கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, February 20, 2025

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-02-2025. வியாழன்.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

20-02-2025. வியாழன்.

திருக்குறள் :

பால் : பொருட்பால் ; 

இயல்: குடியியல்;

அதிகாரம் : பெருமை ; 

குறள் எண்: 973.

குறள் :

மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்; கீழ்இருந்தும் 
கீழ்அல்லார் கீழ்அல் லவர்.

பொருள்:

உயர்ந்த நிலையிலிருந்தாலும் உயர்வான தன்மையில்லாதவர் சிறியர் ; கீழ் நிலையில் இருந்தாலும் இழிவான எண்ணமில்லாதவர் பெரியோர்.

பழமொழி :

தன்னை அறிந்தவன் தானே தலைவன்.

He who knows himself may know his maker.

இரண்டொழுக்க பண்புகள் :

1) என்னிடம் உள்ள பொருள்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன்.

2) என்னிடம் இல்லாத பொருள்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி :

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது. - கவிஞர் கண்ணதாசன்.

பொது அறிவு :

1. விழாக்காலங்களில் பலூன்களில் நிரப்பப்படும் வாயு எது?

விடை : ஹீலியம்.

2. இந்தியாவின் தேசிய நீர் வாழ் விலங்கு எது?

விடை : கங்கை டால்பின்

English words & meanings:

College.

கல்லூரி

Court.

நீதிமன்றம்

வேளாண்மையும் வாழ்வும்:

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உணர்ந்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

பிப்ரவரி 20 உலக நீதி நாள்

WORLD DAY OF SOCIAL JUSTICE

FEBRUARY 20

சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டு தோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.

நீதிக்கதை -தென்றலும் சூறாவளியும்

ஆற்றங்கரையிலே நின்ற அந்த மாமரம் சலசலவென்று சிலிர்த்து ஆடிக்கொண்டிருந்தது. அதன் கிளைகளிலே தங்க நிற மாம்பழங்கள் அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தன. ஓர் அணிற் பிள்ளையும் ஒரு கிளிப்பிள்ளையும் அந்த மாமரத்தை நெருங்கின. "அம்மா, மாமரத் தாயே ! பசித்து வந்திருக்கிறோம்" என்றது கிளிப்பிள்ளை. உங்களுக்காகத் தானே பழம் வைத்திருக்கிறேன். நன்றாகச் சாப்பிடுங்கள்"? என்று கூறியது மாமரம்.

"மாவம்மா,இன்று, ஒரே ஆனந்தமாயிருப்பது போல் தெரிகிறதே! என்ன காரணம்?" என்று விசாரித்தது அணிற்பிள்ளை. "பிள்ளைகளே! தென்றல் மாமா வந்திருக்கிறார். அவர் வந்திருப்பதே ஓர் இன்பம்தானே!" என்று கூறியது மாமரம். அணிற்பிள்ளையும் கிளிப்பிள்ளையும் வயிறு நிறைய பழம் சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிட்டன. தென்றல் மாமாவுடன் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தது மாமரம்.

இரண்டு நாட்கழித்து, "மாவம்மா! நேற்றெல்லாம் *ஓ*வென்று அலறிக் கொண்டிருந்தாயே ஏன்?" என்று கேட்டுக் கொண்டே மாமரத்திடம் வந்தது அணிற்பிள்ளை. மாமரத்தைப் பார்த்து "இதென்ன அநியாயம்! மாமரத் தாயே! உன்கிளைகளெல்லாம் ஏன் முறிந்து கிடக்கின்றன. ஐயோ! பழமெல்லாம் கீழே விழுந்து அழுகிக் கிடக்கின்றனவே, ஏன்?' என்று பதறிப் போய்க் கேட்டது கிளிப்பிள்ளை. பிள்ளைகளே, நேற்று சூறாவளி என்கிற முரடன் வந்தான். அவன் செய்த அட்டூழியம் தான் இது!" என்று கூறிக் கண்ணீர் விட்டது மாமரம். மாமரத்தின் துன்பத்தைக் காணப் பொறுக்காமல் கிளிப்பிள்ளையும் அணிற்பிள்ளையும் கண்ணீர் விட்டன.

அவற்றிற்குப் பழம் கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்று மாமரம் வருந்தியது. பின்னர் அவையிரண்டும் தத்தம் இருப்பிடம் நோக்கிச் சென்றன.

கருத்துரை : - நல்லவர்கள் வரவால் இன்பம் உண்டாகும்.

தீயோர்கள் வரவால் துன்பமே உண்டாகும்.

இன்றைய செய்திகள் 20.02.2025

தமிழக அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்துக்குள் விடுவிக்க வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள்: தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

"விண்வெளி உட்பட பல துறைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது" - மத்திய தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம்.

தூய்மையான எரிசக்தி, தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர்ச்சியடையும் என ஐ.நா. கருத்து தெரிவித்துள்ளது.

* துபாய் ஓபன் டென்னிஸ் தொடர்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா.

பிரிட்டிஷ் ராலி சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தின் 2025-ம் ஆண்டு சீசனில் எம்ஆர்எஃப் அணி இணைந்துள்ளது. மேலும் இந்த தொடருக்கு தேவையான அனைத்து டயர்களையும் விநியோகம் செய்யும் உரிமையையும் எம்ஆர்எஃப் பெற்றுள்ளது.

Today's Headlines - 20.02.2025

Tamil Nadu Chief Minister M.K. Stalin has written to Union Minister for Women and Child Development Smriti Irani, requesting her to release the central government's share of funds for various schemes within a specified timeframe.

Tamil Nadu Chief Minister M.K. Stalin laid the foundation stone for the Tidal Parks in Trichy and Madurai, which will provide employment opportunities for 12,000 people.

"India is making rapid progress in various fields, including space technology," said Union Minister of State for Technology Jitendra Singh.

The United Nations has stated that India will experience rapid growth using clean energy and industrialization.

Dubai Open Tennis: Kazakhstani player Elena Rybakina advances to the next round.

MRF team joins British Rally Championship for the 2025 season and obtains the rights to supply all the necessary tires for the tournament.

தமிழ்த்துகள்

Blog Archive