கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, July 04, 2024

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்ப் பேச்சு கட்டுரை

 

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

முத்துத் தமிழ் பதித்து மூன்று நெறி வளர்த்து கத்தும் கடல் மீது கலங்களில் விளையாடும் தென்பாண்டி மண்டலமே, கூத்தன் இருந்தான் குறளரசன் அங்கிருந்தான் வார்த்தைத் தமிழுக்கு வணங்காத கம்பன் இருந்தான். நக்கீரன் நன்னாகன் நப்பசலை ஒக்கூர் மாசாத்தி ஒண்சாத்தன் சிலம்பெடுத்த தக்கோன் என யாப்பிலாக் கவிதையேனும் யார் தரும் பாடலேனும் மா பலாபோல் மடியில் வாங்கித் தமிழ் வளர்க்கும் இத்தரணியிலே பூ விரியும் காவிரியாய் எனது பிள்ளைப் பேச்சுக்கு வாய்ப்பளித்த உங்கள் அனைவரையும் வணங்கித் தொடங்குகிறேன்.                 தமிழ்த்துகள்

அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த முத்துவேல் கருணாநிதி அழியாப் புகழ் கொண்ட முத்தமிழின்பால் காதல் கொண்ட கருணைநிதி வெஞ்சமர் களத்தில் அஞ்சிடாத சிங்கமாக அரசியலில் ராஜ தந்திரியாக உலா வந்த கரிகாலன்! தென்னாட்டுப் பெர்னாட்ஷா இந்நாட்டு இங்கர்சால் என்று அழைக்கப்படும் காஞ்சித் தலைவனின் அன்புத்தம்பி, ஆரூரில் பிறந்து ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி. தமிழ்த்துகள்

மாணவ நேசனில் தொடங்கிய எழுத்துப் பணி முரசொலியாய் வளர்ந்து தமிழகமெங்கும் சங்க இலக்கியம் மணக்க அயராது எழுதியது. நாடகம் கவிதை இலக்கியம் என்று அனைத்துத் துறைகளிலும் கோலோச்சிய அந்த தட்சணாமூர்த்தி பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாதவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழ்த்துகள்

ஆம் திருவாரூர் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர் கருணாநிதி. நீதிக் கட்சியின் பிரச்சாரப் பீரங்கியாய் உலா வந்த அழகிரிசாமியின் மேடைப் பேச்சில் ஈர்க்கப்பட்டு 14 வயதிலேயே சமூக இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் கலைஞர் கருணாநிதி. 1953இல் கல்லக்குடியை டால்மியாபுரம் என்று மாற்ற நடுவண் அரசு செய்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாக தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த தமிழ்க் காவலர் கலைஞர் கருணாநிதி. தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM       தமிழ்த்துகள்

 

இந்தி என்பது எடுப்புச்சாப்பாடு ஆங்கிலம் என்பது ஒருவர் கூற அதன்படி சமைத்தஉணவு; தமிழ் ஒன்று தான் தேவை அறிந்து தாய் ஊட்டும் உணவு என்று தமிழ் மொழிக்கு விளக்கம் கொடுத்த தலைவர் கருணாநிதி. தமிழைக் கொலை செய்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றார் மகாகவி பாரதியார். தமிழ்த்துகள்

தமிழ் மண்ணின் மைந்தராக தமிழினம் காக்கவும் தன்மானம் காக்கவும் தமிழ் மொழியைக் காக்கவும் தன் வாழ்நாளை எல்லாம் செலவழித்த தலைவர் அவர். பெரியாரின் சீடராக அண்ணாவின் அன்புத் தம்பியாக வளர்ந்த கலைஞர் அவர்கள் 1963இல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கைதானார். 1960இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் ஆனார். பாமர மக்களின் நாடி அறிந்து பேசும் தலைவர்களுள் தனிச்சிறப்பு மிக்கவராக விளங்கியவர் கருணாநிதி. தமிழ்த்துகள்

மாதமோ சித்திரை மணியோ பத்தரை மறக்காமல் எமக்கு இடுவீர் முத்திரை என்று அடுக்கு மொழிப்பேச்சால் தென்னிந்திய மக்களின் நாடி நரம்பு எல்லாம் கலந்து இருக்கின்ற பேரறிஞர் அண்ணாவின் அன்புத்தம்பி கலைஞர். தமிழ்த்துகள்

மூன்று கடல் சூழ்ந்த தமிழகத்தில் மும்முரசு கொட்டி மூன்று கொடி கட்டி முக்கனியாம் தமிழை வளர்த்த முவேந்தர் வழிவந்தவர்கள் நாம் என்பதை நினைவூட்டி நமக்கு மொழி தமிழ், தமிழ் என்பது மூன்றெழுத்து; தமிழ் கொண்ட தனிப் பண்பு மூன்றெழுத்து; பண்புக்கு அடிப்படையாம் அன்பு மூன்றெழுத்து; அன்பில் விளைந்த காதல் மூன்றெழுத்து; காதலர் விரும்பும் வீரம் மூன்றெழுத்து; வீரர்கள் விழுப்புண் பெறும் களம் மூன்றெழுத்து; களத்தில் விளையும் வெற்றி மூன்றெழுத்து, வெற்றிக்கு வித்திட்ட அறிவு மூன்றெழுத்து; அந்த அறிவுப் பெட்டகமாக வந்து உதித்த அண்ணா மூன்றெழுத்து; அண்ணா கொடுத்த கழகமாம் திமுக மூன்றெழுத்து என்று மேடைப் பேச்சில் எதிரிகளையும் ஈர்த்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM       தமிழ்த்துகள்

 

1957இல் குளித்தலையில் தொடங்கிய அவரது சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிப்பயணம் திருவாரூர் வரை வெற்றித் தேராய் பவனி வந்தது. அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் 1969இல் முதன்முறையாக அரியணை ஏறினார் கலைஞர் கருணாநிதி. அதன் பின்னர் 1971, 89, 96, 2006 என்று ஐந்து முறை அவரை அரசு கட்டிலில் ஏற்றி அழகு பார்த்தனர் தமிழக மக்கள். அன்பழகன், நெடுஞ்செழியன், சம்பத், மதியழகன், நடராஜன் என்ற திராவிடத் தூண்களாம் தலைவர்கள் மீது தணியாத பற்றுக் கொண்டவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்த்துகள்

கை ரிக்க்ஷா ஒழிப்புத் திட்டம், குடிசை மாற்று வாரியம், சிற்றுந்து, ஆயுள் காப்பீடு, டைடல் பார்க் என்று அவரது ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையை வெளிச்சம் போட்டுக் காண்பித்தது. உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குச் சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் 133 அடி உயரத்தில் இமாலய சிலை, பூம்புகாரில் கலைக்கூடம், அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று அடையாளச் சின்னங்களை தமிழகத்தில் உருவாக்கியவர் கலைஞர் அவர்கள். தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM       தமிழ்த்துகள்

 

1953ல் பராசக்தியில் தொடங்கிய அவரது திரைக்கதைப் பயணம் ஏறத்தாழ 75 படங்களுக்கு உழைக்கும் வரை தொடர்ந்தது. 15 நாவல்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைத் தொகுதிகள் என்று வாழ்நாளெல்லாம் பேனாவோடு வாழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. ராஜகுமாரி படம் வெளிவந்தபோது அவருக்கு வயது 20. இளம் வயதில் முழுமூச்சாய் முத்தமிழ் வளர்க்கும் மெய்த் தவம் செய்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்த்துகள்

சமூக நீதி, பெண் அடிமை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்று திரும்பும் திசையெல்லாம் அவர் குரல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஒலித்தது. ரத்தக்கண்ணீர், ஒரே ரத்தம், நடுத்தெரு நாராயணி, பெரிய இடத்துப் பெண், புதையல், வான்கோழி போன்ற அவருடைய புதினங்கள் அவற்றில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் கலைஞரின் கருத்தை சமூக நீதியாய்ப் பேசின. தமிழ்த்துகள்

ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பாயும் புலி, பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர் என்ற வரலாற்று நாவல்களையும் எழுதி இந்திய வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் கலைஞர் கருணாநிதி, தமிழர்களே தமிழர்களே என்னை நீங்கள் கடலில் தூக்கிப் போட்டாலும் நான் கட்டுமரமாகத் தான் மிதப்பேன் கடலில் மூழ்கி விடமாட்டேன் என்று கரகரத்த குரலில் அவர் பேசிய பேச்சு இன்னும் தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. திராவிடப் பாரம்பரியத்தின் போர்வாளாக வாழும்வரை தமிழுக்குத் தொண்டு செய்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்த்துகள்

இதுவரை வெளிவந்த அவருடைய நூல்களின் எண்ணிக்கை 178. நண்பனுக்கு என்றும் உடன்பிறப்பே என்றும் அவர் எழுதிய மடல்களோ 7000க்கும் மேல்: 2009இல் உலகக் கலை படைப்பாளி ஆக கௌரவிக்கப்பட்டார் கருணாநிதி. 1970இல் பாரீசில் உலகத்தமிழ் மாநாட்டில் கௌரவ உயர் பதவி வழங்கப்பட்டது அவருக்கு. தமிழ்த்துகள்

1987இல் மலேசிய உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைக்கும் பேறு பெற்றவர் கருணாநிதி. 2010இல் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடலை எழுதி வியக்க வைத்தவர் கலைஞர் அவர்கள். தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM       தமிழ்த்துகள்

 

வசந்த சேனை வட்டமிடும் கழுகு, வாய் பிளந்து நிற்கும் ஓநாய் என்ற அவருடைய மனோகரா வசனம் அன்றைய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவிலில் குழப்பம் விளைவித்தேன் கோவில் கூடாது என்பதற்காக அல்ல கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக என்ற அவரது பராசக்தி படத்தின் பகுத்தறிவுப் பேச்சு இளைஞர்களிடையே எழுச்சியைத் தூண்டியது. தமிழ்த்துகள்

சாம்ராட் அசோகன், தூக்கு மேடை, நச்சுக்கோப்பை சாக்ரடீஸ், உதயசூரியன் என்ற அவரது நாடகங்கள் பட்டிதொட்டிகளில் பரபரப்பாக நடத்தப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வேரூன்ற வழிவகை செய்தது. திருக்குறளுக்கு 1996இல் உரை எழுதியவர் கருணாநிதி 2003இல் தொல்காப்பியப் பூங்கா நூலை எழுதி முத்திரை பதித்தார். ஓயாது உழைத்த கலைஞர், காவிரிப் படுகையில் பிறந்த அந்த முத்துவேல் கருணாநிதி, சென்னை காவேரி மருத்துவமனையில் 7 – 8 - 2018 அன்று உயிர் நீத்தார். தமிழ்த்துகள்

பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும் பைந்தமிழில் அழும் ஓசை கேட்க வேண்டும், ஓடையிலே என் சாம்பல் கரையும்போதும் ஒண்டமிழே சலசலத்து ஓட வேண்டும் என்று பாடினார் யாழ்ப்பாணத்துக் கவிஞர். வாழ்நாளெல்லாம் போராட்டங்களைச் சந்தித்த அவரது இறுதி ஊர்வலமும் மிகப் பெரும் போராட்டத்திற்குப் பின் வங்கக் கடலோரம் இடம் பிடித்து அண்ணாவின் இதயமாய் அவர் அருகிலேயே மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டது. தமிழ்த்துகள்

தறி கெட்டுப் போக இருந்த தமிழகத்தை நெறியோடு நிமிர்த்திய பெருமை திராவிட இயக்கங்களைச் சாரும். அதில் கலைஞர் கருணாநிதிக்கு என்றும் நீங்கா இடம் இருக்கிறது என்று கூறி வாய்ப்புக்கு நன்றி பாராட்டி அமைகிறேன் நன்றி வணக்கம். தமிழ்த்துகள்

 

மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி. 9443323199             தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM       தமிழ்த்துகள்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.07.2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.07.2024

திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: கல்லாமை

குறள் எண்:410

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.


பொருள் :அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர்,
மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.


பழமொழி :

Fair words butter no parsnips.
சர்க்கரை என்றால் தித்திக்குமா?
இரண்டொழுக்க பண்புகள் :

* போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.


* என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி :
" தோல்விகளுக்கு இடையில் தான் வாய்ப்புகள் மறைந்திருக்கின்றன ; அதனால் தோல்விகளைக் கண்டு அஞ்சாதே"----ஆல்பர்ட் ஐன்ஸ்டின்
பொது அறிவு : 
1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?

விடை: டால்பின்


2. உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?

விடை: ஸ்டான் பிஷ் 


English words & meanings :

 amiable-நட்பு, 


affable- நட்புணர்வுள்ள

வேளாண்மையும் வாழ்வும் : 
ஆனால் இயற்கை வேளாண்மை மண்ணையும் மனிதர்களையும் பாதுகாக்கும் சிறந்த வேளாண்மை முறையாகும்.
ஜூலை 04

மேரி க்யூரி அவர்களின் நினைவுநாள்
மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934[1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். 
இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903[2], 1911[3] ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்

நீதிக்கதை
 ரகசியம் என்ன?
ஒரு நாட்டின் சிறந்த கோதுமையை உற்பத்தி செய்யக்கூடிய விவசாயி ஒருவரை பேட்டி எடுக்க பத்திரிக்கையாளர் ஒருவர் சென்றார்.
 விவசாயிடம் பத்திரிக்கையாளர் "எப்படி உங்களால் மட்டும் தரமான கோதுமையை உற்பத்தி செய்ய முடிகிறது"? என்று கேட்டார்.
அதற்கு அந்த விவசாயி, "என்னுடைய பக்கத்து வயலில் உள்ளவர்களுக்கும் என்னிடம் உள்ள தரமான,சிறந்த  கோதுமை விதைகளை கொடுத்து  பயிரிடச் சொன்னேன். அதுதான் என்னுடைய வெற்றியின் ரகசியம்" என்று கூறினார்.
அதற்கு பேட்டி எடுப்பவர் ".அது எப்படி?,அவர்களுக்கும் தரமான விதைகளை  கொடுத்தால் அவர்களும் உங்களுக்கு போட்டியாக வந்து விடுவார்கள் அல்லவா?,  என்று கேட்டார்.
 அதற்குஅவர்,"காற்று வீசும் போது ஒரு செடியில் உள்ள மகரந்தம் ஒரு வயலில் இருந்து பக்கத்து வயலில் உள்ள செடி வரைக்கும்  பரவும். அவர்கள் தரம் குறைந்த கோதுமைகளை பயிரிட்டால் அதிலிருந்து வரக்கூடிய மகரந்தம் என்னுடைய பயிரையும் பாதிக்கும். எனவே அவர்களுக்கும்  தரமான விதைகளை கொடுத்து பயிரிட செய்வேன்", என்றார்.
"அதனால்,நான் தரமான கோதுமையை உற்பத்தி செய்ய வேண்டுமானால் என்னை சுற்றி இருப்பவர்களும் தரமான கோதுமையே உற்பத்தி செய்ய வேண்டும்", என்றார்.
அதுபோல் நாமும் சந்தோஷமான வாழ்க்கை வாழ,நம்மை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

04.07.2024


# குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம்: தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் பதிவு.


# தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மூலமாக ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.


# சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ் பாடத்திட்ட பள்ளிகள் கட்டாயக்கல்வி சட்ட இடஒதுக்கீடு வரையறைக்குள் வராது என்பதால் 25 சதவீத ஒதுக்கீடு வழங்கும்படி கோர முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.


# மேகாலயாவில் தொடங்கியது இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி.


# அசாம் வெள்ளம்: 28 மாவட்டங்களில் 11.34 லட்சம் மக்கள் பாதிப்பு; 38 பேர் உயிரிழப்பு.


# அமெரிக்க அதிபர் தேர்தல்.. பைடனை விட கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: சி.என்.என். கருத்துக்கணிப்பு.


# டி20 தரவரிசை: ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா.


# ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


# Cooking gas supply to homes through pipeline: 30 thousand registered across Tamil Nadu.


 # Chief Minister Stalin released 100 legal books translated from English into Tamil by the Tamil Nadu State Legal Official Language Commission.


 # The Tamil Nadu government has informed the High Court that CBSE and ICS curriculum schools do not fall under the compulsory education law reservation limits and cannot claim 25 per cent quota.


 # India-Mongolia joint military exercise begins in Meghalaya


 # Assam floods: 11.34 lakh people affected in 28 districts;  38 people lost their lives.


 # US presidential election.. Kamala Harris has a better chance of winning than Biden: CNN  Survey.


 # T20 rankings: Indian player Hardik Pandya tops the all-rounders list.


 # European Football Championship: Netherlands advance to quarter-finals.

தேன்சிட்டு ஜூன் 2 மாத இதழ் வினாடி வினா 130 வினாவிடை 2024


 then chittu June 2 paper quiz questions answers


தேன்சிட்டு ஜூன் 16-30 மாத இதழ் வினாடி வினா 130 வினாவிடை pdf

 then chittu magazine 2024 June 16-30 paper quiz questions answers pdf


பதிவிறக்கு/DOWNLOAD

Wednesday, July 03, 2024

ஆறாம் வகுப்பு தமிழ் ஜூன் மாதத் தேர்வு 30 மதிப்பெண்கள் வினாத்தாள் இயல் 1 tamil 6th june month test



ஆறாம் வகுப்பு தமிழ் ஜூன் மாதத் தேர்வு வினாத்தாள் பருவம் 1 இயல் 1 அலகுத் தேர்வு 30 மதிப்பெண்கள் pdf

  6th Tamil unit test june term 1 unit 1 monthly exam 30 marks question paper pdf 


பதிவிறக்கு/DOWNLOAD

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.07.2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.07.2024

சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லா தினம்
 
திருக்குறள்: 
பால் :பொருட்பால்
அதிகாரம்:கல்லாமை
குறள்எண்: 409

மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.


பொருள்: கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும்
கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.


பழமொழி :

Distance lends enchantment to the view.
இக்கரைக்கு அக்கரைப் பச்சை.
இரண்டொழுக்க பண்புகள் :

* போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.


* என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி :
" நேர்மறை எண்ணங்களே சாதனைக்கு வழிகாட்டும் "-----ஹெலன் கெல்லர்
பொது அறிவு : 
1. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள உயிரினம் எது?

விடை: இறால்


2. மீன்கள் இல்லாத ஆறு?

விடை: ஜோர்டான் ஆறு


English words & meanings :

 appease- சமாதானம்,


mollify- சினத்தை குறை

வேளாண்மையும் வாழ்வும் : 
இவை மனிதர்களின் உடலை தாக்குவதோடு சுற்றுப்புற சூழலையும் மாசடைய செய்கின்றன. செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் செடிகளுக்கு விஷ தன்மையை கொடுக்கிறது.
ஜூலை 03
சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்

2008 ஆம் ஆண்டில், இத்தாலியில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் குழு, ரெஸெரோவின் தலைமையில், பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கவும் முடிவு செய்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான வலுவான வழக்கறிஞரான, புகழ்பெற்ற பாதுகாவலர் சர் டேவிட் அட்டன்பரோவின் பிறந்தநாளை ஒட்டி, ஜூலை 3-ஆம் தேதி, முதல் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வு வெற்றிகரமாக இருந்தது, முதன்மையாக இத்தாலியில் பிளாஸ்டிக் பைகள் இல்லாத மாற்றுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது.

நீதிக்கதை
 வருத்தம்
ஒரு காட்டு வழியே இரண்டு நண்பர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர், ஒரு மரத்தில் இருந்த தேனை எடுத்துக் கொண்டிருந்தனர்.
 அதைப் பார்த்த ஒரு நண்பர்,
" தேனி எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த தேனை சேகரித்து வைத்திருக்கும் . ஆனால் இந்த மனிதர்கள், வெகு சுலபமாக அதனுடைய தேனை திருடி செல்கின்றனர்.இதை நினைத்து அந்தத் தேனீ எவ்வளவு வருத்தப்படும்" என்று கூறினார் 
 அதுக்கு மற்றொரு நண்பர் "கண்டிப்பாக அந்த தேனி அவ்வாறெல்லாம் வருத்தப்படாது. ஏனென்றால் மனிதர்களால் அந்த தேனை மட்டுமே திருட முடியும். ஆனால் அந்த தேனை உருவாக்கும் கலையை  தேனீயிடம் இருந்து திருட முடியாது.  திரும்பவும் தன்னால் தேனை  உருவாக்க இயலும் திறமையுள்ள  தேனீ,  ஒரு நாளும் வருத்தப்படாது என்று கூறினார்.
அதுபோல்தான்,  உங்களிடம் உள்ள செல்வத்தையோ,  உழைப்பையோ எவராலும் திருட முடியும். ஆனால்  உங்களிடம் திறமையும், வெற்றி பெறும் திறனும் இருந்தால் எதையும் சாதிக்க இயலும்.

இன்றைய செய்திகள்

03.07.2024


# சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள்: நாடு முழுவதும் 14,627 பட்டதாரிகள் தேர்ச்சி; தமிழகத்தில் 650 பேர் தேர்வு.


# தமிழக அரசின் விண்வெளி வரைவு கொள்கை வெளியீடு: மதுரை, தூத்துக்குடி, நெல்லை வளர்ச்சிக்கு முக்கியத்துவம்.


# மருத்துவத்தில் சிறப்பாக சேவை ஆற்றிய 105 மருத்துவர்களுக்கு விருதுகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.


# கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ள தாய்லாந்து புறப்பட்டது இந்திய ராணுவக் குழு.


#;ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ஜார்ஜியாவை வீழ்த்தி ஸ்பெயின் காலிறுதிக்கு தகுதி.


# விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா.


Today's Headlines


# Civil Service Prelims Results: 14,627 graduates passed across the country;  650 candidates got passed in Tamil Nadu.


#  Tamil Nadu Government's Draft Space Policy Released: Importance is given for the Development of Madurai, Thoothukudi, Nellai.


#  Health Minister M. Subramanian presented awards to 105 doctors for their outstanding service in medicine.


 # Indian army team leaves for Thailand to conduct joint military exercise.


 # European Football Championship: Spain beat Georgia to reach quarter-finals


 # Wimbledon Tennis: USA's Jessica Pegula advanced to 2nd round.

Tuesday, July 02, 2024

ஏழாம் வகுப்பு தமிழ் ஜூன் மாதத் தேர்வு 30 மதிப்பெண்கள் வினாத்தாள் இயல் 1 tamil 7th june month test


ஏழாம் வகுப்பு தமிழ் ஜூன் மாதத் தேர்வு வினாத்தாள் பருவம் 1 இயல் 1 அலகுத் தேர்வு 30 மதிப்பெண்கள் pdf

 7th Tamil unit test june term 1 unit 1 monthly exam 30 marks question paper pdf 


பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் உடனடித் தேர்வு வினாத்தாள் ஜூலை 2024 pdf

பதிவிறக்கு/DOWNLOAD

Sslc tenth tamil instant examination government supplementary exam question paper july 2024 pdf

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.07.2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.07.2024

திருக்குறள்: 

பால் :பொருட் பால்

அதிகாரம்:கல்லாமை

குறள் எண்:408

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

பொருள்: கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம்
உள்ள வறுமையை விட மிக்க துன்பம் செய்வதாகும்.

பழமொழி :

Calm before the storm. stoop to conquer.
புலி பதுங்குவது பாய்வதற்கு அடையாளம்.
இரண்டொழுக்க பண்புகள் :

* போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

* என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி :
" பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை தட்டிக் கொடுப்பது மட்டும் தான்"----விவேகானந்தர் 
பொது அறிவு : 
1. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?

விடை: 33

2. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?

விடை: நாக்கு

English words & meanings :

avarice-பண பேராசை

greed- பேராசை

வேளாண்மையும் வாழ்வும் : 
ஊட்டச்சத்து குறைந்த காய்கறிகளை, தானியங்களை சாப்பிடுவதால் குழந்தைகள் இளம் வயதிலேயே நோய்வாய்ப்படுகின்றனர்.

ஜூலை 02 
உலக விளையாட்டுத் துறை செய்தியாளர்கள் தினம்
சாதி, மதம், இனம், நாடு, மொழி எல்லாவற்றையம் கடந்து மக்களை விளையாட்டால் ஒன்று சேர்க்கும் பணியைச் செய்யும் விளையாட்டு பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நாள் இன்று.
நீதிக்கதை
 விட்டுக் கொடுத்தல் 

 பழங்காலத்தில் வேடர்கள் குரங்குகளை பிடிக்க ஒரு யுக்தியை  கையாண்டனர்
குறுகிய வாய்ப்பகுதி கொண்ட கனமான ஒரு கண்ணாடி ஜாடியில் குரங்குகளுக்கு பிடித்த உணவை அடைத்து குரங்குகள் அதிகம் இருக்கும் இடங்களில் வைத்து விடுவார்கள்
 குரங்குகள் அதை பார்த்ததும் ஜாடியில் கையை விட்டு உணவை எடுக்க முயலும்.ஆனால் கை வெளியே வராது. அந்தக் கனமான கண்ணாடி ஜாடியை தூக்கவும் முடியாது.
 குரங்குகளும் விடாப்பிடியாக உணவை கையில் வைத்துக் கொண்டே கையை எடுக்க முயலும். ஆனால் உணவை விட்டுக் கொடுத்தால் உயிர் பிழைக்கலாம் என்பது அறியாமல் உணவை கெட்டியாக பிடித்துக் கொண்டே இருக்கும். கடைசியில் வேடனிடம் மாட்டிக் கொள்ளும்.
 நம் வாழ்வில் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளவும், அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லவும்  எந்த இடத்தில் விட்டுக் கொடுக்க வேண்டும், எந்த இடத்தில் கடந்து செல்ல வேண்டும் ,எந்த இடத்தில் நின்று போராடி ஜெயிக்க வேண்டும் என்பதை அறிந்து  செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

இன்றைய செய்திகள்

02.07.2024


* தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர். நீர்வளம், வனத்துறை செயலர்கள் உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


* தமிழகத்தில் விக்கிரவாண்டி தவிர மற்ற பகுதிகளில் சொத்துக்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு அமல்.


* சளி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான 52 மருந்துகள் தரமற்று இருந்தது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது.


 * 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.


* வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தியது ஆஸ்திரேலியா.


* மகளிர் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி.


* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: டென்மார்க்கை வீழ்த்தி ஜெர்மனி காலிறுதிக்கு தகுதி.


* கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் நேற்று தொடங்கியது.


Today's Headlines


* Secretaries of important departments of the Tamil Nadu government have been transferred.  16 IAS officers including Water Resources and Forest Secretaries have been transferred.


* New Guideline Values for properties in Tamil Nadu other than Vikravandi were implemented.


*  The Central Drug Quality Control Board has revealed that 52 medicines for diseases such as cold and high blood pressure were of substandard quality.


 * 3 new criminal laws came into effect across the country from yesterday.


 * Australia doubles visa fees for foreign students.


 * Women's Test: India won the women's test series with South Africa.


 * European Football Championship: Germany beats Denmark and has entered quarter-finals.


 * Grand Slam Wimbledon tennis started yesterday.

எட்டாம் வகுப்பு தமிழ் ஜூன் மாதத் தேர்வு 50 மதிப்பெண்கள் வினாத்தாள் இயல் 1 tamil 8th june month test


எட்டாம் வகுப்பு தமிழ் ஜூன் மாதத் தேர்வு வினாத்தாள் இயல் 1 அலகுத் தேர்வு 50 மதிப்பெண்கள் pdf

8th Tamil unit test june unit 1 monthly exam 50 marks question paper pdf 

பதிவிறக்கு/DOWNLOAD

Monday, July 01, 2024

ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஜூன் மாதத் தேர்வு 50 மதிப்பெண்கள் வினாத்தாள் இயல் 1 tamil 9th june month test


ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஜூன் மாதத் தேர்வு வினாத்தாள் இயல் 1 அலகுத் தேர்வு 50 மதிப்பெண்கள் pdf

பதிவிறக்கு/DOWNLOAD


9th Tamil unit test june unit 1 monthly exam 50 marks question paper pdf 

பத்தாம் வகுப்பு தமிழ் ஜூன் மாதத் தேர்வு 50 மதிப்பெண்கள் வினாத்தாள் இயல் 1,2 tamil june month test


பத்தாம் வகுப்பு தமிழ் ஜூன் மாதத் தேர்வு 50 மதிப்பெண்கள் வினாத்தாள் இயல் 1,2 pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


Tenth 10th tamil june month test unit 1, 2 virudhunagar district

50 marks sslc exam question paper pdf 

Saturday, June 29, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் சிறு தேர்வு வினாத்தாள் pdf நாகை

பதிவிறக்கு/DOWNLOAD 

10th tenth tamil slip test unit 1 question paper pdf

ஒன்பதாம் வகுப்பு தமிழ் துணை வினைகள் இயல் 4 கற்பித்தல் துணைக்கருவி



9th tamil teaching aid TLM thunai vinaikal
 

பத்தாம் வகுப்பு தமிழ் தொகாநிலைத் தொடர்கள் இயல் 2 கற்பித்தல் துணைக்கருவி

 





10th tamil teaching aid TLM

thokanilai thodarkal

பத்தாம் வகுப்பு தமிழ் கோபல்லபுரத்து மக்கள் இயல் 3 கற்பித்தல் துணைக்கருவி

 


10th tamil teaching aid TLM
kopallapurathu makkal

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 8 பலவுள் தெரிக வினா விடை 10th tamil unit 8 choose the best answer

தமிழ்த்துகள்

Blog Archive