முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
முத்துத் தமிழ் பதித்து மூன்று நெறி வளர்த்து கத்தும் கடல் மீது கலங்களில்
விளையாடும் தென்பாண்டி மண்டலமே, கூத்தன் இருந்தான் குறளரசன் அங்கிருந்தான் வார்த்தைத் தமிழுக்கு வணங்காத கம்பன் இருந்தான். நக்கீரன்
நன்னாகன் நப்பசலை ஒக்கூர் மாசாத்தி ஒண்சாத்தன் சிலம்பெடுத்த தக்கோன் என யாப்பிலாக்
கவிதையேனும் யார் தரும் பாடலேனும் மா பலாபோல் மடியில் வாங்கித் தமிழ் வளர்க்கும்
இத்தரணியிலே பூ விரியும் காவிரியாய் எனது பிள்ளைப் பேச்சுக்கு வாய்ப்பளித்த உங்கள்
அனைவரையும் வணங்கித் தொடங்குகிறேன். தமிழ்த்துகள்
அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த முத்துவேல் கருணாநிதி அழியாப் புகழ் கொண்ட
முத்தமிழின்பால் காதல் கொண்ட கருணைநிதி வெஞ்சமர் களத்தில் அஞ்சிடாத சிங்கமாக அரசியலில் ராஜ தந்திரியாக உலா வந்த கரிகாலன்! தென்னாட்டுப் பெர்னாட்ஷா இந்நாட்டு
இங்கர்சால் என்று அழைக்கப்படும் காஞ்சித் தலைவனின் அன்புத்தம்பி, ஆரூரில் பிறந்து ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர்
கருணாநிதி. தமிழ்த்துகள்
மாணவ நேசனில் தொடங்கிய எழுத்துப் பணி முரசொலியாய் வளர்ந்து தமிழகமெங்கும் சங்க
இலக்கியம் மணக்க அயராது எழுதியது. நாடகம் கவிதை இலக்கியம் என்று அனைத்துத்
துறைகளிலும் கோலோச்சிய அந்த தட்சணாமூர்த்தி பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி
பெறாதவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழ்த்துகள்
ஆம் திருவாரூர் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர் கருணாநிதி.
நீதிக் கட்சியின் பிரச்சாரப் பீரங்கியாய் உலா வந்த அழகிரிசாமியின் மேடைப் பேச்சில்
ஈர்க்கப்பட்டு 14 வயதிலேயே சமூக இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் கலைஞர்
கருணாநிதி. 1953இல் கல்லக்குடியை டால்மியாபுரம் என்று மாற்ற நடுவண் அரசு செய்த
முயற்சிக்கு முட்டுக்கட்டையாக தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த தமிழ்க் காவலர்
கலைஞர் கருணாநிதி. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
இந்தி என்பது எடுப்புச்சாப்பாடு ஆங்கிலம் என்பது ஒருவர் கூற அதன்படி
சமைத்தஉணவு;
தமிழ் ஒன்று தான் தேவை அறிந்து தாய் ஊட்டும் உணவு என்று
தமிழ் மொழிக்கு விளக்கம் கொடுத்த தலைவர் கருணாநிதி. தமிழைக் கொலை செய்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்றார் பாவேந்தர்
பாரதிதாசன். செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்
வந்து பாயுது காதினிலே என்றார் மகாகவி பாரதியார். தமிழ்த்துகள்
தமிழ் மண்ணின் மைந்தராக தமிழினம் காக்கவும் தன்மானம் காக்கவும் தமிழ் மொழியைக்
காக்கவும் தன் வாழ்நாளை எல்லாம் செலவழித்த தலைவர் அவர். பெரியாரின் சீடராக
அண்ணாவின் அன்புத் தம்பியாக வளர்ந்த கலைஞர் அவர்கள் 1963இல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கைதானார். 1960இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் ஆனார். பாமர மக்களின் நாடி
அறிந்து பேசும் தலைவர்களுள் தனிச்சிறப்பு மிக்கவராக விளங்கியவர் கருணாநிதி. தமிழ்த்துகள்
மாதமோ சித்திரை மணியோ பத்தரை மறக்காமல் எமக்கு இடுவீர் முத்திரை என்று அடுக்கு
மொழிப்பேச்சால் தென்னிந்திய மக்களின் நாடி நரம்பு எல்லாம் கலந்து இருக்கின்ற
பேரறிஞர் அண்ணாவின் அன்புத்தம்பி கலைஞர். தமிழ்த்துகள்
மூன்று கடல் சூழ்ந்த தமிழகத்தில் மும்முரசு கொட்டி மூன்று கொடி கட்டி
முக்கனியாம் தமிழை வளர்த்த முவேந்தர் வழிவந்தவர்கள் நாம் என்பதை நினைவூட்டி நமக்கு
மொழி தமிழ், தமிழ் என்பது மூன்றெழுத்து; தமிழ் கொண்ட தனிப் பண்பு மூன்றெழுத்து; பண்புக்கு அடிப்படையாம் அன்பு மூன்றெழுத்து; அன்பில் விளைந்த காதல் மூன்றெழுத்து; காதலர் விரும்பும் வீரம் மூன்றெழுத்து; வீரர்கள் விழுப்புண் பெறும் களம் மூன்றெழுத்து; களத்தில் விளையும் வெற்றி மூன்றெழுத்து, வெற்றிக்கு வித்திட்ட அறிவு மூன்றெழுத்து; அந்த அறிவுப் பெட்டகமாக வந்து உதித்த அண்ணா மூன்றெழுத்து; அண்ணா கொடுத்த கழகமாம் திமுக மூன்றெழுத்து என்று மேடைப் பேச்சில் எதிரிகளையும்
ஈர்த்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
1957இல் குளித்தலையில் தொடங்கிய அவரது சட்டப்பேரவை
உறுப்பினர் வெற்றிப்பயணம் திருவாரூர் வரை வெற்றித் தேராய் பவனி வந்தது. அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் 1969இல் முதன்முறையாக அரியணை ஏறினார் கலைஞர்
கருணாநிதி. அதன் பின்னர் 1971, 89, 96, 2006 என்று ஐந்து முறை அவரை அரசு கட்டிலில் ஏற்றி அழகு பார்த்தனர் தமிழக
மக்கள். அன்பழகன், நெடுஞ்செழியன், சம்பத், மதியழகன், நடராஜன் என்ற திராவிடத் தூண்களாம் தலைவர்கள் மீது தணியாத பற்றுக் கொண்டவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்த்துகள்
கை ரிக்க்ஷா ஒழிப்புத் திட்டம், குடிசை மாற்று வாரியம், சிற்றுந்து, ஆயுள் காப்பீடு, டைடல் பார்க் என்று அவரது ஆட்சியில்
போடப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையை வெளிச்சம் போட்டுக் காண்பித்தது. உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குச் சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் 133 அடி உயரத்தில் இமாலய சிலை, பூம்புகாரில் கலைக்கூடம், அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று அடையாளச்
சின்னங்களை தமிழகத்தில் உருவாக்கியவர் கலைஞர் அவர்கள். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
1953ல் பராசக்தியில் தொடங்கிய அவரது திரைக்கதைப் பயணம் ஏறத்தாழ 75 படங்களுக்கு உழைக்கும் வரை தொடர்ந்தது. 15 நாவல்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைத் தொகுதிகள் என்று வாழ்நாளெல்லாம் பேனாவோடு
வாழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. ராஜகுமாரி படம் வெளிவந்தபோது அவருக்கு வயது
20. இளம் வயதில் முழுமூச்சாய் முத்தமிழ்
வளர்க்கும் மெய்த் தவம் செய்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்த்துகள்
சமூக நீதி, பெண் அடிமை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்று திரும்பும் திசையெல்லாம் அவர் குரல் ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு ஆதரவாக ஒலித்தது. ரத்தக்கண்ணீர், ஒரே ரத்தம், நடுத்தெரு நாராயணி, பெரிய இடத்துப் பெண், புதையல், வான்கோழி போன்ற அவருடைய புதினங்கள் அவற்றில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம்
கலைஞரின் கருத்தை சமூக நீதியாய்ப் பேசின. தமிழ்த்துகள்
ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பாயும் புலி, பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர் என்ற வரலாற்று நாவல்களையும்
எழுதி இந்திய வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் கலைஞர் கருணாநிதி, தமிழர்களே தமிழர்களே என்னை நீங்கள் கடலில் தூக்கிப் போட்டாலும் நான் கட்டுமரமாகத் தான் மிதப்பேன் கடலில் மூழ்கி விடமாட்டேன்
என்று கரகரத்த குரலில் அவர் பேசிய பேச்சு இன்னும் தமிழகமெங்கும் ஒலித்துக்
கொண்டிருக்கிறது. திராவிடப் பாரம்பரியத்தின் போர்வாளாக வாழும்வரை தமிழுக்குத்
தொண்டு செய்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்த்துகள்
இதுவரை வெளிவந்த அவருடைய நூல்களின் எண்ணிக்கை 178. நண்பனுக்கு என்றும் உடன்பிறப்பே என்றும் அவர் எழுதிய மடல்களோ 7000க்கும் மேல்: 2009இல் உலகக் கலை படைப்பாளி ஆக
கௌரவிக்கப்பட்டார் கருணாநிதி. 1970இல் பாரீசில் உலகத்தமிழ் மாநாட்டில் கௌரவ உயர் பதவி வழங்கப்பட்டது அவருக்கு. தமிழ்த்துகள்
1987இல் மலேசிய உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைக்கும் பேறு பெற்றவர் கருணாநிதி.
2010இல் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப்
பாடலை எழுதி வியக்க வைத்தவர் கலைஞர் அவர்கள். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
வசந்த சேனை வட்டமிடும் கழுகு, வாய் பிளந்து நிற்கும் ஓநாய் என்ற அவருடைய
மனோகரா வசனம் அன்றைய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவிலில் குழப்பம்
விளைவித்தேன் கோவில் கூடாது என்பதற்காக அல்ல கோவில் கொடியவர்களின் கூடாரமாக
ஆகிவிடக்கூடாது என்பதற்காக என்ற அவரது பராசக்தி படத்தின் பகுத்தறிவுப் பேச்சு
இளைஞர்களிடையே எழுச்சியைத் தூண்டியது. தமிழ்த்துகள்
சாம்ராட் அசோகன், தூக்கு மேடை, நச்சுக்கோப்பை சாக்ரடீஸ், உதயசூரியன் என்ற அவரது நாடகங்கள்
பட்டிதொட்டிகளில் பரபரப்பாக நடத்தப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தின்
மூலை முடுக்கெல்லாம் வேரூன்ற வழிவகை செய்தது. திருக்குறளுக்கு 1996இல் உரை எழுதியவர் கருணாநிதி 2003இல் தொல்காப்பியப் பூங்கா நூலை எழுதி முத்திரை
பதித்தார். ஓயாது உழைத்த கலைஞர், காவிரிப் படுகையில் பிறந்த அந்த முத்துவேல்
கருணாநிதி,
சென்னை காவேரி மருத்துவமனையில் 7 – 8 - 2018 அன்று உயிர் நீத்தார். தமிழ்த்துகள்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும் பைந்தமிழில் அழும்
ஓசை கேட்க வேண்டும், ஓடையிலே என் சாம்பல் கரையும்போதும் ஒண்டமிழே
சலசலத்து ஓட வேண்டும் என்று பாடினார் யாழ்ப்பாணத்துக் கவிஞர்.
வாழ்நாளெல்லாம் போராட்டங்களைச் சந்தித்த அவரது இறுதி ஊர்வலமும் மிகப் பெரும்
போராட்டத்திற்குப் பின் வங்கக் கடலோரம் இடம் பிடித்து அண்ணாவின் இதயமாய் அவர்
அருகிலேயே மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டது. தமிழ்த்துகள்
தறி கெட்டுப் போக இருந்த தமிழகத்தை நெறியோடு நிமிர்த்திய
பெருமை திராவிட இயக்கங்களைச் சாரும். அதில் கலைஞர் கருணாநிதிக்கு என்றும் நீங்கா
இடம் இருக்கிறது என்று கூறி வாய்ப்புக்கு நன்றி பாராட்டி அமைகிறேன் நன்றி வணக்கம்.
தமிழ்த்துகள்
மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி. 9443323199 தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்