கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, June 05, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-06-2025. வியாழன்.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

05-06-2025. வியாழன்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : அரசியல் ;

அதிகாரம் : கல்வி ; 

குறள் எண்: 398.

குறள்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.

விளக்கம் :

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

பழமொழி :

ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்.

Measure thrice before you cut once.

இரண்டொழுக்க பண்புகள் :

1. புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.

2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.

பொன்மொழி :

தீம் பழக்கங்களை நீக்குவதற்கு ஒரே வழி நல்ல பழக்கங்களை இடைவிடாது பழகி வருவதே ஆகும். - விவேகானந்தர்.

பொது அறிவு:

01. இந்தியாவில் பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி யார்?

திருமதி. இந்திரா காந்தி - Mrs. Indira Gandhi

02. தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட ரயில் நிலையம் எது?

ராயபுரம் - ROYAPURAM (1856, சென்னை)

English words & Tips :

+ skill

திறமை

+ path

பாதை

TIPS

Changing a Singular Noun to a Plural Noun

* Adding 's' - Tree - Trees

* Adding 'es' to the noun ends in S, SH, CH, X or Z box boxes, wish wishes, match matches

* Adding 'ves' for nouns ending with an 'f' or 'fe' - Leaf Leaves

அறிவியல் களஞ்சியம் :

அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலை. மேற்கொண்ட ஆய்வில், நம் உடல் செல்கள் ஆரோக்கியமாக இயங்க, மெதில் அடாப்டோஜென் எனும் சேர்மம் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மஞ்சள், பூண்டு, பெர்ரி, ரோஸ்மேரி கிரீன் டீ ஆகிய உணவுகளில் அதிகமாக உள்ளது.

ஜூன் 05

2 (World Environment Day, WED)

june

WORLD ENVIRONMENT DAY

2 (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக் கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில இருபதாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.

நீதிக்கதை வாழ்க்கைப் பயணம்

அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், "ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!" என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.

உடனே ராக்ஃபெல்லர், "விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா? எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?" என்று கேட்டார். "பெரும் விபத்து நேருமே!"- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், "வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!" என்று விளக்கம் அளித்தார்.

இன்றைய செய்திகள்

05.06.2025

* போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு-போதை எதிர்ப்பு மன்றச் செயல்பாடுகள் 2025-26 மாணவர்களுக்கான (9 முதல் 12ஆம் வகுப்பு) புத்தாக்க பயிற்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல். கல்வித்துறை அறிவிப்பு.

* கடுமையான மழைப்பொழிவு காரணமாக வடக்கு சிக்கிமில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவுகள், பாலங்கள் சேதம் & டீஸ்டா நதியில் அதிக அளவு வெள்ளநீர் செல்வதால் 1,200 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.

* இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க அமைச்சர் லுட்னிக் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்

* 18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

* இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் பி.வி.சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார்.

Today's Headlines - 05.06.2025

To form Drug-Free Tamil Nadu and Anti-Drug Forum Activities 2025-26 an Innovative Training was introduced for Students (Class 9 to 12) Taking Appropriate Action. Education Department Announcement.

Heavy rainfall has disrupted normal life in North Sikkim. Over 1,200 tourists are stranded due to landslides, damaged bridges & high water levels in the Teesta River.

- US Secretary of State Ludnick has said that a trade agreement between India and the US will be signed soon.

SPORTS NEWS

Royal Challengers Bangalore won the trophy for the first time in the 18-year history of IPL series

Indonesian Open Badminton PV Sindhu advances to the next round PV Sindhu faced Japan's Naomi Okuhara.

தமிழ்த்துகள்

Blog Archive