ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித்
தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.
‘சிரித்துப் பேசினார்’ என்பது மகிழ்வின்
காரணமாக ‘சிரித்துச் சிரித்துப் பேசினார்’
என்று அடுக்கித் தொடர்வதால் அடுக்குத் தொடர்
ஆகும்.
22.
உரைநடையும், கவிதையும் இணைந்து யாப்புக்
கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும்
கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது.
23.
o
வேங்கை என்னும் சொல் தனித்து நின்று, வேங்கை மரம், புலி ஆகிய
பொருள்களை உணர்த்துவதால் தனி மொழி ஆயிற்று.
o
வேம் + கை என இரு சொல்லாக நின்று, வேகின்ற கை என்ற பொருளை உணர்த்துவதால் தொடர்மொழி
ஆயிற்று.
ஆகவே, வேங்கை என்பது தனிமொழிக்கும்,
தொடர்மொழிக்கும் பொதுவாய்
அமைந்துள்ளதால் பொதுமொழியாக
வந்துள்ளது.
24.
தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் சொற்கள்.
பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு; பிஞ்சு: இளம் காய்; வடு: மாம்பிஞ்சு; மூசு: பலாப்பிஞ்சு; கவ்வை : எள்பிஞ்சு; குரும்பை : தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு; முட்டுக் குரும்பை : சிறு குரும்பை ; இளநீர்: முற்றாத தேங்காய்; நுழாய்: இளம்பாக்கு; கருக்கல்: இளநெல்; கச்சல்: வாழைப்பிஞ்சு.
25.
இவ்வடிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலை
ஆகிய இரண்டு
காப்பியங்களைத் தவிர
சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
ஆகியன எஞ்சியுள்ள காப்பியங்கள் ஆகும்.
26.
தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.
அவை
1.வேற்றுமைத்தொகை
2.வினைத்தொகை
3.பண்புத்தொகை
4.உவமைத்தொகை
5.உம்மைத்தொகை
6.அன்மொழித்தொகை
27.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.