கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, January 31, 2022

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு 2022 முக்கிய வினா விடைகள் TENTH TAMIL FIRST REVISION EXAM IMPORTANT QUESTIONS AND ANSWERS pdf

 பதிவிறக்கு/DOWNLOAD

TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS VOL 27 தமிழ் முக்கிய வினா விடை பகுதி 27

12ஆம் வகுப்பு இரண்டாம் திருப்புதல் தேர்வு புதிய அட்டவணை 2022 Second revision exam time table 12th hsc

12ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு புதிய அட்டவணை 2022 First revision exam time table 12th hsc

பத்தாம் வகுப்பு இரண்டாம் திருப்புதல் தேர்வு புதிய அட்டவணை 2022 Second revision exam time table tenth sslc

பத்தாம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு புதிய அட்டவணை 2022 First revision exam time table tenth sslc

Sunday, January 30, 2022

தேர்தல் கையேடு 2022 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பணிகள் pdf rolling officer election guide

பதிவிறக்கு/DOWNLOAD

உலக இணைய வானொலி கேட்க world internet radio

வானொலி/RADIO

தேர்தல் பணிக்குச் செல்பவர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள் ELECTION DUTY IMPORTANT NOTES

தேர்தல் பணிக்குச் செல்பவர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள்

            PRO Officer duty

*1-Pro dairy*
*2-Form17c.*
*3-16 points observer report  sheet.*
*4-Visiter sheet.*
*5-Pledge commencement of poll and after close the poll.*
 *6-Mock poll certificate.  மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக Pro officer பூர்த்தி செய்யவும்*   

                       PO 1 duty
 
*1-elector identify is very important.*
*2.Marked copy of elecoral roll ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால்  வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும்* 
*3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்*              

            PO 2 duty

*1- 17-A register. வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து* 
*2-அடுத்த கட்டத்தில் Ep என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும்*
*3 வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்*
*4- Voter slip. வரிசை எண்ணை குறித்து, வாக்காளரின் இடது கை  ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும். Voter slip யை வாக்காளரிடம் கொடுக்கவும்.*       

                  PO 3 duty

*வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit. உள்ள Ballot பட்டனை அழுத்தவும்.*

      General instructions 

    *49 0 என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின்  பெயருக்கு  நேரில் உள்ள Remarks காலத்தில் 49 -0 என்று குறிப்பிடவேண்டும் Refused the Vote என்று எழுத வேண்டும்.             
 *49-M என்றால் வாக்களருக்கு மை வைத்தபிறகு Before entered the vote he declared the symbol or candidate name சொன்னால் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க Pro அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register ல் வாக்காளர் கையொப்பம் அடுத்து Remarks காலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.*

 *49 MA என்றால் வாக்காளர்வாக்களித்தபின் அந்த வாக்காளர் நான் வாக்களித்த Symbol பதிலாக Vvpat ல் வேறு ஒரு Symbol பதிவாகிறது என்று  தெரிவித்தால் இந்நேர்வில் Pro அந்த வாக்காளரிடம் இதுவரை வாக்களித்தவர்கள் யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை நீங்கள் மட்டுமே  தெரிவிக்கிறீர்கள் நான் உங்களுக்கு மறுபடியும் Testing vote வழங்குகிறேன். அதற்கு முன்பு நீங்கள் தெரிவித்த கருத்து தவறாக இருந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளே இருக்கும் Polling agent மற்றும்  வெளியே இருக்கும் காவல்துறை சார்ந்தவரை உள்ளே அழைத்து அந்த நபரை மீண்டும் வாக்களிக்கச் செய்யவேண்டும்*
 *இந்நேர்வில் 17-A registerல் மீண்டும் அந்த நபரின் வரிசை எண் Epic எண் குறித்து கையொப்பம் பெறவேண்டும். Remarks காலத்தில் Testing vote என்று குறிப்பிடவேண்டும் இதற்கு முன்பாக Pro 49 MA படிவத்தில் அவருடைய பெயர் த/பெ. மற்றும் Part no, serial no, serial no in 17 A register of voters.குறித்து அந்த வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும். மறு வாக்கு பதிவின் போது வாக்காளர் தெரிவித்தது உறுதி ஆகவில்லை எனில் அவரை உடனடியாகக் காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்*

*1.Tendered votes ஆய்வுக்குரிய வாக்குகள்*
*2.Challenged votes எதிர்க்கப்பட்ட வாக்குகள்*
*3.Test votes*
*4.proxy votes*
*மேற்கண்ட நிகழ்வுகள் Maximum* *நடக்கவாய்ப்பில்லை இருந்த போதிலும் ELECTION RULES தெரிந்து வைத்திருப்பது நமக்கு மிகவும் அவசியம் !!!.* 


 குறிப்பு

தேர்தல் முடிந்தவுடன் CONTROL UNIT OFF செய்ய வேண்டும் !!!. 
VVPAT ல் BATTERY ஐ கழற்றி விட வேண்டும்.

சிற்பக்கலை வகுப்பு 9 இயல் 6 தமிழ் இயங்கலைத் தேர்வு 9th TAMIL ONLINE TEST SIRPAKALAI EXAM UNIT 6

இடைச்சொல் உரிச்சொல் வகுப்பு 9 இயல் 5 தமிழ் இயங்கலைத் தேர்வு 9th TAMIL ONLINE TEST IDAICHOL URICHOL EXAM UNIT 5 ILAKANAM

சிறுபஞ்சமூலம் வகுப்பு 9 இயல் 5 தமிழ் இயங்கலைத் தேர்வு 9th TAMIL ONLINE TEST SIRUPANJAMOOLAM EXAM UNIT 5

குடும்ப விளக்கு வகுப்பு 9 இயல் 5 தமிழ் இயங்கலைத் தேர்வு 9th TAMIL ONLINE TEST KUDUMBA VILAKKU EXAM UNIT 5

வகுப்பு 9 கல்வியில் சிறந்த பெண்கள் இயல் 5 தமிழ் இயங்கலைத் தேர்வு 9th TAMIL ONLINE TEST KALVIYIL SIRANTHA PENKAL EXAM UNIT 5

வல்லினம் மிகும் இடங்கள் மிகா இடங்கள் தமிழ் இயங்கலைத் தேர்வு வகுப்பு 9 இயல் 3, 4 VALLINAM MIKUM MIKA IDANKAL TAMIL ONLINE TEST 9TH EXAM

 

Saturday, January 29, 2022

நற்றமிழ் வளர்த்த நல்லோர் பத்தாம் வகுப்பு தமிழ்க்கட்டுரை 10th tamil katturai natramil valartha nallor

நற்றமிழ் வளர்த்த நல்லோர் பத்தாம் வகுப்பு தமிழ்க் கட்டுரை 10th tamil katturai natramil valartha nallor

 

.

நற்றமிழ் வளர்த்த நல்லோர்

முன்னுரை                                     தமிழ்த்துகள்

"தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள்

என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்' என்கிறார் பாரதியார். உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்றாக விளங்குவது நம் தமிழ் மொழி. இலக்கியங்கள் படைத்தும் இலக்கணங்கள் வகுத்தும் அதைச் செம்மையாக்கிய சான்றோர் பலர் ஆவர்.

தமிழின் தொன்மை  தமிழ்த்துகள்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே

வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி-நம் தமிழ்க்குடி தமிழில் நமக்குக் கிடைத்துள்ள தொல்காப்பியம் மிகப் பழமையான இலக்கிய நூலாகும். தொல்காப்பியரும் அகத்தியரின் மாணவர் என்பது நாம் அறிந்ததே. முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் வைத்துத் தமிழ் வளர்த்தனர் நம் முன்னோர். பதினெண் மேற்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்கத்தமிழர் வாழ்வைச் சொல்லும். ஆதிச்சநல்லூரும் கீழடியும் தமிழின் பழமை ஆறாயிரம் ஆண்டுகள் என்று சொல்லும்.

செந்நாப் புலவர்கள்                தமிழ்த்துகள்

இறையனார், கணியன் பூங்குன்றன், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், பவணந்தி அடிகள், அவ்வையார், காக்கைப்பாடினியார், நச்செள்ளையார், வெண்ணிக் குயத்தியார், ஒக்கூர் மாசாத்தியார் என்ற புலவர்களின் வரிசையோடு அதிவீரராம பாண்டியன், சோழன் நலங்கிள்ளி போன்ற அரசர்களும் உள்ளனர். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பக்தி இலக்கியங்கள் கொண்ட பெட்டகம் நமக்கானது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்கள் பாரதி, பாரதிதாசன் எனத் தொடங்கி எண்ணற்றோர் ஆவர்.

ஜி.யு.போப்பின் தமிழ்ப்பணி    தமிழ்த்துகள்

1839 ஆம் ஆண்டு தமிழகம் வந்தார் ஜார்ஜ் யுக்ளோ போப். திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்தார். தம் கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று எழுதச் சொன்னார். சாயர்புரம், தஞ்சாவூர்,  உதகையில் தங்கியிருந்து மறைநூற் புலவர் பட்டம் பெறும் அளவு தமிழ்த் தொண்டு செய்தவர் ஜி.யு.போப்.                                       தமிழ்த்துகள்

நான்காம் தமிழ்ச்சங்கம்

செப்டம்பர் 14 - 1901 ஆம் ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் வள்ளல் பாண்டித்துரை அவர்களால் தொடங்கப்பட்டது. பாலவனத்தம் ஜமீன் ஆக இருந்த வள்ளல் பாண்டித்துரை அவர்கள் முயற்சியால் இந்நிகழ்வு நடந்தது. மதுரைச் செந்தமிழ்க் கல்லூரி இன்றும் அப்பணியைச் செவ்வனே செய்து வருகிறது. 1800 பக்கங்கள் கொண்ட செந்தமிழ்ச் சொல்லகராதி 63,900 தமிழ்ச் சொற்களைத் தாங்கி வெளிவந்தது. 2012 ஆம் ஆண்டு இச்சங்கத்திற்கு தமிழ்த்தாய் விருது வழங்கி தமிழக அரசு சிறப்புச் செய்தது.

உலகத் தமிழ் மாநாடு                   தமிழ்த்துகள்

       உலகத்தமிழர் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாடு முதன்முதலில் 1966இல் மலேசியாவில் நடைபெற்றது. அதன் பின்னர் சென்னை, பாரிஸ், இலங்கை, மதுரை, மொரீசியஸ், தஞ்சாவூரில் இதுவரை நடைபெற்றுள்ளது. பத்தாவது உலகத் தமிழ் மாநாடு சிகாகோவில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தம் படைப்புகளை அரங்கேற்றம் செய்யவும், பழந்தமிழ் இலக்கண. இலக்கியங்களை ஆய்வு செய்யவும் இம்மாநாடு ஒரு வாய்ப்பாக அமைகிறது. 2010 ஆம் ஆண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றது.

முடிவுரை                             தமிழ்த்துகள்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலக ஒருமைப்பாட்டை உரக்கச் சொன்னவன் தமிழன். ஐஞ்சிறு காப்பியங்கள், ஐம்பெருங் காப்பியங்கள் மூலம் இலக்கிய வளம் சொன்னவன். புதுக்கவிதைகளில் புரட்சி செய்து துளிப்பாக்களுக்குள் நுழைந்து இருக்கிறது தமிழ். கன்னித் தமிழ் கணினித் தமிழாய் வளர்ந்திருக்கிறது. அறமும் மறமும் வளர்த்த தமிழ் வழிபாட்டுப் பாடல்களையும் சுமந்து தந்திருக்கிறது. வாய்மொழி இலக்கியங்களாக நாட்டுப்புறப் பாடல்களையும் பழமொழிகளையும் விட்டுச் சென்றிருக்கிறது. கடல் தின்றது போக மிச்சமுள்ள இலக்கியங்களே உலகு மெச்சும் அளவு இருக்கிறதென்றால் முதல் இரண்டு சங்கங்கள் கொண்டிருந்த ஓலைச்சுவடிகள் எப்படி இருந்திருக்கும்?                 தமிழ்த்துகள்

தமிழைப் படிப்போம்! தமிழில் படைப்போம்!

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                தமிழ்த்துகள்

நற்றமிழ் வளர்த்த நல்லோர் பத்தாம் வகுப்பு தமிழ்க் கட்டுரை 10th tamil katturai natramil valartha nallor pdf

 பதிவிறக்கு/DOWNLOAD

Friday, January 28, 2022

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புணர்ச்சி 9th tamil model notes of lesson punarchi

திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை 2022 REVISED TRANSFER COUNSELING SCHEDULE

PG TRB 2022 EXAM TIME TABLE முதுகலை ஆசிரியர் தேர்வு வாரிய கால அட்டவணை

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பாரதம் அன்றைய நாற்றங்கால் 6th tamil model notes of lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு விருந்தோம்பல், அணி 7th tamil model notes of lesson virunthombal, ani

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு விடுதலைத் திருநாள் 8th tamil model notes of lesson

Thursday, January 27, 2022

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் தமிழ்க் கட்டுரை 10th tamil katturai maram valarpom malai peruvom

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் தமிழ்க் கட்டுரை pdf பத்தாம் வகுப்பு 10th tamil katturai maram valarpom malai peruvom

 பதிவிறக்கு/DOWNLOAD

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் தமிழ்க் கட்டுரை பத்தாம் வகுப்பு 10th tamil katturai maram valarpom malai peruvom

  

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

முன்னுரை

'விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே                           தமிழ்த்துகள்

பசும்புல் தலைகாண்பு அரிது'- என்கிறது உலகப் பொதுமறை. இவ்வுலக உயிர்கள் உய்வதற்கு மழைநீரே அமுதமாய் இருக்கிறது. பூமிப்பந்து உயிர்க்கோளமாகத் தொடர்வதற்கு மழை பெய்வதே அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் தூய்மையான நீர் மழை நீரே! அதனைச் சேமித்து வைப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மழைநீரைச் சேமித்து வைக்க வேண்டியதன் அவசியத்தை நாம் அறிந்திருக்க வேண்டும்.

இயற்கையோடு இயைந்து வாழ்வோம்                  தமிழ்த்துகள்

நிலம், நீர், தீ, காற்று, வானம் எனும் ஐம்பூதங்களால் ஆட்சி செய்யப்படுவது இவ்வுலகம். இயற்கையின் கொடையான பசுமைப் போர்வை போர்த்திய பூமிப்பந்தை நாம் பாதுகாக்க வேண்டும். நம் முன்னோர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள். நீர் மேலாண்மை மூலம் உழவுத் தொழிலைச் செய்தார்கள். தான் விளைத்த தானியங்கள் கொண்டு அறத்துடன் வாழ்ந்தார்கள். பருவத்தே பயிர் செய்து விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவு அளித்தார்கள். இயற்கையை வணங்கி அதனுடன் இயைந்து வாழ்ந்தார்கள்.                                       தமிழ்த்துகள்                                         

வானத்து மழை நீரைப் பூமியில் காப்போம்!

ஒவ்வோர் ஆண்டும் பொழிகின்ற மழை நீரில் 40 விழுக்காடு கடலில் கலக்கிறது. 35 விழுக்காடு கதிரவனால் உறிஞ்சப்படுகிறது. 14 விழுக்காடு பூமி உறிஞ்சிக் கொள்கிறது. 10 விழுக்காடு மண்ணின் ஈரத்தன்மைக்கு உதவுகிறது. மீதமுள்ள ஒரு விழுக்காடு தண்ணீரைத் தான் நாம் பயன்படுத்துகிறோம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நீரின்றி அமையாது உலகு. அக்காலத்தில் அகழிகள், தெப்பங்கள், ஓடைகள், ஆறுகள். கண்மாய்கள் ஊருணிகள், ஏரிகள் அமைத்து மழைநீரைச் சேமித்து வைத்தனர் நம் முன்னோர்கள். கசிவு நீர்க் குழிகள், கசிவுநீர்ப் படுகை, நீரூற்றுக் கிணறு, உறிஞ்சு குழிகள் அமைத்து நாமும் மழை நீரைச் சேமிக்க வேண்டும்.

மழைக்கு ஆதாரமான மரங்களை வளர்ப்போம்!

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்                                      தமிழ்த்துகள்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு- என்கிறார் வள்ளுவர்.

மரங்கள் மழை தரும் வரங்கள் என்பதை நாம் அறியவேண்டும். வளிமண்டலத்தில் உள்ள நீராவியைக் குளிரச் செய்து மழையாகப் பொழிய வைக்கும் ஆற்றல் மரங்களுக்கே உண்டு. நாம் ஒவ்வொருவரும் ஒரு மரம் வளர்க்க வேண்டும். பிறந்தநாள், திருமணநாள் போன்ற நாள்களிலும் மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.                                       தமிழ்த்துகள்

முடிவுரை

வெள்ளம் வருமுன்னே அணை போட வேண்டும். வந்தபின் காப்பது அறிவுடைமை ஆகாது. 2001 இல் தமிழக அரசு கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைத் தொடங்கியது. உலகில் ஆண்டுதோறும் 55 மில்லியன் மக்கள் வறட்சியால் பாதிக்கப்படுகிறார்கள் 40 விழுக்காடு மக்கள் வறட்சி காரணமாக பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மழைநீர் உயிர்நீர் என்று கருதி மழைநீரைச் சேமிப்போம்; நிலத்தடிநீரைக் காப்போம்!

Tuesday, January 25, 2022

12ஆம் வகுப்பு தமிழ் 90 மதிப்பெண்கள் வினாத்தாள் 12th +2 tamil question paper 90 marks

9ஆம் வகுப்பு ஆங்கிலம் 1 மதிப்பெண் வினாக்கள் 9th ENGLISH one word questions

9th English
1. Pursue-

2. melee-

3. passion

4. peer

5. rigorous

6. overawed

7. induction

8. kitbag

9. deteriorate

10. cocktail

Monday, January 24, 2022

பத்தாம் வகுப்பு தமிழ் திருப்புதல் தேர்வு காஞ்சிபுரம் வினாத்தாள் tenth tamil model exam revision test question paper kanchipuram

வகுப்பு 9 இயல் 4 உயிர்வகை தமிழ் இயங்கலைத் தேர்வு 9th tamil online test uyirvakai exam unit 4

வகுப்பு 9 இயல் 4 ஓ என் சமகாலத் தோழர்களே தமிழ் இயங்கலைத் தேர்வு 9th tamil online test o en samakala tholarkale exam unit 4

வகுப்பு 9 இயல் 4 இயந்திரங்களும் இணைய வழிப் பயன்பாடும் தமிழ் இயங்கலைத் தேர்வு 9th tamil online test iyanthirankalum inaiya vali payanpadum exam

 

TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS VOL 26 தமிழ் முக்கிய வினா விடை பகுதி 26

Sunday, January 23, 2022

வகுப்பு 9 இயல் 3 மணிமேகலை தமிழ் இயங்கலைத் தேர்வு 9th tamil online test manimekalai exam unit 3

வகுப்பு 9 இயல் 3 ஏறுதழுவுதல் தமிழ் இயங்கலைத் தேர்வு 9th tamil online test aeru thaluvuthal exam unit 3

வகுப்பு 9 இயல் 2 துணைவினைகள் தமிழ் இயங்கலைத் தேர்வு 9th tamil online test thunai vinaikal exam unit 2

வகுப்பு 9 இயல் 2 புறநானூறு தமிழ் இயங்கலைத் தேர்வு 9th tamil online test pura nanooru exam unit 2

வகுப்பு 9 இயல் 2 பெரியபுராணம் தமிழ் இயங்கலைத் தேர்வு 9th tamil online test periya puranam exam unit 2

வகுப்பு 9 இயல் 2 பட்டமரம் தமிழ் இயங்கலைத் தேர்வு 9th tamil online test pattamaram exam unit 2

வகுப்பு 9 இயல் 2 நீரின்றி அமையாது உலகு தமிழ் இயங்கலைத் தேர்வு 9th tamil online test neerinri amaiyathu ulaku exam unit 2

வகுப்பு 9 இயல் 1 தொடர் இலக்கணம் தமிழ் இயங்கலைத் தேர்வு 9th tamil online test thodar ilakkanam exam unit 1

வகுப்பு 9 இயல் 1 தமிழ்விடு தூது இயங்கலைத் தேர்வு 9th tamil online test tamilvidu thoothu exam unit 1

Saturday, January 22, 2022

வகுப்பு 9 இயல் 1 தமிழோவியம் தமிழ் இயங்கலைத் தேர்வு 9th tamil online test tamiloviyam exam unit 1

வகுப்பு 9 இயல் 1 திராவிட மொழிக்குடும்பம் தேர்வு 9th tamil online test thiravida molikudumbam exam unit 1

 

பத்தாம் வகுப்பு தமிழ் 100 மதிப்பெண்கள் வினாத்தாள் செங்கல்பட்டு 10th tamil 2022 chenkalpattu question paper pdf

 பதிவிறக்கு/DOWNLOAD

அணி இலக்கணம் எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 9 வினா விடை 8th tamil ani ilakanam question answers

எட்டாம் வகுப்பு இலக்கணம் வல்லினம் மிகுமிடம் மிகாவிடம் செயல்பாட்டுத்தாள் 8th tamil live worksheet vallinam mikumidam mikavidam

 தேர்வு முடிந்தபின் FINISH கொடுத்து மதிப்பெண் அறியலாம்

எட்டாம் வகுப்பு தமிழ் பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் செயல்பாட்டுத்தாள் 8th tamil M.G.R live worksheet

 தேர்வு முடிந்தவுடன் FINISH கொடுத்து மதிப்பெண் அறியலாம்.

எட்டாம் வகுப்பு தமிழ் விடுதலைத் திருநாள் செயல்பாட்டுத்தாள் 8th tamil viduthalai thirunal live worksheet

 தேர்வு முடிந்தபின் FINISH கொடுத்து மதிப்பெண் அறியலாம்

படைவேழம் எட்டாம் வகுப்பு தமிழ் செயல்பாட்டுத்தாள் 8th tamil padaivezham live worksheet

  தேர்வு முடிந்தபின் finish கொடுக்கவும். மதிப்பெண் அறியலாம்.

தமிழ்த்துகள்

Blog Archive