்தன்

தமிழின் கிளை மொழிகளூள் ஒன்று ............

அ.உருது                ஆ.இந்தி                இ.தெலுங்கு                      ஈ.ஆங்கிலம்

முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் .................................

அ.இராஜாஜி            ஆ.நேதாஜி             இ.காந்திஜி                        ஈ.நேருஜி


எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 24

 8th Tamil Model Notes of lesson

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

24-03-2025 முதல் 28-03-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

1-9

மதிப்பீடு

          ஆண்டுத் தேர்விற்கு மாணவர்களைத் தயார் செய்தல்.

திருப்புதல் வினாக்கள்

பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?

யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?                         தமிழ்த்துகள்

ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?

தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

நோயின் மூன்று வகைகள் யாவை?             தமிழ்த்துகள்

முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.

உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?                            தமிழ்த்துகள்

எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?

பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?              தமிழ்த்துகள்

நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?

உங்கள் மீது பிறர் வெறுப்பைக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

அ. ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?                                      அல்லது

ஆ. புத்தியைத்தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை? தமிழ்த்துகள்

அ. வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையைச் சுருக்கி எழுதுக.                               அல்லது

ஆ. மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக.

அ. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.       அல்லது

ஆ. விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற உங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக. தமிழ்த்துகள்

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 24

   9th Tamil Model Notes of lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

24-03-2025 முதல் 28-03-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

1-9

மதிப்பீடு

          ஆண்டுத் தேர்விற்கு மாணவர்களைத் தயார் செய்தல்.

திருப்புதல் வினாக்கள்

வீணையோடு வந்தாள், கிளியே பேசு - தொடரின் வகையைச் சுட்டுக.

ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.

அ. எழுத்தாணி கொண்டு ...............ய தமிழை, ஏவுகணையில் ................. எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.

ஆ. எனக்கு ..... பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்; பார்த்து உன் ..... ஐ வை.        தமிழ்த்துகள்

துணைவினைகளின் பண்புகள் 2 எழுதுக.

கலைச்சொற்கள் தருக.                     தமிழ்த்துகள்

Epigraphy                       Conical Stone

வல்லினம் மிகும் இடங்கள் 2 எழுதுக.          

பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.              
அ.
கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.

ஆ. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.        தமிழ்த்துகள்

நெறிப்படுத்தினர் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அ நீரின்று அமையாது உலகு – என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக்காட்டுடன் விவரிக்க.

அல்லது

ஆ அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக.

அ இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க.                        தமிழ்த்துகள்

அல்லது

ஆ கலைச்சொற்கள் குறித்து வளரும் செல்வம் கூறும் கருத்துகளை எழுதுக.


எழுத்தறிவித்த இறைவன் ஆசிரியர் நாள் வாழ்த்துக் கவிதை ஆசிரியர் தினம்


TEACHERS DAY WISHES Kavithai

எழுத்தறிவித்த இறைவன் ஆசிரியர் நாள் வாழ்த்துக் கவிதை செப்டம்பர் 5

  ஆசிரியர் நாள் வாழ்த்துக் கவிதை செப்டம்பர் 5


Teacher's day greeting poem September 5


எழுத்தறிவித்த இறைவன்

 

ஐம்புலனையும் புடம் போட்டு

ஆறாம் அறிவை வளர்த்தவர்கள்

மாதா பிதா குரு தெய்வம் என

கடவுளுக்கு முந்தியவர்கள்

 

 

கல்லுக்கு வலிக்காமல்

உள்ளிருந்து சிலையை எடுத்தவர்கள்

கசக்கும் கணக்கைக் கற்கண்டாய்

மாற்றும் வித்தை தெரிந்தவர்கள்

 

மனக்கணக்குப் போட அறிந்தவர்கள்

எங்கள் மனக்கணக்கைப்

போடவும் முடிந்தவர்கள்

 

விதைகளை விருட்சமாக்கும்

விவரம் தெரிந்தவர்கள்

 

பூக்களும் கனிகளும் காய்களும்

என நாங்கள் இன்று நிற்க

வேர்களாய் மண்ணில் புதைந்தே கிடக்கிறார்கள்

 

ஏணிகளை எட்டி உதைத்த

கொடூரமும் இங்கே நடந்திருக்கிறது

 

பாராட்டும் பரிசும் நாங்கள் பெறும் போது

ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும்

தாய்மையாய் மகிழ்பவர்கள்

 

இரு கரம் கூப்பி

ஒரு தரம் சொல்லும் வணக்கத்தில்

ஓராயிரம் நன்றிகள் புதைந்திருக்கும்

 

இன்று நாங்கள் உண்ணும் உணவில்

ஒவ்வொரு பருக்கையிலும்

உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும்

 

 

எங்கள் கிறுக்கல்களுக்கும்

கவிதை என்று பெயர் வைத்து

அழகு பார்த்தவர்கள்

 

எங்கள் சிறு வெற்றியையும்

கொண்டாடிய வாஞ்சையாளர்கள்

 

 

உழவனுக்கே தெரியாத

மண்ணின் மகத்துவத்தை

விதைகளாம் எங்களுக்குக்

காதோரம் சொன்னவர்கள்

 

 

 

தன்னிலை மறந்துவிட்ட மரங்கள்

மண்ணை மறந்து விண்ணைத் தொழுவது போல்

எழுந்து நிற்கின்றன எங்களைப் போலவே

 

பட்டறையில் இரும்பு வாங்கிய அடிகளாய்

மரங்கள் வாங்கிய ஆப்புகளின் செருகலாய்

சிற்பங்கள் நினைவில் வைத்திருக்கின்ற உளியின் வலிகளாய்

உங்கள் கண்டிப்பு எங்களுள் புதைந்தே கிடக்கிறது

 

அதனால் தான் நாங்கள் கட்டிய

வாழ்க்கைக் கோபுரம் உயர்ந்து நிற்கிறது

 

சட்டைப் பொத்தான்களைச் சரியாக மாட்டி

சளி ஒழுகும் மூக்கைச்சீறி

எண்ணெய் இல்லா முடியை ஒழுங்குபடுத்தி

எங்களுக்குள் குடத்தில் இட்ட விளக்காய்ப்

புதைந்து கிடந்த அறிவுச்சுடரை

குன்றி லிட்ட விளக்காய் மாற்றிய சமுதாயச் சிற்பிகளே

உங்கள் கைகளில் சிலைகளாக

உங்கள் நினைவுகளில் நன்றியின் விழுதுகளாக

என்றும் இருப்போம்

 

 - கவிஞர் கல்லூரணி முத்து முருகன்

ஆசிரியர் நாள் வாழ்த்துக் கவிதை செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்


TEACHERS DAY WISHES SEPTEMBER 5 Kavithai

ஆசிரியர் நாள் வாழ்த்துக் கவிதை செப்டம்பர் 5

 ஆசிரியர் நாள் வாழ்த்துக் கவிதை செப்டம்பர் 5


Teacher's day greeting poem September 5


அ ழகுத் தமிழை

அள்ளித் தருகின்ற

தமிழ் ஆசிரியர்

 

ஆ ங்கிலம் நன்றாகப்

புகட்டுகின்ற

ஆங்கில ஆசிரியர்

 

இ னிப்புக்கற்கண்டாய்

கணிதம் கற்பிக்கும்

கணக்கு ஆசிரியர்

 

ஈ ர்க்கும் வகையில்

இயல் வேதி உயிர் சொல்லும்

அறிவியல் ஆசிரியர்

 

உ லகத்தின் வரலாறு

புவியியல் கூறும்

வரலாற்று ஆசிரியர்

 

ஊ க்கம் தந்து

உடல் நலம் பேணும்

உடற் கல்வி ஆசிரியர்

 

எ ல்லோருக்கும்

உயர்வழி காட்டியாய்

தலைமை ஆசிரியர்

 

ஏ ற்றி விடும் நல்ல

ஏணிகளாக

எல்லா ஆசிரியர்கள்

 

ஐ யங்கள் போக்கி

அறிவொளி ஏற்றும்

அருளாளர் ஆசிரியர்

 

ஒ ல்காப் புகழ் தரும்

எல்லாக் கலைகளும்

ஓதும் ஆசிரியர்

 

ஓ தாமல் ஒரு நாளும்

இருக்கக்கூ டாதென

இயம்பும் ஆசிரியர்

 

ஔ டதம் போல நல்

ஒழுக்கமும் கூறும்

அன்னையர் ஆசிரியர்

 

ஃ கேனம் போல

தனிப்புகழுடையார்

தரணி போற்றாசிரியர்

 

தினம் தினம்

புகழ்வோம்

 

தினம் இன்று

மகிழ்வோம்

 

ஆசிரியர் தி(இ)னம் வாழ்க!



அன்புடன்

சேவியர்

தமிழாசிரியர்

ஆலங்குடி புதுக்கோட்டை

❤❤❤❤❤❤❤❤

தமிழ்த்துகள்

Blog Archive