கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, October 31, 2025

SMART MOVE IN PARROT COMPETITION வேற லெவல் போட்டி


 

திருக்குறள் 180 இறல்ஈனும்... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - iral eenum


thirukural Explanation tamil & english - iral eenum

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.

வகுப்பு 6 தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் 6th tamil II mid term question 2025


 6th tamil II mid term question 2025

6th tamil second mid term exam model question paper pdf 2025 Virudhunagar district class VI

ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் PDF விருதுநகர் மாவட்டம் 2025

    பதிவிறக்கு/DOWNLOAD


6th tamil second mid term exam model question paper pdf 2025 Virudhunagar district class VI

ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் 7th tamil II midterm question 2025


7th tamil II midterm question 2025
7th tamil second mid term exam model question paper pdf 2025 Virudhunagar district class VII


ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் PDF விருதுநகர் மாவட்டம் 2025

   பதிவிறக்கு/DOWNLOAD


7th tamil second mid term exam model question paper pdf 2025 Virudhunagar district class VII

Thursday, October 30, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-10-2025. வெள்ளி.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

31-10-2025. வெள்ளி.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : அரசியல் ;

அதிகாரம் : காலம் அறிதல் ; 

குறள் எண் : 485.

குறள் :

காலங் கருதி இருப்பர் கலங்காது

ஞாலங் கருது பவர்.

உரை :

உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

பழமொழி :

வெற்றியின் ஏணி படிப்படியாக ஏறப்படும்.

The ladder of success is climbed step by step.

இரண்டொழுக்க பண்புகள்:

1.செல்லும் இடமெல்லாம் அன்பு, ஒழுக்கம், நேர்மை எனும் விதைகளை விதைத்துச் செல்வேன்.

2.அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

* முடியுமா நம்மால்? என்பது தோல்விக்கு முன் வரும் தயக்கம்.' முடித்தே தீருவோம்' என்பது வெற்றிக்கான தொடக்கம்.

கலைஞர். மு.கருணாநிதி

பொது அறிவு:

01.தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் எது?

தஞ்சாவூர்- காவிரி படுகை பகுதிகள்

02. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?

திரு. ராஜகோபாலச்சாரி

English words :

Educate - instruct

Eject - expel

தமிழ் இலக்கணம்:

> உரிச்சொல் என்பது ஒரு பெயர்ச்சொல்லுக்கோ அல்லது வினைச்சொல்லுக்கோ உரியதாக, அதன் பண்புகளை விளக்கி நிற்கும் சொல் ஆகும். மற்ற சொற்களுடன் இணைந்து அதன் பொருளைச் சிறப்பிக்கின்றன.

எடுத்துக்காட்டாக, நல்ல மாணவன் என்பதில் 'நல்ல' என்ற உரிச்சொல் 'மாணவன்' என்ற பெயர்ச்சொல்லின் பண்பை விளக்குகிறது.

அழகிய மயில் - அழகிய என்பது மயிலின் அழகு தன்மையைக் குறிக்கிறது.

அறிவியல் களஞ்சியம் :

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.

* நமது மூளை 80% நீரால் ஆனது.

*நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

அக்டோபர் 31

இந்திரா காந்தி அவர்களின் நினைவுநாள்

இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார்.

ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார்.

அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார்.

ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.

நீதிக்கதை

ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை, தாங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது.

ஆண்முதலை யோசித்தது என்ன செய்வதென்று. திடீரென ஒரு யோசனை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம். அவனும் வருவான் அவனை கொன்று இதயத்தை சாப்பிடு என கூறியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம். அடுத்த நாள் ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்து முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது.

நடு ஆற்றில் சென்று கொண்டிருக்கும் போது ஆண் முதலை கூறியது நான் உன்னை என்ன செய்ய போகிறேன் தெரியுமான்னு கேட்டது. அப்பாவி குரங்கு விருந்துக்கு தானே அழைத்தாய் என்றது.

முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னை அழைத்து செல்கிறேன் என கூறியது. சற்று குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது. சற்று யோசித்த குரங்கு, அடடா என்ன நண்பா இதை முன்னாடியே சொல்லகூடாதா? நேற்று நான் என் இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே இருப்பதாக கூறியது.

முதலையும் அப்படியா வா திரும்பி போய் எடுத்துகொண்டு வரலாம் என திரும்பவும் கரைக்கு வந்து விட்டது. தப்பித்த குரங்கு முதலையிடம் கூறியது, முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொல்ல பார்கிறாயான்னு சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி சென்றது.

நீதி :நமக்கு ஒரு இடத்தில் துன்பம் ஏற்படப்போகிறது என முன்னதாகவே தெரிந்தால், அந்த துன்பம் தன்னை வந்தடைவதற்கு முன்னால் சிந்தித்து அதிலிருந்து விடுபட வேண்டும்.

இன்றைய செய்திகள் 31.10.2025

* ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறைக்கும் இ-பாஸ் கட்டாயம். மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

* நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம்-மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

*சீனப் பொருட்கள் மீதான வரியை 10% குறைத்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

*அரிய பூமி தாதுக்களை அமெரிக்காவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா சம்மதம்.

விளையாட்டுச் செய்திகள்

*மகளிர் உலக கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.

Today's Headlines 31.10.2025

* E-pass mandatory for Ooty, Kodaikanal, and Valparai. District administration announces.

A fine of Rs. 5000 will be imposed if a license is not obtained to keep dogs and cats- this was the resolution passed at the Municipal Council meeting.

* US President Trump reduced tariffs on Chinese goods by 10%.

* China agrees to resume exports of rare earth minerals to the US.

SPORTS NEWS

Women's World Cup: Australia wins the toss and will bat against India.

Prepared by

Covai women ICT போதிமரம் 

வகுப்பு 8 தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் 8th tamil II mid term question 2025


8th tamil II mid term question 2025 

8th tamil second mid term exam model question paper pdf 2025 Virudhunagar district class VIII

எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் PDF விருதுநகர் மாவட்டம் 2025

  பதிவிறக்கு/DOWNLOAD


8th tamil second mid term exam model question paper pdf 2025 Virudhunagar district class VIII

வகுப்பு 9 தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு 25 மாதிரி வினாத்தாள் 9th tamil II mid term model question


 9th tamil II mid term model question

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் PDF விருதுநகர் மாவட்டம் 2025

 பதிவிறக்கு/DOWNLOAD


9th tamil second mid term exam model question paper pdf 2025 Virudhunagar district class IX

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-10-2025. வியாழன்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

30-10-2025. வியாழன்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : அரசியல் ;

அதிகாரம் : காலம் அறிதல் ; 

குறள் எண் : 482.

குறள் :

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு.

உரை :

காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

பழமொழி :

இன்றைய முயற்சி நாளைய சாதனையைத் தரும்.

Effort today brings achievement tomorrow.

இரண்டொழுக்க பண்புகள் :

1.செல்லும் இடமெல்லாம் அன்பு, ஒழுக்கம், நேர்மை எனும் விதைகளை விதைத்துச் செல்வேன்.

2.அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு.ஒளவையார்.

பொது அறிவு :

01.மலைவாசத்தலங்களில் ஒன்றான டார்ஜிலிங் எந்த மாநிலத்தில் உள்ளது?

மேற்கு வங்காளம்- West Bengal

02. இந்தியாவில் தேர்தல் மூலம் பதவிக்கு வந்த முதல் ஜனாதிபதி யார்?

திரு.ராஜேந்திர பிரசாத்

Dr. Rajendra Prasad

English words:

doubt-skepticism, + easily-effortlessly

தமிழ் இலக்கணம்:

இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராத ஒரு சொல் ஆகும், இது பெயர்ச்சொற்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையில் நின்று பொருளை விளக்குகிறது அல்லது தெளிவுபடுத்துகிறது.

ஏ,ஓ,உம்,தான், இன்,கு,உடைய, போல, மற்று, சோவென

எ.கா - தான்: "அவன் தான் செய்தான்"

இன்: "மரத்தின் இலை"

அறிவியல் களஞ்சியம் :

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன. ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

அக்டோபர் 30

மாரடோனா அவர்களின் பிறந்தநாள்

1960 அக்டோபர் 30 ஆம் தேதி அர்ஜென்டினாவின் Lanús பகுதியில் பிறந்தவர் மாரடோனா. அவரது குடும்பம் எளிய பின்னணியை கொண்டது. அவருக்கு நான்கு தங்கைகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். மாரடோனா மூன்று வயது சிறுவனாக இருந்த போது கால்பந்து ஒன்று அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் கால்பந்தாட்டத்தின் மீதான காதலை பின்னாளில் வளர்த்துள்ளது.

வீட்டில் வறுமை வாட்டிய போதும் கால்பந்தை விடாமல் விரட்டியுள்ளார் மரடோனா. 15 வயது 355 நாளில் தொழில்முறை கால்பந்தாட்ட விளையாட்டில் முதல்முறையாக விளையாடி உள்ளார் மாரடோனா. அதற்கடுத்த சில மாதங்களில் அர்ஜென்டினா அணிக்காக விளையாட ஆரம்பித்தார் மாரடோனா. அதன்பிறகு நடந்த அனைத்தும் வரலாறு.

அர்ஜென்டினா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடிய மாரடோனா 34 கோல்களை அடித்துள்ளார். நூற்றாண்டின் சிறந்த கோல் என போற்றப்படும் கோலை இங்கிலாந்துக்கு எதிராக அடித்திருந்தார் மாரடோனா. அதே ஆட்டத்தில் தான் சர்ச்சையான HAND OF GOD என்ற கோலும் அடிக்கப்பட்டது.

நீதிக்கதை

தந்தையும் மகனும் ஒரு கழுதையை ஓட்டிக் கொண்டு கடைவீதி வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அதைப்பார்த்த ஒருவர் கழுதை சும்மாதானே செல்கிறது. யாராவது ஒருவர் அதன் மீது ஏறிச் செல்லலாமே என்றார். அதுவும் சரியென்று தந்தை மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார்.

கொஞ்ச தூரம் போனதும் எதிரே வந்த ஒருவர், ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைத்து விட்டு, நீ கழுதையின் மேல் அமர்ந்து செல்வது நியாயமா? எனக் கேட்டார். உடனே மகன் கீழே இறங்கிக் கொண்டு தந்தையை கழுதை மீது அமரச் சொன்னான்.

தந்தையும் அவ்வாறே செய்தார். இப்படியாக இன்னும் கொஞ்ச தூரம் பயணித்த பிறகு, இன்னொருத்தர் பார்த்து தந்தையைக் கடிந்து கொண்டார். ஏனய்யா இப்படி சின்ன பிள்ளையை நடக்க விட்டு நீங்கள் கழுதை மேல் பயணிக்கலாமா? என்று கேட்டார்.

தந்தையும் மகனும் யோசித்தனர் இப்படிச் சொல்கிறார்களே என்ன செய்வது என பலவாறாக யோசித்து முடிவில் இரண்டு பேருமே ஏறிச் செல்வோம் என கழுதையின் முதுகில் ஏறிக் கொண்டனர்.

அடக் இரண்டு பேருமாக கழுதை மீது அமர்ந்து செல்வதைப் பார்த்த சிலர், கொடுமையே இப்படியா இந்த வாயில்லா பிராணியைத் துன்புறுத்துவார்கள். இவர்களுக்கு இரக்கமே இல்லையா? என்று கூறினார்கள்.

மனம் குழம்பிப் போன தந்தையும் மகனும் கழுதையை விட்டு இறங்கியதோடு இல்லாமல், இருவருமாகச் சேர்ந்து கழுதையைத் தூக்கி தோளில் சுமந்தபடியே நடக்கத் தொடங்கினர். இதைகண்டதும் அங்கிருந்தவர்கள், இப்படியுமா முட்டாள்கள் இருப்பார்கள் என கூச்சலிட்டு நகைக்கவும் அரண்டு போன கழுதை கீழே குதித்து அவர்களையும் கீழே தள்ளி விட்டு ஓட்டமெடுத்தது.

இப்படி சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல் அடுத்தவர் சொல்வதைக் கேட்டதால் தங்களுக்கு அடிபட்டதோடு கழுதையும் ஓடிப் போய்விட்டதே எனக் கவலை பட்டபடியே நடந்தனர்.

நீதி : மற்றவர்களுக்காக வாழக் கூடாது. ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும் என அறிந்து கொண்டு அதன்படி செய்ய வேண்டும்.

இன்றைய செய்திகள் 30.10.2025

* தென்காசியில் ரூ.1,020 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

*தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு 2 வாரம் ஓய்வு: 10-ந் தேதிக்கு பிறகு ஆரம்பம்.

* டெல்லியில் செயற்கை மழை பெய்யவைக்க ரூ.3.2 கோடி செலவில் IIT கான்பூர் எடுத்த முயற்சி தோல்வி.

*விளையாட்டுச் செய்திகள்

* கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ்: நடப்பு சாம்பியனை வீழ்த்திய 17 வயது இந்திய வீராங்கனை. கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் 17 வயதான அனாஹெத் பங்கேற்று விளையாடி வருகிறார். காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை அனாஹெத் வீழ்த்தியுள்ளார்.

Today's Headlines

30.10.2025

* Chief Minister inaugurated the welfare schemes worth Rs. 1,020 crore in Tenkasi

*2-week break for northeast monsoon in Tamil Nadu: Starting after 10th November.

* IIT Kanpur's attempt to make artificial rain in Delhi for Rs. 3.2 crore failed.

SPORTS NEWS

Canada Women's Open Squash: 17-year-old Indian player defeats defending champion. 17-year-old Anahet from India is participating in the Canada Women's Open Squash series. Anahet defeated the defending champion in the quarterfinals.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Wednesday, October 29, 2025

இந்தியக் குடியரசுத் தலைவர்கள் பதவிக்காலம் - பொதுஅறிவு Indian presidents Tet Tnpsc G.K


Indian presidents Tet Tnpsc G.K 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-10-2025. புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

29-10-2025. புதன் 

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல் : துறவறவியல் ; 

அதிகாரம் : இன்னா செய்யாமை ; 

குறள் எண் : 311.

குறள் :

சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள்

உரை :

சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

பழமொழி :

புத்தகங்களை விட வாழ்க்கை தான் சிறந்த பாடங்களை கற்பிக்கிறது.

Life teaches lessons better than books.

இரண்டொழுக்க பண்புகள்:

1.செல்லும் இடமெல்லாம் அன்பு, ஒழுக்கம், நேர்மை எனும் விதைகளை விதைத்துச் செல்வேன்.

2.அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

* ஒருவரை தோற்கடிப்பது மிக எளிது. ஆனால், ஒருவரை வெல்வது மிகக் கடினம். டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

பொது அறிவு :

01.இந்தியாவின் மிகப்பெரிய நதித் தீவு எது?

மஜூலி தீவு -அசாம் 
Majuli island - Assam

02.இந்தியாவின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் யார்?

ஜவஹர்லால் நேரு-16 ஆண்டுகள் Jawaharlal Nehru - 16 years

English words:

discover-uncover,

distinguish-differentiate

தமிழ் இலக்கணம்:

> குறிப்பு வினைமுற்று என்பது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறில் ஏதேனும் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், செய்பவரை மட்டும் உணர்த்தி முடியும் வினைமுற்று ஆகும்.

→ எ. கா. பணக்காரன். இதில் காலம் குறிக்கப் படவில்லை. நேற்று பணக்காரனாக இருந்து இருக்கலாம் அல்லது இன்று பணக்காரனாக இருக்கலாம். இவ்வாறு குறிப்பாக காலத்தை உணர்த்துவதால் இது குறிப்பு வினை ஆகும்.

அறிவியல் களஞ்சியம் :

ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது. இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

அக்டோபர் 29

(World Stroke Day)

OCTOBER 29

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29 ஆம் நாளன்று உலக பக்கவாத நாள் (World Stroke Day) அனுசரிக்கப்படுகிறது. பக்கவாதத்தின் தீவிர தன்மையையும் அதிக விகிதங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதும் அந்த நிலையின் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் உயிர் பிழைத்தவர்களுக்கு சிறந்த கவனிப்பு மற்றும் ஆதரவை உறுதி செய்வதும் உலக பக்கவாத நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கங்களாகும்.

மனித உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் முக்கியமானது, 'பக்கவாதம். ஒரு மனிதனை செயல்பட விடாமல் ஓரிடத்தில் முடக்கிப்போடும் அபாயகரமான நோயில் இதுவும் ஒன்று.மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக, மூளை செயல் இழப்பதால் இந்த பக்கவாத நோய் ஏற்படுகிறது. வலது, இடது என்று இரண்டு பாகங்களாக பிரிந்திருப்பது மூளை. வலதுபக்க மூளை இடது பக்க உடலையும், இடதுபக்க மூளை வலது பக்க உடலையும் கட்டுப்படுத்துகின்றன. இதில் ஒரு பக்கம் செயல்படாமல் போனாலும் மற்றவை செயல்படாது.

நீதிக்கதை

ஒரு காட்டில் பல மிருகங்கள் வசித்து வந்தன. அங்கு வசித்து வந்த முயலுக்கு கர்வம் அதிகம். அது தானே இக்காட்டில் வேகமாக ஓடுவேன் என்ற கர்வம் வந்தது. மெதுவாக நகரக்கூடிய ஆமையிடம் ஏளனமாக ஒருநாள் முயல் தன்னுடன் ஓட்டப் பந்தயத்திற்கு வருமாறு கேட்டது. முதலில் இல்லை எனக்கூறிய ஆமை முயலின் கர்வத்தை அடக்க வேண்டுமென நினைத்து ஆம் என்றது.

பல மிருகங்களுக்கு இடையில் போட்டி ஆரம்பமானது. ஒரு முடிவிடமும் அறிவிக்கப்பட்டது. முயல் ஆமையை விட பன்மடங்கு வேகத்தில் ஓடியது. ஆமையோ மிகவும் மெதுவாகவே சென்றது. முக்கால்வாசி தூரம் ஓடி முடித்த முயல் ஆமை மெதுவாக வருவதைக்கண்டு ஒருமரத்தின் கீழ் நித்திரை செய்தது. ஆமையோ மெது மெதுவாக முயல் தூங்கிய தூரத்தைக்கடந்து முடிவுக்கோட்டை நெருங்கியது. அந்த நேரம் தூக்கம் கலைந்த முயல், ஆமை எல்லையை நெருங்கியதைக் கண்டு ஓட்டம் பிடித்தது. எனினும் முயலுக்கு முதல் ஆமை வெற்றி இலக்கை அடைந்தது.

நீதி : நிதானம் பிரதானம்.

இன்றைய செய்திகள் 29.10.2025

* மோன்தா புயல்: சீற்றத்துடன் காணப்படும் சென்னை பட்டினபாக்கம் கடற்கரை.

* சென்னை ஐஐடியை சேர்ந்த 3 பேராசியர்களுக்கு மத்திய அரசின் ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் விருது.

* டெல்லியில் அதிகரித்த காற்று மாசு: செயற்கை மழை பெய்ய வைக்க புறப்பட்ட விமானம்.

* துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 22 பேர் படுகாயம்.

விளையாட்டுச் செய்திகள்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Today's Headlines - 29.10.2025

* Montha Cyclone: Chennai Pattinapakkam beach is in a state of fury.

*3 professors from IIT Madras were awarded the Rashtriya Vigyan Puraskar by the Central Government.

* Increased air pollution in Delhi: A Plane takes off to cause artificial rain.

* Powerful earthquake in Turkey: 22 people injured.

SPORTS NEWS

The first T20 between India and Australia is being played today. The Indian team is busy training to avenge their defeat in the ODI series

Prepared by

Covai women ICT போதிமரம் 

Tuesday, October 28, 2025

வெற்றிக்கு வழி தமிழ் மேற்கோள் quote of the day success


 

பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் விடைகள் 100 செங்கல்பட்டு


Tenth tamil one mark test key

தமிழ் ஒளிர் இடங்கள் ஏழாம் வகுப்பு தமிழ் விரிவானம் நெடுவினா விடை 7th virivanam tamil olir idangal


 7th virivanam tamil olir idangal

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 தமிழ் ஒளிர் இடங்கள் நெடுவினா விடை pdf 7th tamil term 2 tamil olir idangal big question

 பதிவிறக்கு/DOWNLOAD


7th tamil term 2 tamil olir idangal big question and answer pdf

இரண்டாம் இடைப் பருவத் தேர்வு பாடத் திட்டம் 2025

Second mid term exam syllabus 2025

TRUST EXAM APPLICATION FORM தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு 2025 விண்ணப்ப படிவம்

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-10-2025. செவ்வாய்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

28-10-2025. செவ்வாய்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : அரசியல் ;

அதிகாரம் : சிற்றினம் சேராமை ; 

குறள் எண் : 460.

குறள் :

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉ மில்.

உரை :

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை,தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

பழமொழி :

வாழ்க்கையில் ஒவ்வொரு வீழ்ச்சியும் எழுவதற்கான படிகளே.

Every fall in life is a step to rise.

இரண்டொழுக்க பண்புகள் :

1.செல்லும் இடமெல்லாம் அன்பு, ஒழுக்கம், நேர்மை எனும் விதைகளை விதைத்துச் செல்வேன்.

2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

அதிகம் வைத்திருப்பவன் செல்வந்தன் அல்ல; அதிகம் கொடுப்பவனே செல்வந்தன். எரிச் ஃப்ரோம்.

பொது அறிவு :

1. 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

கைலாஷ் சத்யார்த்தி மற்றும் மலாலா யூசுப்சையி 

Kailash Satyarthi and Malala Yousafzai

02. இந்தியாவில் அதிக மழை பெய்யும் மாநிலம் எது?

மேகாலயா -Meghalaya

English words:

vineyard - a piece of land where grapes are grown. திராட்சைத் தோட்டம்

தமிழ் இலக்கணம்:

தெரிநிலை வினை என்பது ஒரு செயலின் தொழிலையும், அது நடந்த காலத்தையும் தெளிவாகக் காட்டும் வினைச்சொல் ஆகும். எடுத்துக்காட்டு : "கயல்விழி மாலை தொடுத்தாள்".

செய்பவன் : கயல்விழி

கருவி : நார், பூ, கை

நிலம் :அவள் இருக்கும் இடம்

செயல்: தொடுத்தல்

காலம் : இறந்த காலம்

செய்பொருள் : மாலை

அறிவியல் களஞ்சியம் :

முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.

அக்டோபர் 28

பில் கேட்ஸ் அவர்களின் பிறந்தநாள்

வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பிறப்பு அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.

நீதிக்கதை

ஒரு ஊர்ல ஒரு வயசான பாட்டி தனியா வசித்து வந்தார்கள். அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது. ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது. உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது. அவனை எப்படியும் தப்பிக்க விடக் கூடாது புத்திசாலித் தனமாக பிடிக்கணும்னு நினைச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தார்கள்.

அங்கிருந்த விளக்கு தண்டின் முன் நின்று கொண்டு, மாய விளக்கே என் மீது கோபமா? நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லை என்றார்கள். இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம். பேசும் விளக்கா என்று எட்டிப் பார்த்தான்.

விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி, கோபமில்லையா? அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள். பக்கத்து வீட்டு ஜூலி இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது. அவள் சத்தம் போட்டுக் கத்தினாள்.

மீண்டும் விளக்கு காற்றில் அசைய, ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயா என பாட்டி கேட்டார்கள். திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை. நமக்கு மட்டும் ஒண்ணும் கேட்க வில்லை. விளக்கு ஆடுவது தெரியுது. ஆனால் கிழவி பேசுகிறாளே என்று குழம்பினான்.

மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன் என்றபடி பாட்டி ஹெல்ப் ஹெல்ப் என்று உரக்கக் கத்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

நீதி : காலம் அறிந்து அதற்கேற்ப புத்திசாலித் தனமாக நடந்து கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள் 28.10.2025

* சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ. 17½ லட்சம்- போலீசிடம் ஒப்படைத்த பிளஸ்-2 மாணவிக்கு குவியும் பாராட்டு

* மாணவர்கள் பல புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும்... அதுவே என் ஆசை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை.

* மோன்தா புயல் எதிரொலி: தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

விளையாட்டுச் செய்திகள்

*பிரித்தானிய கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் 10,000 ரன்கள் கடந்து புதிய சாதனை: பிரித்தானிய கிரிக்கெட் வீரர் ஜோ ரூட், இந்த வாரம் 10,000 ரன்கள் சாதனையை எட்டியுள்ளார்.

Today's Headlines - 28.10.2025

*Plus-2 student who handed over Rs. 17½ lakhs to the police after finding it lying unclaimed on the road is receiving praise.

* Students should create many new institutions... That is my wish, CM M.K. Stalin advised.

* Cyclone Montha: Cyclone warning pole number 2 raised at Tamil Nadu ports

SPORTS NEWS

British cricketer Joe Root crosses 10,000 runs, sets new record: British cricketer Joe Root has reached the record of 10,000 runs this week.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Monday, October 27, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் அக்டோபர் மாதத் தேர்வு வினாத்தாள் தென்காசி மாவட்டம் 2025


Tenth tamil October month test exam question paper 10th std sslc tenkasi district 2025

பத்தாம் வகுப்பு தமிழ் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் விடைக்குறிப்பு செங்கல்பட்டு மாவட்டம் 2025

10th tamil 100 one mark test question paper answer key Chengalpattu district 2025

பத்தாம் வகுப்பு தமிழ் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் pdf செங்கல்பட்டு மாவட்டம் தேர்வு வினாத்தாள் 2025

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth tamil 100 one mark test question paper 10th exam mcq Chengalpattu district 2025

எங்கள் ஊர் ஏழாம் வகுப்பு பருவம் 2 தமிழ் பொதுக் கட்டுரை Engal Oor Our Town essay 7th Tamil Katturai


Engal Oor Our Town essay 7th Tamil Katturai 

எங்கள் ஊர் ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 பொதுக் கட்டுரை pdf 7th Tamil Term 2 katturai essay engal oor our town

 7th Tamil Term 2 katturai essay engal oor our town



 பதிவிறக்கு/DOWNLOAD

எங்கள் ஊர் ஏழாம் வகுப்பு தமிழ் பொதுக் கட்டுரை பருவம் 2 Engal Oor 7th Tamil Katturai Our Town essay


Engal Oor 7th Tamil Katturai Our Town essay 

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 பொதுக் கட்டுரை எங்கள் ஊர் pdf 7th Tamil Term 2 katturai essay engal oor our town

 பதிவிறக்கு/DOWNLOAD


7th Tamil Term 2 katturai essay engal oor our town pdf

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-10-2025. திங்கள்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

27-10-2025. திங்கள்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : அரசியல் ;

அதிகாரம் : சிற்றினம் சேராமை ; 

குறள் எண் : 456.

குறள் :

மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க் கில்லைநன் றாகா வினை

உரை :

மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு, அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

பழமொழி :

> சரியாக பயன்படுத்திய நேரமே நன்றாக வாழ்ந்த வாழ்க்கை ஆகும்.

 Time well spent is the life well lived.

இரண்டொழுக்க பண்புகள் :

1.செல்லும் இடமெல்லாம் அன்பு, ஒழுக்கம், நேர்மை எனும் விதைகளை விதைத்துச் செல்வேன்.

2.அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

+ தோற்றத்தில் எளிமையும் இனிமையும் அழகிற்கு அத்தியாவசிய தேவை .- எட்மண்ட் பர்க்.

பொது அறிவு :

01.உலகில் அதிக தூரம் பயணிக்கும் பறவை எது?

ஆர்க்டிக் ஆலா - Arctic tern

02.இந்திய நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

டாக்டர். எஸ்.ஆர்.ரங்கநாதன்
 Dr. S. R. Ranganathan

English words:

pampering to take care of somebody very well and make them comfortable,

ஒருவரை மிக நல்ல முறையில் பேணுதல், செல்லம் கொடுத்தல்

தமிழ் இலக்கணம்:

 வினைச்சொல் முக்கியமாகத் தெரிநிலை வினை, குறிப்புவினை என இருவகைப்படும்.

எ.கா. தொடுத்தாள், வந்தான், கரிகாலன்

அறிவியல் களஞ்சியம் :

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம். நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தறியும் சக்தியுண்டு. நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

அக்டோபர் 27 கே.ஆர். நாராயணன் அவர்களின் பிறந்தநாள்

கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் 
(பிறப்பு -கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளி ஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

நீதிக்கதை - உழைப்பு

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா இரண்டடி என்று சொல்வதற்கு பதிலாக ஓரடி என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே. அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

நீதி :

எந்த செயல் எடுத்தாலும் அதை பாதியில் நிறுத்தி விடாமல் விடாமுயற்சியுடன் செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

இன்றைய செய்திகள் 27.10.2025

*அரபிக் கடலில் 11 நாட்களாக சிக்கித் தவித்த 31 மீனவர்களை மீட்டது இந்திய கடலோர காவல்படை

* ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு-பிரதமர் மோடி பெருமிதம்

*போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 93 பேர் பலி

விளையாட்டுச் செய்திகள்

*மகளிர் உலக கோப்பை: கடைசி லீக்கில் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது இங்கிலாந்து

Today's Headlines 27.10.2025

Indian Coast Guard rescues 31 fishermen stranded in Arabian Sea for 11 days

* PM Modi proudly said GST tax cut boosts sales of goods.

*93 killed in Israeli strikes on Gaza in violation of ceasefire

SPORTS NEWS

Women's World Cup, England easily beat New Zealand in final league.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, October 26, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சிலப்பதிகாரம், முத்தொள்ளாயிரம் நவம்பர் 3

10th tamil model notes of lesson

lesson plan November 3

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

03-11-2025 முதல் 07-11-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

6

4.பாடத்தலைப்பு

விதைநெல் – கவிதைப்பேழை.

5.உட்பாடத்தலைப்பு

சிலப்பதிகாரம், முத்தொள்ளாயிரம்.

6.பக்கஎண்

126 - 130

7.கற்றல் விளைவுகள்

T-1024 இலக்கியங்கள் காட்டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து இன்றைய சூழலுடன் ஒப்பிட்டுப் பேசும் திறன் பெறுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

மருவூர்பாக்கத்தில் தொழில் செய்வோர் குறித்துக்  கூறப்பட்ட செய்திகளைத் தொகுத்தல்.

சங்ககால நாட்டு வளங்களை இலக்கியங்கள்வழி அறிதல்.

9.நுண்திறன்கள்

மூவேந்தர் அரசாட்சி, வளங்கள், வீரம், வெற்றி பற்றி எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2020/06/silappathikaram.html

https://tamilthugal.blogspot.com/2019/05/silappathikaram.html

https://tamilthugal.blogspot.com/2024/02/silapathikaram-annual-day-stage-tamil.html

https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post_94.html

https://tamilthugal.blogspot.com/2023/10/pdf_70.html

https://tamilthugal.blogspot.com/2021/07/7-10th-tamil-online-test-silapathikaram.html

https://tamilthugal.blogspot.com/2020/06/tamil-online-quiz-silappathikaaram-with.html

https://tamilthugal.blogspot.com/2025/05/10-6-20.html

https://tamilthugal.blogspot.com/2024/06/silappathikaaram-10th-tamil-memory-song.html

https://tamilthugal.blogspot.com/2024/10/7_19.html

https://tamilthugal.blogspot.com/2024/06/silappathikaram-vazhakkadum-kannaki.html

https://tamilthugal.blogspot.com/2023/10/10-10th-tamil-ppt-power-point_7.html

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_63.html

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_16.html

https://tamilthugal.blogspot.com/2019/01/1-9-3-qr-code-video.html

https://tamilthugal.blogspot.com/2019/01/2-9-3-qr-code-video.html

https://tamilthugal.blogspot.com/2018/12/9_30.html

https://tamilthugal.blogspot.com/2022/03/9-7-9th-tamil-online-test-muthollayiram.html

https://tamilthugal.blogspot.com/2025/06/10-6.html

https://tamilthugal.blogspot.com/2025/05/10-6-15.html

https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_69.html

11.ஆயத்தப்படுத்துதல்

          ஐம்பெருங்காப்பியங்களைக் கேட்டல்.

          விரும்பும் இயற்கை வளங்கள் பற்றிக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

அக்கால வணிகத்தை அறிமுகம் செய்தல்.

          மூவேந்தர்கள் பற்றிக் கேட்டல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          சிலப்பதிகாரம், மருவூர்ப்பாக்கம் வணிகம் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். இக்கால வணிகத்தை ஒப்பிடுதல். உரைப்பாட்டுமடை சிலப்பதிகாரக் குறிப்பைக் கூறல்.

          மூவேந்தர் சிறப்பு குறித்துப் பேசுதல். சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை பாடல் வழி அறிதல். உவமை, தற்குறிப்பேற்ற அணிகளை அறிதல்.

மாணவர்கள் குழுக்களாக நாட்டுவளம் குறித்து உரைத்தல்.




மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          தமிழர்களின் நாட்டு வளங்களையும் அவர்களின் சிறப்புகளையும் அறிதல்.

          வாணிகத்தின் இன்றியமையாமையை உணர்தல்.

15.மதிப்பீடு

எ.சி.வி –       சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் ..............

நந்து என்பதன் பொருள் ..............................

ந.சி.வி – சிலப்பதிகாரம் காட்டும் வணிகர்களைப் பற்றிக் கூறு.

முத்தொள்ளாயிரம் - விளக்குக.

உ.சி.வி – சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

          சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

சிலப்பதிகாரம் குறித்த தகவல்களைத் திரட்டுதல்.

மூவேந்தர் குறித்த தகவல்களைத் திரட்டுக.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு துணைவினைகள் நவம்பர் 3

9th tamil model notes of lesson

lesson plan November 3

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

03-11-2025 முதல் 07-11-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

4

4.பாடத்தலைப்பு

கசடற மொழிதல் – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

துணைவினைகள்

6.பக்கஎண்

96 – 98

7.கற்றல் விளைவுகள்

T-9020 துணைவினைகளை முறையாகப் பயன்படுத்தி எழுதுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

வினைவகைகளை உணர்தல்.

9.நுண்திறன்கள்

முதல்வினை, துணைவினையை அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/06/3_38.html

https://tamilthugal.blogspot.com/2020/02/9-2-thunai-vinaigal-9th-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-2-9th-tamil-online-test-thunai.html

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த வினைகளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

முதல்வினை துணை வினை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          முதல்வினை, துணைவினை குறித்து விளக்குதல். எடுத்துக்காட்டுகள் மூலம் அறிதல்.

தனி வினை, கூட்டுவினைகளை அறிதல்.

துணைவினைகளின் பண்புகளை விளக்குதல்.



          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          புதிய எடுத்துக்காட்டுகளை மாணவர்கள் அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.

கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக .................................

அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ....................................

அ. வந்தான், வருகிறான்                                          

ஆ. வந்துவிட்டான், வரவில்லை

இ. வந்தான், வருவான்                                             

ஈ. வருவான், வரமாட்டான்

          ந.சி.வி – துணைவினைகளின் பண்புகளை எழுதுக.

உ.சி.வி – கூட்டுவினைகள் குறித்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

துணைவினைகளாகப் பயன்படுத்திப் புதிய தொடர்களை எழுதுக.

பார், வா, விடு.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வளம்பெருகுக நவம்பர் 3

8th tamil model notes of lesson

lesson plan November 3

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

03-11-2025 முதல் 07-11-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

5

4.பாடத்தலைப்பு

வையம்புகழ் வணிகம் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

வளம்பெருகுக

6.பக்கஎண்

92 - 93

7.கற்றல் விளைவுகள்

T-818 தமது சொந்த அனுபவங்களைத் தமக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் எழுதுதல் ( கதை, கட்டுரை, பாடல் வடிவில் அனுபவங்களை வெளிப்படுத்துதல் )

8.கற்றல் நோக்கங்கள்

உழவு சார்ந்த நூல்களை நூலகத்திலிருந்து படித்தல்.

நாட்டுப்புறப் பாடல்கள்வழி தமிழர் பண்பாட்டினை அறியும் திறன்.

9.நுண்திறன்கள்

வான்மழையால் வளமான பயிர்கள் செழிப்பது குறித்து அறியும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/10/6-8th-tamil-mindmap-unit-6.html

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_81.html

https://tamilthugal.blogspot.com/2021/05/6-8th-tamil-kuruvina-vidai-unit-6-valam.html

11.ஆயத்தப்படுத்துதல்

உழவு குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தகடூர் யாத்திரையை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆசிரியர் வளம் பெருகுக பாடலை வாசித்துப் பொருள் கூறுதல், மாணவர்களும் பாடலை வாசித்தல். சேர நாட்டின் உழவுச் சிறப்புகள் குறித்து விளக்குதல். உழவுத்தொழிலின் அவசியம் குறித்து மாணவர்களைக் கேட்டல்.

மாணவர்கள் அறிந்த விவசாயம் குறித்துக் கூறச்செய்தல்.




     மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

உழவுத்தொழில் குறித்துக் கூறுதல். உழவுக்கு மழையின் அவசியம் குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – வாரி என்பதன் பொருள் ..............................

          ந.சி.வி – உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்?

          உ.சி.வி – உழவுக் கருவிகளைப் பட்டியலிடுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உழவின் பெருமைகளை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive