திருக்குறள் / COUPLET :
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter : அவையறிதல் / The Knowledge of the Council Chamber :
குறள் 718:
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
English Couplet 718:
To speak where understanding hearers you obtain,
Is sprinkling water on the fields of growing grain!.
மு.வரதராசன் விளக்கம்:
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.
Couplet Explanation (M. Varadarasan's explanation):
Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).
பொன்மொழி :
1) எப்போது நினைத்தாலும் சிரிக்கத்தோன்றுவதே உண்மையான நகைச்சுவை
2) பறிக்காமலேயே சுவைப்பவைகள் பறவைகள்
பழமொழி :
Do not look a gift horse in the mouth.
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்து பார்க்கதே.
பொது அறிவு :
செந்நிறக் கோள் தினம் (Red Planet Day) எப்போது கொண்டாடப்படுகின்றது?
விடை : - நவம்பர் 28 (இன்று)
அறிவியல் பெயர் :
கேழ்வரகின் அறிவியல் பெயர் என்ன ?
- எலூசின் கொரகனா
Scientific name:
What is the scientific name of of the Finger millet ?
- Eleusine coracana
முக்கியச் செய்திகள் : 28.11.2026 - சனி
மாநிலச் செய்தி:
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அவர்கள் கடிதம்
உள்நாட்டுச்செய்தி:
எல் நினோ சவாலையும் மீறி 167 மில்லியன் டன் தானியம் உற்பத்தி
உலகச்செய்தி:
இந்திய - சீன எல்லையில் நிலைமை சீராக உள்ளதாக சீனா தகவல்
விளையாட்டுச்செய்தி:
சையது மோடி பாட்மிண்டன் தொடர்: கால் இறுதி சுற்றில் உன்னதி ஹூடா, தன்வி
Important News: 28.11.2026 -Saturday
State News:
Governor R. V. Arlekar writes to the Chief Minister of Tamil Nadu, requesting the inclusion of a UGC representative in the Vice-Chancellor search committee
National News:
167 million tonnes of grain produced, despite the challenges posed by El Niño
World News:
China states that the situation along the India-China border remains stable
Sports News:
Syed Modi Badminton Tournament: Unnati Hooda and Tanvi reach the quarter-finals
