7th Tamil model notes of lesson
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
14-10-2024 முதல் 18-10-2024
2.பருவம்
2
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
அறிவியல் ஆக்கம் –
உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
தமிழரின்
கப்பற்கலை
6.பக்கஎண்
8-13
7.கற்றல் விளைவுகள்
T-715 பல்வேறு கலைகளிலும், தொழில்களிலும் (கைத்தொழில், கட்டடக்கலை. உழவு,
நாட்டியம் முதலானவை) பயன்படுத்தும் மொழி பற்றிய கருத்தை ஆர்வமாக
வெளிப்படுத்தல்.
8.கற்றல்
நோக்கங்கள்
தமிழர்களின்
கப்பல் கட்டும் தொழில்நுட்ப முறையை இலக்கியங்கள் வழி அறியும் திறன்.
9.நுண்திறன்கள்
கடல்வழிப் பயணம்
குறித்த தகவல்களைப் பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளும் திறன்.
பலவகையான
கப்பல்களின் வகைகளைப் பற்றிப் படித்தல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/06/7-1-2-7th-tamilarin-kapparkalai-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2022/10/2-1-7th-tamil-mindmap-term-2-unit-1.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த கடல்
பயண வாகனங்களின் பெயர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
தமிழர் தொழில்நுட்பத்தைக்
கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
கப்பல் பற்றிக்
கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
தமிழர்களின் கடல்
பயணம் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல், நீர்வழிப் பயணத் தொடக்கம் பற்றிய
தகவல்களைக் கூறுதல். கப்பல் கட்டும் கலை குறித்துக் கூறி மாணவர்கள் கருத்துகளைக்
கேட்டல்.
கடல் பயணத்தின் பயன்களைக்
குழுவாக இணைந்து கூறுதல்.
பாய்மரக்கப்பல்கள், கப்பலின் உறுப்புகள் குறித்து
விளக்குதல். கப்பலைச் செலுத்தும் முறை, கலங்கரை விளக்கத்தின் பயன்கள் குறித்து
மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், கப்பலின் தோற்றம் குறித்த கருத்துகளை உள்வாங்குதல்,
வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
கப்பற்கலையை அறியச் செய்தல். தமிழரின் தொழில்நுட்பத்தை
உணரச் செய்தல். கடற்பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப்
பயன்படும் கருவி ..............................
கப்பலை அழைக்கும் விளக்கு
....................................
ந.சி.வி – கப்பலின் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறு.
கலங்கரை விளக்கம் குறித்து எழுதுக.
உ.சி.வி – கடற்பயணம் குறித்து நீ அறிந்தவற்றை எழுதுக.
உனக்குப் பிடித்த கப்பல்
போக்குவரத்தின் பெயர்களைப் பட்டியலிடுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
பயணங்கள் குறித்து வகுப்பில் கலந்துரையாடுதல்.
கப்பல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.