தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Saturday, August 31, 2024
ஆசிரியர் நாள் வாழ்த்துக் கவிதை
Teacher's day greeting poem
ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை
❤🎈❤🎈❤🎈❤🎈❤🎈❤🎈
ஆண்டுக்கு ஆண்டு
அகிலம் கொண்டாடும்
அற்புத தினம் பல
வருகிறதே!
அவைஒவ் வொன்றும்
நமக்கு அழியா
அழகிய நினைவுகள்
தருகிறதே!
அன்பின் நினைவாய்
சில தினங்கள்..
ஆழ்ந்த வருத்தத்தில்
சில தினங்கள்.
இன்பம் பொங்கும்
சில தினங்கள்..
ஈகத்தை நினைத்திட
சில தினங்கள்..
உறவுகள் கொண்டாடும்
சில தினங்கள்...
ஊர் கூடி மகிழும்
சில தினங்கள்...
எத்தனை எத்தனை
தினங்களடா...
நினைத்ததும் இனித்திடும்
மனங்களடா...
அத்தனை தினத்திற்கும் முத்தாய்ப்பாய்
அழகிய தினம் ஒன்று உண்டென்பேன்..
அத்தனை தினத்தையும்
அழகாக்கும்
அதிசயம் ஆசிரியர்
தினமென்பேன்..
"எண்ணும் எழுத்தும்
கண் எனத் தகும்"என்று முன்னோர்கள்
சொன்னார்கள்...
எண்ணும் எழுத்தும்
அறிவித்தவரை
இறைவனே
என்றார்கள்...
அன்னைக்கும் தந்தைக்கும்
அடுத்த நிலையில்
ஆசிரியர் என்றார்கள்!
ஆசிரியர் காட்டிய
வழியில் தானே
அரசரும் சென்றார்கள்!
எரிகிற விளக்கு
என்ற போதிலும்
தூண்டுகோல் தேவையடா!
எழிலாய் அந்த
இடத்தில் இருப்பது
ஆசிரியர் சேவையடா!
உயரத்தில் ஏற்றி
உலகத்தைக் காட்டும்
உன்னத ஏணியடா!
எழுகடல் போன்ற
வாழ்வினைத் தாண்ட
உனக்கான தோணியடா!
உவமைகள் காட்டி
ஒப்பிட இயலா
உயர் பணி இதுவன்றோ!
உலகத்தில் உள்ள
உயர் தொழிற்கெல்லாம்
இதுவே பொதுவன்றோ!
எப்பிறப்பில் செய்த
எத்தவப் பயனோ
இப்பணி நமைச் சேர!
அப்பணிக்கே நமை
அர்ப்பணித்திடுவோம்
அகிலம் நம் பெயர் கூற!
அறிவொளி ஏற்றி
அறப்பணி ஆற்றும்
ஆசிரியர் இனம் வாழ்க!!!
அகம் மிக மகிழ்ந்தே
அனைவரும் வாழ்த்தும்
ஆசிரியர் தினம் வாழ்க!!!
அன்புடன்
சேவியர்
தமிழாசிரியர்
ஆலங்குடி புதுக்கோட்டை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நம் அனைவரின் பொறுப்பு
Environmental protection is the responsibility of all of us
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நம் அனைவரின் பொறுப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி
வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
முன்னுரை தமிழ்த்துகள்
சுற்றுச்சூழல்
என்பது நாம் வாழும் இந்த பூமியின் உயிர்ப்பு. சுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளை அல்லது உயிரினத்தைச் சுற்றியுள்ள
இயற்கைச் சூழலைச் சிறப்பாகக் குறிக்கின்றது. இது நமக்கு காற்று, நீர்,
உணவு, பல்வேறு வகையான இயற்கை வளங்களை அளிக்கிறது. ஆனால், தொழில்மயமாதல், நகரமயமாதல், மக்கள்தொகைப் பெருக்கம் போன்ற
காரணங்களால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழ்த்துகள்
சுற்றுச்சூழல் பாதிப்பின் தீவிரம்
காடுகள் அழிப்பு, நீர் மாசுபாடு, காற்று
மாசுபாடு, கழிவு மேலாண்மை பிரச்சினைகள் என பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நம்மை
அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலை தொடர்ந்தால், வருங்கால சந்ததியினருக்கு வாழத் தகுதியற்ற ஒரு உலகைத்தான் நாம் விட்டுச்
செல்வோம். எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம்
அனைவரின் பொறுப்பாகும். தமிழ்த்துகள்
காடுகள் அழிப்பு தமிழ்த்துகள்
காடுகள் பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகின்றன. ஆனால், மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதால் காடுகள்
அழிந்து வருகின்றன. இதனால், மழைப் பொழிவு குறைந்து, வெப்பநிலை அதிகரித்து, மண் அரிப்பு ஏற்பட்டு, பல்லுயிர்ச்சூழல் பாதிக்கப்படுகிறது. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள்,
தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
நீர் மாசுபாடு தமிழ்த்துகள்
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும்
கழிவுநீர்,
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன
உரங்கள், பூச்சிக்கொல்லிகள், குப்பைகள் ஆகியவை நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன. இதனால், நீர்வாழ் உயிரினங்கள் அழிந்து, மனிதர்களுக்குப் பல்வேறு நோய்கள்
ஏற்படுகின்றன. தமிழ்த்துகள்
காற்று மாசுபாடு
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள், கழிவு எரிப்பு ஆகியவை காற்றை மாசுபடுத்துகின்றன. இதனால், சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் அதிகரிக்கின்றன. தமிழ்த்துகள்
கழிவு மேலாண்மை
பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகம் போன்ற பொருட்கள்
சிதைவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். இவை நம் சுற்றுச்சூழலில் கலக்கும் போது, மண்,
நீர் மற்றும் காற்றை மாசுபடுத்துகின்றன. தமிழ்த்துகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் தமிழ்த்துகள்
சுத்தமான காற்று, நீர், உணவு போன்றவை நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்கிறது. சுற்றுச்சூழல்
பாதுகாப்பு இல்லாவிட்டால், நோய்கள் அதிகரித்து, மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.
பல்வேறு வகையான உயிரினங்கள் இயற்கையின் சமநிலையைப் பேணுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பு பல்வேறு
உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கிறது. தமிழ்த்துகள்
காடுகள் அழிப்பு, புதைபடிவ எரிபொருள்களை அதிகளவில் பயன்படுத்துதல் போன்ற செயல்கள் பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், கடல் மட்டம் உயர்ந்து, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகரிக்கின்றன. தமிழ்த்துகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீண்ட காலத்தில்
பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுலா, விவசாயம் போன்ற துறைகள்
பாதிக்கப்படுகின்றன. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த
எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
சுற்றுச்சூழல்
பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் தமிழ்த்துகள்
மரங்கள் நடுவதன் மூலம் காடுகளை வளர்த்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம்.
குளிக்கும் போது, பல் துலக்கும் போது, துணி துவைக்கும் போது நீரை வீணாக்காமல்
இருக்க வேண்டும். தமிழ்த்துகள்
பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகம் போன்ற பொருள்களைச் சரியாகப் பிரித்து, மறுசுழற்சி செய்வதன் மூலம் கழிவு மேலாண்மை பிரச்சினையைத் தீர்க்கலாம். தமிழ்த்துகள்
தனிப்பட்ட வாகனங்களைக் குறைத்து, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாட்டைக்
குறைக்கலாம். தமிழ்த்துகள்
சூரிய சக்தி, காற்று சக்தி போன்ற பசுமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் புதைபடிவ
எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம். தமிழ்த்துகள்
நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குச்
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை விளக்கி, அவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். தமிழ்த்துகள்
முடிவுரை தமிழ்த்துகள்
மனிதன் இயற்கையின் ஒரு பகுதியாக இருந்துகொண்டு, இயற்கைமீதே
போர் தொடுத்தால், அவன்மீது போர் தொடுக்கிறான் என்று அர்த்தம். சுற்றுச்சூழல்
பாதுகாப்பு என்பது நம் அனைவரின் பொதுவான பொறுப்பாகும். தமிழ்த்துகள்
நாம் ஒவ்வொருவரும் நம் தினசரி வாழ்க்கையில் சில சிறிய மாற்றங்களைச்
செய்தால்,
நம்மைச் சுற்றியுள்ள சூழலைப் பாதுகாக்க முடியும். வருங்கால
சந்ததியினருக்கு வாழத் தகுதியான ஒரு உலகை உருவாக்க வேண்டுமென்றால், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு செயல்பட
வேண்டும். தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம்,
விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள்,
தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நம் அனைவரின் பொறுப்பு தமிழ்க் கட்டுரை பேச்சு pdf
Environmental protection is the responsibility of all of us tamil speech essay pdf
Friday, August 30, 2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30.08.2024
Thursday, August 29, 2024
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-08-2024. வியாழன்
Wednesday, August 28, 2024
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2024
Tuesday, August 27, 2024
பத்தாம் வகுப்பு தமிழ் 2024 மாதிரி வினாத்தாள் 3 காலாண்டுத் தேர்வு pdf விருதுநகர் மாவட்டம்
10th Tamil Quarterly Exam Model Question Paper 3 Pdf
Tenth SSLC september 2024 Virudhunagar District
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்27-08-2024. செவ்வாய்.
Monday, August 26, 2024
பத்தாம் வகுப்பு தமிழ் 2024 மாதிரி வினாத்தாள் 2 காலாண்டுத் தேர்வு pdf விருதுநகர் மாவட்டம்
10th Tamil Quarterly Exam Model Question Paper 2 Pdf
Tenth SSLC september 2024 Virudhunagar District
தமிழ்த்துகள்
-
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்டம் சிறார் திரைப்படம் டிசம்பர் சுவரொட்டி பெனோ ஜெபின்
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
10th tamil model notes of lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-01-2025 முதல் 03-01-2025 2.திருப்புதல் 1.‘வ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அல...
-
10th Tamil Model Notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அ...
-
8th Tamil half yearly exam question paper virudhunagar 2023
-
இணைய வழி விளையாட்டுகளின் தாக்கங்கள் முன்னுரை இணையவழி விளையாட்டுகள் இந்த நவீன காலத்தில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் மி...
-
7th Tamil Model Notes of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பருவம் 3 3.அலகு ...
-
பதிவிறக்கு/DOWNLOAD 9th Tamil half yearly exam question paper virudhunagar 2023
Blog Archive
-
▼
2024
(1659)
-
▼
August
(134)
- தஞ்சை பெரிய கோயில் சனிப் பிரதோஷம் நந்தி அபிஷேகம் வ...
- சனிப் பிரதோஷம் நந்தி அபிஷேகம் நாகலாபுரம் சிவன் கோவில்
- ஆசிரியர் நாள் வாழ்த்து கவிதை TEACHERS DAY WISHES T...
- முட்டையில் இருந்து வரும் குஞ்சு A chick from an egg
- ஆசிரியர் நாள் வாழ்த்துக் கவிதை
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு நம் அனைவரின் பொறுப்பு தம...
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நம் அனைவரின் பொறுப்பு
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நம் அனைவரின் பொறுப்பு தம...
- பத்தாம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் அ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 புதிய பாடத்துடன் அலகு...
- தமிழ்ப் பொன்மொழி கல்வியின் நோக்கம் tamil golden wo...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30.08.2024
- காலாண்டுத் தேர்வு பாடத்திட்டம் வகுப்பு 6-10 விருது...
- நூல் வெளியீட்டு விழா வாழ்த்துக் கவிதை Congratulato...
- மனம் மயக்கும் மாலை மழை Enchanting evening rain
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-08-2024. ...
- குற்றாலக் குறவஞ்சி கவியரங்கம் வாலிபத் தென்றலாய் கவ...
- குற்றாலக் குறவஞ்சி கவியரங்கம் வசந்தவல்லி கவிதை K...
- தமிழ்ப் பொன்மொழி பள்ளி tamil golden words quotes
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2024
- 2024 வகுப்பு 10 தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிரி வினா...
- மலரும் மொட்டுகள் Flowering buds
- பத்தாம் வகுப்பு தமிழ் 2024 மாதிரி வினாத்தாள் 3 கால...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்27-08-2024. ச...
- 2024 வகுப்பு 10 தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிரி வினா...
- நேரம் காலம் - தமிழ்ப் பொன்மொழி tamil quotes
- பத்தாம் வகுப்பு தமிழ் 2024 மாதிரி வினாத்தாள் 2 கால...
- கிருஷ்ண ஜெயந்தி கோகுலாஷ்டமி வாழ்த்துகள் Happy Kris...
- கிருஷ்ண ஜெயந்தி கோகுலாஷ்டமி தகவல்கள்
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சமூக நீதிக்கான சி...
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சமூக நீதிக்கான சி...
- 2024 வகுப்பு 10 தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிரி வினா...
- பத்தாம் வகுப்பு தமிழ் 2024 மாதிரி வினாத்தாள் 1 கால...
- பூச்சி உண்ணும் தவளை Insectivorous frog
- பத்தாம் வகுப்பு தமிழ் ஆகஸ்ட் மாதத் தேர்வு 50 மதிப்...
- பத்தாம் வகுப்பு தமிழ் ஆகஸ்ட் மாதத் தேர்வு 50 மதிப்...
- நீர் நடனம் water dance
- சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ஓவியம்
- பத்தாம் வகுப்பு தமிழ் ஜூலை மாதத் தேர்வு 50 மதிப்பெ...
- பத்தாம் வகுப்பு தமிழ் ஜூலை மாதத் தேர்வு 50 மதிப்பெ...
- தென்னை ஓலையில் நடக்கும் மைனா A myna walking on a c...
- இலக்கணம் பொது தமிழ் முக்கியக் குறிப்புகள் 10th tam...
- பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் 23.08.2024
- மன்றச் செயல்பாடுகள் club activities
- விண்ணைத்தாண்டிய தன்னம்பிக்கை தமிழ் முக்கியக் குறிப...
- 11, 12 ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வு பாடத்திட்டம் ...
- முதல் பரிசு ₹ 1 இலட்சம் தமிழ்க் கட்டுரைப் போட்டி
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22.08.24
- பத்தாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக வினா விடை TENTH...
- பத்தாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக வினாத்தாள் திறன...
- பத்தாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக வினா விடை முழுவ...
- பரிபாடல் தமிழ் முக்கியக் குறிப்புகள் 10th tamil im...
- கலைத் திருவிழா போட்டிகள் வகைகள் கால அளவுகள் வகுப்ப...
- கலைத் திருவிழா போட்டிகள் வகைகள் கால அளவுகள் வகுப்ப...
- கலைத் திருவிழா போட்டிகள் வகைகள் கால அளவுகள் வகுப்ப...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.08.2024
- பெருமாள் திருமொழி தமிழ் முக்கியக் குறிப்புகள் 10th...
- கலைத் திருவிழா போட்டிகள் 2024-25
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.08.2024
- பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல் இயல் 6 மாற்றப்பட்ட...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பூத்தொட...
- செயற்கை நுண்ணறிவு தமிழ் முக்கியக் குறிப்புகள் 10th...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடு நாள்: 19-08-2024
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வின...
- பத்தாம் வகுப்பு கணக்கு முதல் இடைத்தேர்வு வினாத்தாள...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடு நாள்: 16-08-2024
- பன்முகக் கலைஞர் பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 இயங்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 மொழிப்பயிற்சி வினா வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 மொழிப்பயிற்சி வினா வி...
- விடுதலை நாள் வாழ்த்து சுதந்திர தினக் கவிதை suthant...
- விடுதலை நாள் வாழ்த்து சுதந்திர தினக் கவிதை Indepen...
- சுதந்திர தின வாழ்த்து இந்திய விடுதலை நாள் வாழ்த்து...
- திருக்குறள் தமிழ் முக்கியக் குறிப்புகள் 10th tamil...
- கணியனின் நண்பன் ஆறாம் வகுப்பு தமிழ் மனவரைபடம்
- தொகாநிலைத்தொடர்கள் தமிழ் முக்கியக் குறிப்புகள் 10t...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.08.2024
- இந்திய விடுதலை நாள் தமிழ்க் கட்டுரை
- கோபல்லபுரத்து மக்கள் தமிழ் முக்கியக் குறிப்புகள் 1...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.08.2024
- அதிகம் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிகள...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 பயிற்சித்தாள் 1 புதித...
- பன்முகக் கலைஞர் தேர்வு வினாத்தாள் pdf பத்தாம் வகுப...
- விண்ணைத்தொட வேண்டும் நுண்ணறிவு தமிழ்ப் பேச்சு கட்ட...
- விண்ணைத் தொட வேண்டும் நுண்ணறிவு தமிழ்ப்பேச்சு கட்ட...
- விண்ணைத் தொட வேண்டும் நுண்ணறிவு தமிழ்ப்பேச்சு கட்டுரை
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பன்முகக...
- மலைபடுகடாம் தமிழ் முக்கியக் குறிப்புகள் 10th tamil...
- காசிக்காண்டம் தமிழ் முக்கியக் குறிப்புகள் 10th tam...
- விருந்து போற்றுதும் தமிழ் முக்கியக் குறிப்புகள் 10...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.08.2024
- தொகைநிலைத்தொடர்கள் தமிழ் முக்கியக் குறிப்புகள் 10t...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2024
- புயலிலே ஒரு தோணி தமிழ் முக்கியக் குறிப்புகள் 10th ...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.2024
- பாடக்குறிப்பு கையால் எழுத வேண்டுமா?
- இந்திய வனமகன் ஜாதவ் பயேங் கட்டுரை
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வின...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வின...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வின...
-
▼
August
(134)