9th Tamil model notes of lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
14-10-2024 முதல் 18-10-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
5
4.பாடத்தலைப்பு
கசடற மொழிதல் – கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
குடும்ப விளக்கு,
சிறுபஞ்ச மூலம்
6.பக்கஎண்
130 - 134
7.கற்றல் விளைவுகள்
T-9022 புதுக்கவிதை என்னும் இலக்கிய வடிவத்தின் இயல்பு,
மொழிநடையைப் புரிந்து கொள்ளல், படித்தல், படைத்தல்.
T-9023 அற இலக்கியத்தின் எளிய செம்மையான மொழிநடையும் கருத்துச்
செறிவையும் படித்து வாழ்வியல் பண்பை மேம்படுத்துதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
பலவாறான இலக்கிய வடிவங்களின்வழி கருத்துகளைப்
படித்து அறிதல்.
9.நுண்திறன்கள்
மறுமலர்ச்சி
இலக்கியங்களைப் படித்தல்.
பெண்கல்வி அவசியம்
பற்றி எழுதுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2022/12/9-9th-big-question-answer-unit-5_30.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-5-9th-tamil-online-test-kudumba.html
https://tamilthugal.blogspot.com/2019/02/bharathidasan.html
https://tamilthugal.blogspot.com/2020/06/sirupanchamoolam.html
https://tamilthugal.blogspot.com/2018/09/9.html
https://tamilthugal.blogspot.com/2022/05/kariyasan.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-5-9th-tamil-online-test.html
11.ஆயத்தப்படுத்துதல்
பெண்
கல்வியின் அவசியம் பற்றிக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
பாரதிதாசன், காரியாசானை அறிமுகப்படுத்துதல்.
கல்வியின் அவசியம் அறிதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
பொதுவுடைமை,
விடுதலை, பெண்கல்வி குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
பெண்கல்வி
குறித்து விளக்குதல்.
பெண்
முன்னேற்றத்திற்குக் கல்வியின் இன்றியமையாமை குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் குழுக்களாகப் பெண்கல்வியின் அவசியத்தை உரைத்தல்.
மேதையர் குறித்துப் பாடலின் கருத்தை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின்
கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். கல்வியின்
பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
சங்க இலக்கியங்களை மாணவர்களை அறியச் செய்தல்.
சாதனைக்கு
வயது தடையன்று என்பதை அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – பாரதிதாசனின்
இயற்பெயர் ............................
ந.சி.வி – விதைக்காமலே முளைக்கும் விதைகள் – இத்தொடரின்வழிச்
சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துகளை எழுதுக.
உ.சி.வி – குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை
இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களை எழுதுக.
பெண்மையைப் போற்றும் கவிதைகளைப் பட்டியலிடுக.