9th tamil aaram thinai big question
தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Sunday, June 08, 2025
திருக்குறள் 157 திறனல்ல... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - thiranalla...
thirukural Explanation tamil & english - thiranalla...
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
Saturday, June 07, 2025
திருக்குறள் 156 ஒறுத்தார்க்கு... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - oruthaa
thirukural Explanation tamil & english - oruthaa
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
Friday, June 06, 2025
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-06-2025.வெள்ளி.
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
06-06-2025.வெள்ளி.
திருக்குறள் :
பால்: பொருட்பால் ;
இயல் : அரசியல் ;
அதிகாரம் : கல்வி ;
குறள் எண் : 399.
குறள் :
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.
விளக்கம் :
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.
பழமொழி :
பொறுத்தார் பூமி ஆள்வார்.
All things come to those who wait.
இரண்டொழுக்க பண்புகள்:
1. புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.
2. எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.
பொன்மொழி :
* நல்ல விதை விதைத்தால் செடி நன்கு வளர்ந்து நல்ல பலன் கொடுக்கும். அதுபோல நல்ல எண்ணங்கள் இருந்தால் வாழ்க்கை பிரகாசிக்கும். - சாகர்
பொது அறிவு:
01. சந்திராயன்-1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
2008 அக்டோபர் 22
02. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
லாசான்( ஸ்விட்சர்லாந்து) Lausanne (Switzerland)
English words & Tips :
habit
பழக்கம்
dirty
அழுக்கு
TIPS:
Changing a Singular Noun to a Plural Noun
* Adding oes' to nouns ending with an o'
tomato tomatoes.
* Adding 'ies' to words ending with a 'y' preceded by a consonant
Baby - Babies
* Adding 's' to words ending with a 'y' preceded by a vowel.
key - keys
அறிவியல் களஞ்சியம் :
மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல.
அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது.
நீதிக்கதை - சமயோசித யுக்தியால் உயிர் தப்பிய நாய்
ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது. நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பது தான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை. ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப் புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது.
எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க தொடங்கியது.
அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது. சிறுத்தைப்புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் கடிக்க ஆரம்பித்தது. சிறுத்தைப்புலி அருகில் வந்து தன் மீது பாய்வதற்கு தயாரானபோது காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது....
"இப்போது நான் தின்று முடித்த சிறுத்தைப்புலி மிகவும் சுவையாக இருந்தது. அக்கம் பக்கத்தில் வேறு சிறுத்தைப்புலி கிடைக்குமா? என்று தேடிபார்க்க வேண்டும்" என்றது. இதைக் கேட்டதும் பயந்து போய் சிறுத்தைப்புலி அப்படியே ஸ்தம்பித்து சிலைபோல் நின்று விட்டது.
இந்த காட்டு நாய் சிறுத்தைப்புலிகளையே கொன்று தின்று விடுகிறதே. அப்படியானால் எவ்வளவு பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். இதனிடம் அகப்படாமல் தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைத்து ஓசைப்படாமல் பின்னோக்கி சென்று அந்த சிறுத்தைப்புலி புதருக்குள் மறைந்துவிட்டது.
அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து இருந்த ஒரு குரங்கு நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரிந்த தகவலை சிறுத்தைப்புலியுடன் பகிர்ந்து கொண்டு சிறுத்தைப்புலியுடன் பேரம் பேசி தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று அந்தக் குரங்கு கருதியது. எனவே சிறுத்தைப்புலியை பின் தொடர்ந்து அந்தக்குரங்கு வேகமாக ஓடிச் சென்றது. காட்டு நாயும் இதை கவனித்தது. ஏதோ சதி நடக்கிறது என்பதை புரிந்துக்கொண்டது.
குரங்கு, சிறுத்தைப்புலியிடம் சென்று காட்டு நாய், சிறுத்தைப்புலியை எப்படி ஏமாற்றியது என்ற முழு விவரத்தையும் சொன்னது. சிறுத்தைப்புலிக்கு தாங்க முடியாத கோபமும், ஆத்திரமும் வந்தது. அந்த காட்டு நாய் என்னையே ஏமாற்றலாம் என்று நினைக்கிறதா? அதற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுகிறேன். "இந்த காட்டில் யார் யாரை கொன்று தின்பார்கள் என்பதை காட்டுகிறேன்" என்று சொல்லிவிட்டு, ""குரங்கே வா. என் முதுகில் ஏறி உட்கார். 2 பேரும் அந்த காட்டு நாயை பிடிக்கலாம்" என்றது. குரங்கு, சிறுத்தைப்புலியின் முதுகில் ஏறி உட்கார்ந்தது.
இரண்டும் நாயை நோக்கி சென்றன. சிறுத்தையும், குரங்கும் சேர்ந்து வருவதை காட்டு நாய் பார்த்தது. இந்த திருட்டு குரங்கு என்னை இப்படி ஆபத்தில் மாட்டி விட்டதே இப்போது என்ன செய்வது? என்று அந்த காட்டு நாய் யோசித்தது.அதற்காக அந்த காட்டு நாய் பயந்து ஓடவில்லை. அந்த சிறுத்தையையும், குரங்கையும் பார்க்காத மாதிரி நடித்து அவைகளுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு தரையில் அமர்ந்தது. அவை அருகில் நெருங்கியதும் அந்தகாட்டுநாய்
உரத்த
குரலில்
சொன்னது.
"அந்த போக்கிரி குரங்கு எங்கேபோய் தொலைந்தது. அதனை நம்பவே முடியாது. நான் இன்னொரு சிறுத்தைப்புலியை சாப்பிடுவதற்கு பிடித்துக்கொண்டுவா என்று சொல்லி அனுப்பி அரை மணிநேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அந்த குரங்கை காணோமே?" என்றது. காட்டு நாய் சொன்னதை கேட்ட சிறுத்தைப்புலி தன் கோபம் முழுவதையும் குரங்கின் மீது திருப்பியது. அதனை கடித்துக் குதறி கொன்று தின்றுவிட்டது.
நீதி : வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். ஆபத்துக்கள் வரலாம். பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தியுங்கள். வெல்லலாம்.
இன்றைய செய்திகள் 06.06.2025
* JEE தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற சேலம் மாணவி ராஜேஸ்வரிக்கு, முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து.
*நெகிலி மாசு ஒழிப்பது தான் இந்த ஆண்டின் கருப்பொருள் - சுற்றுச் சூழல் தின அறிக்கை - தமிழக முதல்வர்.
* ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தமிழக அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள் செல்லும் சென்னை உயர்நீதிமன்றம்.
* உலகின் மிக உயரமான ரயில் பாலமாக ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள செனாப் பாலத்தை ஜூன் 6ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. கத்ரா-ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கவுள்ளார்.
*விளையாட்டுச் செய்திகள்
TNPL கிரிக்கெட் இன்று தொடக்கம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வந்த சிறு குழந்தை ஒன்றும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 11 தாண்டியது.
Today's Headlines 06.06.2025
TODAY'S HEADLINES
Salem student Rajeshwari, who topped the state in the JEE exam, Congratulations from the Chief Minister and political leaders.
Eradicating Pladtic Pollution is this year's theme Environment Day Report - Tamil Nadu Chief Minister
The restrictions brought by the Tamil Nadu government to regulate online games will be lifted Madras High Court.
Prime Minister Modi will inaugurate the world's highest railway bridge named Chenab Bridge in Jammu and Kashmir, on June 6. He will also launch the Vande Bharat train service between Katra and Srinagar too.
SPORTS NEWS
TNPL series cricket starts today.
RCB's victory celebration in Bengaluru, Karnataka, few people got stuck in the crowd by stampede. The death toll has crossed 11.
திருக்குறள் 155 ஒறுத்தாரை... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - orutharai...
thirukural Explanation tamil & english - orutharai...
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
Thursday, June 05, 2025
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-06-2025. வியாழன்.
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
05-06-2025. வியாழன்.
திருக்குறள் :
பால்: பொருட்பால் ;
இயல் : அரசியல் ;
அதிகாரம் : கல்வி ;
குறள் எண்: 398.
குறள்
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.
விளக்கம் :
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
பழமொழி :
ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்.
Measure thrice before you cut once.
இரண்டொழுக்க பண்புகள் :
1. புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.
2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.
பொன்மொழி :
தீம் பழக்கங்களை நீக்குவதற்கு ஒரே வழி நல்ல பழக்கங்களை இடைவிடாது பழகி வருவதே ஆகும். - விவேகானந்தர்.
பொது அறிவு:
01. இந்தியாவில் பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி யார்?
திருமதி. இந்திரா காந்தி - Mrs. Indira Gandhi
02. தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட ரயில் நிலையம் எது?
ராயபுரம் - ROYAPURAM (1856, சென்னை)
English words & Tips :
+ skill
திறமை
+ path
பாதை
TIPS
Changing a Singular Noun to a Plural Noun
* Adding 's' - Tree - Trees
* Adding 'es' to the noun ends in S, SH, CH, X or Z box boxes, wish wishes, match matches
* Adding 'ves' for nouns ending with an 'f' or 'fe' - Leaf Leaves
அறிவியல் களஞ்சியம் :
அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலை. மேற்கொண்ட ஆய்வில், நம் உடல் செல்கள் ஆரோக்கியமாக இயங்க, மெதில் அடாப்டோஜென் எனும் சேர்மம் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மஞ்சள், பூண்டு, பெர்ரி, ரோஸ்மேரி கிரீன் டீ ஆகிய உணவுகளில் அதிகமாக உள்ளது.
ஜூன் 05
2 (World Environment Day, WED)
june
WORLD ENVIRONMENT DAY
2 (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக் கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.
சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில இருபதாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.
நீதிக்கதை வாழ்க்கைப் பயணம்
அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், "ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!" என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.
உடனே ராக்ஃபெல்லர், "விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா? எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?" என்று கேட்டார். "பெரும் விபத்து நேருமே!"- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.
இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், "வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!" என்று விளக்கம் அளித்தார்.
இன்றைய செய்திகள்
05.06.2025
* போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு-போதை எதிர்ப்பு மன்றச் செயல்பாடுகள் 2025-26 மாணவர்களுக்கான (9 முதல் 12ஆம் வகுப்பு) புத்தாக்க பயிற்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல். கல்வித்துறை அறிவிப்பு.
* கடுமையான மழைப்பொழிவு காரணமாக வடக்கு சிக்கிமில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவுகள், பாலங்கள் சேதம் & டீஸ்டா நதியில் அதிக அளவு வெள்ளநீர் செல்வதால் 1,200 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.
* இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க அமைச்சர் லுட்னிக் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
* 18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி
* இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் பி.வி.சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார்.
Today's Headlines - 05.06.2025
To form Drug-Free Tamil Nadu and Anti-Drug Forum Activities 2025-26 an Innovative Training was introduced for Students (Class 9 to 12) Taking Appropriate Action. Education Department Announcement.
Heavy rainfall has disrupted normal life in North Sikkim. Over 1,200 tourists are stranded due to landslides, damaged bridges & high water levels in the Teesta River.
- US Secretary of State Ludnick has said that a trade agreement between India and the US will be signed soon.
SPORTS NEWS
Royal Challengers Bangalore won the trophy for the first time in the 18-year history of IPL series
Indonesian Open Badminton PV Sindhu advances to the next round PV Sindhu faced Japan's Naomi Okuhara.
திருக்குறள் 154 நிறையுடைமை... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - niraiyudai
thirukural Explanation tamil & english - niraiyudai
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
போற்றி யொழுகப் படும்.
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 நெடுவினா விடை pdf நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது
tenth tamil new big question answer unit 1 tamil chol valam
நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழி நின்று விளக்குக.
Wednesday, June 04, 2025
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-06-2025. புதன் கிழமை
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
04-06-2025. புதன் கிழமை
திருக்குறள் :
பால்: பொருட்பால் ;
இயல் : அரசியல் ;
அதிகாரம் : கல்வி ;
குறள் எண்: 396.
குறள் :
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.
விளக்கம் :
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.
பழமொழி :
நற்குணமே சிறந்த சொத்து.
A good reputation is a fair estate.
இரண்டொழுக்க பண்புகள்:
1. புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.
2. எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.
பொன்மொழி :
+ சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் செயல்படுகிறவனுக்குத்தான் இந்த உலகம் சொந்தம். - இரால்ஃப் வால்டோ எமர்சன்.
பொது அறிவு:
"01. இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? எங்கு உள்ளது?
குஞ்சிக்கல் நீர்விழ்ச்சி (கர்நாடகம்) Kunchikal Falls (Karnataka)
02. இந்தியா மற்றும் சீனாவை பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் என்ன?
மக்மோகன் எல்லைக்கோடு
Mcmohan Line
English words & Tips :
+ Event
நிகழ்வு.
+ pride.
பெருமை
TIPS:
* The words your and you're are two different words with different meanings.
* Here is your coffee.
* You're looking good.
அறிவியல் களஞ்சியம் :
உலகின் மிக சோம்பேறியான விலங்கு என்று கருதப்படுவது 'ஸ்லாத்'. தற்போது இவற்றில் இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன. இதுவரை கிடைத்த இவற்றின் தொல் எச்சங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் 3.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய யானை அளவு பெரிய ஸ்லாத்கள் வாழ்ந்துள்ளன என்கிறார்கள். இவை சராசரியாக 3.63 டன் கொண்டிருந்தனவாம். எடை
ஜூன் 04
ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான
பன்னாட்டு நாள்
ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு न (International Day of Innocent Children Victims of Aggression) என்பது ஆண்டுதோறும் சூன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும். இது 1982 ஆகத்து 19 முதல் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்நாள் 1982 லெபனான் போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மீது கவனம் செலுத்தியது, பின்னர் இதன் நோக்கம் "உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் அனுபவிக்கும் வலியை" உணர்ந்துகொள்வதாக விரிவடைந்தது. இந்தநாள் குழந்தைகளின் பாதுகாப்பதற்கான ஐநாவின் உரிமைகளைப் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.
நீதிக்கதை
ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.
"யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?" என்றான்.
"தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!" என்றார்.
"இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!" என்று அந்த அரக்கன் கூறினான். அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார். அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.
"குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!" என்று கத்தினர்.
கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.
""வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!"
அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!" என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.
அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.
"எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?" என்றனர்.
அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.
அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.
இன்றைய செய்திகள்
04.06.2025
* ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.
* திண்டுக்கல் சிறுமலையில் பல்லுயிர் பூங்கா 2 மாதங்களில் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
* 40 ரஷ்ய விமானங்களை வீழ்த்தியது உக்ரைன். உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 40 ரஷ்ய விமானங்கள் வீழ்த்தப்பட்டன.
*2 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு கடலுக்கு அடியில் ரயில் சேவை; 2030-க்குள் தொடங்க திட்டம்!
விளையாட்டுச் செய்திகள்
* இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவராகிறார் ராஜீவ் சுக்லா.
* நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழக செஸ் வீரர் குகேஷ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
Today's Headlines 04.06.2025
The NEET Masters exam, which was scheduled to be held on June 15, has been postponed.
-The Tamil Nadu government has announced that the biodiversity park in Sirumalai, Dindigul district, will be opened in 2 months.
Ukraine shoots down 40 Russian planes. 40 Russian planes were shot down in a drone attack carried out by Ukraine.
Under water train service is Planned to start by 2030. The estimated travelling time from India to Dubai is 2 hours;
*SPORTS NEWS*
Rajiv Shukla becomes interim president of the Board of Control for Cricket in India.
Chief Minister M.K. Stalin congratulates Tamil Nadu chess player Kukesha for defeating Magnus Carlsen in the Norway Chess Series.
திருக்குறள் 153 இன்மையுள்... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - inmaiyul...
thirukural Explanation tamil & english - inmaiyul...
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
வன்மை மடவார்ப் பொறை.
Tuesday, June 03, 2025
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-06-2025. செவ்வாய்.
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
03-06-2025. செவ்வாய்.
திருக்குறள் :
பால்: பொருட்பால் ; இயல் : அரசியல் ;
அதிகாரம் : கல்வி ; குறள் எண் : 397.
குறள் :
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு.
விளக்கம் :
கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.
பழமொழி :
நல்லதைச் சொல்வது நல்லது ; அதை விட நல்லது நல்லதை செய்வது.
Say well is good, but do well is better.
இரண்டொழுக்க பண்புகள்:
1. புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.
2. எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.
பொன்மொழி :
* மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே உண்மையான கல்வி. - மகாத்மா காந்தி.
பொது அறிவு :
01. எந்த நாள் சர்வதேச கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது?
24 (January 24)
02. எந்த நதி பூமத்திய ரேகையை இருமுறை கடக்கிறது?
காங்கோ ஆறு (Congo River)
English words & Tips:
intelligent - clever. விரைவில் புரிந்து கொள்ளும் ஆற்றல்.
wisdom - ability to make sensible decisions with one's knowledge. விவேகம், மதிநுட்பம்
What Is a Common Noun?
Common Nouns Referring to Human Beings
Common Nouns Referring to Animals
Common Nouns Referring to Birds
Common Nouns Referring to Insects
Common Nouns Referring to Reptiles
Common Nouns Referring to Places
Common Nouns Referring to Things/Objects
Common Nouns Referring to Ideas
அறிவியல் களஞ்சியம் :
பூமியும் வெள்ளியும் ஒன்று போலவே இருப்பதால் இவற்றை 'இரட்டைக்கோள்கள்' என்று அழைக்கிறோம். பூமியைப் போலவே வெள்ளியிலும் கண்ட நகர்வு நடப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் மேரிலாண்டு பல்கலை. ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.
ஜூன் 03 உலக மிதிவண்டி நாள்
உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) ஆண்டுதோறும் சூன் 3 நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. உலக மிதிவண்டி நாளுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானம் "இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி" என்பதை அங்கீகரித்தது.
ஜூன் 03 கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த தினம்
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, பிறப்பு சூன் 3, 1924 - இறப்பு ஆகத்து 7, 2018.
இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது பட்டுக்கோட்டை அழகிரி, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழறிஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்குவகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தன்னுடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.
நீதிக்கதை -கிளியின் நட்பு
வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தினான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது. அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை.
அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது. அதற்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல். அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது.
கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது, அதற்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது. இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்.
நீதி : தனது நண்பர்களின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்
03.06.2025
* அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.
* ராகிங் தடுப்பு செயல் திட்டங்களை சமர்ப்பிக்க கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்.
* ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு.சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
* உக்ரைனில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்
விளையாட்டுச் செய்திகள்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் பங்கேற்ற நிலையில் 7 பேர் பதக்கம் வென்றனர். தொடர் ஓட்ட பந்தயங்களில் 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார் சுபா வெங்கடேசன்.
தென்கொரியாவில் நடந்த இத்தொடரில் 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் இந்தியா 2வது இடம் பெற்றது.
Today's Headlines 03.06.2025
Tamil Nadu School Education Department orders temporary appointment of teachers in government schools.
UGC instructs colleges to submit anti-ragging schemes.
Powerful earthquake in Japan. 6.0 hertz is recorded on the Richter scale. Buildings shook due to the powerful Earthquake.
In the two-and a-half-year war in Ukraine, a highest toll of 45,287 Russian soldiers have died in 2024 alone
SPORTS NEWS
Out of the 9 athletes from Tamil Nadu who participated in the Asian Athletics Championships, 7 won medals. Subha Venkatesan won 2 medals in the relay races.
India finished second in the tournament held in South Korea with 24 medals, including 8 gold, 10 silver and 6 bronze.
திருக்குறள் 152 பொறுத்தல்... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - poruthal...
thirukural Explanation tamil & english - poruthal...
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
Monday, June 02, 2025
வகுப்பு 10 தமிழ் இயல் 7 பா வகை அலகிடுதல் வினாடிவினா 25 வினாக்கள் Tenth Tamil Quiz paa vakai alakidal
Tenth Tamil Quiz paa vakai alakidal
திருக்குறள் 151 அகழ்வாரை... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - akalvarai
thirukural Explanation tamil & english - akalvarai
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் நாள்: 02-06-2025கிழமை: திங்கட்கிழமை
பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்: 02-06-2025
கிழமை: திங்கட்கிழமை
*திருக்குறள்*
பால் : பொருட்பால்
இயல்: அரசு
அதிகாரம்: கல்வி
குறள் எண்: 391
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
விளக்கம்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
*பழமொழி:*
He who has an art, has everywhere a part.
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
*ஈரொழுக்கப் பண்புகள் :*
1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.
2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.
*பொன்மொழி :*
எந்த வேலை செய்தாலும் இறைவனை நினைத்து பலன் கருதாமல் செய்யத் துவங்குங்கள். உயர்ந்த பலனைப் பெறுவீர்கள். - விவேகானந்தர்
*பொது அறிவு :*
01.உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிகரம் எது?
1. மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8811மீ) Mount Godwin Austin
2. மஞ்சள் ஆறு என்று அழைக்கப்படும் ஆறு எது?
ஹோவாங்கோ ஆறு ( சீனா ) Huang He River
*English words & Tips :*
surprise - ஆச்சரியம்
wonderful - அற்புதம்
When two singular subjects are connected by or, use a singular verb. The same is true for either/or and neither/nor.
John or Joe is coming tonight.
Either coffee or tea is fine.
Neither Kavi nor Nandhini was late.
*அறிவியல் களஞ்சியம் :*
நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியில் கடல் அலைகள் தோன்றுகின்றன. அதுபோல, மேச்சோ எனும் ஒரு நட்சத்திரத்தில், அதன் அருகே இருக்கும் சிறிய நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையால், நமது சூரியனைப் போல மூன்று மடங்கு உயரம் மிக்க அலைகள் தோன்றுவதை ஹார்வர்ட் பல்கலை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நட்சத்திரம் நம்முடைய சூரியனை விட 35 மடங்கு அதிக நிறையை உடையது.
*ஜூன் 02*
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் நினைவுதினம்
கவிக்கோ அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான் (S. Abdul Rahman, நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல்ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
*நீதிக்கதை*
*மாயக்கண்ணாடி*
ஒரு சிறுவன், புத்தகக் கடையில் ஒரு அழகான கண்ணாடியைப் பார்த்தான்.அதில் பார்த்ததெல்லாம் அப்படியே தெரிந்தது.தன் முகமும் புன்னகைப்பது போலவே தெரிந்தது.அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.
அவன் சந்தோசத்தில் சிரிக்கும் போது கண்ணாடியும் சிரித்தது. அவன் கோபப்பட்டபோது கண்ணாடியும் கோபப்படுவது போலவே தெரிந்தது.அதை வைத்து மகிழ்ச்சியுடன் விளையாடினான்
ஒரு நாள்,அவன் கண்ணாடியை தரையில் வீசினான். அது உடைந்து போனது. அந்த நேரம் தான் அவனுக்கு உண்மை தெரிந்தது. அவன் முகத்தையே கண்ணாடி காட்டியது! அவன் முகம் எப்படி இருக்கிறதோ, அதையே பிரதிபலித்தது என்பதைஅவன் உணர்ந்தான்.
வாழ்க்கையும் இப்படித்தான்! நாம் எப்படி இருப்போமோ, உலகமும் அதுபோலவே பிரதிபலிக்கிறது. நாம் நல்லவர்களாக இருந்தால், உலகமே நல்லது தான்!
அதிகம் எதிர்பார்க்காமல், நம் மனதைச் சுத்தமாக வைத்தால் போதும்.நம்மால் உலகமே மாறும்.இதுவே மாயக்கண்ணாடி அவனுக்கு உணர்த்திய வாழ்க்கையின் பெரிய பாடமாகும்.
அவன் சிரித்தான் — உண்மையுடன்.
*இன்றைய செய்திகள்*
*02.06.2025*
கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகை பள்ளிகளும் திறப்பு .
புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யலாம். -போக்குவரத்து துறை அறிவிப்பு.
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் எஃகு, அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி விதித்தார்.
பூமியில் இருந்து நெப்டியூனை விட 3 மடங்கு தொலைவில் உள்ள சிறிய கிரகம் கண் டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய கிரகத்திற்கு 'பிளானட் நைன்' என பெயர் சூட்டினர் அமெரிக்க அறிவியல் அறிஞர்கள்.
*விளையாட்டுச் செய்திகள்*
ஆசிய தடகளம் சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா சிங் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.
தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய தடகள போட்டியில், கால் வீக்கத்துடன் ஓடி, 400 மீ தடை தாண்டுதலில் வெண்கலம் வென்றார் தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா ராம்ராஜ்!
*Today's Headlines*
All types of Tamil nadu state schools reopen after the summer vacation.
Students can travel using their old bus passes until a new bus pass is issued. -Transport Department announcement.
America'S President Trump imposed a 50% tariff on steel and aluminum imports from China.
A small planet three times farther from Earth than Neptune has been discovered. American scientists have named the new planet 'Planet Nine
*Sports news*
Indian athlete Pooja Singh won the gold medal in the women's high jump at the Asian Athletics Championships, clearing 1.89 meters.
Tamil Nadu athlete Vidya Ramraj won bronze in the 400m hurdles at the Asian Athletics Championships in South Korea, running with a swollen foot!
Sunday, June 01, 2025
பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு pdf 2025 - 2026
பதிவிறக்கு/DOWNLOAD
Tenth tamil slow learner guide 2025 new syllabus
நன்றி
ஆசிரியர்கள்
திரு.வேல்முருகன்
திரு.ஜெயராமன்
பெரம்பலூர் மாவட்டம்
Subscribe to:
Posts (Atom)
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan November 2 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 ...
-
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மங்கையராய்ப் பிறப்பதற்கே, புறப்பொருள் இலக்கணம் நவம்பர் 1010th tamil model notes of lesson lesson plan November 10 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 10-11-2026 முதல் 13-11-2026 ...
-
Tenth tamil second mid term exam model question paper 1 pdf Virudhunagar district 2025 பதிவிறக்கு/DOWNLOAD
-
9th tamil model notes of lesson lesson plan November 2 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 ...
-
10th tamil model notes of lesson lesson plan November 23 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 23-11-2026 முதல் 28-11-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan November 2 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 2...
-
9th tamil model notes of lesson lesson plan November 10 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 10-11-2026 முதல் 13-11-2026...
-
7th tamil model notes of lesson lesson plan November 2 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 2...
-
6th tamil model notes of lesson lesson plan November 2 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 2...
-
8th tamil model notes of lesson lesson plan November 10 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 10-11-2026 முதல் 13-11-2026 ...
Blog Archive
-
▼
2026
(1775)
-
▼
November
(106)
- பத்தாம் வகுப்பு தமிழ் அன்னை மொழியே FULL AI VIDEO இ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-11-2026 த...
- பரணி தீபம் ஏற்றும் வழிமுறைகள் barani deepam pray m...
- கல்வி ஒளியைத் தேடி… தமிழ்க் கவிதை In Search of the...
- பரணி தீபம் ஏற்ற நல்ல நேரம் barani deepam nalla ner...
- தமிழரின் தொன்மை தமிழ்க் கட்டுரை தொல்லியல் துறை The...
- பண்பாட்டு எச்சங்கள் தமிழ்க் கட்டுரை தொல்லியல் உலக ...
- நினைவுச் சின்னங்கள் தமிழ்க் கட்டுரை தொல்லியல் துறை...
- தமிழரின் தொன்மை தமிழ்க் கட்டுரை pdf தொல்லியல் துறை...
- பண்பாட்டு எச்சங்கள் தமிழ்க் கட்டுரை pdf தொல்லியல் ...
- நினைவுச் சின்னங்கள் தமிழ்க் கட்டுரை pdf தொல்லியல் ...
- ஆறாம் வகுப்பு தமிழ் இலக்கணம் இன எழுத்துகள் 6th tam...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 ஒரு மதிப்பெண் வினாக்க...
- ஆறாம் வகுப்பு தமிழ் வளரும் வணிகம் FULL AI VIDEO இய...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2026 வெள்ளி
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் திருக்குறள் இயல் 5 Full AI ...
- புத்திசாலி ஓவியன் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2026 விய...
- ஒன்பதாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப் பருவத் தேர்...
- ஒன்பதாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப் பருவத் தேர்...
- ஏழாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப் பருவத் தேர்வு ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதத் தேர்வு வினாத்தாள் தூத்...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- வகுப்பு 6 தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- பூக்கோலம் விநாயகர்
- மாக்கோலம்
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- வகுப்பு 7 தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- 9th english second mid term exam question paper 20...
- 7th english second mid term exam question paper 20...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-11-2026 புதன்
- 10th english second mid term exam question paper w...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவ இடைத் தேர்வு நவ...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவ இடைத் தேர்வு நவ...
- வகுப்பு 8 தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- 8th english second mid term exam question paper vi...
- 10th english second mid term exam answer key virud...
- 10th english second mid term exam question paper v...
- வகுப்பு 9 தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு 2026 வி...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-11-2026 செவ...
- 2026 வகுப்பு 10 தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்ப...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-11-2026 திங...
- ஏழாம் வகுப்பு தமிழ் தொழில்பெயர் FULL AI VIDEO இலக்...
- இன எழுத்துகள் FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ் ப...
- மங்கையராய்ப் பிறப்பதற்கே FULL AI VIDEO பத்தாம் வகு...
- வல்லினம் மிகும் இடங்கள் FULL AI VIDEO தமிழ் இலக்கண...
- the song of sparrows சிறார் திரைப்படம் நவம்பர் 202...
- 2026 நவம்பர் மாத சிறார் திரைப்படம் children film n...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2026 வெள்ளி
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-11-2026 விய...
- வினையால் அமையும் தொடர்கள் FULL AI VIDEO எட்டாம் வக...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-11-2026 புதன்
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.11.2026 ச...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நவம்பர் 16
- தமிழ் ஒளிர் இடங்கள் FULL AI VIDEO ஏழாம் வகுப்பு த...
- தேன்சிட்டு 2026 நவம்பர் 1 மாத இதழ் வினாடி வினா வின...
- தேன்சிட்டு 2026 நவம்பர் இதழ் 1 வினாடி வினா - வினா ...
- தீபாவளி வாழ்த்துக் கவிதை தீப ஆவளி திருநாள் கவிதை D...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-11-2026 வெள்ளி
- என் கனவுப் பள்ளி தமிழ்ப் பேச்சு pdf link எனது கனவு...
- என் கனவுப் பள்ளி தமிழ்ப் பேச்சு pdf எனது கனவுப்பள்...
- உயர்ந்த குணம் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-11-2026 விய...
- இரண்டாம் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை 2026
- இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 6-10 பாடத்திட்டம் 2026
- ஏழாம் வகுப்பு தமிழ் பேசும் ஓவியங்கள் FULL AI VIDEO...
- குழந்தைகளைக் கைப்பேசிப் பயன்பாட்டிலிருந்து மீட்பது...
- குழந்தைகளைக் கைப்பேசிப் பயன்பாட்டில் இருந்து மீட்ப...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 4-11-2026 புதன்
- இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 2026 பாடத்திட்டம் தமி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-11-2026 செவ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-11-2026 திங...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாக்க...
-
▼
November
(106)
