வகுப்பு 10 இயல் 7 செய்யுள் தேர்வு
வகுப்பு 10 இயல் 7 திருக்குறள், தேவாரம் - தேர்வு
விடை அறிய வினாக்குறியைத் தொடவும்
1 / 30
- திருநாவுக்கரசரின் தமக்கையார் ..................................
- பாக்கியவதியார்
- காந்திமதியார்
- திலகவதியார்
- பார்வதியார்
- செவிலி என்பதன் பொருள் ..........................................
- காது
- வளர்ப்புத்தாய்
- தோழி
- குழந்தை
- செற்றார் என்பதன் பொருள் ..........................................
- பகைவர்
- அமைச்சர்
- நண்பர்
- மன்னர்
- ஈன்குழவி - இலக்கணக்குறிப்பு ............................
- உவமைத்தொகை
- உருவகம்
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- திருநாவுக்கரசரின் தாயார் ...................................................
- புனிதவதியார்
- திலகவதியார்
- மாதினியார்
- புகழனார்
- செல்வச்செவிலி - இலக்கணக்குறிப்பு .............................
- வேற்றுமைத்தொகை
- உவமை
- வினைத்தொகை
- உருவகம்
- திருநாவுக்கரசர் காலம் கி.பி. ................ ஆம் நூற்றாண்டு.
- 7
- 8
- 6
- 9
- சைவ அடியார்களை ..................................................... என்று வழங்குவர்.
- நாயன்மார்கள்
- வல்லவர்கள்
- வேந்தர்கள்
- ஆழ்வார்கள்
- சைவத்திருமுறைகள் ............................
- 7
- 10
- 12
- 9
- சைவ அடியார்கள் எண்ணிக்கை ........................................
- 72
- 4
- 63
- 12
- திருநாவுக்கரசர் பிறந்த மாவட்டம் ...................................
- வடலூர்
- நாகை
- கடலூர்
- பண்ணுருட்டி
- முதலிலார்க்கு .................................... இல்லை.
- ஊதியம்
- பாதுகாப்பு
- நட்பு
- பகை
- நடலை என்பதன் பொருள் ..........................................
- துன்பம்
- நோய்
- பாதுகாப்பு
- இன்பம்
- தமர் என்பதன் பொருள் ..........................................
- உறவினர்
- பெரியோர்
- பகைவர்
- நண்பர்
- திருக்குறள் தோன்றியிராவிட்டால் தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது - என்றவர் ....................................
- திரு.வி.க.
- பாவாணர்
- கால்டுவெல்
- பெ.விசுவநாதம்
- திருநாவுக்கரசரின் பாடல்கள் ....................................... திருமுறைகள்.
- 1,2,3
- 12
- 4,5,6
- 7
- பண்புத்தொகை அல்லாதது ................................
- வெண்குழை
- மலர்ச்சேவடி
- ஒண்பொருள்
- நற்சங்கு
- பிணி என்பதன் பொருள் ..........................................
- இறைவன்
- எமன்
- நோய்
- வேலை
- செருக்கு என்பதன் பொருள் ..........................................
- இறுமாப்பு
- போர்
- படை
- மலை
- திருநாவுக்கரசரின் தந்தை பெயர் ..................................
- புகழனார்
- மாதினியார்
- மருணீக்கியார்
- உழவனார்
- திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ...........................
- வாகீசர்
- மருணீக்கியார்
- ஞானஒளியார்
- தருமசேனர்
- இடர் என்பதன் பொருள் ..........................................
- நோய்
- இன்பம்
- சிறப்பு
- துன்பம்
- திருநாவுக்கரசரின் சிறப்புப் பெயர் அல்லாதது ....................
- புகழனார்
- வாகீசர்
- அப்பர்
- தாண்டகவேந்தர்
- மதலை என்பதன் பொருள் ..........................................
- பொருள்
- ஊதியம்
- துணை
- கல்வி
- வினையாலணையும் பெயர் அல்லாதது ................................
- ஆள்வார்
- தக்கார்
- பெற்றியார்
- தன்ஒன்னார்
- நாமார்க்கும் குடியல்லோம் - என்னும் பாடல் .......................... அச்சமில்லை அச்சமில்லை எனப் பாடத்தூண்டியது.
- சுரதாவை
- பாரதியாரை
- பாரதிதாசனை
- கவிமணியை
- சைவ சமயக் குரவர்கள் ...................
- 63
- 72
- 4
- 12
- திருநாவுக்கரசர் பிறந்த ஊர் ...........................................
- திருவாமூர்
- திருவாதவூர்
- திருப்பனந்தாள்
- திருமறைக்காடு
- சூழ்வார் என்பதன் பொருள் ..........................................
- பெரியோர்
- பொருளுடையார்
- அறிவிலார்
- அறிவுடையார்
- தெறு என்பதன் பொருள் ..........................................
- பகை
- நட்பு
- பொருள்
- வீதி