9th tamil model notes of lesson
lesson plan 2026 August 3
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
03-08-2026 முதல் 07-08-2026
2.பாடம்
தமிழ்
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
உள்ளத்தின் சீர் –கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
மணிமேகலை.
6.பக்கஎண்
54 - 56
7.கற்றல் விளைவுகள்
T-9012 விழாக்கள் பண்பாட்டின் தொடர்ச்சியாகக்
கொண்டாடப்பட்டு வருபவை என்பதை உணர்ந்து பங்கேற்றல்.
8.கற்றல்
நோக்கங்கள்
தமிழர்தம்
பண்பாட்டு அடையாளத்தை உணர்தல்.
9.நுண்திறன்கள்
விழா நிகழ்வுகளைப் பற்றி அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2020/06/manimegalai.html
https://tamilthugal.blogspot.com/2022/05/chithalai-chathanar.html
https://tamilthugal.blogspot.com/2020/06/manimegalai-tamil-online-test-quiz-with.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-3-9th-tamil-online-test-manimekalai.html
https://tamilthugal.blogspot.com/2022/08/9th-tamil-manimegalai.html
https://tamilthugal.blogspot.com/2023/07/3_8.html
11.ஆயத்தப்படுத்துதல்
தமிழர்
திருநாள் விளையாட்டுகளைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
ஐம்பெருங்காப்பியங்களை வினவி, மணிமேகலையை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
இரட்டைக்காப்பியங்களில் ஒன்றான
மணிமேகலையைப் பற்றி விளக்குதல்.
மணிமேகலை பாடல் குறித்து விளக்குதல். விழா குறித்த தகவல்கள் பற்றி
மாணவர்களுடன் உரையாடுதல்.
பட்டிமண்டபம்
குறித்து விளக்குதல்.
தமிழரின் பெருமைகளையும்
சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
விழா
குறித்த கவிதைகளைப் படைத்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – பழமணல் மாற்றுமின்; புது மணல் பரப்புமின் இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
ந.சி.வி – பட்டிமண்டபம், பட்டிமன்றம் - இரண்டும் ஒன்றா? விளக்கம் எழுதுக.
உ.சி.வி – உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திர விழா நிகழ்வுகளுடன்
ஒப்பிடுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
உங்கள்
ஊரில் நடைபெறும் திருவிழாவிற்கான அழைப்பிதழ் ஒன்றினை வடிவமைக்க.

