கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, August 14, 2024

சுதந்திர தின வாழ்த்து இந்திய விடுதலை நாள் வாழ்த்துக் கவிதை

 Indian Independence Day Celebration Poem


இந்திய விடுதலை நாள் விழா வாழ்த்துக் கவிதை

 

பாரினில் எங்கும்

பட்டொளி வீசிப்

பறக்குது மூவர்ணம்!

 

தேரினில் சாமி

வருவதுபோல் நம்

தேசம்

வலம் வரணும்!

 

கல்வி மருத்துவம்

விவசாயம் எனப்

பல்துறை

வளர்ச்சி கண்டோம்!

 

விண்வெளி விஞ்ஞானம்

விளையாட்டு என

அனைத்திலும்

வளர்ந்து நின்றோம்!

 

உலகத்தில் உள்ள

நாட்டிற்கு எல்லாம்

திலகம் நம்

தேசம்தான்!

 

வி(ல)ளக்கிட முடியா

வேற்றுமை இருப்பினும்

விளக்கு போல்

ஒற்றுமை தான்!

 

பட்டறிவோடு

பாதை காட்டும்

தலைவர்கள்

பலர் கொண்டோம்!

 

பலமுடன் செயல்படும்

இளைஞர் பட்டாளம்

நிறையவே

நாம் கொண்டோம்!

 

வளர்ச்சிப் பாதையில்

வளர்பிறையாகவே

வானம்

அளந்திடுவோம்!

 

தளர்ச்சி இல்லாத

முயற்சிகள் மூலம்

நாளும்

வளர்ந்திடுவோம்!

 

முன்னோர் செய்த

தியாகங்கள் எல்லாம்

இன்று நாம்

நினைத்திருப்போம்!

 

அன்னார் அனைவரின்

கனவுகள் மெய்ப்பட

நனவாக்கி

நிறைத்திருப்போம்!

 

கடமைகள் செய்து

உரிமைகள் போற்றிச்

சுதந்திரம்

சுவாசிப்போம்!

 

இறுதி வரைக்கும்

இந்திய நாட்டினை

இதயத்தில்

நேசிப்போம்!

 

அனைவருக்கும்

இனிய விடுதலை நாள் நல்வாழ்த்துகள்

 

தோழமையுடன்

சேவியர்

தமிழ்த்துகள்

Blog Archive