thai pongal tamilar thirunaal tamil katturai essay
பொங்கல்
திருநாள்
முன்னுரை
தமிழர்களின் அறுவடைத் திருநாளே தமிழர் திருநாள். இதுவே பொங்கல் திருநாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஒவ்வொரு தமிழரும் கொண்டாடும் திருநாளே பொங்கல்
திருநாள். தமிழ்த்துகள்
போகிப் பண்டிகை
மார்கழி இறுதிநாள் பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள்
கொண்டாடப்படுவது போகிப்பண்டிகை, வீட்டைத் தூய்மை செய்து வண்ணம்
பூசுவர், பழையன கழிதலும், புதியன புகுதலும் போகிப் பண்டிகையின் சிறப்பு ஆகும். தமிழ்த்துகள்
பொங்கல் பண்டிகை
தை முதல் நாள் கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும்
நாளே பொங்கல் பண்டிகை, உழவர்களின் உழைப்பால் விளைந்த
மஞ்சள், இஞ்சி, கரும்பு, வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றைப் படைத்து
புதுப்பானையில் புதிய பச்சரிசி பொங்கலிட்டு பொங்கும் போது 'பொங்கலோ பொங்கல்' என மகிழ்ச்சியுடன் ஓசை எழுப்புவர். புத்தாடை அணிவர். தமிழ்த்துகள்
மாட்டுப்பொங்கல்
தை இரண்டாம் நாள் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல்
கொண்டாடப்படுகின்றது. மாடுகளுக்கு நன்றி கூறும் வகையில் மாடுகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு
வண்ணம் பூசி மாலையிட்டு வழிபடுவதுதான் மாட்டுப்பொங்கல் ஆகும். ஏறுதழுவுதல் வீர விளையாட்டு நடைபெறும்.
காணும் பொங்கல் தமிழ்த்துகள்
தை மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த
நாள் காணும் பொங்கல் ஆகும். இந்நாளில் உற்றார் உறவினர் நண்பர்கள்
வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர். குடும்பத்தினருடன்
விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர். தமிழ்த்துகள்
முடிவுரை
தமிழரின் பண்பாட்டை உணர்த்துவது பொங்கல் திருநாள்
ஆகும். உழவுத்தொழிலுக்குப் பெருமை சேர்த்தல் உதவியோருக்கு நன்றி தெரிவித்தல் போன்ற நற்பண்புகளின்
அடையாளமே பொங்கல் திருநாளாகும். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்