கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 26, 2025

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பூத்தொடுத்தல் நவம்பர் 3

 7th tamil model notes of lesson

lesson plan November 3

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

03-11-2025 முதல் 07-11-2025

2.பருவம்

2

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

கலை வண்ணம் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

பூத்தொடுத்தல்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-703 தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தைத் தம் சொந்தச் சொற்களில் / சைகை மொழியில் வெளிப்படுத்தல்,

8.கற்றல் நோக்கங்கள்

கவிதையைப் படித்து அதன் மையக் கருத்தை அறிந்து எழுதுதல்.

9.நுண்திறன்கள்

புதுக்கவிதைகளைப் படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2023/08/10th-tamil-ppt-power-point-presentation_22.html

https://tamilthugal.blogspot.com/2023/08/pdf-6_17.html

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_60.html

https://tamilthugal.blogspot.com/2024/09/blog-post_25.html

https://tamilthugal.blogspot.com/2021/07/6-10th-tamil-online-test-poothoduthal.html

https://tamilthugal.blogspot.com/2025/10/2-2_21.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த பூக்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

புதுக்கவிதையை நயத்துடன் அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பூத்தொடுத்தல் கவிதையை விளக்குதல். கவிதை நயத்தை உணர்த்துதல். அழகுணர்ச்சி குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் குழுவாகக் கூறச் செய்தல்.

          மலர் குறித்தும் வேலை குறித்தும் மாணவர்கள் பேசுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், சங்கப்பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

புதுக்கவிதைகளை உணர்ந்து படித்தல்.

15.மதிப்பீடு

எ.சி.வி       கவிஞர் உமா மகேஸ்வரி எந்த மாவட்டத்தில் பிறந்தவர்?

          ந.சி.வி – மலர்கள் எப்போது தரையில் நழுவும்?

உ.சி.வி – பூக்களைக் கொய்யும்போது உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

மாலை தொடுக்க உதவும் பூக்களின் பெயர்களை அறிந்து எழுதுக.

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நானிலம் படைத்தவன், கடலோடு விளையாடு நவம்பர் 3

6th tamil model notes of lesson

lesson plan November 3

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

03-11-2025 முதல் 07-11-2025

2.பருவம்

2

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

கூடித் தொழில் செய் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

நானிலம் படைத்தவன், கடலோடு விளையாடு

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-611 ஒலியியைபு, சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத்தொடர்கள் போன்ற மொழியின் மரபு, நடை, நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, கதைகள், கட்டுரைகளின் நயம் பாராட்டல்.

T-612 பல வடிவங்களில் எழுதப்பட்ட  இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்புமுறை, குரல் ஏற்றஇறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழர்களின் பண்டைய வணிகம் குறித்து அறிதல்.

நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் வெளிப்படும் நாகரிகம், பண்பாட்டினை அறிதல்.

9.நுண்திறன்கள்

பாடல்கள், கதைகள் மற்றும் கட்டுரைகளின் நயம்பாராட்டுதல்.

மீனவர்களின் வாழ்க்கைமுறை குறித்து அறியும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-6th-tamil-mindmap-term-2-unit-3.html

https://tamilthugal.blogspot.com/2021/06/3-2-6th-tamil-naanilam-padaithavan.html

https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_20.html

https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-6th-tamil-mindmap-term-2-unit-3_15.html

https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_79.html

https://tamilthugal.blogspot.com/2018/11/6-2-3.html

https://tamilthugal.blogspot.com/2021/06/3-2-6th-tamil-kadalodu-vilaiyadu-vina.html

11.ஆயத்தப்படுத்துதல்

வணிகத்தின் சிறப்பு குறித்துக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த நாட்டுப்புறப் பாடல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தமிழரின் பெருமையைக் கூறுதல்.

வாய்மொழி இலக்கியங்களைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தமிழன் நாட்டை உருவாக்கிய விதம் குறித்துக் கூறுதல். தமிழன் அஞ்சாத, அஞ்சும் செயல்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          மீனவர் பாடலை வாசித்து அவற்றின் பொருள் கூறுதல். மாணவர்களையும் திரும்பக் கூறச்செய்தல். நெய்தல் திணை குறித்து விளக்குதல்.

          மீனவர் துயர் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். தமிழர் குறித்தும் வணிகம் குறித்தும் மாணவர்களின் தகவல்களைக் கேட்டல். கடல் வணிகம் பற்றி விளக்குதல்.






          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடல் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

தமிழரின் பெருமையை மாணவர்களிடம் உணர்த்துதல். வாய்மொழி இலக்கியங்களை அறியச் செய்தல். மீனவர் வாழ்வை அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – கலம் என்பதன் பொருள் ..............................

                   அரிச்சுவடி எனப்படுவது ....................................

          ந.சி.வி – நான்கு நிலங்கள் என்பன யாவை?

                   மீனவர்கள் தமது வீடாகவும் செல்வமாகவும் கருதுவன யாவை?

          உ.சி.வி – நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்த தொழில்கள் குறித்து எழுதுக.

                   பழங்கால மனிதனின் முன்னேற்றங்களைச் சிந்தித்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

மீனவர் குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.

நானிலம் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

ஒருமணிக்கொரு மணி... இறை வாழ்த்து - தமிழ்ப் பாடல் ORU MANIKKORU MANI DEVOTIONAL SONG TAMIL


ORU MANIKKORU MANI DEVOTIONAL SONG TAMIL

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 முழு வினா விடை 8th Tamil new book unit 5 full questions answers 2025


8th Tamil new book unit 5 full questions answers 2025 

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 முழு வினா விடை pdf 8th tamil unit 5 full questions and answers 2025 - 2026

  பதிவிறக்கு/DOWNLOAD


8th tamil unit 5 full questions and answers pdf 2025 - 2026

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 முழு வினா விடை 8th Tamil new book unit 4 full questions answers 2025


8th Tamil new book unit 4 full questions answers 2025 

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 முழு வினா விடை pdf 8th tamil unit 4 full questions and answers

 பதிவிறக்கு/DOWNLOAD


8th tamil unit 4 full questions and answers pdf 2025 - 2026

ஒன்பதாம் வகுப்பு தமிழ் அக்டோபர் மாதத் தேர்வு வினாத்தாள் இயல் 4 test 9th tamil question 50 marks


 9th Tamil unit 4 unit test October Month exam Question paper Pdf Virudhunagar district

test 9th tamil question 50 marks

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 4 அலகுத்தேர்வு அக்டோபர் மாதத் தேர்வு வினாத்தாள் pdf 9th Tamil unit 4 unit test October

 9th Tamil unit 4 unit test October Month exam Question paper Pdf Virudhunagar district


பதிவிறக்கு/DOWNLOAD

Saturday, October 25, 2025

பம்பரம் சொல்லும் சேதி golden words tamil


 

திருக்குறள் 179 அறனறிந்து... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - Aranarinthu


 thirukural Explanation tamil & english - Aranarinthu

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அரசு வினாத்தாள், விடைக்குறிப்பு 2025 TTSE Govt Question answer


2025 TTSE Govt Question answer

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அரசு வினாத்தாள் விடைக்குறிப்பு 2025 pdf

 TTSE tamil talent exam original question paper with answer pdf


 பதிவிறக்கு/Download

தேன்சிட்டு 2025 அக்டோபர் 2 மாத இதழ் வினாடி வினா 173 வினாவிடை then chittu October paper quiz q & a pdf


then chittu October paper quiz q&a pdf


தேன்சிட்டு 2025 அக்டோபர் இதழ் 2 வினாடி வினா 173 வினா விடை pdf then chittu October paper quiz 173 questions and answers

 then chittu October paper quiz 173 questions and answers


பதிவிறக்கு/DOWNLOAD

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.10.2025 சனிக்கிழமை

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.10.2025 சனிக்கிழமை 

திருக்குறள்: 

குறள் 137: 

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் 

எய்துவ ரெய்தாப் பழி. 

உரை: 

ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

பழமொழி :

Life rewards those who never quit. 
ஒரு போதும் கை விடாதவர்களுக்கு வாழ்க்கை பெரிய வெகுமதியை தருகிறது.

இரண்டொழுக்க பண்புகள் :
1.இரக்கமில்லாத மனமும், இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.

2.எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளத்தை ஒரு நாளும் அழிக்க மாட்டேன்

பொன்மொழி :
தூய்மையான உள்ளத்தில் உண்மையான அழகு உள்ளது - மகாத்மா காந்தி

பொது அறிவு : 
01.இயந்திரத்தின் எஞ்சினை குளிர்விக்கும் கருவியின் பெயர் என்ன?

ரேடியேட்டர் - Radiator

02. நமது உடலில் பிட்யூட்டரி சுரப்பி எங்குள்ளது?

மூளையின் அடிப்பகுதியில்

At the base of the brain

English words :
different -diverse
dine-feast

தமிழ் இலக்கணம்: 

 பண்புப்பெயர் (அல்லது குணப்பெயர்): ஒருவரின் குணத்தை அல்லது பண்பைக் குறிப்பது 

எ.கா. அழகு, மாட்சி, நேர்மை.

தொழிற்பெயர்: ஒரு தொழிலைக் குறிப்பது.

எ. கா –தச்சர், ஆசிரியர், மருத்துவர்

அறிவியல் களஞ்சியம் :
 நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
அக்டோபர் 25

பிகாசோ அவர்களின் பிறந்தநாள்

பிகாசோ, 1881-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் நாள் ஸ்பெயின் நாட்டில் உள்ள மால்கா என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை, ஜோச் ரூயிசு பால்சுகா. தாய், மரியா பிகாசோ. தந்தை ஓவிய ஆசிரியர். தன்னுடைய தாய் பெயரையே பிரதானப் பெயராக வைத்துக்கொண்டார். ஓவியத்துக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த பிகாசோ, ஓவியம் வரைவதே தனி ஸ்டைல் என்றுதான் சொல்ல வேண்டும்.சிந்திக்கும் இடைவெளிகூட இல்லாமல் வேகமாக வரைவதில் பிகாசோவுக்கு இணை பிகாசோவே. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கிட்டத்தட்ட 13,000-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். பிகாசோவின் மற்றொரு பிரபலமான ஓவியம், அவர் வரைந்த ஒற்றைப் புறா. இதுதான் உலக அமைதிக்கான சின்னமாக இன்றும் பறந்துகொண்டிருக்கிறது. ``ஓவியன், இருப்பதைப் பார்த்து அப்படியே வரைந்துவிட்டுப்போவதில் என்ன புதுமையான விஷயம் இருக்கிறது? பார்க்கும் காட்சி அவன் மனதினுள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளைத்தான் ஓவியன் ஓவியமாக வரையவேண்டும்” என்று கூறும் பிகாசோ தன்னுடைய ஒவ்வொரு படைப்பின் வழியாகவும் சமூக, தனிமனித உணர்வுகளை தன்னுடைய இறுதிக்காலம் வரை பிரதிபலித்துக்கொண்டே இருந்தார்.

இன்று (அக்டோபர் 25) இந்த மகத்தான ஓவியனின் பிறந்தநாள்!

நீதிக்கதை
 ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும். 
ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். 
குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. 
அதுஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க என்று யோசனை சொன்னான். 
வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. என்னாச்சு? என்றான் தோட்டக்காரன். 
வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்பதற்காக செடியெல்லாம் பிடுங்கினோம் என்றன குரங்குகள். 
புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல். 
நீதி :
யார் யாரிடம் எந்த வேலையை ஒப்படைக்க வேண்டும் என ஆராய்ந்து ஒப்படைக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

25.10.2025

⭐நீலகிரி: ஊசிமலை காட்சி முனைப் பகுதியில் காட்டு யானை ஒன்று குட்டியை ஈன்றது. தொடர்ந்து குட்டியுடன் அதே பகுதியில் காட்டு யானை முகாமிட்டுள்ளதால், ஊசி மலை காட்சி முனைப் பகுதி தற்காலிகமாக மூடல்.

⭐மத்திய பிரதேசத்தின் போபாலில் அசிட்டிலின் வாயுவை வெளியேற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்திய சுமார் 125 குழந்தைகள் கண் எரிச்சல் & பார்வை குறைபாடு பிரச்சினையோடு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

⭐பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு: 3 போலீசார் உயிரிழப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கபடியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்கள்- துணை முதலமைச்சர் வாழ்த்து. பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ளனர்.

Today's Headlines

⭐Nilgiris district Usimalai viewpoint has been temporarily closed as a wild elephant gave birth and continues to camp in the same area with the calf. 

⭐Around 125 children are being treated in hospitals with eye irritation & vision impairment after using an acetylene gas gun in Bhopal, Madhya Pradesh.

⭐Two consecutive bomb blasts in Pakistan. 3 policemen were killed.

 SPORTS NEWS 

🏀 Tamil Nadu players win gold in Kabaddi -  The Deputy Chief Minister congratulates them. The 3rd Asian Youth Games were held in Bahrain. They have brought glory to Tamil Nadu by flying the flag of victory internationally.

Friday, October 24, 2025

திருக்குறள் 178 அஃகாமை... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - akhamai...


thirukural Explanation tamil & english - akhamai...

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-10-2025. வெள்ளி

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

24-10-2025. வெள்ளி

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல்: குடியியல் ;

அதிகாரம் : பெருமை ; 

குறள் எண் : 978.

குறள் :

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.

உரை :

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

பழமொழி :

முயற்சி இல்லாமல் விளைச்சல் இல்லை.
 No effort, no harvest.

இரண்டொழுக்க பண்புகள் :

1.இரக்கமில்லாத மனமும், இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.

2.எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளத்தை ஒரு நாளும் அழிக்க மாட்டேன்

பொன்மொழி :

அழகே உண்மை. உண்மையே அழகு - கீட்ஸ்

பொது அறிவு :

01.தாவரங்களின் வளர்ச்சி நிலையை அறிய பயன்படும் கருவியின் பெயர் என்ன?

ஆக்ஸனோமீட்டர்-வளர்ச்சிமானி

Auxanometer

02. நமது உடலில் இன்சுலினை சுரக்கும் சுரப்பி எது?

கணையம் - Pancreas

English words:

+ destroy-ruin

devote-dedicate

தமிழ் இலக்கணம்:

> காலப்பெயர் : ஓர் காலத்தைக் குறிக்கும் பெயர்.

எடுத்துக்காட்டு : காலை, மாலை, ஆண்டு.

→ சினைப்பெயர் : ஒரு பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர்.

எடுத்துக்காட்டு: கண், கை, இலை, பழம்

அறிவியல் களஞ்சியம் :

பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

அக்டோபர் 24 உலக இளம்பிள்ளை வாத நாள்

இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது.

இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் குருதியோட்டத்துடன் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் கலந்துவிடின் பலவகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது.

அக்டோபர் 24 ஐக்கிய நாடுகள் நாள்

United Nations Day

24 OCT

1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது.

1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.

ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை - கல்வி

கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர். இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார். என்னைப்போல் விவசாயத்தில்

கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான். இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான்.

ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது.

ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெருமையை உணர்த்தினார்.

நீதி : கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம்.

இன்றைய செய்திகள் 24.10.2025

* தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு- தமிழக அரசு அனுமதி

* சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க 1436 மோட்டார் பம்புகள், 298 வாகனங்கள் தயார்- தமிழக அரசு

*ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

* உக்ரைன் போர் விவகாரம்: 2 ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க பொருளாதாரம் தடை

விளையாட்டுச் செய்திகள்

*மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம்- ஸ்மிருதி மந்தனா சாதனை.

நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் மந்தனா 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மந்தனா 2-வது இடத்திற்கு முன்னேறினார்.

Today's Headlines 24.10.2025

* - Tamil Nadu government approved provide the three free meals every day for sanitation workers.

* 1436 motor pumps and 298 vehicles ready to prevent rainwater from accumulating in Chennai.

* Chief Minister M.K. Stalin will open the renovated Tolkappiyam Park for public use today at a cost of Rs. 42.45 crore.

* Ukraine war issue: US imposes economic sanctions on 2 Russian oil companies.

SPORTS NEWS

Mandhana scored 109 runs in today's match against New Zealand. Smriti Mandhana holds the record for scoring the most centuries in women's ODIs.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Thursday, October 23, 2025

திருக்குறள் 177 வேண்டற்க... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - vendarka...


thirukural Explanation tamil & english - vendarka...


வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-10-2025. வியாழன் .

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

23-10-2025. வியாழன் .

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல்: குடியியல் ;

அதிகாரம் : பெருமை ; 

குறள் எண் : 975.

குறள் :

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை யுடைய செயல்.

உரை :

பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

பழமொழி :

> மரியாதை கேட்டு பெறப்படுவதில்லை, சம்பாதிக்கப்பட வேண்டியது. 
Respect is earned, not demanded.

இரண்டொழுக்க பண்புகள் :

1. இரக்கமில்லாத மனமும், இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.

2. எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளத்தை ஒரு நாளும் அழிக்க மாட்டேன்

பொன்மொழி :

+ அறிவு என்பது நண்பர்களுக்கிடையில் நாம் இருக்கும் போது நமக்கு ஒரு நல்ல ஆபரணமாக இருக்கும். பகைவர்களிடமிருந்து அது நம்மைக் காக்கும் ஒரு கேடயமாக இருக்கும். விநோபா.

பொது அறிவு :

01. அட்லஸ்சை கண்டுபிடித்தவர் யார்?

ஆபிரகாம் ஆர்டெலியஸ்

Abraham Ortelius

02. உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி எந்த நதியில் அமைந்துள்ளது?

வெனிசுலா -சுருன் நதி 
Venezuela - Churún River

English words:

depict-portray

+ desire-crave

தமிழ் இலக்கணம்:

பொருட்பெயர் : ஓர் உயிரற்ற அல்லது உயிருள்ள பொருளின் பெயரைக் குறிக்கும். எ.கா: மரம், செடி, நாற்காலி, முத்து

இடப்பெயர் :ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும். எ.கா:உலகம், இந்தியா, சென்னை

அறிவியல் களஞ்சியம் :

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

அக்டோபர் 23

பீலே (Pelé) என்றழைக்கப்படும் எட்சன் அரண்டெசு டொ (Edson Arantes do Nascimento;

பிறப்பு 23 அக்டோபர் 1940 இறப்பு 29 திசம்பர் 2022.

பிரேசில் நாட்டின் காற்பந்தாட்ட வீரர். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த வீரராக அறியப்பட்டவர். காற்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப் படுத்தியவர்; உலக அமைதிக்கான பரிசு பெற்றவர். 22 ஆண்டு காற்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் புகுத்தியவர் பீலே. ஹாட்ரிக் எனப்படும் ஒரே ஆட்டத்தில் தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவதிலும் உலகச் சாதனையை செய்திருக்கிறார்.அவர் கொடுத்த மொத்த ஹாட்ரிக்குகள் 92. மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே காற்பந்தாட்ட வீரர்.காற்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் பீலே 'கருப்பு முத்து' என்று இதழியலாளர்களால் அழைக்கப்படுகிறார்.

நீதிக்கதை

ஒரு ஒட்டகம் காட்டில் தவம் மேற்கொண்டிருந்தது. அந்தத் தவத்தின்

பெருமையை உணர்த்த பிரம்ம தேவர் ஒட்டகத்திற்குக் காட்சியளித்தார். என்ன

வரம் வேண்டும்? என்று கேட்டார். இருந்த இடத்தில் இருந்த படியே

உணவைப் பெரும் வகையில் என் கழுத்து நீண்டதாக இருக்க வேண்டும்.

அந்த நீளமான கழுத்தோடு நான் காட்டில் உலா வர வேண்டும் என்று கேட்டது.

அவ்வாறே பிரம்ம தேவர் வரமளித்தார். அந்த வரத்தைப் பெற்ற பின் ஒட்டகம்

உணவிற்காக அதிகம் முயற்சிக்கவில்லை. நீண்ட கழுத்துடன் எங்கும்

திரிந்தது. உணவு எளிதாகக் கிடைத்தது. இதனால் சோம்பல் உற்றது ஒட்டகம்.

ஒருநாள் ஒட்டகம் அப்படி உலவிக் கொண்டிருந்த போது பெருங்காற்று வீசியது. மழை பெய்தது. அறிவற்ற அந்த ஒட்டகம் தன் தலையை ஒரு குகையில் நீட்டிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மழைக்குப் பயந்து தன் மனைவியுடன் ஒரு நரி அந்தக் குகைக்குள் நுழைந்தது.

குளிராலும் பசியாலும் வாடிய நரித் தம்பதியர்க்கு மிகப் பெரிய வாய்ப்பாக ஒட்டகத்தின் கழுத்து உணவாக அமைந்தது. ஒட்டகத்தின் இருபுறமும் இருந்துக் கொண்டு நரிகள் ஒட்டகத்தின் கழுத்தைக் கடித்து வேண்டிய அளவு மாமிசத்தைப் ருசித்தன.

தனக்கு நேர்ந்த ஆபத்தை உணர்ந்த ஒட்டகம் தனது கழுத்தை சுருக்க முயற்சித்தது. நீண்ட கழுத்தைச் சுருக்க அரும்பாடுபட்டது. அதற்குள் நரிகள் ஒட்டகத்தின் கழுத்துப் பகுதி முழுதும் சாப்பிட்டு விட்டன. ஒட்டகம் மாண்டு போயிற்று.

நீதி :சோம்பல் சில சமயம் உயிருக்கு ஆபத்தாக மாறி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இன்றைய செய்திகள்

23.10.2025

* டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.

* இந்திய ராணுவத்தில் 'தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு கவுரவ பதவி

* டெல்டா மாவட்டங்களில் கனமழை ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

* அமெரிக்கா வாழ் தேன்மொழி சௌந்தர் ராஜ் அவர்களுக்கு வைக்கம் விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

*விளையாட்டுச் செய்திகள்

பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியில் 235 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தமிழக வம்சாளி வீரரான முத்துசாமி மற்றும் ரபாடா கடைசி விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தனர்.

Today's Headlines - 23.10.2025

* TNPSC Group 4 exam results released.

* 'Golden Son' Neeraj Chopra gets an honorary post in the Indian Army.

* In the Delta districts, due to heavy rain, thousands of acres of paddy fields are immersed in water

*US-based Indian Thenmozhi Soundar Raj has been announced as the recipient of the Vaikom Award.

SPORTS NEWS

Pakistan South Africa lost 8 wickets for 235 runs in the cricket match. Tamil Nadu-born Muthusamy and Rabada added 98 runs for the last wicket.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Wednesday, October 22, 2025

2025 வகுப்பு 10 தமிழ் இரண்டாம் இடைப்பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 virudhunagar 10th tamil model


Tenth tamil second mid term exam model question paper 2 pdf Virudhunagar district 2025


Pdf DOWNLOAD


பத்தாம் வகுப்பு தமிழ் 2025 இரண்டாம் இடைப் பருவத் தேர்வு விருதுநகர் மாவட்டம் மாதிரி வினாத்தாள் 2 pdf

  Tenth tamil second mid term exam model question paper 2 pdf Virudhunagar district 2025


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-10-2025. புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

22-10-2025. புதன்

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல்: குடியியல் ;

அதிகாரம் : பெருமை ; 

குறள் எண் : 972.

குறள் :

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான்.

உரை :

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

பழமொழி :

நல்ல சிந்தனையே வெற்றியின் முதல் படி ஆகும்.

A positive thought is the first step to victory.

இரண்டொழுக்க பண்புகள்:

1. இரக்கமில்லாத மனமும், இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.

2. எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளத்தை ஒரு நாளும் அழிக்க மாட்டேன்

பொன்மொழி :

அறிவை தேடுங்கள். அது நம்மை ஆற்றல் உடையவனாக ஆக்குகிறது. அறிவு, தனிமையில் நமது தோழன்; இன்பத்திற்கு வழிகாட்டி; துன்பத்திலோ ஆதரவாளர் .-விநோபா.

பொது அறிவு :

01. மனித உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?

100 - 120 நாள்கள் 

100-120 days

02. தனிநபர் ஒருவர் கணக்கு தொடங்க இயலாத வங்கி எது?

இந்திய ரிசர்வ் வங்கி

 Indian Reserve Bank

English words :

Delight-pleasure,

defend-protect

தமிழ் இலக்கணம்:

பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்:

1) பொருள்பெயர்,

2) இடப்பெயர்,

3) காலப்பெயர்,

4) சினைப்பெயர்,

5) குணப்பெயர் (பண்புப்பெயர்),

6) தொழிற்பெயர் ஆகும்.

அறிவியல் களஞ்சியம் :

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும். நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

அக்டோபர் 22 பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள்

பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள் (International Stuttering Awareness Day, ISAD), அல்லது பன்னாட்டு திணறல் விழிப்புணர்வு நாள் (International Stammering Awareness Day) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 22 ஆம் நாள் கொண்டாடப்படும் ஓர் நிகழ்வாகும். இது முதன் முதலில் 1998 இல் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. உலக மக்கள்தொகையில் ஒரு சதவீதமானோர் திக்குவாய் அல்லது திணறுபவர்களாக உள்ளனர், இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் நோக்கமாக உள்ளது.

நீதிக்கதை : சிறு உதவி

ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது.

சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்கு உ ள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது.

அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.

முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான்.

இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான்.

இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.

நீதி : ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.

இன்றைய செய்திகள் 22.10.2025

* செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு-அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

*வட தமிழகத்தை நோக்கி புயல் சின்னம் நகர்கிறது-14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

* இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 6,000 டன் காந்தங்களை உற்பத்தி செய்யும் வகையில் ₹7,350 கோடி காந்த உற்பத்தி நிலையங்களை அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

* சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்

விளையாட்டுச் செய்திகள்

IPL (Indian Premier League): 2025
ஐபிஎல் பரீட்சை தற்போது 
கிளியரான முறையில் நடைபெற்று வருகிறது. பங்கு பெற்ற அணிகள் பல வருடங்களுக்குப் பிறகு வலுவான போட்டிகளை நடத்தி வருகின்றன. ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை சிறந்த வெற்றிகளை பெற்றுள்ளது.

Today's Headlines - 22.10.2025

* Chembarambakkam Lake opened and warned to people along the banks of Adayaaru river for rescues in advance.

* Storm symbol moving towards North Tamil Nadu due to heavy rain warning for 14 districts.

* The Indian government is planning to set up ₹7,350 crore magnet manufacturing plants in India to produce about 6,000 tonnes of magnets per year.

*151 metric tonnes of firecracker waste removed in Chennai so far last 3 days.

SPORTS NEWS

IPL (Indian Premier League): The IPL 2025 exam is currently underway in a clear manner. The participating teams are playing strong matches after many years. The Mumbai Indians team, led by Rohit Sharma, has achieved great victories so far.

Prepared by

Covai women ICT போதிமரம் 

தமிழ்த்துகள்

Blog Archive