கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, February 14, 2025

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்14-02-2025. வெள்ளி.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

14-02-2025. வெள்ளி.

திருக்குறள் :

பால் : அறத்துப் பால் ; 

இயல்: துறவறவியல்

அதிகாரம்: துறவு ; 

குறள் எண் : 343.

குறள் :

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

விளக்கம் :

ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.

பழமொழி :

> பொறுத்தார் பூமி ஆள்வார்.

Blessed are the meek for they shall inherit the earth.

இரண்டொழுக்க பண்புகள்:

1) ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தனித்திறமை இருக்கும். யாருடைய திறமையையும் குறைவாக எண்ணமாட்டேன்.

2) தேர்வுகள் மூலம் எனது கற்றலை மதிப்பிட முடியும். எனவே தைரியமாக தேர்வுகளை எழுதுவேன்.

பொன் மொழி :

· பொறுமையும் விடாமுயற்சியும் நிச்சயம் வெற்றியைத் தரும்.

விவேகானந்தர்

பொது அறிவு:

1) நீரில் கரையாத் பொருளுக்கு எடுத்துக் காட்டு ஒன்று கூறுக. 

கந்தகம்

2) திரவ நிலையில் உள்ள உலோகம் எது?

பாதரசம்

English words & meanings:

Bribe - கையூட்டு (லஞ்சம்)

+ Translation - மொழிபெயர்ப்பு

நீதிக்கதை

ஒரு நாள், வாயில் உள்ள பற்கள் அனைத்தும் ஒன்று கூடி, நாம் எல்லோரும் கடப்பட்டு பொருள்களை சிரமத்தோடு கடித்து, மெல்லுகிறோம். ஆனால், இந்த நாக்குக்கு ஒரு உழைப்பும் இல்லை, சுவைத்து, உண்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. மேலும், நாம் பெரும்பான்மையானவர்கள். நாக்கோ சிறுபான்மை. அதனால் நாம் நம்முடைய வலிமையைக் காட்டுவதற்காக, நாக்கைக் கடித்து புண் ஆக்கிவிடுவோம், அது என்ன செய்யும் பார்க்கலாம் என்ற தீர்மானித்தன.

அதை அறிந்த நாக்கு, "அடே பற்களே! நாம் அனைவரும் மனித உடலில் உள்ள உறுப்புகள். ஒன்றுக்கொன்று உதவியுடனும், ஒத்துழைப்புடனும் இருந்து, செயல்படுவதே முறை. இதில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரவர் கடமையை அவரவர் செய்வதே சிறப்பு. மீறி தகராறு செய்வீர்களானால், நான் என்ன செய்வேன் தெரியுமா? தெருவில் போய்க் கொண்டிருக்கும் ஒரு முரட்டு ஆளைப் பார்த்து, 'அடே, முரடனே படவா!' என்று சொல்லி விட்டு, நான் உள்ளே போய் விடுவேன்". அவன் வேகமாக வந்து, முகத்தில் பல குத்துகள் விடுவான். நீங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒருபக்கமாக, உதிர்ந்து போய்விடுவீர்கள்" என்று எச்சரித்தது நாக்கு.

நாக்கு கூறியது உண்மைதான்! என்பதை பற்கள் உணர்ந்தன.

ஒருவருக்கு ஒருவர் உதவியும் ஒத்துழைப்பும் இல்லாமல் வாழமுடியாது.

இன்றைய செய்திகள் 14.02.2025 வெள்ளி

மாநிலச்செய்தி:

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு

உள்நாட்டுச்செய்தி:

2025 வருமான வரி சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்

உலகச்செய்தி:

ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது. புதினுடன் டெலிபோனில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

விளையாட்டுச்செய்தி:

38-வது தேசிய விளையாட்டு போட்டி: ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் தங்கம் வென்றார் தமிழ்நாட்டின் இளம் வீரர் பிரவீன் சித்ரவேல்

Important News: 14.02.2025

Friday

State News:

Transport workers' wage agreement 2nd phase talks: Minister Sivashankar participates

National News:

Union Minister Nirmala Sitharaman introduced the Income Tax Bill 2025 in the Lok Sabha

World News:

Russia-Ukraine war is coming to an end. US President Trump spoke to Putin on the phone

Sports News:

38th National Games: Tamil Nadu's young athlete Praveen Chitravel wins gold in the triple jump category.

தமிழ்த்துகள்

Blog Archive