கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, April 02, 2024

ஆறாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவத் தொகுத்தறித் தேர்வு முழு ஆண்டுத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம்

6th VI tamil third term summative assessment answer key virudhunagar district annual examination key

விருதுநகர் மாவட்டம்
 தொகுத்தறித் தேர்வு - 2024 
வகுப்பு 6 
தமிழ் 
விடைக் குறிப்பு
 
பகுதி 1 
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 6x1=6
 1. திருக்குறள் 
2. உழைக்க 
3. ஆதிரை 
4.ஈகை 
5. இன்னுயிர் 
6. வளையல் 

 பொருத்துக 4x1=4
7 பாரதியார் 
 8 நோயாளிகளிடம் அன்பு காட்டியவர் 
9 ஜி.யு.போப் 
10 பசிப்பிணி போக்கியவர்

பகுதி 2 
ஓரிரு சொற்களில் விடையளிக்க 
ஏதேனும் ஐந்து வினாக்கள் மட்டும் 5x2=10
11 பழத்தின் இயல்பு கொடுப்பது 
வேரின் இயல்பு பெறுவது

12 ஒருவர் செய்த நன்மையும் தீமையும் அவரை ஒரு நாளும் விட்டுச் செல்லாது 

13 சென்னை இலக்கிய மாநாட்டில் உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்டு காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வம் ஏற்பட்டது

14 இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும் 
இதுவே அமுதசுரபியின் சிறப்பு ஆகும்

15 பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்

16. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்

17 தன்னிடம் இருப்பதைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து காப்பாற்ற வேண்டும்

 ஓரிரு தொடர்களில் விடையளிக்க 
ஏதேனும் மூன்று வினாக்கள் மட்டும் 3x4=12

18 அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது 
நம் நாடு பிற நாட்டு மக்களின் பசியைப் போக்கி வருகின்றது 
அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகிறது

19 கம்பளிப் போர்வை கொடுப்பேன்
 தங்குவதற்கு பாதுகாப்பான இடத்தை ஏற்பாடு செய்வேன் 
சூடாக உணவு கொடுப்பேன் 
நெருப்பில் குளிர் காய வைப்பேன் 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

20 காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த போது மதுரைக்குச் செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்திருப்பதைக் கண்டார் 
அப்போது காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல் சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் 
பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள் தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்து அன்று முதல் வேட்டியும் துண்டு மட்டுமே அணியத் தொடங்கினார்

21 தீய செயல்களைச் செய்யாதீர்கள் 
பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள் 
இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களை விட்டு நீக்குங்கள் 
இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள்

22 அன்னை தெரசா ஏழைகளுக்கு உதவி கேட்டபோது ஒரு நபர் அவர் கையில் எச்சில் உமிழ்ந்தார் 
இதை நான் வைத்துக் கொள்கிறேன் ஏழைகளுக்கு நோயாளிகளுக்கு நீங்கள் ஏதேனும் உதவி செய்யுங்கள் என்று பொறுமையோடு கேட்ட அன்னை தெரசாவைப் பார்த்து நாணிப் போய் உதவி செய்தார் அந்த மனிதர்

பகுதி 3 
அடிபிறழாமல் எழுதுக 4+2=6

24 புல்வெளி எல்லாம் பூக்கா டாகிப் 
புன்னகை செய்த பொற்காலம் 
கல்லைக் கூட காவிய மாக்கிக் 
கட்டி நிறுத்திய கலைக்கூடம் 
அன்னை நாட்டின் அமுத சுரபியில் 
அன்னிய நாடுகள்பசிதீர
 அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி 
அறத்தின் ஊன்று கோலாக 
புதுமைகள் செய்த தேசமிது 
பூமியின் கிழக்கு வாசலிது 

25 பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
 தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

பகுதி 4
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்க. 5x2=10

 26 தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக
அ ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது 
ஆ அஃது ஓர் இனிய பாடல்

27 ஒலி வேறுபாடு அறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக
அ. மனம் தூய்மையாக இருக்க வேண்டும்
ஆ. மல்லிகை மணம் வீசியது

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 28 இரு பொருள் தருக

அ. ஆறு - நதி 
எண் 
வழி

ஆ. நகை -
அணிகலன் 
சிரிப்பு

29 அடிக்கோடிட்ட செல் எவ்வகைப் பெயர் என்பதை எழுதுக
அ. பொருட்பெயர்
ஆ சினைப் பெயர்

 30 அகர வரிசைப்படுத்துக
பழங்கள் 
பாரதம்
 பின்னிரவு 
பீலி 
புதுமை 
பூமி 
பெண்கள்
 பேருந்து 
பையன் 
பொதுக்கூட்டம்
 போக்குவரத்து

31 கலைச்சொல் 

 அ அறக்கட்டளை
ஆ கருணை 

32.ஏதேனும் ஒரு தலைப்பில் கவிதை எழுதுக 
அ அன்பு 
ஆ நட்பு

பொருத்தமாக கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 

 பகுதி 5 
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் விடையளி 1x6=6
33 வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வு
34 பாதம் கதையைச் சுருக்கி எழுதுதல் 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 

பகுதி 6 
ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளி 1x6=6

35 நூல்கள் அனுப்ப வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம்
36 கட்டுரை எழுதுக 
அறம் செய விரும்பு
 
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 செ.பாலமுருகன் 
தமிழாசிரியர் 
அரசு மேல்நிலைப்பள்ளி
ஆவுடையாபுரம் 
 விருதுநகர் மாவட்டம்

தமிழ்த்துகள்

Blog Archive