பத்தாம் வகுப்பு
தமிழ்
விடைக்குறிப்பு
1.கனிச்சாறு
2.தொல்காப்பியர்
3.அன்மொழித்தொகை
4.ஆசை, சினம்
5.தாவரத்தின் நுனிப் பகுதிகளைக் குறிக்கும் சொற்கள்
நெல், புல் - துளிர் அல்லது தளிர்
புளி, வேம்பு - முறி அல்லது கொழுந்து
சோளம், கரும்பு, தென்னை, பனை - குருத்து
கரும்பு - கொழுந்தாடை
6.தமிழை வாழ்த்தும் வாழ்த்துச் சொற்கள்
மண்ணுலகப் பேரரசே
முடிதாழ வாழ்த்துவமே
( பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.)
7.பாரதியார் நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, சிந்துக்குத் தந்தை என்றெல்லாம் பாராட்டப்பெற்றார்.
8.தொகைநிலைத்தொடர்
பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி, இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்பது.
9.நச்சப்படாதவன்
பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவன்.
10.பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
11.தமிழ் மொழி
செழுமையான மொழி
பழமையான மொழி
இலக்கிய வளமுடைய மொழி
நிலைத்த தன்மை உடைய மொழி
தனிச்சிறப்புடைய மொழி
12.இலைவகை
புளி, வேம்பு - இலை
நெல், புல் - தாள்
சோளம், கரும்பு - தோகை
தென்னை, பனை - ஓலை
காய்ந்த தாளும், தோகையும் - சண்டு
காய்ந்த இலை - சருகு
கொழுந்து வகை
நெல், புல் - துளிர் அல்லது தளிர்
புளி, வேம்பு - முறி அல்லது கொழுந்து
சோளம், கரும்பு, தென்னை, பனை - குருத்து
கரும்பு - கொழுந்தாடை
13.உயிரளபெடை
செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வருவது.
14.ஒழுக்கத்தின் சிறப்புகள்
ஒழுக்கம் அனைவருக்கும் சிறப்பைத் தரும்.
ஒழுக்கமாக வாழ்பவர் மேன்மை அடைவர்.
உலகத்தாரோடு ஒத்து வாழ்பவரே அறிவுடையவர்.
15.அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே.