தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Wednesday, June 30, 2021
Tuesday, June 29, 2021
Monday, June 28, 2021
Tuesday, June 22, 2021
Monday, June 21, 2021
Sunday, June 20, 2021
Saturday, June 19, 2021
Friday, June 18, 2021
Thursday, June 17, 2021
எங்கள் தமிழ் 7ஆம் வகுப்பு தமிழ் செயல்பாட்டுத்தாள் மோனை, எதுகை அறிதல் 7th tamil worksheer with pdf engal tamil monai ethukai
Wednesday, June 16, 2021
Tuesday, June 15, 2021
அறுசுவைகளை இணைக்க பயிற்சித்தாள் சுவைகள் 6 அறிக. ARUSUVAIKAL CONNECT WORKSHEET FOR KIDS WITH PDF
விரலால் தொட்டு இணைக்க
அறுசுவைகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
Monday, June 14, 2021
Sunday, June 13, 2021
ன வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF NA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
ன வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
ற வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF RA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
ற வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
ள வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF LA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
ள வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
ழ வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF ZHA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
ழ வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
ல வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF LA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
ல வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
வ வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF VA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
வ வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
ர வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF RA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
ர வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
ய வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF YA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
ய வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
ம வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF MA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
ம வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
ப வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF PA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
ப வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
ந வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF NA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
ந வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
த வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF THA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
த வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
ண வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF NA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
ண வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
ட வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF DA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
ட வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
ஞ வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF GNA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
ஞ வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
ச வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF SA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
ச வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
ங வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF NGA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
ங வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
க வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF KA VARISAI ELUTHUKAL
விரலால் தொட்டு இணைக்க
க வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
மெய் எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF MEY ELUTHUKAL
விரலால் தொட்டு இழுத்து இணைக்க
மெய் எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
உயிர் எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF UYIR ELUTHUKAL
விரலால் தொட்டு இழுத்து இணைக்க
உயிர் எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
க வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE WORKSHEET WITH PDF KA VARISAI
விரலால் தொட்டு இழுத்து இணைக்க
க வரிசை எழுத்துகள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
Saturday, June 12, 2021
Friday, June 11, 2021
முள்ளை முள்ளால் எடு தமிழ் குட்டிக்கதை MULLAI MULLAL EDU TAMIL KUTTY KATHAI SHORT STORY
ஒருவன் தன் கிணற்றை ஒரு விவசாயிக்கு விலைக்கு விற்றான்.
கிணற்றை விலைக்கு வாங்கிய விவசாயி, அடுத்த நாள் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தார்.
அங்கு கிணற்றை விற்றவன் நின்று கொண்டிருந்தான்.
அவன் விவசாயியைத் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.
விவசாயிக்குக் கோபம் வந்தது. “எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே? இது நியாயமா?” என்று கிணறு விற்றவனைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டார்.
கிணறு விற்றவன், “நான் உனக்குக் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை இல்லை. எனவே நீ தண்ணீரை இங்கிருந்து எடுக்கக் கூடாது” என்று வாதம் செய்யத் தொடங்கினான்.
விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் உள்ளூர் நீதிபதியிடம் சென்று முறையிட்டார்.
நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார்.
பின்னர் கிணற்றை விற்றவனிடம் “நீ கிணற்றை இந்த விவசாயிக்கு விற்றுவிட்டதால் கிணறு உன்னுடையதல்ல.
அதில் உன் தண்ணீரை வைத்திருப்பது தவறு.
உனக்கு அதில்தான் தண்ணீரைச் சேமித்து வைக்க வேண்டும் என்றால், விவசாயிக்கு அதற்கான வாடகையைத் தினமும் கொடுத்து விடு. கிணற்றிலிருந்து உன் தண்ணீரை எடுத்துக் கொள்ளாவிட்டால் உடனே வெளியேற வேண்டும்” என்று தீர்ப்புக் கூறினார்.
கிணறு விற்றவன், தன் தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன் கிணற்றின்முழுப் பயனையும் விவசாயி அனுபவிக்கலாம் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றான்.
வளர் தமிழ் ஆறாம் வகுப்பு இயல் 1 உரைநடை உலகம் தமிழ் எண்களை இணைக்க - செயல்பாட்டுத்தாள் - TAMIL NUMBERS LIVE WORKSHEET WITH PDF
விரலால் தொட்டு இணைக்க...
தமிழ் எண்கள், an interactive worksheet by Tamilthugal
liveworksheets.com
liveworksheets.com
pdf இல் பெற
Thursday, June 10, 2021
Wednesday, June 09, 2021
Tuesday, June 08, 2021
Monday, June 07, 2021
Sunday, June 06, 2021
ஒரு பொருள் தரும் பல சொற்கள் ORU PORUL THARUM PALA SORKAL ORUPORUTPANMOLI ஒருபொருட்பன்மொழி
- 01. அன்பு :- நேசம், பரிவு, இரக்கம், பிரியம்
02. அழகு :- வனப்பு, எழில், சுந்தரம், வடிவு, கோலம், சிங்காரம், வண்ணம், நிறம்
03. அரசன் :- மன்னன், வேந்தன், கோன், புரவலன், நிருபன், கோ
04. அகிம்சை :- துன்புறுத்தாமை, இன்னல் செய்யாமை
05. அறிவுரை :- புத்திமதி, நல்லுரை, உபதேசம்
06. அறிவு :- உணர்வு, ஞானம், மதி விவேகம், புத்தி
07. அடி - பாதம், தாள், கால்
08. இரவு :- இராத்திரி, கங்குல், நிசி, இருட்டு
09. உணவு :- ஊண், ஆகாரம், அடிசில், உண்டி
10. உண்மை :- மெய், சத்தியம், வாய்மை
11. உதிரம் :- செந்நீர், குருதி, இரத்தம்
12. ஊழியம் :- தொண்டு, பணி, சேவை, வேலை
13. ஊதியம் :- சம்பளம், கூலி, இலாபம், ஆதாயம்
14. ஒளி :- வெளிச்சம், சுடர், கதிர், பிரகாசம்
15. குழந்தை :- மகவு, குழவி, சேய், சிசு, பிள்ளை, மழலை
16. கணவன் :- கொழுநன், தலைவன், பதி, நாயகன்
17. காற்று :- வளி, மாருதம், தென்றல், ஊதை, பவனம்
18. கேடு :- நாசம், அழிவு, சேதம், சிதைவு
19. தரித்தல் - அணிதல், சூடுதல், புனைதல், அலங்கரித்தல்
20. ஆதி :- முதல்,ஆரம்பம்,தொடக்கம்
21. குடித்தல்- அருந்துதல், பருகுதல், சுவைத்தல்
22. ஞானம்- அறிவு, ஆற்றல், விவேகம், புத்தி, வித்தை
23. ஒலி- ஓசை, அரவம், தொனி, சத்தம்
24. உடல் - சரீரம், உடம்பு, மெய், மேனி
25. அபாயம்- ஆபத்து, இடர், இடையூறு
26. காடு - அடவி, கானகம், வனம், ஆரணியம்
27. இனம்- உறவு, சுற்றம், கிளை,ஒக்கல்,பரிசனம்
28. சோலை- உபவனம், கா, தண்டலை, நந்தவனம், பூங்கா, பொழில்
29. கல்வி- கலை, வித்தை, படிப்பு
30. ஆசிரியர்- ஆசான், உபாத்தியாயன், குரவர், தேசிகர்
31. நீதி- தர்மம், நடு, நியாயம், நெறி
32. நூல்- ஏடு, பனுவல், புத்தகம், பொத்தகம்
33. குற்றம்- தவறு, பிழை, களங்கம், தப்பு, மாசு, காடு
34. தடாகம்- ஏரி, குளம், பொய்கை, வாவி, கயம்
35. அத்திப் பொழுது- சாய்பொழுது, சாயங்காலம், மாலை, செக்கல்
36. உதயம்- வைகறை, காலைப்பொழுது, புலர், விடியல், தோற்றம்
37. குதிரை- அசுவம், பரி, புரவி, அயம்
38. தாமரை - கமலம், முளரி, அம்புயம்
39. நித்திரை- உறக்கம், துயில், அனந்தல், சயனம்
40. வயல்- பழனம், செய்,கழனி,புலனம்
41. மேகம்- கொண்டல்,கார்,முகில்
42. வண்டு- அறி, கரும்பு, மதுரகம்
43. வாசனை- சுகந்தம், நாற்றம், விரை, மணம்
44. தொழில்- ஊழியம், பணி, வேலை
45. சத்தியம்- ஆணை, சபதம், சூழ், பிரமாணம், உண்மை
46. சிங்கம்- அரி, ஆழி, கேசரி, கோளரி, சீயம்
47. சொல்- கிழவி, கூற்று, மொழி, வாக்கு
48. தேன்- மது, நறவு, தேறல், கள்
49. வண்ணம்- சாயல், நிறம், வர்ணம்
பல பொருள் குறித்த ஒரு சொல் தொகுப்பு PALA PORUL KURITHA ORU SOL THOKUPPU
- அங்கதம் = தோளணி, அரவு
- அசைதல் = ஆடல், தங்கல்
- அடுதல் = சமைத்தல், கோறல்(கொல்லுதல்)
- அண்டர் = தேவர், ஆயர்
- அண்ணல் = பெருமை, தலைவன், பெருமை
- அணங்கு = தெய்வம், துவமை(துறக்க)மாதர், மையல், நோய், வருத்தம், கொலை,
- அணி = பூண், அழகு
- அந்தம் = ஈறு, அழகு
- அந்தில் = அவ்விடம், அசைநிலைக் கிளவி
- அம்பரம் = கூரை, கடல், ஆகாயம்
- அமர்தல் = மிகுதி, பொலிவு
- அயில் = வேல், கூர்மை
- அரணம் = மதில், கவசம்
- அரலை = கழலை(உடலில் தோன்றும் கட்டி), கனியின் காழ் (பழத்திலுள்ள கொட்டை)
- அரி = கண்வரி, கடல், பொன், கிண்கிணிப்பரல், (கிண்கிணிப்)பொன், நிறம், குதிரை, தவளை, குரங்கு, பகை, வாள், சயனம், வலி, வண்டு, வெம்புகை, (என்னும் 15 பொருளுடன்) சிங்கம், திருமால், திகரி, இரவி, இந்திரன், காற்று, யமன், அங்கி, (ஆகிய வடமொழிச் சிதைவும் பொருளாம்)
- அரில் = பிணக்கு, சிறு-துறும்பு, குற்றம்
- அருகல் = சுருங்குதல், காதல்
- அருணம் = சிவப்பு, ஆடு
- அலரி = பூ-மரம், அருகன்
- அழுங்கல் = இரக்கம், கேடு
- அளக்கர் = கடல், நிலம், சேறு
- அளகம் = மாதர் மயிர், மரவின் முள்ளை(திருவையின் முளை)
- அளி = வண்டு, மது, கொடை, அன்பு
- அற்றம் = மறைபொருள், சோர்வு
- அறல் = அறுதல், நீர், நீர்த்திரை, திரையலையால் சேரும் கருமணல்
- அன் = கூர்மை, செறிவு
- ஆகம் = மார்பு, உடல்
- ஆசு = சிறுமை, குற்றம், விரைவு, மெய்-புகு-கருவி (கவசம்)
- ஆணை = ஏவல், மெய்ப்பாட்டு இலாஞ்சனை(முத்திரை), சூள், விறல், செயல்
- ஆய்தல் = நுணுக்கம், தெரிதல்
- ஆயம் = கூட்டம், சூது-கருவி
- ஆர் = கூர்மை, ஆத்தி-மலர, தேர்ச்சக்கரத்-துளை
- ஆர்தல் = நிறைதல், உண்டல்
- ஆரம் = சந்தனம், மாலை, பூண், ஆத்தி, முத்து,
- ஆரல் = செவ்வாய்க்-கோள், கார்த்திகை-நாள்
- ஆலுதல் = ஆடல், ஒலித்தல்
- ஆற்றல் = வலி, செயல், வல்லார்-ஆற்றல், ஆள்வினை
- இடி = தகரம், சுண்ணம், தருப்பணப்பிண்டி,
- இதழ் = பூவின் தோடு, பனை-இதழ், வாயின் அதரம்
- இதை = மரக்கலப் பாய், புதுப்புனல்
- இயல் = சாயல், நடை
- இரங்கல் = அரவம், அழுஙல், இசைத்தல்
- இரலை = தலைநாள்-பெயர் (அசுவணி-நாள்), ஊதுகொம்பு, புல்வாய்-மான், கலைமான்
- இராகம் = கீதம், நிறம், செந்நிறக் கெழு, ஆதரவு, முடுகியல்
- இருத்தல் = செகுத்தல், வீழ்த்தல்
- இவர்தல் = சேறல், எழுச்சி, செறிவு, விருப்பம், ஏறல்
- இழும் = ஓசை, இனிமை
- இளைமை = இளமைத் தன்மை, மத்தம் (பித்து)
- இறத்தல் = மிகுதல், கடத்தல், சாதல்
- இறுத்தல் = தங்கல், சொல்லல்
- இறும்பூது = வியப்பு, இராசீலம், சிறு-தூறு, மலை (4)
- இறை = கடன் (கடமை), இல்லினில் இறப்பு (இறைவானம் என்னும் கூரைச்சரிவு), சிறுமை, தங்கல், உயர்ந்தோர், சிறந்தோர்
- உடு = நாள்-மீன், பகழி (அம்பு)
- உணர்தல் = கருதல், தெளிவு
- உந்தி = கொப்பூழ், தேர்-அச்சு, யாழ்-உறுப்பு
- உம்பர் = மேலிடம், அமரர்
- உருத்தல் = தோன்றல், வெருட்சி (மருளல்)
- உலவை = மரத்தின் கோடு, மருப்பு, காற்று,
- உழை = மான், யாழின் நரம்பு, அருகிடம், அறைதல்
- உறழ்வு = இடையீடு, உணர்வு, ஒத்தல், செறிவு
- உறை = நீர் முதலாகிய நுனி, மருந்து, முதல்-நோய் நீக்கி இன்பம் கொடுக்கும் பொருள், கூறை மாசு கழுவும் உவர்நீர் (புதுத்துணியின் அழுக்கை நீக்கும் உவர்நீர், பாலுறு பிரை, காரம்(சுவை) ஒழுகல், ஓர் இடைச்சொல்
- ஊக்கம் = வண்மை, முயற்சி, மனத்தின் மிகுதி, உண்மை
- ஊர்தி = தேர், மா, சிவிகை,
- ஊறு = இடையூறு, கொலை
- எஃகு = வேல், கூர்மை
- எகினம் = கவரிமா, அன்னம், நாய்,
- எதிரி = மோதும் இருதிறப் படை
- எல் = ஒளி, இரவி, பொழுது
- எல்லை = பகலவன், அளவை
- எள்ளல் = நகை, இகழ்ச்சி
- எற்று-எனல் = எற்று-எனல், எள்(ஏளனம்ஃ-செய்)-எனல்
- எற்றுதல் = புடைத்தல், எறிதல்
- ஏண் = வலிமை, நிலையுடைமை
- ஏணி = மரன்-கன்று, எல்லை
- ஏமம் = சேமம், காவல், இன்பம், இரவு, பொன், ஏமாப்பு, மயக்கம்
- ஏவல் = வியங்கோள், ஆணை
- ஏற்றல் = கோடல், எதிர்த்துப் பொருதல்
- ஏனை = மீன்-விகற்பம், ஒழிவு
- ஓதி = மாதர்-மயிர், மாலை, அன்னம்,
- ஓரி = ஆடவர்-மயிர், முசு(வாலில்லாக் குரங்கு)
- ஓரை = கூட்டம், மகளிர்-விளையாட்டு, இராசி(களில் ஒன்று)
- கட்சி = காடு, கூடு
- கட்டளை = (பொன்னின்) நிறை-அறி-கருவி, உரையறிகருவி, பிறவினை-ஒப்பு
- கடி – காப்பு, கூர்மை, விரைவு, விளக்கம், அச்சம், சிறப்பு, வரைவு, மிகுதி, புதுமை, தோற்றம், மெய்படத் தோன்றும் பொருட்டு, ஐயம், #கரிப்பு
- கடி = வாசம், பேய், மணம்-புணர்தல்,
- கடிகை = பேதம், சமயம், நாழிகை
- கடு = கடு-மரம், விடம்
- கண்டகம் = சுரிகை, உடைவாள், முள் (3)
- கண்டம் = மெய்புகு கருவி, கழுத்து, துண்டம், திரை, வான், தேசம்
- கணம் = வட்டம், திரட்சி, கணமாக இருத்தல், மேகம்
- கணை = திரட்சி, பகழி
- கதலி = வாழை, துகில்(துணி)-கொடி
- கதழ்வு = வேகம், கறுத்தல்(சினம்)
- கந்தம் = புலன், கிழங்கு, கருணை
- கந்தரம் = மலை-முழை, கழுத்து, கந்தழி, மேகம்
- கம்பலை = இன்னாங்கு(துன்ப) ஓசை, நடுக்கம், அச்சம்
- கய(வு) = பெருமை, மேன்மை
- கயம் = ஆழம், யானைக்கன்று
- கரணம் = சொல்லிய முதற்பொருள், துணைக்கரணம், பல்வகை ஆடல், மனத்தின் பகுதி, கல்வி, எண்
- கரில் = கொடுமை, குற்றம், கார்ப்பு
- கருங்கை = கொன்று-வாழ்-தொழில், வன்-பணித்-தொழில்,
- கருவி = கவசம், பல்லியம்(பல்வகை இசைக்கருவிகள்), தொடர்பு, யாழ், படைக்கலம், கனகமுதற்பூண், தொகுதி, மேகம், கல்-அணை, உபகாரம்
- கரைதல் = மொழிதல், கூவல்(கூவுதல்)
- கலித்தல் = எழுச்சி, ஒலித்தல்
- கலுழி = கலங்கல்-நீர், முல்லைநிலக் கான்யாறு
- கலை = நூல், கல்வி, காஞ்சி, ஆடை, முகவு, ஆனேறு(காளை), காலநுட்பம்
- கவலை = துன்பம், கவர்-வழி (பிரிந்துபோகும் வழி)
- கவனம் = கடுப்பு, நாடு
- கழங்கு = ஓர்-ஆடல், கொடிக்கழல்
- கழல் = காலின் அடி, காலடு-தோல்(செருப்பு), கால்-அணி
- கழிதல் = மிகுதல், கடத்தல், சாதல்
- கழுது = வண்டு, பேய், இதணம்
- களம் = மிடறு, பெருநிலம், கருமை (3)
- களரி = கருமம்-செய்-இடம், களம், பெருநிலம்,
- களன் – பொய்கை, தொடர்பு, மருத-நிலன், களம் (4)
- கற்பம் = ஊழி, கமலத்தோன் ஆயுள்
- கறை = நிறம், உதிரம், உரல், திறை, கறையென் கிளவி
- கன்னல் = சருக்கரை, கரகம், நாழிகை-வட்டில், (பொருந்துமிடத்தில்) குடம்
- கனலி = தீபம், கதிரவன்
- கனவு = மயக்கம், துயில்
- கா(வு) = காத்தல், கா (காவடி, நிறுத்தல் அளவை)
- காசு = மணி, குற்றம்
- காசை = நாணல், காயா-மரம்
- காஞ்சி = எதிர்-ஊன்றுதல், நிலையின்மை, அணிமேகலை, ஒரு மரப்பெயர்,
- காதை = மொழி, கதை
- காயம் = யாக்கை, கார்ப்பு (பெருங்காயம்)
- கார் = மேகம், மாரிக்காலம், நீர், கருமை, நிகழ்த்தும் கருவி
- காரி = ஆலம்(விஷம்), நஞ்சு, சனிக்கோள், சாத்தனார், இருள்-நிறத்தன
- காரிகை = அழகு, அழகுடை-மாதர், கட்டளைக்-கலித்துறை
- காலம் = நாள்-கூறு, காலம்
- காழ் = கொல்பரல்(கொல்லும் பரல்-கற்கள்), சேகு(மரத்தில் சிவந்திருக்கும் வயிரம்), மணியின் கோவை, மாலை, ஒளி
- கான் = விரைவு, காடு
- கானல் = கதிரொளி, கடல் சார் நிலத்திலும், மலைசார் நிலத்திலும் தானே எழுந்த நன்மரச் சோலை
- கிழி = எழுதுபடம்(எழுதும் துணி), இருநிதிப் பொதி, கிழிபடு-துகில்
- குயம் = அரிவையர் முலை, கொடுவாள், இளைமை,
- குயிறல் = கூறல், செறிதல், குடைதல்
- குரல் = பயிர்க் கதிர், யாழின் நரம்புகளில் ஒன்று
- குரை = ஒலி, இடைச்சொல்
- குலம் = இல்லம், குடிமை, கூட்டம்
- குவலயம் = நெய்தல், நிலம்
- குழல் = மயிர், துளை
- குழை = குண்டலம், தளிர், சேர்
- குளிர் = கிளி கடி கருவி, இலை-மூக்கு-அரி-கருவி, குளிர்ச்சி, குட-முழவு, ஞெண்டு
- குறிஞ்சி = மலைச்சார்-நிலம், செம்மலர்-முள்ளி, குறிஞ்சி நிலப் பாடல்,
- கூலம் = பல-பண்டம் (மளிகை), பல-பண்டத் தெரு, வார்புனல்-கரை (நீரோடும் கரை)
- கூழ் = பல்வகை உணவு, பயிர், பொன்,
- கூளி = நட்பு, தொகுதி, பேய் (3)
- கேவலம் = தனிமை, முத்தி
- கேள்வி = கல்வி, செவி
- கைக்கிளை = ஒருதலைக் காமம், யாழில் ஒரு நரம்பு,
- கொண்டல் = மேகம், கூதிர், கீழ்க்காற்று
- கொற்றம் = அரசியல், வெற்றி
- கொன் = அச்சம், பயனிலி, காலம், பெருமை (4)
- கோ = அந்தரம், குலிசம், பார், அத்திரம், நீர், திசை, மலை, வேல், மன்னவன், விழி, பசு,
- கோடரம் = கொம்பு, மரக்கோடு, பொதும்பு (சோலை)
- கோடு = சங்கு, ஊதுகொம்பு, மாவின் மருப்பு (விலங்கினக் கொம்பு), மரத்தின் பணை (கிளை), நீள்புனல்-கரை (புனல் நிற்கும் நீண்ட கரை)
- கோதை = பூப்புனை-மாலை, மாலை-புனை-மாதர், தோல்-புனை-வில்-நாண், தெடர்-கைக்-கட்டி, கோச்சேரன் பெயர், மயிர், காற்று
- கோல் = நிறையறி=துலாம், அஞ்சனம் எழுதும் கருவி, இறைவன் முறை-நடத்துதல், யாழ்-நரம்பு, அம்பு, குதிரை-மத்திகை (குதிரை ஓட்டும் சாட்டை)
- கோள் = குணம், கோட்பாடு, கோள் (தன்னொளி இல்லா விண் கோள்கள்)
- கோன் = அலர்கதிர்முதல், அமரர், நாள், கொலை, இடையூறு
- சாமம் = யாமம், உபாயம்
- சாறு = விழா, கள்
- சிக்கம் = உச்சி, மயிர்வார் சீப்பு, உறி,
- சித்திரம் = மெய்யே போலப் பொய்யை உரைத்தல், செய்-கோல-வடிவம், அழகு
- சிரகம் = திவலை, கரகம்
- சிலம்பு = மலை, ஒலி, பொலஞ்செய் (பொன்னால் செய்த) காலணி, புணர்தல்
- சிலை = வில், மலை
- சிறை = காவல், இறகு
- சினை = கரு, உறுப்பு, மரக்கோடு
- சீர் = இசைக்கருவி-ஓசை, பாரம், ஒன்றுதல், கால்-தண்ட்டை, ஒண்புழ், அழகு, செல்வம், சீர்மை
- சுடர் = மதி, ஞாயிறு, கனலி, ஒளி
- சுடிகை = சுட்டி, மயிர்-முடி
- சூர் = தெய்வம், அச்சம், நோய்,
- சூழி = முகப்படாம், வாவி
- செச்சை = வெட்சி, வெள்ளாட்டுக்-கடா
- செம்மல் = இறைவன், பழம்பூ, வீரர், புத்திரர், செந்நிறம்
- செயிர் = குற்றம், சினவல் (சினம் கொள்ளல்)
- செழுமை = வளன், கொழுப்பு
- சேண் = உயர்வு, நீளம்
- சேந்து = கருந்தோடு, ஒப்பு
- சேய் = செவ்வாய், முருகன், இளைமை, புத்திரர்,
- ஞானம் = அறிவு
- ஞெள்ளல் = சோர்வு, மிகுதல், உடன்படல், படுகர், நாவின் ஒலி, தெரு, தெரு, மேன்மை
- தடம் = பெருமை, கோட்டம் (வளைவு), மலை
- தண்டு = தண்டு, ஊன்று, தடி
- தண்ணடை = நாடு, ஊர்
- தபனன் = அனல், அருக்கன்
- தபுதல் = கெடுதல், சாதல்
- தரணி = நிலம், மலை, இரவி
- தவல் = மிகுதல், குறைதல்
- தன்மை = இயல்பு, தன்மையுடைய பொருள்
- தனிமம் = அழகு, மெத்தை
- தா(வு) = வலி, வருத்தம், தாவு, இடையிடு
- தாணு = குற்றி, தூண்
- தாமம் = ஒளி, தார்-மாலை
- தாயம் = உரிமை, தம்குடித்-தமர்
- தார் = பூ, பூமாலை, போரில் முன் செல்லும் கொடிப்படை, மாவினுக்கு அணிகலன், கிண்கிணி மாலை, பெயர்க்கொடை
- தாரம் = அரும்பண்டம், வெள்ளி, வெள்ளி-ஒளி, ஏழு நரம்புகளில் ஒன்று
- தாலம் = தரை, பனை, நாக்கு, உண்கலம்
- தாவரம் = மரமும் மலையும் போல நிற்பன, தரு என்னும் மரத்தின் பெயர்
- தானை = கைப்படை, காலாட்படை, ஆடை
- திணை = குலம், ஒழுக்கம், ஒழுக்கம் நிகழ்ந்த நிலம்,
- துஞ்சல் = சாதல், நிலைத்தல், உறங்கல்
- துணங்கை = ஆடல், திருநாள், விழா
- துத்தி = சுணங்கு, பொறி, துய்ப்பன
- துப்பு – வண்ணம், பவளம், வலிமை, அரக்கு
- துன்னல் = குறுகல், செறிவு
- தூங்கல் = ஆடல், தாழ்வு
- தூவி = பசை, தசை, பறவை-இறகு,
- தேசிகம் = திசைச்சொல், அழகு
- தொடி = ஒரு பலம் (எடை), வளையல்
- தொய்யில் = உழவுநிலத்தில் எழுவதோர் புதல் (கோரைப்புல்), குழை, மகிழ்ச்சி, அழகு
- தோடு = தொகுதி, பனையிதழ் போல்வன, பூ-இதழ்
- தோல் = யானை, வனப்பு, தோல்-பலகை (தோலாலான கேடயம்)
- நகை = மகிழ்ச்சி, விளையாட்டு, இகழ்ச்சி ஆகியவற்றில் தோன்றும் மெய்க்குறிப்பாகிய நகை
- நந்தல் = கேடு, ஆக்கம்
- நவம் = ஒன்பது, கேண்மை, புதுமை
- நவம் = புதுமை, ஒன்பது
- நவிரம் = மலை, உச்சி, மருதயாழ்த் திறன்,
- நனவு = உணர்ச்சி, அகலம், தெளிவு
- நனி = பெருமை, சீதம், செறிவு
- நனை = பூமொட்டு, கள், காமம்
- நாகம் = அரவு, காரீயம், அமரர் நாடுகளில் ஒன்று, மலை, யானை, ஒருவகை மரத்தின் பெயர்
- நாகு = கோ0இ, எருமை, மரை(மான்), மீன்பெண், இளைமை, கெழுமை, இளைமரம்
- நாஞ்சில் = எயில்-உறுப்பு, உழுபடை
- நாண் = மாதர் மங்கலம்(தாலி), அணி, மானம், பாசம்
- நியமம் = அங்காடி, நியதி, தெரு
- நிழற்றல் = நுணுக்கம், நிழல் செயல்
- நீலம் = நீலமலர், நீல நிறம்
- நீவல் = தடவல், துடைத்தல்
- நீவி = ஆடை, கொய்சகம்
- நூல் = எண் (நூல் < நூறு), பனுவல் (புத்தகம்)
- நூழில் = குவவில் பட்டோர் (கூட்டத்திற்குள் பட்டோர்) கொடிப்புல்
- நூறு = பொடி, நூறு என்னும் எண்ணிக்கை
- நெய்தல் = ஆம்பல், கடல்சார்நிலம்
- நேர் = உடன்படல், உவமை, ஒத்தல், நுட்பம், சமன், பாதி, மிகுதி, தலைப்பாடு, தனிமை
- நொறில் = அடக்கம், விரைவு
- பகல் = நாள், ஒளி, நடுவு, பிளத்தல், பாகுபடுத்தல்
- பட்டிகை = கச்சம், தெப்பம்
- படர் = கருத்து, நெறி(வழி), பரிவு
- படி = பார்(நிலம்), பகை
- படிவம் = விரதம், வடிவு
- படு = படுதல், நன்மை, கள்
- படை = சயனம், பல்லணம், தானை, உழுநாஞ்சில், பயன்
- பண்ணை = ஆயம், மகள்ளிர் விளையாட்டு, பாய்புனல் படுகர்
- பணை = பருத்தல், பிழைத்தல், பழனம், முரசு, மரக்கோடு, புரவியின் பந்தி (குதிரை அணிவகுப்பு)
- பதங்கம் = விட்டில், பறவையின் பொதுப்பெயர்
- பதம் = சோறு, வழி, சொல், கால், ஈரம், சேமம், புனல், காலை,
- பதலை = தாழி, பரந்த-வாய்ப்-பறை
- பதி = உறைவிடம், தலைவன்
- பயிர் = விதந்து கட்டிய வழக்கு (இட்டுக்கட்டிச் சொல்லுதல்), விலங்கு-குரல், புள்-குரல், பசும்புல், பைங்கூழ்
- பரவை = கடல், பரப்பு
- பரி = வருத்தம், செலவு, ஒருவகை விலங்கு (குதிரை), பாதுகாத்தல்
- பரிவு = துன்பம், இன்பம்
- பல்லம் = காடி, பகழி, கணக்கில் ஓர் குறிப்பு (‘பல’ எனல்)
- பலி = ஐயம்(பிச்சை), சோறு
- பள்ளி = இடம், துயில்
- பற்றல் = தொடல், வளைத்தல், பிணித்தல்
- பனி = அச்சம், துன்பம், நடுக்கம், துகினம், பற்றிய சீதம் (குளிர்)
- பாங்கு = அழகு, உரிமை, பக்கம்
- பாசம் = ஊசித்துளை, கயிறு, ஆசை, பிசாசம், ஒருவகை ஆயுதம்
- பாடலம் = சிவப்பு, பாதிரிப்-பூ
- பாடி = நகரம், நாடு, படை-வீடு,
- பாடு = பெருமை, ஒலி, படுத்தல்
- பாணி = நெடித்தல்-பொழுது, நீர், கை, பாடலில் பல்லியம்
- பால் = பருத்தல், பக்கம், திசை, இயல்பு,
- பாலை = நீரின்றி வேனிலில் தெறு-நிலம், அந்நிலப் பாடல், பாடல்-சுவை, பொருள்வயிற் பிரிதல், புணர்ந்துடன் போதல், அவற்றை #உணர்த்துதல்
- பாழி = ஊர், வழி, உறையுள், சயனம்,
- பிரசம் = தேன், கள், தேனீ
- பிறங்கல் = உயர்வு, மலை, பெருமை
- பிறழ்தல் = ஒளிவிடம், பெயர்தல்
- புண்டரீகம் = தாமரை, புலி
- புணரி = கடல், திரை
- புதை = கணைக்கட்டு (அம்பறாத்தூணி), புதுமை
- புரிதல் = விரும்பல், செய்தல்
- புரை = உயர்வு, குற்றம், உண்மைச்சொல்
- புலம்பு = தனிமை, நடுக்கம், புலம்பல்
- புலவர் = அமரர், கவிஞர், ஆடுநர், பாடுநர், பொருநர், அறிஞர்
- பூ = அழகு, கூர்மை, பொலிவு
- பூவை = காயா-மரம், நாகணவாய்ப் புள்,
- பொதி = நிதி, சொற்பயன், நிகழ்பல பண்டம்
- பொருநர் = பொரும்-போர்த்தலைவர், பொருங்கூத்தின் கொடியர் (கொடியைத் தூக்கிக்கொண்டு ஆடும் பெருங்கூத்தர்), பொரும் படைவீரர்
- பொழில் = சோலை, உலகம்
- பொறி = திரு, ஐம்பொறி, செல்வம், இலாஞ்சனை (இலச்சினை),
- பொறை = சுமத்தல், பரித்தல், பொறுத்தல், (3 பொருள்) மலை, சுமை, பாரம், அம்பற்-சேந்தன் பொறுமை, (அம்பல் நாட்டை ஆளும் சேந்தன் என்னும் அரசனின் பொறுமை) பார் (5 பொருள்)
- போற்றல் = பாதுகாத்தல், புகழ்தல்
- மகரம் = மீனேறு(ஆண்மீன்), தாது
- மஞ்சு = மேகம், இளைமை, வனப்பு
- மடங்கல் = ஊழித்தீ, சிங்கம், உகம் முடிவு, இடி, கொடுங்கூற்றம், நோய் “ஆழித் தமிழோர் மடங்கல் என்பர்”
- மடல் = பூவின் இதழ், பனை-இதழ்
- மதர்(வு) = மகிழ்வு, மிகுதி
- மதலை = தூண், மரக்கலம், புதல்வன், கொடுங்கை, பாவை போல்வன, மற்றும் சார்பிற்கு ஏற்ற பொருள்
- மது = தேன், தேறல்
- மருதம் = பழன நிலம், மருதநிலப் பாடல்
- மலர்தல் = தோன்றுதல், எதிர்தல், விரிதல்
- மலைதல் = பொருதல், மலர் சூடுதல்
- மற்று = வினை-மாற்று, அசைநிலை
- மறலி = கூற்று, மயக்கம்
- மறன் = கொலை, சேவகம், கொடுவினைச் செயல், வலி, செற்றல்
- மறை = வேதம், மறைத்துமொழி-கிளவி
- மன் = மன்னல் (நிலைபெறல்), இடைச்சொல், இறை
- மன்னர் = அருந்திறல் வீரர், பெருந்திறல் உழவர்,
- மனவு = அக்குமணி, சங்குமணி
- மா = பெருமை, கருமை, சூதகம், நாற்றங்கால், வண்டு, பூ-உறை-திரு(மகள்),
- மாடு = மணி, செல்வம், நிறை, பக்கம், தனம் (தன்+அம்=தன்னுடையது எனப் பொருள்படும் தமிழ்ச்சொல்)
- மாதர் = காதல், மகளிர்
- மால் = மாயோன், மயக்கம், வேட்கை, மேகம், காற்று, பெருமை, கருநிறம், சோழன், புதன்
- மாலை = பொன்மாலை, பூமாலை, இரவு, அந்தி, மன்
- மாழை = ஆயமடமை, பொன், உலோகக் கட்டி, ஒலை, புளி, மா
- மானுதல் = ஒப்பு, மயக்கம்
- முடலை = திரட்சி, முருகு
- முரண் = வலி, பகை
- முருகு = முருகு, விழா, குமரவேள், இளைமை, நறை, நாற்றம், அகில், எழுச்சி, வெறியாட்டாளன்
- முல்லை = காடுசார் நிலம், நாள்மல்லிகை, மோடுபடு வென்றி, கற்பு
- முளரி = எரி, தாமரை, நுட்பம், முள்மரம், முள்மரக் காடு (என்னும் 5)
- முற்று = முழுவதும், வளைத்தல்(முற்றுகை)
- முனை = நுனி, பகை
- மூரல் = நகை, எயிறு, சோறு
- மூரி = பெருமை, ஆனேறு(காளை)
- மூலம் = மூல-நாள், வேர், முதல்
- மெய் = உடம்பு, உண்மை, மெய்யெழுத்து
- மை = குற்றம், ஆடு, கருமை, கொண்டல்
- வசி = வசியம், வாள், கூர்மை
- வஞ்சி = மேற்செலவு, ஒருவகைப் பா, ஓர்கொடிப்பிறப்பு (கொடி), கொடி போன்ற பெண்
- வடிவு = மேனி, உருவு, அல்குல்
- வண்ணம் = ஓசை, வடிவு
- வதுவை = மன்றல் (சடங்குத் திருமணம்), மணம்
- வம்பு = கச்சு, நிலையின்மை, புதுமை, கந்தம்மஃ,
- வயா = (கருவுற்ற மகளிர் மண் உண்ண விரும்பும்) வேட்கை, (வயவு என்னும்) பெருக்கம், வருத்தம்
- வயிரம் = செற்றம், கூர்மை சேர் மணி, வச்சிரம், வண்மை
- வயின் = வயிறு, இடம், மனை,
- வரி = (நாட்டுப்) பாடல், மெழுத்து (=மெட்டு), வண்டு
- வரைதல் = நீக்கல், கொள்ளல்
- வல்லை = விரைவு, மதில்
- வலன் = வென்றி, வலப்புறம், மேலிடம்
- வழங்கல் = கொடை, செல்ல்ல், சொல்லுதல்
- வழி = இடன்(இடம்), வழி(மொழிதல்)
- வள் = கூர்மை, வார்(விலங்கின் பதப்படுத்தப்பட்ட தோல்), வலிவு
- வளம் = பண்டம், வளப்பாடு
- வறிது = சிறிது, அருகல்(அருகிப் போதல்)
- வனம் = காடு, நீர், அழகு
- வாகை = ஆள்வினை வகையான செய்கை, கைவலம், கல்விமாண்பு, சால்பு முதலான பண்பு மிகை, ஒழுக்கம் முதலான தவமும் அறத்துறையும், ஒருவரின் ஒருவர் வென்றி, மிகுதி
- வாமம் = குறள், அழகு, குறங்கு (கால் தொடை), இடப்பால்
- வாய் = இடம்(‘வாய்’ என்னும் ஏழாம் வேற்றுமை உருபு), மெய்(உண்மை), வாக்கு(வாய் நேர்தல்)
- வாயில் = (பொறி)வாயில், வீட்டு வாயில்
- வாரணம் = யானை, கோழி, சங்கு
- வாரம் = ஏழு நாள் (கொண்ட தொகுப்பு), கிழமை(வெள்ளி வாரம்), மலைச்சார்வு(மலைச்சாரல்)
- விடங்கம் = முகடு, அழகு
- விண்டு = மாயோன், வெற்பு, வேய்(மூங்கில்)
- விம்மல் = ஒலித்தல், விம்முதல்
- விரை = சாந்து, விரை என்னும் ஆண்-உறுப்பு
- வில் = ஒளி, விற்படை, மூலம்
- விளக்கு = ஒளி, (எரியும்) விளக்கு
- விறப்பு = செறிவு, வெருவல், பெருக்கம்
- வீசுதல் = கொடுத்தல், எறிதல்
- வெடி = வெள்ளிடை, வெருவு
- வெம்மை = வேட்கை, விரைவு
- வெறி = நாற்றம், வேலன் ஆடல்
- வெறுக்கை = செல்வம், விழுப்பொருள்
- வேய் = மூங்கில், ஒற்று(ப்பார்த்தல்)
- வேலன் = முருகன், வெறியாட்டாளன்
- வேலி = மதில், காவல்
- வேலை = கடல், கடற்கரை, காலம்
- வேளாண்மை = உபகாரம், ஈகை
Subscribe to:
Posts (Atom)
தமிழ்த்துகள்
-
9th Tamil Model Notes Of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
8th Tamil Model Notes Of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அல...
-
7th Tamil Model Notes Of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4....
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
6th Tamil Model Notes Of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4...
-
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்டம் சிறார் திரைப்படம் டிசம்பர் சுவரொட்டி பெனோ ஜெபின்
-
நாள் - 20-01-2025 - 24-01-2025 வகுப்பு - 10 பாடம் - தமிழ் தலைப்பு - திருப்புதல் முதல் திருப்புதல் தேர்விற்கான பயிற்சி வினாக்கள் 1. சான்ற...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
Blog Archive
-
▼
2021
(1581)
-
▼
June
(118)
- TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS A...
- திருவிளையாடற்புராணம் பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ...
- நீதிவெண்பா பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 செய்யுள் த...
- இலக்கணம் - பொது பத்தாம் வகுப்பு இயல் 4 தமிழ் இலக்க...
- விண்ணைத்தாண்டிய தன்னம்பிக்கை பத்தாம் வகுப்பு இயல் ...
- பரிபாடல் பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 செய்யுள் தேர...
- பெருமாள் திருமொழி பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 செய...
- திருக்குறள் ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 3 பருவம் 2 கு...
- தொகாநிலைத் தொடர்கள் பத்தாம் வகுப்பு இயல் 3 தமிழ் இ...
- கோபல்லபுரத்து மக்கள் பத்தாம் வகுப்பு இயல் 3 தமிழ் ...
- மலைபடுகடாம் பத்தாம் வகுப்பு தமிழ் செய்யுள் தேர்வு ...
- காசிக்காண்டம் பத்தாம் வகுப்பு தமிழ் செய்யுள் தேர்வ...
- தொகைநிலைத் தொடர்கள் பத்தாம் வகுப்பு இயல் 2 தமிழ் இ...
- புயலிலே ஒரு தோணி பத்தாம் வகுப்பு இயல் 2 தமிழ் விரி...
- முல்லைப்பாட்டு பத்தாம் வகுப்பு தமிழ் செய்யுள் தேர்...
- காற்றே வா பத்தாம் வகுப்பு தமிழ் செய்யுள் தேர்வு இய...
- அரசுப்பள்ளி உங்கள் பள்ளி GOVERNMENT SCHOOL YOUR SC...
- வளரும் வணிகம் ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 3 பருவம் 2 ...
- எழுத்து, சொல் பத்தாம் வகுப்பு இயல் 1 தமிழ் இலக்கணம...
- உரைநடையின் அணிநலன்கள் பத்தாம் வகுப்பு இயல் 1 தமிழ்...
- இரட்டுறமொழிதல் பத்தாம் வகுப்பு இயல் 1 தமிழ் செய்யு...
- அன்னை மொழியே பத்தாம் வகுப்பு இயல் 1 தமிழ் செய்யுள்...
- பேசும் ஓவியங்கள் 7ஆம் வகுப்பு தமிழ் இயல் 3 பருவம் ...
- கடலோடு விளையாடு ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 3 பருவம் ...
- ஒரு வேண்டுகோள் ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 3 பருவம் 2...
- நானிலம் படைத்தவன் ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 3 பருவம...
- திருக்குறள் ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 2 பருவம் 2 கு...
- கல்வித் தொலைக்காட்சி புதிய நிகழ்ச்சிநிரல் அட்டவணை ...
- வாழ்விக்கும் கல்வி 7ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 பருவம...
- தமிழர் பெருவிழா ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 2 பருவம் ...
- அழியாச்செல்வம் ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 2 பருவம் 2...
- கண்மணியே கண்ணுறங்கு ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 2 பரு...
- இன்பத்தமிழ்க்கல்வி ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 2 பருவ...
- ஆசாரக்கோவை ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 2 பருவம் 2 குற...
- தமிழ்மொழி வாழ்த்து 8ஆம் வகுப்பு தமிழ் செயல்பாட்டுத...
- எங்கள் தமிழ் 7ஆம் வகுப்பு தமிழ் செயல்பாட்டுத்தாள் ...
- இன்பத்தமிழ் ஆறாம் வகுப்பு தமிழ் செயல்பாட்டுத்தாள் ...
- தமிழரின் கப்பற்கலை 7ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 பருவம...
- கல்விக் கண் திறந்தவர் ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 1 ப...
- கவின்மிகு கப்பல் ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 1 பருவம்...
- துன்பம் வெல்லும் கல்வி ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 1 ...
- அறுசுவைகளை இணைக்க பயிற்சித்தாள் சுவைகள் 6 அறிக. AR...
- கலங்கரை விளக்கம் ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 1 பருவம்...
- மூதுரை ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 1 பருவம் 2 குறுவின...
- தேசியம் காத்த செம்மல் ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 3 ப...
- தமிழ் மாதங்களை வரிசைப்படுத்துக குழந்தைகள் விளையாட்...
- கிழமைகளைத் தொட்டு இழுத்து வரிசைப்படுத்துக குழந்தைக...
- ன வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- ற வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- ள வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- ழ வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- ல வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- வ வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- ர வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- ய வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- ம வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- ப வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- ந வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- த வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- ண வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- ட வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- ஞ வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- ச வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- ங வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- க வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- மெய் எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIVE...
- உயிர் எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL LIV...
- க வரிசை எழுத்துகள் பயிற்சித்தாள் செயல்பாடு TAMIL L...
- கணியனின் நண்பன் ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 3 பருவம் ...
- பாஞ்சை வளம் ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 3 பருவம்1 குற...
- முள்ளை முள்ளால் எடு தமிழ் குட்டிக்கதை MULLAI MULLA...
- புலி தங்கிய குகை ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 3 பருவம்...
- வளர் தமிழ் ஆறாம் வகுப்பு இயல் 1 உரைநடை உலகம் தமிழ்...
- அறிவியல் ஆத்திசூடி ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 3 பருவ...
- திருக்குறள் ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 2 பருவம் 1 கு...
- திருக்குறள் ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 2 பருவம் 1 கு...
- விலங்குகள் உலகம் ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 2 பருவம்...
- சிறகின் ஓசை ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 2 பருவம் 1 கு...
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம் ஏழாம் வகுப்பு தமிழ்...
- கல்வித் தொலைக்காட்சியில் பயிற்சிப் புத்தகம் ஒளிபரப...
- காணிநிலம் ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 2 பருவம் 1 குறு...
- காடு ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 2 பருவம் 1 குறுவினா ...
- சிலப்பதிகாரம் ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 2 பருவம் 1 ...
- பேச்சுமொழியும் எழுத்துமொழியும் தமிழ் இயல் 1 பருவம்...
- ஒரு பொருள் தரும் பல சொற்கள் ORU PORUL THARUM PALA ...
- பல பொருள் குறித்த ஒரு சொல் தொகுப்பு PALA PORUL KUR...
- வளர்தமிழ் ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 1 பருவம் 1 உரைந...
- ஒன்றல்ல இரண்டல்ல ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 1 பருவம்...
- தமிழ் எண்களின் பெயர் தேவநேயப் பாவாணர் விளக்கம் TAM...
- வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் V...
- தமிழ்க்கும்மி ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 1 பருவம் 1 ...
- எண்களை வரிசைப்படுத்துதல் குழந்தைகள் விளையாட்டு NUM...
- தமிழ் அகர வரிசைப்படுத்துதல் குழந்தைகள் விளையாட்டு ...
- எங்கள் தமிழ் ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 1 பருவம் 1 க...
- இன்பத்தமிழ் ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 1 பருவம் 1 கு...
- தமிழ் இலக்கியங்களில் வடக்கிருத்தல் VADAKKIRUTHAL
- இறைச்சி தமிழ் இலக்கணம் IRAICHI TAMIL ILAKKANAM
- புறப்பொருள் இலக்கணம் 12 புறத்திணைகள் PURAPORUL IL...
- 12ஆம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் 3 12th HSC +...
- 12 ஆம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் 3 pdf 12th ...
-
▼
June
(118)