கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, May 29, 2019

கண்ணதாசன் - ஆசிரியர் குறிப்பு KANNADASAN










குறிப்பு

பெயர் - கண்ணதாசன்

இயற்பெயர் முத்தையா

ஊர் சிறுகூடல்பட்டி - சிவகங்கை மாவட்டம்

தந்தை சாத்தப்பன்

தாய்விசாலாட்சி

பிறந்த தேதி - 24 -06 -1927

புனைப்பெயர்கள் - 

காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி.

தொழில் - 

கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்

மனைவிகள்பொன்னழகி, பார்வதி, வள்ளியம்மை.


காப்பியங்கள்

  1. ஆட்டனத்தி ஆதிமந்தி
  2. இயேசு காவியம்
  3. ஐங்குறுங்காப்பியம்
  4. கல்லக்குடி மகா காவியம்
  5. கிழவன் சேதுபதி
  6. பாண்டிமாதேவி
  7. பெரும்பயணம் .
  8. மலர்கள்
  9. மாங்கனி
  10. முற்றுப்பெறாத காவியங்கள்

சிற்றிலக்கியங்கள்

  1. அம்பிகை அழகுதரிசனம்
  2. கிருஷ்ண அந்தாதி
  3. கிருஷ்ண கானம்
  4. கிருஷ்ண மணிமாலை
  5. ஸ்ரீகிருஷ்ண கவசம்
  6. ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி
  7. ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம்
  8. தைப்பாவை

கவிதை நாடகம்

  1. கவிதாஞ்சலி

மொழிபெயர்ப்பு

  1. பொன்மழை 
  2. பஜகோவிந்தம்

புதினங்கள்
  1. அவளுக்காக ஒரு பாடல்
  2. அவள் ஒரு இந்துப் பெண்
  3. அரங்கமும் அந்தரங்கமும்
  4. அதைவிட ரகசியம்
  5. ஆச்சி 
  6. ஆயிரங்கால் மண்டபம்
  7. ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
  8. ஊமையன்கோட்டை
  9. ஒரு கவிஞனின் கதை
  10. கடல் கொண்ட தென்னாடு
  11. காமினி காஞ்சனா
  12. சரசுவின் செளந்தர்ய லஹரி
  13. சிவப்புக்கல் மூக்குத்தி
  14. சிங்காரி பார்த்த சென்னை
  15. சுருதி சேராத ராகங்கள்
  16. சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)
  17. தெய்வத் திருமணங்கள்
  18. நடந்த கதை
  19. பாரிமலைக்கொடி
  20. பிருந்தாவனம்
  21. மிசா
  22. முப்பது நாளும் பவுர்ணமி
  23. ரத்த புஷ்பங்கள்
  24. விளக்கு மட்டுமா சிவப்பு
  25. வேலங்குடித் திருவிழா
  26. ஸ்வர்ண சரஸ்வதி

சிறுகதைகள்

  1. ஈழத்துராணி 
  2. ஒரு நதியின் கதை
  3. கண்ணதாசன் கதைகள்
  4. காதல் பலவிதம் - காதலிகள் பலரகம்
  5. குட்டிக்கதைகள்
  6. பேனா நாட்டியம்
  7. மனசுக்குத் தூக்கமில்லை
  8. செண்பகத்தம்மன் கதை
  9. செய்திக்கதைகள்
  10. தர்மரின் வனவாசம்

தன்வரலாறு

  1. எனது வசந்த காலங்கள்
  2. வனவாசம் 
  3. எனது சுயசரிதம் 
  4. மனவாசம் 

கட்டுரைகள்

  1. அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
  2. இலக்கியத்தில் காதல்,
  3. இலக்கிய யுத்தங்கள்
  4. எண்ணங்கள் 1000
  5. கடைசிப்பக்கம்
  6. கண்ணதாசன் கட்டுரைகள் 
  7. கண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள்
  8. குடும்பசுகம்
  9. சந்தித்தேன் சிந்தித்தேன்
  10. சுகமான சிந்தனைகள்
  11. செப்புமொழிகள்
  12. ஞானமாலிகா
  13. தமிழர் திருமணமும் தாலியும்
  14. தென்றல் கட்டுரைகள்
  15. தெய்வதரிசனம்
  16. தோட்டத்து மலர்கள்
  17. நம்பிக்கை மலர்கள் 
  18. நான் பார்த்த அரசியல் - முன்பாதி
  19. நான் பார்த்த அரசியல் (பின்பாதி)
  20. நான் ரசித்த வர்ணனைகள்
  21. புஷ்பமாலிகா
  22. போய் வருகிறேன், 
  23. மனம்போல வாழ்வு
  24. ராகமாலிகா
  25. வாழ்க்கை என்னும் சோலையிலே

சமயம்

  1. அர்த்தமுள்ள இத்து மதம் 1 :
  2. அர்த்தமுள்ள இந்து மதம் 2 :
  3. அர்த்தமுள்ள இந்து மதம் 3 :
  4. அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை
  5. அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை
  6. அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி
  7. அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள்
  8. அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம்
  9. அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி
  10. அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய்

நாடகங்கள்

  1. அனார்கலி
  2. சிவகங்கைச்சீமை
  3. ராஜ தண்டனை,

உரை நூல்கள்

கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:
  1. அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
  2. ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்
  3. ஆண்டாள் திருப்பாவை
  4. ஞானரஸமும் காமரஸமும்
  5. சங்கர பொக்கிஷம்
  6. சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
  7. சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
  8. திருக்குறள் காமத்துப்பால்
  9. பகவத் கீதை

சாகித்ய அகாதமி விருதுசேரமான் காதலி படைப்பிற்காக

இறந்த தேதி17 -10 - 1981

தமிழ்த்துகள்

Blog Archive