9th tamil model notes of lesson
lesson plan March 23
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
23-03-2026 முதல் 27-03-2026
2.அலகு
1 - 7
3.பாடத்தலைப்பு
7 இயல்கள்
முழு ஆண்டுத்
தேர்வுக்குத் தயார் செய்தல்.
மாதிரி வினாத்தாள்கள்
https://tamilthugal.blogspot.com/2026/02/2026-9-1.html
https://tamilthugal.blogspot.com/2026/02/2026-9-2.html
https://tamilthugal.blogspot.com/2026/02/2026-9-3.html
4.திருப்புதல்
வினாக்கள்
பிழை நீக்கி எழுதுக.
அ. மழையே பயிர்க்கூட்டமும்
உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.
ஆ. சூறாவளியின் போது மேல்மாடியில்
தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.
அ Archaeology ஆ Hero Stone
இடவாகுபெயர் – குறிப்பு தருக.
தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.
சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும்
பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக்
கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.
பொருள் எழுதித் தொடரமைக்க.
அ. குளவி, குழவி ஆ. பரவை, பறவை
பரப்புமின் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
தோழியை எழுப்பும் நிகழ்வைத் திருவெம்பாவை
எவ்வாறு காட்சிப்படுத்துகிறது?
தமிழ்விடு தூது உணர்த்தும் தமிழின்
சிறப்புகளை எழுதுக.
உரைப்பத்தியைப் படித்து
வினாக்களுக்கு விடை தருக.
தொன்மையும்
தனித்தன்மை வாய்ந்த இலக்கண இலக்கிய வளமும் உடையது தமிழ் மொழி. திராவிட மொழிகளில் பிற
மொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழே ஆகும். தமிழ் மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின்
தாய் மொழியாகக் கருதப்படுகிறது. ஒரே பொருளைக் குறிக்க பல சொற்கள் அமைந்த சொல் வளமும்
சொல்லாட்சியும் நிரம்பப் பெற்ற மொழி தமிழே ஆகும்.
அ. திராவிட மொழிகள் சிலவற்றின் தாய்
மொழியாகக் கருதப்படும் மொழி எது?
ஆ. தமிழின் சொல் வளமும் சொல்லாட்சியும்
குறித்து எழுதுக.
இ. உரைப்பத்திக்குப் பொருத்தமான
தலைப்பு தருக.
