கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, March 13, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-03-2026. வெள்ளி

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

13-03-2026. வெள்ளி

திருக்குறள் :

பால்: பொருட்பால் ;

இயல்: நட்பியல்

அதிகாரம் : தீ நட்பு ;

குறள் எண்: 811.

குறள்:

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை 
பெருகலிற் குன்றல் இனிது.

உரை :

அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

பழமொழி:

நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.

All is well that ends well.

இரண்டொழுக்க பண்புகள்:

1. திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

பொன்மொழி :

* வெற்றி மகிழ்ச்சிக்கு திறவுகோல் அல்ல மகிழ்ச்சியே வெற்றிக்கு திறவுகோல்.

பொது அறிவு :

01.இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய காய்கறி எது?

வெங்காயம் - Onion

02. மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை பட்டத்தை வழங்கியவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Netaji Subhas Chandra Bose

English words:

Carry on - continue to do something

Carry out - perform or complete task

தமிழ் இலக்கணம்:

வயிறு + இல் = வயிறில் அல்ல

*வயிற்றில்*

கயிறு + இல் = கயிறில் அல்ல

*கயிற்றில்*

கயிறு + ஐ = கயிறை அல்ல

*கயிற்றை*

வீடு + ஐ = வீடை அல்ல

*வீட்டை*

ஆறு + பக்கம் = ஆறுபக்கம் அல்ல

*ஆற்றுப்பக்கம் *

இப்போது நீங்கள் மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் று, டு ஆகிய எழுத்துகள் உடன் வேற்றுமை உருபு அல்லது மற்ற சொற்கள் சேர்ந்து வரும் போது இந்த எழுத்துகளுக்கு முன்னாடியும் வல்லினம் மிகுந்து வரும்.

அறிவியல் களஞ்சியம் :

மனித மூளையானது ஒரு சிறிய மின்விளக்கை ஒளிரச் செய்யக்கூடிய மின்சாரத்தை (சுமார் 12-25 வாட்ஸ்) உருவாக்குகிறது.

நீதிக்கதை - கருத்துடன் செயல்படு

ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான். அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை. அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தினமும் கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான். அங்கு காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது. ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

13.03.2026

* அமராவதி, காவிரி ஆறுகள் இணையும் இடத்திலிருந்து கரூர், அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட 7 தொகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீரைக் கொண்டுவர ரூ.5,400 கோடி புதிய திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருவதால் ஸ்விக்கி மற்றும் ஸோமாடோ போன்ற பார்ட்னர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

* ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் டிரோன்கள், ஏவுகணைகளை வீசியது. பக்ரைனில் உள்ள முக்கிய எண்ணை சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

விளையாட்டுச் செய்திகள்

இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான விவியன் ரிச்சர்ட்சும் இந்திய அணியைப் புகழ்ந்து உள்ளார்.

Today's Headlines

13.03.2026

* The Tamil Nadu government has approved a new project worth 25,400 crore to bring water to lakes and ponds in 7 constituencies including Karur, Aravakurichi, Ottanchathiram, Athur, and Dindigul from the point where the Amaravathi and Kaveri rivers meet.

* Many restaurants are being temporarily closed, which has affected partners such as Swiggy and Zomato.

* Iran launched drones and missiles toward the United Arab Emirates. Attacks were also carried out on major oil storage facilities in Bahrain.

SPORTS NEWS

The Indian team is receiving widespread praise not only from former Indian players but also from international personalities. In that line, former West Indies cricket team captain and legendary batsman Vivian Richards has praised the Indian team.

Prepared by

Covai women ICT போதிமரம் 

தமிழ்த்துகள்

Blog Archive