கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, April 03, 2024

எட்டாம் வகுப்பு தமிழ் முழு ஆண்டுத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 2024

8th VIII TAMIL annual examination key 2024 virudhunagar district

விருதுநகர் மாவட்டம்
 முழு ஆண்டுத் தேர்வு - 2024 
எட்டாம் வகுப்பு 
தமிழ் 
விடைக் குறிப்பு 
பகுதி-1 
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 10x1-10
1.தந்தை பெரியார் 
2. 3 
3. இளமை 
4. கலன் + அல்லால் 
5. ஆக்கல் 
6. வேழங்கள் 
7. கயிற்றுக் கட்டில் 
8. வஞ்சி 
9. ஒரு பைசாத் தமிழன் 
10. அழுக்காறு 

கோடிட்ட இடத்தை நிரப்புக 5x1-5
11 இலண்டன் 
12 சின்னாளப்பட்டி 
13 வளர்ச்சி 
14 அவையின் 
15 2 

பொருத்துக 5x1-5 
16 மேன்மை 
17 குன்றிமணி அளவு தவறு 
18 அகவல் ஓசை 
19 இயல்புப் புணர்ச்சி 
20 சிந்தாமணி 

பகுதி 2 
குறுகிய விடையளி 4x2-8
எவையேனும் நான்குக்கு மட்டும் விடையளி 
21 வானம் வரை உள்ளடங்கியுள்ள பொருண்மைகளை

22 காலையும் மாலையும் நடைபயிற்சி செய்தல்
 தூய காற்றை சுவாசித்து வருதல்

23 பணத்தின் மீது ஆசை வைத்ததால் மனிதனின் மனம் கலங்கி நிற்கிறது

24 படை கூட்டத்தில் இருந்து விலகி ஓடினர்
 கடலில் தாவி குதித்தனர் 
யானையின் பின்னே மறைந்தனர் 
குகைக்குள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்

25 கவலைகளைக் கவிஞர் குழந்தைகளாக உருவகப்படுத்துகிறார்


எவையேனும் நான்குக்கு மட்டும் விடை அளிக்க 4x2-8

26 தாவரங்களின் வேர் பட்டை இலை பூ கனி உலோகங்கள் பாஷாணங்கள்

27 திரு.வி.க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்கள்
 இளங்கோ 
திருத்தக்க தேவர் 
ஆண்டாள் 
திருஞானசம்பந்தர் 
சேக்கிழார் 
கம்பர் 
பரஞ்சோதியார்

28 காற்றின் தூய்மையும் நீரின் உயர்வும் யாருக்கும் சொந்தமானது அல்ல 
இவற்றை விலை கொடுத்து வாங்க இயலாது என சியாட்டல் கூறுகிறார்

29 தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது
 இந்த வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்

30 கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் 
காவிரி 
பவானி 
நொய்யல் 
அமராவதி

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடையளி 2x2-4

31 வல்லின மெய் எழுத்துக்கள் மார்பை இடமாகவும் 
மெல்லின மெய் எழுத்துக்கள் மூக்கை இடமாகவும் 
இடையின மெய்யெழுத்துக்கள் கழுத்தை இடமாகவும் கொண்டு பிறக்கின்றன

32 நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்புப் புணர்ச்சி ஆகும்
 எடுத்துக்காட்டு 
தாய் + மொழி - தாய்மொழி

33 குறில் அல்லது நெடில் எழுத்து தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசை
 இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில் நெடில் எழுத்துக்கள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்று எழுத்து சேர்ந்து வந்தாலும் நிரை அசை

பகுதி 3 
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 3x4-12
சிறு வினா 
34 மழையின்மையால் செடிகள் வாடிய நிலை
 கல் இல்லாத இடத்தில் இட்ட கடலை செடியும் 
முள் இல்லாத இடத்தில் நட்ட முருங்கை செடியும்
 மழையில்லாமல் வாடி நிற்கிறது 
கருவேலம் காடும் பூக்கவில்லை 
காட்டு மல்லியும் பூக்கவில்லை 
கலப்பை பிடிக்க வழி இல்லாமல் 
ஏற்றம் இறைக்க நீரும் இல்லாமல் 
நிலங்கள் காய்ந்து கிடக்கின்றன

அல்லது 

நீதிநெறி விளக்கப் பாடல் கூறும் கருத்துகள்
 ஒளி வீசக்கூடிய மாலை பொருந்திய அணிகலன்களுக்கு அழகு சேர்க்க வேறு எதுவும் தேவையில்லை 
அதுபோல  
 கல்வியைக் கற்றவருக்கு அழகு சேர்க்க வேறு அணிகலன்கள் தேவை இல்லை 
அவர்களை அழகாகக் காட்டுவது கல்வி என்ற அணிகலன்

35 தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர் ஆற்றிய பணிகள்
 மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார் 
தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார்

அல்லது

கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள்
 நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு நாமக்கல் திண்டுக்கல் சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கியது கொங்கு மண்டலம் 
வடக்கே பெரும்பாலை தெற்கே பழனி மேற்கே வெள்ளிமலை கிழக்கே மதிற்கரை என்று கொங்கு மண்டலச் சதகத்தில் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் குறிப்பிடப்படுகின்றன

36 வேற்றுமை அணி இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி பிறகு அவற்றில் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணி 
எடுத்துக்காட்டு 
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு 
விளக்கம்
 தீயும் சுடும் கொடுஞ்சொல்லும் சுடும் 
இரண்டும் சுடும் தன்மையால் ஒற்றுமையாக இருந்தாலும் தீயினால் சுட்ட புண் ஆறிவிடும் 
நாவினால் சுட்ட கொடுஞ்சொல் வடுவாக இருக்கும் 
எனவே இது வேற்றுமையணி

அல்லது

 வினையெச்சத்தின் வகைகள் 
தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என வினையெச்சம் இரண்டு வகைப்படும்
 செயலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினையெச்சம்
 எடுத்துக்காட்டு 
எழுதி வந்தான் 
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பை மட்டும் குறிப்பாக உணர்த்துவது குறிப்பு வினையெச்சம் 
எடுத்துக்காட்டு 
மெல்ல வந்தான்

சிந்தனை வினா 
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் 2x5-10
37 நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள்

 38 உழவுத் தொழில் சிறக்க இன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன
 39 அன்றாட வாழ்வில் நாம் பிறருக்கு எத்தகைய உதவிகளைச் செய்யலாம்

 பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 

பகுதி 4 
அடி பிறழாமல் எழுதுக 4+2-6

40 படை வேழம் 
வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி
 மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம் 
இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர் 
இருவர் ஒருவழி போகல் இன்றியே

அல்லது

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி 
வாழிய வாழியவே 
வான மளந்தது அனைத்தும் அளந்திடு 
வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி 
இசைகொண்டு வாழியவே 
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி 
என்றென்றும் வாழியவே

41.இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து 
அதனை அவன்கண் விடல்

பகுதி 5 
மொழிப் பயிற்சி எவையேனும் நான்குக்கு மட்டும் 4x2-8
42 கலைச்சொல் தருக 
அ.வெற்றி 
ஆ.பகுத்தறிவு 

43 இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக 
அ.தனது 
ஆ.தாம் 

44 தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக 
அ.உணர்ச்சித் தொடர் 
ஆ.வினாத் தொடர் 

45 சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக 
அ.கொய்
ஆ.பருகு

46 உரிய இடங்களில் நிறுத்தற்குறிகளை இடுக 
அ.திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது. 
 ஆ.திரு.வி.க., எழுதிய 'பெண்ணின் பெருமை' என்னும் நூல் புகழ்பெற்றது.

 47 மரபுத் தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக 
அ.வாழையடி வாழையாக 
ஆ.பசுமரத்து ஆணி போல 
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 பகுதி 6
 விரிவான விடையளி 3x8-24
48 பூனா ஒப்பந்தம் 
அல்லது 
காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும் செய்திகள் 

49 குழந்தை கிருஷ்ணாவின் பண்பு நலன்கள்
 அல்லது 
அறிவுசால் ஔவையார் நாடகத்தைச் சிறுகதை வடிவில் எழுதுதல்

 50 விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் 
அல்லது 
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை 
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

செ.பாலமுருகன்,
தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம்,
விருதுநகர் மாவட்டம்.

தமிழ்த்துகள்

Blog Archive