- 01. அன்பு :- நேசம், பரிவு, இரக்கம், பிரியம்
02. அழகு :- வனப்பு, எழில், சுந்தரம், வடிவு, கோலம், சிங்காரம், வண்ணம், நிறம்
03. அரசன் :- மன்னன், வேந்தன், கோன், புரவலன், நிருபன், கோ
04. அகிம்சை :- துன்புறுத்தாமை, இன்னல் செய்யாமை
05. அறிவுரை :- புத்திமதி, நல்லுரை, உபதேசம்
06. அறிவு :- உணர்வு, ஞானம், மதி விவேகம், புத்தி
07. அடி - பாதம், தாள், கால்
08. இரவு :- இராத்திரி, கங்குல், நிசி, இருட்டு
09. உணவு :- ஊண், ஆகாரம், அடிசில், உண்டி
10. உண்மை :- மெய், சத்தியம், வாய்மை
11. உதிரம் :- செந்நீர், குருதி, இரத்தம்
12. ஊழியம் :- தொண்டு, பணி, சேவை, வேலை
13. ஊதியம் :- சம்பளம், கூலி, இலாபம், ஆதாயம்
14. ஒளி :- வெளிச்சம், சுடர், கதிர், பிரகாசம்
15. குழந்தை :- மகவு, குழவி, சேய், சிசு, பிள்ளை, மழலை
16. கணவன் :- கொழுநன், தலைவன், பதி, நாயகன்
17. காற்று :- வளி, மாருதம், தென்றல், ஊதை, பவனம்
18. கேடு :- நாசம், அழிவு, சேதம், சிதைவு
19. தரித்தல் - அணிதல், சூடுதல், புனைதல், அலங்கரித்தல்
20. ஆதி :- முதல்,ஆரம்பம்,தொடக்கம்
21. குடித்தல்- அருந்துதல், பருகுதல், சுவைத்தல்
22. ஞானம்- அறிவு, ஆற்றல், விவேகம், புத்தி, வித்தை
23. ஒலி- ஓசை, அரவம், தொனி, சத்தம்
24. உடல் - சரீரம், உடம்பு, மெய், மேனி
25. அபாயம்- ஆபத்து, இடர், இடையூறு
26. காடு - அடவி, கானகம், வனம், ஆரணியம்
27. இனம்- உறவு, சுற்றம், கிளை,ஒக்கல்,பரிசனம்
28. சோலை- உபவனம், கா, தண்டலை, நந்தவனம், பூங்கா, பொழில்
29. கல்வி- கலை, வித்தை, படிப்பு
30. ஆசிரியர்- ஆசான், உபாத்தியாயன், குரவர், தேசிகர்
31. நீதி- தர்மம், நடு, நியாயம், நெறி
32. நூல்- ஏடு, பனுவல், புத்தகம், பொத்தகம்
33. குற்றம்- தவறு, பிழை, களங்கம், தப்பு, மாசு, காடு
34. தடாகம்- ஏரி, குளம், பொய்கை, வாவி, கயம்
35. அத்திப் பொழுது- சாய்பொழுது, சாயங்காலம், மாலை, செக்கல்
36. உதயம்- வைகறை, காலைப்பொழுது, புலர், விடியல், தோற்றம்
37. குதிரை- அசுவம், பரி, புரவி, அயம்
38. தாமரை - கமலம், முளரி, அம்புயம்
39. நித்திரை- உறக்கம், துயில், அனந்தல், சயனம்
40. வயல்- பழனம், செய்,கழனி,புலனம்
41. மேகம்- கொண்டல்,கார்,முகில்
42. வண்டு- அறி, கரும்பு, மதுரகம்
43. வாசனை- சுகந்தம், நாற்றம், விரை, மணம்
44. தொழில்- ஊழியம், பணி, வேலை
45. சத்தியம்- ஆணை, சபதம், சூழ், பிரமாணம், உண்மை
46. சிங்கம்- அரி, ஆழி, கேசரி, கோளரி, சீயம்
47. சொல்- கிழவி, கூற்று, மொழி, வாக்கு
48. தேன்- மது, நறவு, தேறல், கள்
49. வண்ணம்- சாயல், நிறம், வர்ணம்