கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 13, 2025

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மயங்கொலிகள், திருக்குறள் ஜூலை 20 - 2026

8th tamil model notes of lesson

lesson plan 2026 july 20

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

20-07-2026 முதல் 24-07-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

ஈடில்லா இயற்கை – கற்கண்டு, வாழ்வியல்

5.உட்பாடத்தலைப்பு

மயங்கொலிகள், திருக்குறள்

6.பக்கஎண்

38-45

7.கற்றல் விளைவுகள்

T-822 பாடல், கட்டுரை, கதை எழுதும்போது, பல்வேறு புலப்பாட்டு உத்திகளையும் முறைகளையும் இனம்கண்டு அவற்றைப் பயன்படுத்துதல்.

T-809 – படித்தனவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.

8.கற்றல் நோக்கங்கள்

மயங்கொலி வேறுபாடு அறிந்து மொழியைச் சரியாகப் பயன்படுத்துதல்.

திருக்குறள் அறக்கருத்துகளை அறியும் திறன்

9.நுண்திறன்கள்

மயங்கொலிகள் குறித்து அறியும் திறன்.

பெருமைமிக்க திருக்குறளின் அறக்கருத்துகளை உணரும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2018/11/6.html 

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_39.html 

https://tamilthugal.blogspot.com/2020/06/2-2-mayankolikal-tamil-ilakanam-6th.html 

https://tamilthugal.blogspot.com/2021/08/2-2-mayankolikal-6th-tamil-ilakkanam-q.html 

https://tamilthugal.blogspot.com/2022/11/2-2-6th-tamil-mindmap-term-2-unit-2_7.html 

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த மயங்கொலிச் சொற்களைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த திருக்குறள்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

மயங்கொலிகளைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

திருவள்ளுவர் குறித்த குறிப்புகளைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          மயங்கொலிகளை வாசித்து அவற்றின் பொருள் கூறுதல். மாணவர்களையும் திரும்பக் கூறச்செய்தல்.

          மயங்கொலிகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். மயங்கொலிகளை உதாரணங்களுடன் விளக்குதல்.

          திருக்குறள்களை வாசித்து அவற்றின் பொருள் கூறுதல்.




மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடல் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

மேலும் சில மயங்கொலிச் சொற்களை அறியச் செய்தல்.

திருக்குறளை வாழ்வியலோடு பொருத்தி உணரச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – கடலுக்கு வேறு பெயர் ..............................

பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் ..............................

          ந.சி.வி       ண, ன, ந ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக.

                   சான்றோர்க்கு அழகாவது எது?

          உ.சி.வி      நாம் பயன்படுத்தும் மயங்கொலிச் சொற்கள் 5 எழுதுக.

                   திருக்குறளின் பெருமைகளை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

மயங்கொலி எழுத்துகளை ஒலித்துப் பழகுக.

திருவள்ளுவர் குறித்த தகவல்களையும் திருக்குறளின் பெருமைகளையும் இணையம் மூலம் அறிதல்.


தமிழ்த்துகள்

Blog Archive