கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, February 12, 2025

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள். 12-02-2025. புதன்.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

12-02-2025. புதன்.

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல்: துறவறவியல்;

அதிகாரம் : துறவு : 

குறள் எண் : 341.

குறள் :

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.

விளக்கம்:

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

பழமொழி :

> அகத்தின் அழகு முகத்தில் தெரியும். 

The face is the index of the mind.

இரண்டொழுக்க பண்புகள் :

1) ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தனித்திறமை இருக்கும். யாருடைய திறமையையும் குறைவாக எண்ணமாட்டேன்.

2) தேர்வுகள் மூலம் எனது கற்றலை மதிப்பிட முடியும். எனவே தைரியமாக தேர்வுகளை எழுதுவேன்.

பொன்மொழி :

· கடுமையான உழைப்பு தவிர வெற்றிக்கு வேறு எந்த ரகசியமும் இல்லை .- டர்னர்

பொது அறிவு:

1) இந்திய சினிமாவின் தந்தை யார் ?

விடை : தாதா சாகேப் பால்கே

2) மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறைக்கு என்ன பெயர்?

விடை : ஹைட்ரோபோனிக்ஸ்

English words & meanings:

Disease-sickness.

நோய்

Entrance -a passage or gate to go inside a place.

வாசல்.

நீதிக்கதை

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 23 நாட்களாக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு முதியவரைக் காண அவருடைய குடும்பத்தினர் யாருமே வராத நிலையில் ஒரு புறா மட்டும் தினமும் வந்து அந்த முதியவர் சிகிச்சையிலிருந்த ஜன்னலின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்ததாம்.

தொடர்ந்து ஓரிறு நாட்கள் இதைக்கவனித்த நர்ஸ் பெண்மணி புறா வந்த நேரம் ஜன்னலைக் கொஞ்சம் திறந்து விட்டாராம். அதற்கெனவே காத்திருந்ததைப்போல உடனே அந்தப்புறா உள்ளே வந்து இந்த முதியவரின் மேல் சிறிதுநேரம் அமர்ந்திருந்துவிட்டு பறந்து போய்விட்டதாம். அதன் பிறகும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மாலை வேளைகளில் அந்தப் புறா வந்து ஜன்னலோரம் அமர்வதும் நர்ஸ்கள் ஜன்னலைத் திறந்து விடுவதும் சில நிமிடங்கள் அந்த முதியவரின் மேல் இருந்துவிட்டுப் புறா பறந்து செல்வதும் வழக்கமாகியிருந்ததாம்.

இந்த விசித்திரமான நடைமுறையைக் கேள்விப்பட்ட தலைமை மருத்துவர் அந்த முதியவரின் பின்புலத்தை அறிந்துவருமாறு மருத்துவமனை ஊழியர் ஒருவரிடம் சொல்லியிருக்கிறார். அந்த ஊழியரும் இந்த முதியவர் தங்கியிருந்த முகவரிக்குச் சென்று விசாரித்தபோதுதான் ஒரு உண்மை தெரியவந்தது.

குடும்ப உறுப்பினர்கள் யாருமில்லாமல் தனிமையில் வாழ்ந்துவந்த அந்த முதியவர் தினந்தோறும் காலை மாலை வேளைகளில் அங்கு சுற்றித்திரியும் புறாக்கூட்டத்திற்கு உணவும் தண்ணீரும் வைத்து வந்தவராம். அந்தக் கூட்டத்துப் புறாக்களில் ஒன்றுதான் தன் எஜமானனைத் தேடி தினமும் மருத்துவமனைக்கே வந்து சென்றுள்ளது.

நீதி: அவரவர் செய்த செயல்களின் பலனை (நன்மையோ & தீமையோ) அனுபவிக்காமல் யாருமே இந்தப் பூமியை விட்டுப் போய்விட முடியாது. தீதும் நன்றும் பிறர்தர வாரா...

இன்றைய செய்திகள் : 12.02.2025

மாநிலச்செய்தி:

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள், பிற அரசு துறைகள் ரூ.7,351 கோடி மின்கட்டண பாக்கி

உள்நாட்டுச்செய்தி:

முதல்வர் பிரேன்சிங் ராஜினாமா: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி

உலகச்செய்தி:

மெக்சிகோ வளைகுடாவை 'அமெரிக்க வளைகுடா' என பெயர் மாற்றிய டிரம்ப்: விமானத்தில் பறந்து கொண்டே உத்தரவு

விளையாட்டுச்செய்தி:

ஏபிஎன் ஆம்ரோ டென்னிஸ் அல்காரஸ் சாம்பியன்: ஆஸிதிரேலிய வீரரை வென்றார்

Todays headlines 12.02.2025

State News:

Tamil Nadu Electricity Board owes Rs 7,351 crore to local bodies, other government departments

National News:

Chief Minister Prasingh resigns: President's rule in Manipur

World News:

Trump renames Gulf of Mexico as 'Gulf of America': Orders while flying

Sports News:

ABN Amro Tennis Alcaraz Champion: Beats Australian Player.

தமிழ்த்துகள்

Blog Archive