கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, March 11, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-03-2026. புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

11-03-2026. புதன் 

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம் : ஆள்வினையுடைமை ;

குறள் எண் : 617.

குறள் :

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளாள் தாமரையி னாள்.

உரை :

ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

பழமொழி :

வாழு வாழ விடு.

Live and let live.

இரண்டொழுக்க பண்புகள்:

1. திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே ஒரு செயலைத் தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

பொன்மொழி :

* எல்லோரையும் அன்புடன் அரவணைக்கும் ஒருவரால் எந்த நிலையையும் கடந்து முன்னேற முடியும். அன்னை தெரசா .

பொது அறிவு :

01.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி - 
Dr. Muthulakshmi Reddy

02.இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

டாக்டர் விக்ரம் சாராபாய் - 
Dr.Vikram Sarabhai

English words :

+ Skippered - actors a captain of a boat or a ship

+ Exhausted - completely tired

அறிவியல் களஞ்சியம் :

புவியியல் துருவங்கள் (geographic poles) என்பவை பூமியின் சுழற்சி அச்சில் உறுதியாக நிலைத்திருப்பவை. ஆனால் காந்தத் துருவங்கள் அப்படியல்ல; அவை காலப்போக்கில் மெதுவாகவும், சில சமயங்களில் வேகமாகவும் இடம் மாறிக்கொண்டே  (navigation), இருக்கின்றன. இந்த நகர்வு, (geophysical surveys), அறிவியல் ஆராய்ச்சிகள் எனப் பல துறைகளில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

மார்ச் 11 - சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் அவர்களின் நினைவுநாள்


 சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் - Sir Alexander Fleming.

பிறப்பு ஆகஸ்ட் 6, 1881 - இறப்பு மார்ச் 11, 1955.

நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.

நீதிக்கதை -சிங்கமும் கழுதைப்புலியும்

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். கழுதைப் புலியோ, “நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது.

குட்டி கழுதைப்புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்". அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. ஏன் இங்கே வந்தாய்?” -கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்". குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: "பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?".

"மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.

எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிந்து வைத்திருப்பவன் புத்திசாலி.

இன்றைய செய்திகள் - 11.03.2026

* மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

* இந்தியாவிற்கு 700 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 85 சதவீதம் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் வருங்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

* இந்தியா சுமார் 10 மில்லியன் டன் யூரியா மற்றும் 6.5 மில்லியன் டன் டி.ஏ.பி உரங்களை இறக்குமதி செய்து வருகிறது. இதில் 75% நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது

*விளையாட்டுச் செய்திகள்

* ஐபிஎல் போட்டி அட்டவணை நாளை வெளியீடு..!

ஐபிஎல் அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்படுகிறது.முதல் 20 நாட்களுக்கான அட்டவணை வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது.

Today's Headlines - 11.03.2026

* Approval from the Union Cabinet to upgrade Madurai Airport into an international airport..

* India requires about 700 million cubic meters of water, out of this, 85% is used for food production, due to the increasing population, there is a possibility of water shortage in the future.

* India imports around 10 million tons of urea and 6.5 million tons of DAP (Di-Ammonium Phosphate) fertilizers, About 75% of these fertilizers are imported from other countries.

SPORTS NEWS

IPL match schedule to be released tomorrow. The IPL schedule will be released in two phases and the schedule for the first 20 days will be announced initially.

Prepared by

Covai women ICT போதிமரம் 

தமிழ்த்துகள்

Blog Archive