கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, February 20, 2025

எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 2025

 8th Tamil Third mid term exam question Answer Key Virudhunagar district 2025


எட்டாம் வகுப்பு             தமிழ்

மூன்றாம் இடைப்பருவத் தேர்வு         பிப்ரவரி    2025                     விடைக்குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                                                7 X 1 = 7

1. அ. ஒருபைசாத்தமிழன்

2. ஆ. இன்பம்+துன்பம்

3 இ. நம்பர்க்கங்கு                                 தமிழ்த்துகள்

4 ஈ. கைக்குழந்தைகள்

5 அ. இரண்டு

6 ஆ. பாரதரத்னா

7 இ. ஊக்கம்.                           தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

ஆ. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை தருக.                                                 5 X 2 = 10

8.         நமக்கு வரும் துன்பத்தினாலும் ஒரு நன்மை உண்டு.

          அத்துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்துகாட்டும் அளவுகோலாகும்..

 

9          சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.

            1930 ஆம் ஆண்டு நாசிக்கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.தமிழ்த்துகள்

 

கட்டாய வினா

10  நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.

 

11         உலகிற்கு ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் உன்னையே நீ மாற்றினால் தோல்வியும் உன் உயர்விற்குத் தூண்டுகோலாகும். தமிழ்த்துகள்

 

12 1.     நல்ல சிந்தனை

2.         சிறப்பான செயல்

3.         உயர்வான பேச்சு

4.         உவப்பான எழுத்து

5.         பாராட்டத்தக்க உழைப்பு.

தமிழ்த்துகள்

 13.       அ. முத்து நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான்.

ஆ.தாம்

 

14.                           அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை, பொறாமை, எளிமை, நினைவு, துணிவு,       இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல்,       சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம்,       வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல்.

 

இ. அடிபிறழாமல் எழுது.                                                                 1 X 5 = 5

 

15. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே.             - திருமூலர்.

 

ஈ.எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                                  3 X 4 = 12

 

16)     நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய்ப் படுக்கையாகும்.

நீ கிளர்ந்து எழுந்தால் அதுவே உனக்கு பாதையாகும்.

 

17)      ஒரு சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் சகிப்புத்தன்மை, மனிதநேயம், இரக்கம், சமத்துவம், உதவும் மனப்பான்மை, அன்பு, பிறர் நிலையில் தன்னை வைத்து பார்க்கும் பண்பு ஆகிய உயர் பண்புகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

 

18)     இருவகை அசைகள் – 1.நேரசை, 2.நிரையசை.

        குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும்    ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசை.

எ.கா- ந, நம், நா, நாம்.

         இரண்டு குறில்எழுத்துகள் அல்லது குறில், நெடில்எழுத்துகள் இணைந்தோ ஒற்றெழுத்து சேர்ந்தோ வந்தால் நிரையசை.

எ.கா – கட, கடல், கடா, கடாம்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

19 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவு குழு உருவாக்கப்பட்டது. 

இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21 - இல் ஒப்படைத்தது.

அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக்குழு அப்போது மக்களாட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றிலிருந்து இந்திய நடைமுறைக்குப் பொருந்தும் சட்டக் கூறுகளை இந்திய அரசியலமைப்பு வரைவில் சேர்த்தது.

அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களின் உரிமைகளுக்குப் பல வகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்தது.

இது மிகச்சிறந்த சமூக ஆவணம் என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுகிறது.

 

 

உ. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.                                                        2 X 5 = 10

 

 

20     1.ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

2.இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது.

3.இதை ஏற்க மறுத்த காந்தியடிகள் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் விளைவாக 1931ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 24 ஆம் நாளில் ஏற்பட்ட ஒப்பந்தமே பூனா ஒப்பந்தம் ஆகும்.

4.இதன்படி ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனித் தொகுதி வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

21 மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன ஐம்பொறிகள் ஆகும்.

நம் உடல் மூலம் ஏழை எளியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்தல்.

வாய் மூலம் துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுதல்.

கண்கள் மூலம் இரக்கம் காட்டுதல்.

மூக்கின் மூலம் எரிவாயு கசிவு போன்றவற்றை உணர்ந்து, விபத்திலிருந்து காத்தல்.

செவிகள் மூலம் பெரியோர்கள் கூறும் நற்சொற்களைக் கேட்டல்.

தமிழ்த்துகள்

22      உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த   கருத்தை உணர வைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.

    எ.கா – கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

               நாவாயும் ஓடா நிலத்து.

    உவமை – தேர் கடலிலும் கப்பல் நிலத்திலும் ஓடாது.

    கூறவந்த கருத்து – தமக்குரிய இடத்தில் வெற்றி பெறலாம்.

 

. ஏதேனும் ஒரு வினாவிற்கு விடை தருக.                                                           1 X 6 = 6

23. குழந்தை கிருஷ்ணாவின் பண்புநலன்கள்.

24. உறவினருக்குக் கடிதம்.                  

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்


தமிழ்த்துகள்

Blog Archive