மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
முன்னுரை
'விசும்பின்
துளிவீழின் அல்லால்மற் றாங்கே தமிழ்த்துகள்
பசும்புல் தலைகாண்பு அரிது'- என்கிறது உலகப் பொதுமறை. இவ்வுலக உயிர்கள் உய்வதற்கு மழைநீரே
அமுதமாய் இருக்கிறது. பூமிப்பந்து உயிர்க்கோளமாகத்
தொடர்வதற்கு மழை பெய்வதே அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும்
தூய்மையான நீர் மழை நீரே! அதனைச் சேமித்து வைப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மழைநீரைச் சேமித்து வைக்க
வேண்டியதன் அவசியத்தை நாம் அறிந்திருக்க வேண்டும்.
இயற்கையோடு இயைந்து வாழ்வோம் தமிழ்த்துகள்
நிலம், நீர், தீ, காற்று, வானம் எனும்
ஐம்பூதங்களால் ஆட்சி செய்யப்படுவது இவ்வுலகம். இயற்கையின் கொடையான பசுமைப் போர்வை
போர்த்திய பூமிப்பந்தை நாம் பாதுகாக்க வேண்டும். நம் முன்னோர் இயற்கையோடு இயைந்து
வாழ்ந்தார்கள். நீர் மேலாண்மை மூலம் உழவுத் தொழிலைச் செய்தார்கள். தான் விளைத்த தானியங்கள் கொண்டு அறத்துடன்
வாழ்ந்தார்கள். பருவத்தே பயிர் செய்து விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவு
அளித்தார்கள். இயற்கையை வணங்கி அதனுடன் இயைந்து வாழ்ந்தார்கள். தமிழ்த்துகள்
வானத்து மழை நீரைப்
பூமியில் காப்போம்!
ஒவ்வோர் ஆண்டும் பொழிகின்ற மழை நீரில் 40
விழுக்காடு கடலில் கலக்கிறது. 35 விழுக்காடு கதிரவனால் உறிஞ்சப்படுகிறது. 14 விழுக்காடு பூமி உறிஞ்சிக் கொள்கிறது. 10 விழுக்காடு மண்ணின் ஈரத்தன்மைக்கு உதவுகிறது. மீதமுள்ள ஒரு விழுக்காடு தண்ணீரைத் தான் நாம் பயன்படுத்துகிறோம் என்று
ஆய்வுகள் கூறுகின்றன. நீரின்றி அமையாது உலகு. அக்காலத்தில் அகழிகள், தெப்பங்கள், ஓடைகள்,
ஆறுகள். கண்மாய்கள் ஊருணிகள், ஏரிகள் அமைத்து மழைநீரைச் சேமித்து வைத்தனர் நம் முன்னோர்கள். கசிவு நீர்க்
குழிகள்,
கசிவுநீர்ப் படுகை, நீரூற்றுக் கிணறு, உறிஞ்சு குழிகள் அமைத்து நாமும் மழை நீரைச் சேமிக்க வேண்டும்.
மழைக்கு ஆதாரமான
மரங்களை வளர்ப்போம்!
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் தமிழ்த்துகள்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு- என்கிறார் வள்ளுவர்.
மரங்கள் மழை தரும் வரங்கள் என்பதை நாம் அறியவேண்டும். வளிமண்டலத்தில்
உள்ள நீராவியைக் குளிரச் செய்து மழையாகப் பொழிய வைக்கும் ஆற்றல் மரங்களுக்கே
உண்டு. நாம் ஒவ்வொருவரும் ஒரு மரம் வளர்க்க வேண்டும். பிறந்தநாள், திருமணநாள் போன்ற நாள்களிலும் மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தமிழ்த்துகள்
முடிவுரை
வெள்ளம் வருமுன்னே அணை போட வேண்டும். வந்தபின் காப்பது அறிவுடைமை ஆகாது. 2001 இல் தமிழக அரசு கட்டாய மழைநீர் சேகரிப்புத்
திட்டத்தைத் தொடங்கியது. உலகில் ஆண்டுதோறும் 55
மில்லியன் மக்கள் வறட்சியால் பாதிக்கப்படுகிறார்கள் 40
விழுக்காடு மக்கள் வறட்சி காரணமாக பிரச்சனைக்கு
ஆளாகிறார்கள். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மழைநீர் உயிர்நீர் என்று கருதி மழைநீரைச் சேமிப்போம்; நிலத்தடிநீரைக் காப்போம்!