6th tamil model notes of lesson
lesson plan October 27
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
2.பருவம்
2
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
பாடறிந்து ஒழுகுதல் – கற்கண்டு, வாழ்வியல்
5.உட்பாடத்தலைப்பு
மொழி இறுதி
எழுத்துகள், திருக்குறள்
6.பக்கஎண்
7.கற்றல் விளைவுகள்
T-611 ஒலியியைபு, சந்தம்
முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத்தொடர்கள் போன்ற மொழியின்
மரபு நடை நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கதைகள், கட்டுரைகளின்
நயம் பாராட்டல்.
8.திறன்கள்
தமிழில்
பிழையின்றி எழுதும் திறன்
9.நுண்திறன்கள்
மொழி இறுதி
எழுத்துகளை அறிந்து கொள்ளும் ஆர்வம் பெறும் திறன்.
திருக்குறளின்
அறக்கருத்துகள் குறித்து அறிதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2020/05/3.html
https://tamilthugal.blogspot.com/2022/08/1-3-6th-tamil-mindmap-term-1-unit-3_31.html
https://tamilthugal.blogspot.com/2018/12/thiruvalluvar.html
https://tamilthugal.blogspot.com/2025/10/2-1_20.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த
தமிழ்ச் சொற்களைக் கூறச்செய்தல்.
திருக்குறள்
குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.
12.அறிமுகம்
மொழி இறுதி
எழுத்துகளைக் கூறிப் பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
திருக்குறளின்
சிறப்புகளைக் கூறுதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
மொழி இறுதி எழுத்துகள், இறுதியாகா எழுத்துகள், சொல்லின் இடையில் வரும்
எழுத்துகள் பற்றிக் கூறி அவற்றுக்கு உதாரணங்கள் தந்து விளக்குதல்
திருக்குறள் குறித்து மாணவர்கள் அறிந்த
செய்திகளைக் கூறுதல். குறள்களின் பொருளை விளக்குதல்.
வாழ்வைச்
செம்மைப்படுத்தும் அறம் குறித்து அறியச் செய்தல்.
மனவரைபடம்
மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள்
ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், அறிவியல் கருத்துகளை உள்வாங்குதல்,
வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
சொற்களஞ்சியத்தை மாணவர்களிடம் உருவாக்குதல். தமிழ்ச் சொற்களையும் பிறமொழிச்
சொற்களையும் அறியச் செய்தல்.
திருக்குறள் குறித்து விளக்குதல். குறள் கூறும் பல்வேறு அறநெறிகளை வாழ்வில்
கடைப்பிடிக்கப் பழகுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து ..............................
ந.சி.வி – மொழிக்கு இறுதியில் வாரா மெய்யெழுத்துகள் யாவை?
உ.சி.வி – உனக்குப் பிடித்த குறளையும் அதன் பொருளையும் எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
திருக்குறள்
குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

