பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
05-03-2026.வியாழன் .
திருக்குறள் :
பால்: பொருட்பால்
; இயல்: அரசியல் ;
அதிகாரம் : மடியின்மை ;
குறள் எண் : 606.
குறள் :
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது.
உரை :
நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.
பழமொழி :
> காலத்தே கடமையைச் செய்.
Take time by the forelock.
இரண்டொழுக்க பண்புகள்:
1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.
2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.
பொன்மொழி :
உங்களை மேம்படுத்த நினைப்பவர்களுடன் மட்டுமே பழகுவது, உங்களுடைய சிறப்பு திறமைகளை வெளியே கொண்டு வருகிறது. - எபிக் டெட்டஸ்.
பொது அறிவு :
01.ஜப்பானிய தேசிய உடையின் பெயர் என்ன?
கிமோனோ - Kimono
02.உலகின் மிக நீளமான குகை எது?
மாமத் குகை - Mammoth cave
அமெரிக்கா -America
English words:
Hostilities - acts of fighting or war between enemies.
Conflagration - very large and destructive fire.
தமிழ் இலக்கணம் :
இன்று சில வாகனங்களின் தமிழ்ப் பெயர்களைக் காண்போம்
பஸ் - பேருந்து
கார் - மகிழுந்து
ட்ரெயின் - தொடர் வண்டி
சைக்கிள் - மிதி வண்டி
இவைகள் நாம் அறிந்த தமிழ்ப் பெயர்கள் தான்.
ஆனால் ரிக்க்ஷா, ஆட்டோ, பைக், லாரி, ஹெலிகாப்டர், வான் இவைகளின் பெயர் தெரியுமா? நாம் இதை உபயோகப் படுத்துவது இல்லை.
எனவே தெரியாது. இன்று தெரிந்து கொள்வோம்
ரிக்ஷா - மிதியிழுவை
ஆட்டோ - தானி
பைக் - விசையுந்து
வேன் - மூடுந்து
லாரி - பொதியுந்து
ஹெலிகாப்டர் - உலங்கூர்தி ஒரு வேளை இதை பயன்படுத்தா விட்டாலும்
தெரிந்து வைத்திருப்பது நம் கடமை.
அறிவியல் களஞ்சியம் :
துருவ காந்தம் (Magnetic Pole) மற்றும் காந்தப் புலம் (Magnetic Field) இரண்டும் ஒன்றல்ல. ஆனால் அவை நெருங்கிய தொடர்புடையவை. காந்தத்தின் வட/தென் முனைகள் துருவங்கள் எனப்படும் காந்தப் புலம் என்பது காந்தத்தைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத காந்த விசைப்பகுதி ஆகும். காந்தப்புலம் துருவங்களில் வலிமையாக இருக்கும்.
நீதிக்கதை -அம்மா சொல் கேள்!
செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான். புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.
வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, "உனக்கு என்னவேண்டும்?" என்று கேட்டது. ஓநாயும் "நண்பா, நண்பா...இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை....." என்று வருத்தத்துடன் கூறியது.
"அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி. "சேச்சே...அதெலாம் சுத்தப் பொய்!" என்றது ஓநாய். "அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!" என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.
“உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.
அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா?
இன்றைய செய்திகள் 05.03.2026
*ரயில்வே சட்டத்தின்படி, தண்டவாளங்கள் அருகே பட்டம் விடுபவர்களுக்கு 6 மாதம் தண்டனையோ விதிக்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
* வளைகுடாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு வசிக்கும் சுமார் 1 கோடி இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கையை துவங்கியுள்ளது.
* ஈரானின் மினாப் நகரில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 165 பள்ளி மாணவிகள் உயிரிழந்து உள்ளனர்.
விளையாட்டுச் செய்திகள்
*மும்பையில் உள்ள வான்கடே
மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.
Today's Headlines 05.03.2026
* According to the Railway Act, those who fly kites near railway tracks may face up to 6 months of imprisonment, it has been announced.
* As tension continues in the Gulf region, the Indian government has begun measures to evacuate nearly 10 million Indians living there.
* In the city of Minab, Iran, 165 schoolgirls have reportedly been killed in an attack carried out by the U.S. military.
Sports News
In the second semi-final of the 2026 T20 World Cup to be held today at the Wankhede Stadium in Mumbai, the Indian team will face England.
Prepared by
Covai women ICT போதிமரம்
