பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30.08.2024
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
அதிகாரம் / Chapter: புகழ் / Renown
குறள் 240:
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
மு.வரதராசன் விளக்கம்:
தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.
பொன்மொழி :
1) நல்ல குடும்பத்தில் பிறந்தாலும்.. நல்ல வசதிகள் இருந்தாலும்.. கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்று ஆகின்றான். – சாணக்கியர்
2) ஒரு காரியம் நிறைவேறும் வரை ஒரு உண்மையான அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான். – சாணக்கியர்
, பழமொழி :
The old fox is caught at last
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்
பொது அறிவு :
தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது?
விடை : வேலூர்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
முக்கியச் செய்திகள் : 30.08.2024 - வெள்ளி
மாநிலச்செய்தி:
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதை ஒட்டி, வரும் 1ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்!
உள்நாட்டுச்செய்தி:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது
உலகச்செய்தி:
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு: முதலீட்டாளர்கள் சந்திப்பில் இன்று உரையாற்றுகிறார்
விளையாட்டுச்செய்தி:
பாராலிம்பிக் கோலாகல தொடக்கம்: களைகட்டியது பாரிஸ்.
School Morning Prayer Activities in English Today
Important News:30.08.2024 - Friday
State News:
Due to the Formula 4 car race in Chennai, the traffic will be changed until the 1st!
National News:
The Devasthanam has announced that Aadhaar is mandatory to buy Lattu Prasad at Tirupati Eyumalayan Temple
World News:
Chief Minister M.K.Stalin, who has visited Tamil Nadu to attract industrial investments, receives a warm welcome in the US: Addresses investors' meet today
Sports News:
Paralympic sensational start: Weeded Paris