மதிப்பீட்டுச் செயல்பாடு
அ) ’கரிக்கோல் தன் வரலாறு கூறுதல் ‘ என்னும் கட்டுரையை நிறைவு செய்க.
முன்னுரை
நான் ஒரு கரிக்கோல் என் கதையைப்
பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
எனது பண்புகள்
நான் மரத்தால் செய்யப்பட்டேன் .
மேலும் நான் பல வண்ணங்களில் இருப்பேன் .
குழந்தைகள் என்னை கூர்மையாக செதுக்கிப்
பயன்படுத்துவார்கள்.
எனது பயன்கள்
நான் அழகாக எழுத ப் பயன்படுவேன் . பல
வடிவங்களில் ஓவியம் வரையவும்
பயன்படுவேன் . குழந்தைகளுக்கு என்னை
மிகவும் பிடிக்கும்.
முடிவுரை
நான் என் வாழ்நாளில் பிறருக்கு எப்போதும்
உதவியாக இருப்பேன் . என் தியாகத்தை உணர்ந்து நீங்களும் என்னைப்
போல் பிறருக்கு உதவியாக வாழுங்கள்.
ஆ) நீங்களாக எழுதப் பயிற்சி செய்து பழகுங்கள்.
உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பழம் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
விரும்பினால் இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.
மாம்பழம் சுவை மிகுந்தது. முக்கனிகளுள் ஒன்று. செந்தூரம், மல்கோவா,
பங்கனப்பள்ளி எனப் பல மாம்பழவகைகள் தமிழ்நாட்டில் உள்ளன.
மாம்பழத்தில் உயிர்ச்சத்து ஏ, பி அடங்கியுள்ளன. பழுத்த மாம்பழம்
மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு வண்ணங்களில் இருக்கும். மாம்பழத்திலிருந்து
மாம்பழச்சாறு, குளிர்பானங்கள், மாம்பழப் பனிக்குழைவு போன்றவை
செய்யப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் மாம்பழம்
மிகுதியாக விளைகின்றது. இந்திய அளவில் தமிழகம் அதிக மாம்பழ
விளைச்சலைக் கொடுக்கிறது.
நான் விரும்பும் பழம் மாம்பழம்
முன்னுரை
பழங்களில் மிகவும் சுவையானது மாம்பழம். முக்கனிகளுள் முதன்மையாக உள்ளது இம்மாம்பழமே.. நான் விரும்பும் மாம்பழம் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
வகைகள்
செந்தூரம், மல்கோவா, பங்கனப்பள்ளி, கிளிமூக்கு, காசாலட்டு என்று பல வகைகளில் தமிழகத்தில் மாம்பழங்கள் கிடைக்கின்றன.
சத்தும் வண்ணமும்
மாம்பழத்தில் உயிர்ச்சத்து ஏ, பி அடங்கியுள்ளன. பழுத்த மாம்பழம்
மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு வண்ணங்களில் இருக்கும். பழமாகும் முன்
மாங்காய் பச்சை வண்ணத்தில் இருக்கும்.
கிடைக்கும் பொருள்கள்
மாம்பழத்திலிருந்து மாம்பழச்சாறு, குளிர்பானங்கள், மாம்பழப்
பனிக்குழைவு போன்றவை செய்யப்படுகின்றன.
முடிவுரை
சேலம் மாவட்டத்தில் மாம்பழம் மிகுதியாக விளைகின்றது. இந்திய
அளவில் தமிழகம் அதிக மாம்பழ விளைச்சலைக் கொடுக்கிறது. நம்
தேசியப் பழமாக இருக்கும் மாம்பழமே நான் விரும்பும் பழமாகும்.