கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, March 25, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-03-2026. புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

25-03-2026. புதன் 

திருக்குறள் :

பால்: பொருட்பால்

; இயல்: நட்பியல் ;

அதிகாரம் : புல்லறிவாண்மை ;

குறள் எண் : 842.

குறள் :

அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும் 
இல்லை பெறுவான் தவம்.

உரை :

அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை, அப்பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

பழமொழி :

பேராசை பெரு நஷ்டம்.

Grasp all lose all.

இரண்டொழுக்க பண்புகள் :

1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி :

* முடியும் என்று நம்பினால் வாய்ப்புகளைக் காண்பீர்கள். முடியாது என்று நினைத்தால் தடைகளே கண்களுக்குத் தெரியும்.

பொது அறிவு :

01.தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் எது?

தம்பிரான் வணக்கம் - Thambiran Vanakkam

02.உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம் எங்குள்ளது?

இந்தியா - சென்னை உயர் நீதிமன்ற வளாகம்

India- Chennai high court complex

English words :

+ Canvassing - Asking people for votes

Rally - Public meeting to support a candidate

தமிழ் இலக்கணம்:

கற்போம் தமிழ்

நேற்று காற்று வீசும் திசையின் அடிப்படையில் காற்றின் பெயர்கள் பார்த்தோம். இன்று வேக அடிப்படையில் அதன் பெயர்களைப் பார்ப்போம்.

0-6 கி.மீ

மென்காற்று

6-11 கி.மீ

இளந் தென்றல்


11-19 கி.மீ

தென்றல்

20-29 கி.மீ

புழுதிக் காற்று

30-39 கி.மீ

ஆடிக் காற்று

40 - 100 கிமீ

கடும் காற்று

101 கிமீ மேல்

புயல் காற்று

அறிவியல் களஞ்சியம் :

கரப்பான் பூச்சி தலை துண்டிக்கப்பட்டாலும் ஒரு வாரம் வரை உயிர்வாழும்.

மார்ச் 25 - வில்லியம் கோல்கேட் அவர்களின் நினைவுநாள

- William Damian "Will" Colgate:

பிறப்பு ஜனவரி 25, 1783 -இறப்பு மார்ச்சு 25, 1857.

இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர்; அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் என்ற (தற்போது இது புராக்டர் அன்ட் கேம்பல்) பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை 1806-ல் தொடங்கியவர்.

நீதிக்கதை -இரண்டு நண்பர்கள்

ராமுவும் மாரியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றத்தார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மாரியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.

ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். மாரி சலிப்புடன் சொன்னான்" "என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?"

ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: "நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வர முடியும்"

ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!!

1. நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம்.

2. ஏன் நம்மால் ஒரு காரியத்தைச் சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட, எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும்.

3. அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால், அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது.

4. முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

இன்றைய செய்திகள்

25.03.2026

* கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகள் ஜப்பானிய மொழியை கற்பதற்கு வாய்ப்பு: இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை ஏற்பாடு

* இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க, தற்போது வீடுகளுக்கு வழங்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் அளவை 10 கிலோவாக குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன.

*ஈரான் மீதான போர் 5நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்

விளையாட்டுச் செய்திகள்

*சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரீயூனியன் விழா கோலாகலமாக நடை பெற்றது. மைதானத்தில் ஏராளமான சென்னை ரசிகர்கள் உற்சாகத்துடன் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.

Today's Headlines 25.03.2026

* School children get an opportunity to learn Japanese during the summer holidays: Organized by the Indo-Japan Chamber of Commerce..

* To address the cooking gas shortage in India, oil companies have suggested reducing the size of domestic LPG cylinders from 14.2 kg to 10 kg.

* U.S. President Donald Trump has announced a 5-day pause in the war against Iran.

SPORTS NEWS

The Chennai Super Kings (CSK) reunion event was held grandly at the Chepauk Stadium in Chennai. A large number of CSK fans enthusiastically attended and enjoyed the celebration.

Prepared by

Covai women ICT போதிமரம் 

தமிழ்த்துகள்

Blog Archive