கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, March 16, 2026

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வினா, விடை வகைகள்

7th tamil model notes of lesson

lesson plan March 23

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-03-2026 முதல் 27-03-2026

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

மானுடம் வெல்லும் – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

வினா, விடை வகைகள்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-716 மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளையும் பாடல்களில் படித்த ஒரு குறிப்பிட்ட சொல், சொற்றொடர்கள் போன்றவற்றின் பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் வெளிப்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

சொற்களின் தன்மையினை மொழியில் அடையாளம் கண்டு பயன்படுத்துதல்

9.நுண்திறன்கள்

வினா, விடை வகைகள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2024/08/5.html

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_95.html

https://tamilthugal.blogspot.com/2021/07/4-10th-tamil-online-test-vina-vidai.html

https://tamilthugal.blogspot.com/2021/03/tamil-ilakkanam-tenth-vina-vakaikal.html

https://tamilthugal.blogspot.com/2021/04/10-tenth-tamil-ilakkanam-vidai-vakaikal.html

https://tamilthugal.blogspot.com/2019/09/56.html

11.ஆயத்தப்படுத்துதல்

வினாக்கள் பயன்படும் சூழல்கள் பற்றிக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

வினா, விடை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          வினா, விடை வகைகளை விளக்குதல். எடுத்துக்காட்டுகள் குறித்து மாணவர்களுடன் உரையாடுதல். வெளிப்படை விடைகள், குறிப்பு விடைகள்  பற்றி அறியச் செய்தல்.

          விடை வகைகள் குறித்து மாணவர்களைப் பேசச் செய்தல். அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் வினா, விடைகளைப் பட்டியலிடுதல்.

          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

வினா விடைகள் குறித்து அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – வினா ............. வகைப்படும்.

          ந.சி.வி – நேர்விடை என்பது யாது?

உ.சி.வி – கொளல் வினாவையும் கொடை வினாவையும் வேறுபடுத்துக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

விளையாட வருவாயா? என்னும் வினாவிற்குப் பலவகை விடைகளை எழுதிப்  பழகுதல்.

தமிழ்த்துகள்

Blog Archive