கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, January 06, 2022

கொரோனாவால் ஏற்படும் உலகளாவிய பாதிப்பு கட்டுரை பேச்சுப் போட்டி CORONA COVID 19 Essay speech

கொரோனாவால் ஏற்படும் உலகளாவிய பாதிப்பு

அன்னைத் தமிழாய் நான் இதுவரை பேசிவந்தேன் கன்னித்தமிழ் பேச்சாய் இந்த அவையில் நிறுத்தி அழகு பார்க்கிறாள் தமிழ்த் தாய் தமிழ் அன்னைக்கு முதல் வணக்கம்.

நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

வாய் நாடி வாய்ப்பச் செயல் - என்று கூறுகிறார் திருவள்ளுவர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. கொரானா என்ற பெரும் தொற்று இன்று உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. இரண்டு உலகப் போர்கள் தராத பேரழிவை இந்த நுண் கிருமி தந்து விடுமோ என்று உலக நாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று அப்பர் பாடினார். இன்றைக்கு அப்பர் இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே குறுகிக் கிடக்கும் நிலைதான் வந்திருக்கும் உலகம் முழுதும் 2008 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் வங்கிகள் மூடப்பட்டன. பெரும் நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து இருக்கின்றன. உலகின் மக்கள் தொகையில் சுமார் 25 கோடி பேரை தொற்றி இருக்கிறது இந்த உயிர்க்கொல்லி இதை எண்ணும் போது எல்லாம் வல்ல இறைவனின் தண்டனையோ இது! என்று எண்ணத் தோன்றுகிறது இயற்கைக்கு எதிராக வாழ்ந்து வரும் மனிதன் மனிதத் தன்மை இழந்து மிருகமாக சண்டை போடும் நிலை வந்துவிட்டதை இறைவனால் கூட பொறுக்க முடியவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

2019 இல் சீனாவில் ஊகான் நகரில் புறப்பட்ட இந்த உயிர்கொல்லி உலகம் முழுவதிலும் உயிர்களைத் தன் பசிக்கு இரையாக்கி வருகிறது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள அதிகாரப் போட்டி சீனாவின் மீது பொருளாதார தடை விதிக்கும் அளவுக்கு வந்துவிட்டது. பெரும் எண்ணெய் நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து இருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுத்து விட்டது. நோய்த் தொற்றால் உடல்நலக்குறைவு மட்டுமல்ல பங்குச் சந்தையும் படுகுழியில் விழுந்து விட்டது. அமெரிக்கா இந்தியா பிரேசில் பிரிட்டன் ரஷ்யா ஆகிய 5 நாடுகள் கொரோனா தொற்றின் வரிசையில் முதல் 5 இடங்களைப் பிடிக்கின்றன .ஏறத்தாழ 25 லட்சம் உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது இந்த பெரும் தொற்று. 22 கோடி பேர் இதிலிருந்து மீண்டு இருந்தாலும் இன்னும் இரண்டு கோடிக்கும் மேலான மக்கள் சிகிச்சையில் இருப்பது வருத்தம் அளிக்கிறது. சிறு நோய்க்கிருமி என்ன செய்துவிடும் என்று நாம் நினைத்து விடக் கூடாது வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டு மக்களை வெளியே வரவிடாமல் செய்து விட்டது. உலகமயமாக்கல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் ஈராக் ரஷ்யா நைஜீரியா வெனிசூலா போன்ற ஹைட்ரோகார்பன் உற்பத்தி மையங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது. தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்துக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய எண்ணெய் விலை பற்றிய இப்பேச்சு உலக வர்த்தகத்தைப் புரட்டிப் போட்டு விட்டது இன்னும் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறதோ என்ற பேரதிர்ச்சியுடன் தான் இந்த ஆண்டு பிறந்திருக்கிறது. இனி ஒரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம் என்று நாம் முடிவெடுக்க வேண்டும் வெள்ளம் வருமுன் தானே அடையும் போட வேண்டும் ஒரு கை தட்டினால் ஓசை வராது ஊர் கூடித் தான் தேர் இழுக்க வேண்டும். வாருங்கள் ஒன்று கூடுவோம்! கொரோனாவுக்கு எதிரான போராளிகளை ஊக்கப்படுத்துவோம்! ஒன்றிணைவோம்! பெருநோயை வென்றெடுப்போம்! வாய்ப்புக்கு நன்றி வருகிறேன் விடைபெறுகிறேன்!|

மு. முத்து முருகன் தமிழாசிரியர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ம.ரெட்டியபட்டி

தமிழ்த்துகள்

Blog Archive