கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, January 29, 2022

நற்றமிழ் வளர்த்த நல்லோர் பத்தாம் வகுப்பு தமிழ்க் கட்டுரை 10th tamil katturai natramil valartha nallor

 

.

நற்றமிழ் வளர்த்த நல்லோர்

முன்னுரை                                     தமிழ்த்துகள்

"தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள்

என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்' என்கிறார் பாரதியார். உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்றாக விளங்குவது நம் தமிழ் மொழி. இலக்கியங்கள் படைத்தும் இலக்கணங்கள் வகுத்தும் அதைச் செம்மையாக்கிய சான்றோர் பலர் ஆவர்.

தமிழின் தொன்மை  தமிழ்த்துகள்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே

வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி-நம் தமிழ்க்குடி தமிழில் நமக்குக் கிடைத்துள்ள தொல்காப்பியம் மிகப் பழமையான இலக்கிய நூலாகும். தொல்காப்பியரும் அகத்தியரின் மாணவர் என்பது நாம் அறிந்ததே. முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் வைத்துத் தமிழ் வளர்த்தனர் நம் முன்னோர். பதினெண் மேற்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்கத்தமிழர் வாழ்வைச் சொல்லும். ஆதிச்சநல்லூரும் கீழடியும் தமிழின் பழமை ஆறாயிரம் ஆண்டுகள் என்று சொல்லும்.

செந்நாப் புலவர்கள்                தமிழ்த்துகள்

இறையனார், கணியன் பூங்குன்றன், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், பவணந்தி அடிகள், அவ்வையார், காக்கைப்பாடினியார், நச்செள்ளையார், வெண்ணிக் குயத்தியார், ஒக்கூர் மாசாத்தியார் என்ற புலவர்களின் வரிசையோடு அதிவீரராம பாண்டியன், சோழன் நலங்கிள்ளி போன்ற அரசர்களும் உள்ளனர். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பக்தி இலக்கியங்கள் கொண்ட பெட்டகம் நமக்கானது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்கள் பாரதி, பாரதிதாசன் எனத் தொடங்கி எண்ணற்றோர் ஆவர்.

ஜி.யு.போப்பின் தமிழ்ப்பணி    தமிழ்த்துகள்

1839 ஆம் ஆண்டு தமிழகம் வந்தார் ஜார்ஜ் யுக்ளோ போப். திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்தார். தம் கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று எழுதச் சொன்னார். சாயர்புரம், தஞ்சாவூர்,  உதகையில் தங்கியிருந்து மறைநூற் புலவர் பட்டம் பெறும் அளவு தமிழ்த் தொண்டு செய்தவர் ஜி.யு.போப்.                                       தமிழ்த்துகள்

நான்காம் தமிழ்ச்சங்கம்

செப்டம்பர் 14 - 1901 ஆம் ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் வள்ளல் பாண்டித்துரை அவர்களால் தொடங்கப்பட்டது. பாலவனத்தம் ஜமீன் ஆக இருந்த வள்ளல் பாண்டித்துரை அவர்கள் முயற்சியால் இந்நிகழ்வு நடந்தது. மதுரைச் செந்தமிழ்க் கல்லூரி இன்றும் அப்பணியைச் செவ்வனே செய்து வருகிறது. 1800 பக்கங்கள் கொண்ட செந்தமிழ்ச் சொல்லகராதி 63,900 தமிழ்ச் சொற்களைத் தாங்கி வெளிவந்தது. 2012 ஆம் ஆண்டு இச்சங்கத்திற்கு தமிழ்த்தாய் விருது வழங்கி தமிழக அரசு சிறப்புச் செய்தது.

உலகத் தமிழ் மாநாடு                   தமிழ்த்துகள்

       உலகத்தமிழர் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாடு முதன்முதலில் 1966இல் மலேசியாவில் நடைபெற்றது. அதன் பின்னர் சென்னை, பாரிஸ், இலங்கை, மதுரை, மொரீசியஸ், தஞ்சாவூரில் இதுவரை நடைபெற்றுள்ளது. பத்தாவது உலகத் தமிழ் மாநாடு சிகாகோவில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தம் படைப்புகளை அரங்கேற்றம் செய்யவும், பழந்தமிழ் இலக்கண. இலக்கியங்களை ஆய்வு செய்யவும் இம்மாநாடு ஒரு வாய்ப்பாக அமைகிறது. 2010 ஆம் ஆண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றது.

முடிவுரை                             தமிழ்த்துகள்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலக ஒருமைப்பாட்டை உரக்கச் சொன்னவன் தமிழன். ஐஞ்சிறு காப்பியங்கள், ஐம்பெருங் காப்பியங்கள் மூலம் இலக்கிய வளம் சொன்னவன். புதுக்கவிதைகளில் புரட்சி செய்து துளிப்பாக்களுக்குள் நுழைந்து இருக்கிறது தமிழ். கன்னித் தமிழ் கணினித் தமிழாய் வளர்ந்திருக்கிறது. அறமும் மறமும் வளர்த்த தமிழ் வழிபாட்டுப் பாடல்களையும் சுமந்து தந்திருக்கிறது. வாய்மொழி இலக்கியங்களாக நாட்டுப்புறப் பாடல்களையும் பழமொழிகளையும் விட்டுச் சென்றிருக்கிறது. கடல் தின்றது போக மிச்சமுள்ள இலக்கியங்களே உலகு மெச்சும் அளவு இருக்கிறதென்றால் முதல் இரண்டு சங்கங்கள் கொண்டிருந்த ஓலைச்சுவடிகள் எப்படி இருந்திருக்கும்?                 தமிழ்த்துகள்

தமிழைப் படிப்போம்! தமிழில் படைப்போம்!

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive