விருதுநகர் மாவட்டம்
தொகுத்தறித் தேர்வு - 2024
வகுப்பு 7
தமிழ்
விடைக் குறிப்பு
பகுதி 1
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 6x1=6
1. தாமிரபரணி
2. துன்பம்
3. இரட்டைக்கிளவி
4.ஒப்புரவு
5. குயில்
6. சமுதாய வழிகாட்டி
பொருத்துக 4x1=4
7 முத்துக் குளித்தல்
8 விளக்கு
9 ஈகை
10 கருணை
பகுதி 2
ஓரிரு சொற்களில் விடையளிக்க
ஏதேனும் ஐந்து வினாக்கள் மட்டும் 5x2=10
11 நெற்கதிரிலிருந்து நெல்மணியைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்து பிரிப்பர்
12 பாரி மகளிரின் பெயர்கள்
அங்கவை
சங்கவை
13 தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள்
பச்சையாறு
மணிமுத்தாறு
சிற்றாறு
காரையாறு
சேர்வலாறு
14 நீக்க வேண்டிய களை என்று அறநெறிச்சாரம் வன்சொல்லைக் குறிப்பிடுகிறது
15 ஒரு பாடலில் உவமையும் உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி
உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எடுத்துக்காட்டு உவமை அணி
16. உலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலை தடுமாறுகிறது
17 பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்
ஓரிரு தொடர்களில் விடையளிக்க
ஏதேனும் மூன்று வினாக்கள் மட்டும் 3x4=12
18 உழவுத் தொழிலின் நிகழ்வுகள்
நிலத்தைத் தேர்ந்தெடுத்தல்
நடவு செய்ய வயலில் இறங்குதல்
நடவு நட்ட வயலில் மண் குளிருமாறு மடை வழியே நீர் பாய்ச்சுதல்
நெல் மணிகள் விளைதல்
அறுவடை செய்தல்
நெல் தாள்களைக் கட்டுகளாகக் கட்டி களத்தில் சேர்த்தல்
கதிரடித்தல்
19 இரட்டைக்கிளவி அடுக்குத்தொடர் ஒப்பீடு
இரட்டைக் கிளவியைப் பிரித்தால் அது பொருள் தராது
அடுக்குத் தொடரைப் பிரித்தால் பொருள் தரும்
இரட்டைக் கிளவியில் ஒரு சொல் இரண்டு முறை மட்டுமே வரும்
அடுக்குத் தொடரில் ஒரு சொல் இரண்டு முதல் நான்கு முறை வரை வரும்
இரட்டைக் கிளவியில் சொற்கள் இணைந்தே நிற்கும்
அடுக்குத் தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும்
இரட்டைக்கிளவி வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும்
அடுக்குத்தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்கள் காரணமாக வரும்
20 ஒப்புரவுக்கு அடிகளார் தரும் விளக்கம்
மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழப் பிறந்தவர்கள்
பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படா வண்ணம் உதவுவது சிறந்த பண்பு
அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெறியாகும்
21 சாந்தம் பற்றி இயேசு காவியம் கூறுவன
சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள்
இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது
அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார்
மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை
அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமை உடையது
22 நான் தலைவராக இருந்தால் செய்யும் மக்கள் நலப்பணிகள்
தரமான கல்விக்கூடங்களைத் திறந்து வைத்தல்
மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல்
கழிவுநீர் கால்வாய்கள் அமைத்தல்
சாலை வசதி, குடிநீர் வசதி, நூலக வசதி, தெரு விளக்கு வசதி செய்து தருதல்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
பகுதி 3
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்க5x2=10
23 கலைச்சொல் எழுதுக
அ எளிமை
ஆ அறுவடை
24 கொடுக்கப்பட்டுள்ள ஊரின் பெயர்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக
அ. கன்னியாகுமரி
கன்னி குமரி கரி கனி
ஆ.பட்டுக்கோட்டை
பட்டு கோட்டை கோடை படு பட்டை கோடு
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
25 தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக
அ.நானும் என் தோழியும் நகமும் சதையும் போல இணைந்து இருப்போம்
ஆ.திருவள்ளுவரின் புகழை உள்ளங்கை நெல்லிக்கனி போல உலகமே அறிந்துள்ளது
26 சரியான வினாச் சொல்லை விட்டு நிரப்புக
அ.நெல்லையப்பர் கோவில் எங்கே உள்ளது?
ஆ அறநெறிச்சாரம் பாடலை எழுதியவர் யார்?
27 சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக
அ நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும் இல்லையென்றால் துன்பப்பட நேரிடும்
ஆ.தமிழகத்தில் மழை பெய்து வருகிறது மேலும் இரண்டு நாள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
28 கீழ்க்காணும் சொல்லைப் பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் பயன்படுத்தித் தொடர்கள் உருவாக்குக
ஆடு
ஆடு வயலில் மேய்ந்தது மேடையில் ஆடுகிறான்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
29.கீழ்க்காணும் தலைப்பில் கவிதை எழுதுக
தன்னம்பிக்கை
பொருத்தமாக கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
பகுதி 4
அடி பிறழாமல் எழுதுக 4+2-6
30 மாறியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு - நீர் உலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்
ஒன்றுறா முன்றிலோ இல்.
-முன்றுறை அரையனார்
31 வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று
பகுதி 5
ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளி 1x6=6
32 டி.கே.சி. குறிப்பிடும் திருநெல்வேலி கவிஞர்கள் பற்றிய செய்திகள்
33 பயணம் கதையைச் சுருக்கி எழுதுதல்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
பகுதி 6
ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளி 1x6=6
34 கட்டுரை எழுதுக
ஒற்றுமையை உயர்வு
35 உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவைக் காண வருமாறு அழைப்பு விடுத்து உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுதல்
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
செ.பாலமுருகன்
தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
ஆவுடையாபுரம்
விருதுநகர் மாவட்டம்