கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, March 16, 2026

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புணர்ச்சி

8th tamil model notes of lesson

lesson plan March 23

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-03-2026 முதல் 27-03-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

8

4.பாடத்தலைப்பு

குன்றென நிமிர்ந்துநில் – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

புணர்ச்சி

6.பக்கஎண்

167 - 169

7.கற்றல் விளைவுகள்

T-816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல். (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்)

8.கற்றல் நோக்கங்கள்

புணர்ச்சி விதிகளை அறிந்து சொற்களைப் பிழையில்லாமல் எழுதுதல்.

9.நுண்திறன்கள்

இயல்பு புணர்ச்சிக்குரிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பட்டியல் தயாரித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/11/6-8th-tamil-mindmap-unit-6_7.html

https://tamilthugal.blogspot.com/2021/10/6-punarchi-8th-std-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2021/05/punarchi-vithikal-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2020/07/punarchi-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2020/01/8-2-3.html

https://tamilthugal.blogspot.com/2019/12/punarchi-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_51.html

11.ஆயத்தப்படுத்துதல்

புணர்ச்சி பற்றிக் கூறுதல்.

12.அறிமுகம்

புணர்ச்சி, நிலைமொழி, வருமொழி குறித்து அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

மாணவர்கள் அறிந்த புணர்ச்சி குறித்துக் கூறச்செய்தல். நெசவின் அவசியம் பற்றி மாணவர்களைக் கூறச்செய்தல். மாணவர்கள் அறிந்த பிரித்தெழுதுக, சேர்த்தெழுதுக பற்றிக் கூறச்செய்தல். புணர்ச்சி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் கதையை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

புணர்ச்சி வகைகள், விதிகள் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – விகாரப் புணர்ச்சி .............................. வகைப்படும்.

                   பாலாடை – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி .....................................

          ந.சி.வி – இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

          உ.சி.வி –      விகாரப் புணர்ச்சிகளுக்கு உதாரணங்களை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

இயல்பு புணர்ச்சி உதாரணங்களைப் பட்டியலிடுக.

தமிழ்த்துகள்

Blog Archive