கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, October 02, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு குடும்ப விளக்கு, சிறுபஞ்ச மூலம்

 9th Tamil model notes of lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

14-10-2024 முதல் 18-10-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

5

4.பாடத்தலைப்பு

கசடற மொழிதல் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

குடும்ப விளக்கு, சிறுபஞ்ச மூலம்

6.பக்கஎண்

130 - 134

7.கற்றல் விளைவுகள்

T-9022 புதுக்கவிதை என்னும் இலக்கிய வடிவத்தின் இயல்பு, மொழிநடையைப் புரிந்து கொள்ளல், படித்தல், படைத்தல்.

T-9023 அற இலக்கியத்தின் எளிய செம்மையான மொழிநடையும் கருத்துச் செறிவையும் படித்து வாழ்வியல் பண்பை மேம்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

பலவாறான இலக்கிய வடிவங்களின்வழி கருத்துகளைப் படித்து அறிதல்.

9.நுண்திறன்கள்

மறுமலர்ச்சி இலக்கியங்களைப் படித்தல்.

பெண்கல்வி அவசியம் பற்றி எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/12/9-9th-big-question-answer-unit-5_30.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-5-9th-tamil-online-test-kudumba.html

https://tamilthugal.blogspot.com/2019/02/bharathidasan.html

https://tamilthugal.blogspot.com/2020/06/sirupanchamoolam.html

https://tamilthugal.blogspot.com/2018/09/9.html

https://tamilthugal.blogspot.com/2022/05/kariyasan.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-5-9th-tamil-online-test.html

11.ஆயத்தப்படுத்துதல்

          பெண் கல்வியின் அவசியம் பற்றிக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

பாரதிதாசன், காரியாசானை அறிமுகப்படுத்துதல்.

கல்வியின் அவசியம் அறிதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பொதுவுடைமை, விடுதலை, பெண்கல்வி குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          பெண்கல்வி குறித்து விளக்குதல்.

பெண் முன்னேற்றத்திற்குக் கல்வியின் இன்றியமையாமை  குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாகப் பெண்கல்வியின் அவசியத்தை உரைத்தல்.

மேதையர் குறித்துப் பாடலின் கருத்தை விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். கல்வியின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          சங்க இலக்கியங்களை மாணவர்களை அறியச் செய்தல்.

          சாதனைக்கு வயது தடையன்று என்பதை அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி  பாரதிதாசனின் இயற்பெயர் ............................

          ந.சி.வி – விதைக்காமலே முளைக்கும் விதைகள் – இத்தொடரின்வழிச்

சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துகளை எழுதுக.

உ.சி.வி  குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை  எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை எழுதுக.

பெண்மையைப் போற்றும் கவிதைகளைப் பட்டியலிடுக.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

8th Tamil model notes of lesson

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

14-10-2024 முதல் 18-10-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

5

4.பாடத்தலைப்பு

குழலினிது யாழினிது – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

6.பக்கஎண்

98 - 103

7.கற்றல் விளைவுகள்

T-820 கைவினைப் பொருள்கள் தயாரித்தல், கட்டடக்கலை, உழவுத் தொழில், விதைவிதைத்தல், நாட்டியம், மெய்ப்பாடுகள் முதலான செயல்பாடுகளில் பயன்படும் சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

கைவினைக் கலைகளின் சிறப்புகளை அறிந்து அவற்றை வளர்க்கும் திறன்.

9.நுண்திறன்கள்

நாட்டுப்புறக் கைவினைக் கலைகளின் பெயர்களைத் தொகுத்து எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/05/5-8th-tamil-kuruvina-natupura-kalaikal.html

https://tamilthugal.blogspot.com/2022/10/5-8th-tamil-mindmap-unit-5.html

11.ஆயத்தப்படுத்துதல்

கைவினைக் கலை குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

களிமண் கொண்டு மாணவர்கள் செய்த பொருள்கள் குறித்துக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த கையால் செய்யும் பொருள்கள் பற்றிக் கூறச்செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          மண்பாண்டங்கள், சுடுமண் சிற்பங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். மூங்கில் பொருள்கள், பாய் வகைகள் குறித்து விளக்கி மாணவர்கள் அவற்றுடன் கொண்ட தொடர்பு குறித்து கூறச்செய்தல்.

பனையோலை, பிரம்பால் செய்யும் பொருள்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

மண்பாண்டங்கள் செய்யும் கலைஞர்களைக் கண்டு உரையாடுதல். கைவினைக் கண்காட்சிகளுக்குச் சென்று வந்த அனுபவங்களைப் பகிர்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – தமிழ்நாட்டின் மாநில மரம் ..............................

                   பானை செய்யும் சக்கரம் .................................... எனப்படும்.

          ந.சி.வி – பனையோலைகள் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?

                   மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.

          உ.சி.வி – நீ அறிந்த கைவினைப் பொருள்களைப் பட்டியலிடுக.

                    கைவினைக்கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

கைவினைப் பொருள்களைப் பட்டியலிடுக.

களிமண் கொண்டு சில பொருள்களைச் செய்து பார்த்தல்.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழரின் கப்பற்கலை

7th Tamil model notes of lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

14-10-2024 முதல் 18-10-2024

2.பருவம்

2

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அறிவியல் ஆக்கம் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

தமிழரின் கப்பற்கலை

6.பக்கஎண்

8-13

7.கற்றல் விளைவுகள்

T-715 பல்வேறு கலைகளிலும், தொழில்களிலும் (கைத்தொழில், கட்டடக்கலை. உழவு, நாட்டியம் முதலானவை) பயன்படுத்தும் மொழி பற்றிய கருத்தை ஆர்வமாக வெளிப்படுத்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழர்களின் கப்பல் கட்டும் தொழில்நுட்ப முறையை இலக்கியங்கள் வழி அறியும் திறன்.

9.நுண்திறன்கள்

கடல்வழிப் பயணம் குறித்த தகவல்களைப் பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளும் திறன்.

பலவகையான கப்பல்களின் வகைகளைப் பற்றிப் படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/06/7-1-2-7th-tamilarin-kapparkalai-kuruvina.html

https://tamilthugal.blogspot.com/2022/10/2-1-7th-tamil-mindmap-term-2-unit-1.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த கடல் பயண வாகனங்களின் பெயர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தமிழர் தொழில்நுட்பத்தைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

கப்பல் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தமிழர்களின் கடல் பயணம் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல், நீர்வழிப் பயணத் தொடக்கம் பற்றிய தகவல்களைக் கூறுதல். கப்பல் கட்டும் கலை குறித்துக் கூறி மாணவர்கள் கருத்துகளைக் கேட்டல்.

          கடல் பயணத்தின் பயன்களைக் குழுவாக இணைந்து கூறுதல்.

பாய்மரக்கப்பல்கள், கப்பலின் உறுப்புகள் குறித்து விளக்குதல். கப்பலைச் செலுத்தும் முறை, கலங்கரை விளக்கத்தின் பயன்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கப்பலின் தோற்றம் குறித்த கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கப்பற்கலையை அறியச் செய்தல். தமிழரின் தொழில்நுட்பத்தை உணரச் செய்தல். கடற்பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி ..............................

                   கப்பலை அழைக்கும் விளக்கு ....................................

          ந.சி.வி – கப்பலின் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறு.

                   கலங்கரை விளக்கம் குறித்து எழுதுக.

உ.சி.வி – கடற்பயணம் குறித்து நீ அறிந்தவற்றை எழுதுக.

                   உனக்குப் பிடித்த கப்பல் போக்குவரத்தின் பெயர்களைப் பட்டியலிடுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

பயணங்கள் குறித்து வகுப்பில் கலந்துரையாடுதல்.

கப்பல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கல்விக்கண் திறந்தவர்

 6th Tamil model notes of lesson

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

14-10-2024 முதல் 18-10-2024

2.பருவம்

2

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

கண்ணெனத் தகும் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

கல்விக்கண் திறந்தவர்

6.பக்கஎண்

7-10

7.கற்றல் விளைவுகள்

T-610 பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள் போன்றவற்றில் இருந்து) படித்துப் புரிந்துகொண்டு, அவற்றின்மீதான கருத்துரைகளைப் பகர்தல், தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

கல்விப்பணி ஆற்றிய பெருமக்களைப் பற்றி அறிந்துகொள்ளுதல்.

9.நுண்திறன்கள்

கல்விப் புரட்சிக்கு வித்திட்ட காமராசர் குறித்து அறியும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

 இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/07/kalvi-kan-thirantha-kamarajar-tamil.html

https://tamilthugal.blogspot.com/2023/07/kamarajar-song-kalvi-kanna-thiranthu.html

https://tamilthugal.blogspot.com/2022/07/karuppu-gandhi-yaru-kamaraj-kids-song.html

https://tamilthugal.blogspot.com/2023/07/kamarajar-kanda-kalvi-puratchi-tamil.html

https://tamilthugal.blogspot.com/2023/07/kamarajar-tamil-song-karuppu-vairam.html

https://tamilthugal.blogspot.com/2019/10/blog-post_7.html

https://tamilthugal.blogspot.com/2018/10/6_7.html

https://tamilthugal.blogspot.com/2021/06/1-2-6th-kalvi-kan-thiranthavar.html

https://tamilthugal.blogspot.com/2021/07/100-kamarajar-100.html

https://tamilthugal.blogspot.com/2022/10/2-1-6th-tamil-mindmap-term-2-unit-1.html

11.ஆயத்தப்படுத்துதல்

கல்விக் கண் திறந்தவர் யார் எனக் கேட்டல்.

மாணவர்கள் அறிந்த தமிழக முதல்வர்கள் குறித்துக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

காமராசர் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          காமராசரின் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறி மாணவர்களுடன் கலந்துரையாடல். காமராசரின் சிறப்புப் பெயர்களைக் கூறுதல். காமராசரின் கல்விப் பணிகள் குறித்து விளக்குதல்.

          காமராசரின் கல்விப் பணிகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். காமராசர் குறித்த நிகழ்வுகளை மாணவர்கள் குழுவாக நின்று பகிர்தல்.

 


          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், காமராசர் குறித்து உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கல்வியின் பெருமையை மாணவர்களிடம் உருவாக்குதல். காமராசரின் கல்விப் பணிகளை அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – பெருந்தலைவர் எனப்படுபவர் ..............................

                   காமராசர் பிறந்த ஊர் ....................................

          ந.சி.வி – காமராசரின் கல்விப் பணிகள் யாவை?

                   மதிய உணவுத் திட்டத்தை விளக்குக.

          உ.சி.வி – நீங்கள் முதலமைச்சரானால் கல்விக்காக என்ன செய்வீர்கள் என எழுதுக.

         

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

அரசின் மாணவர் நலத் திட்டங்கள் 5 எழுதுக.

காமராசர் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive