விண்ணைத் தொட வேண்டும் நுண்ணறிவு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
காசி
நகர்ப் புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் -என்றான் பாரதி. அணுவைத்
துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்- என்றாள் ஔவை. நூற்றொரு
கோடியின் மேற்பட விரிந்த -என்று அன்றே விண்ணியல் ஆய்வைத் தம் திருவாசகத்தில்
சொன்னார் மாணிக்கவாசகர். தமிழ்த்துகள்
இன்று
நுண்ணறிவு உலகையாள்கிறது. தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவுகிறது.
மனிதர்கள் கையால் செய்யும் வேலைக்கும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்று
சொல்லப்படக்கூடிய செயற்கை நுண்ணறிவுக்கும் பொருளாதார சிக்கனம் நிறைய உள்ளது. தமிழ்த்துகள்
ஒரு
கருவியைத் தயார் செய்வதற்கும் வடிவமைப்பதற்கும் கணினியில் நாம் கொடுக்கின்ற
தரவுகளுக்கு ஏற்ப தானியங்கிகள் வடிவமைக்கின்றன. முற்றிலும் மனிதர்களே இல்லாமல்
தயாரிக்கப்படுகின்ற பொருள்கள் இன்று சந்தைக்கு வந்துவிட்டன. தமிழ்த்துகள்
சந்திராயன் ஒன்று, இரண்டு,
மூன்று என்று நாமும் சந்திரனுக்கு விண்கலம் ஏவிவிட்டோம். ரோவர் என்று
சொல்லப்படக்கூடிய தானியங்கி வண்டியில் நாம் அனுப்பிய சமிக்ஞைகளுக்கு ஏற்ப
செயல்படக்கூடிய ஒளிப்படம் எடுக்கும் கருவி பல படங்களை எடுத்து அனுப்பி விட்டது.
மாதிரி மண் பரிசோதனை செய்வதற்கும் வழிவகை செய்து விட்டோம். தமிழ்த்துகள்
எல்லா
கோள்களிலும் குடியேறும் காலம் விரைவில் வந்துவிடும். விண்வெளிப் பாதை அமைக்கும்
பணி விரைவில் நடைபெறும். ஒளிரும் நிலாக்கள் ஆங்காங்கே விண்ணில் நிறுத்தப்படும். இனி பூமிக்கு இரவு என்பதே
கிடையாது என்ற நிலை உருவாகும். தமிழ்த்துகள்
தானியங்கி
பணம் வழங்கும் எந்திரத்தையே இன்னும் அதிசயமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு
இருக்கிறோம். பல்வேறு பணப்பரிவர்த்தன முறைகள் வந்துவிட்டன. இணையதளம் மூலம்
இணைக்கப்பட்ட பிறகு வங்கிச் செயல்பாடுகள் மிக எளிதாகிவிட்டன. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அறிவியலின்
ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு கணினி என்ற நிலை மாறி செயற்கை நுண்ணறிவு என்று ஆகிவிட்டது. உலகெங்கும் எந்திர மனிதர்கள் வீதி
வலம் வருகிறார்கள். புத்தகங்களை நீங்கள் விரும்பும் மொழியில் வாசிக்கிறார்கள்.
நீங்கள் எந்த மொழியில் பேசினாலும் நீங்கள் நினைக்கும் மொழிக்கு அதனை மொழிமாற்றம்
செய்கிறார்கள். தமிழ்த்துகள்
உங்கள்
பேச்சுக்குத் தக்கபடி கையெழுத்துப் பிரதி ஆக எழுதித் தருகிறார்கள். நொடியில் படம்
வரைந்து தருகிறார்கள். கதவுகளில் விரும்பும் வடிவங்களில் சித்திரவேலைப்பாடுகள்
செய்து தருகிறார்கள். தொடர்வண்டி நிலையங்கள், விமான நிலையங்கள் முதலியவற்றில் தானியங்கி பயணச்
சீட்டு வழங்கும் பணியைச் செய்கிறார்கள். தமிழ்த்துகள்
சிக்கலான
அறுவை சிகிச்சைகளை மனிதர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக மனித இயந்திரங்கள் செய்து
காண்பித்துவிட்டன. உயிர் போய்விட்டால் என்ன செய்வது என்ற கவலை இனி தேவை இல்லை.
உங்களைப் போலவே ஒரு மெழுகு உருவம் செய்து அதற்குள் ஏ ஐ தொழில்நுட்பம் செலுத்தப்பட்டுவிட்டால்
போதும் நீங்கள் மறுபிறவி எடுத்ததுபோல் நடமாடிக் கொண்டிருப்பீர்கள்!
உலகமெங்கும்
இணைய வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. குளோபலைசேஷன் என்ற உலகளாவிய
வணிகம் சாத்தியமாகிவிட்டது. கைரேகைகளைக் கொண்டு சோதிடம் சொல்லும் மனிதர்களைத்தான்
நாம் பார்த்திருப்போம். ஆனால் இன்று செயற்கை நுண்ணறிவு நம் கைவிரல் ரேகைகளை கொண்டு
நம் வாழ்வியலைப் புட்டுப் புட்டு வைக்கிறது. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
பாதுகாப்புத்
துறையில் எட்ட முடியாத உயரத்திற்கு பறந்து சென்று வேவு பார்த்து வரும் ட்ரோன்கள் நுண்ணறிவின்
விரிவே ஆகும். ரேடார் மூலம் பெறப்படும் தகவல்களைக் கொண்டு தானே செயல்பட்டு விமானங்களிலும்
ஏவுகணைகளில் நுண்ணறிவு பயன்படுகிறது. தமிழ்த்துகள்
மண்ணில்
இருக்கக்கூடிய இயற்கை எரிவாயு நீர்வளம் மற்றும் கனிம வளங்களை உயர் தொழில்நுட்பம்
மூலம் கண்டுபிடிப்பதற்கு நாம் விண்ணில் செயற்கைக்கோள்களை அனுப்பி வருகிறோம். தானே
சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவை எந்திரங்கள். ஆனால் நாம் கொடுக்கும் ஆணைகளுக்கு ஏற்ப
மிகத் துல்லியமாகச் செயல்படுபவை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்த்துகள்
"என்ன
வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? உலகெங்கும்
உள்ள நாடுகளில் இந்தியர்களே பெரும்பாலும் கணினி வல்லுநர்களாகப் பணியாற்றி வருகிறார்கள்.
நம்முடைய தொழில்நுட்பம் நுண்ணறிவு இவற்றைக் கொண்டு உலகின் வல்லரசாக இந்தியா
விரைவில் மாறும். தமிழ்த்துகள்
விலங்கோடு
விலங்காக காடுகளில் வாழ்ந்த மனிதன் இன்று விண்ணைத் தொடும் சாதனைகள் படைத்து
வருகிறான். அதற்கு நுண்ணறிவு அடிப்படையாக இருக்கிறது. எட்ட முடியாத உயரம் என்பது
எதுவும் இனி கிடையாது! தமிழ்த்துகள்
ஊதி
அணைத்து விட நாம் ஒன்றும் அகல் விளக்கு அல்ல! சூறாவளிக்கும் அணையாத சூரிய விளக்கு!
மண்ணை ஆண்டதும் நாம்தான் நாளை விண்ணை ஆள்வதும் நாம்தான்! சோம்பிக்கிடந்தால்
சிலந்தியும் நம்மைச் சிறை பிடிக்கும்; எழுந்து நடந்தால் இமயமும் நமக்குக் குடை
பிடிக்கும்! தமிழ்த்துகள்
மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி. 9443323199 தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்