மதிப்பீட்டுச் செயல்பாடு
அ) பத்தியைப் படித்துப் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடை எழுதுக.
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். நம் தாய் மொழியாம் தமிழ்
காலத்தால் முந்தையது மட்டுமன்று; உலகின் முதன்மொழியும் ஆகும். தமிழிலக்கணம்
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து இலக்கணக் கூறுகளைக் கொண்டு
திகழ்கிறது. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை நம் தமிழ்மொழிக்கு மட்டுமே
உண்டு. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடலடி உலகிற்கான உயர்ந்த
கருத்தை வெளிப்படுத்துகிறது. உலகிலுள்ள எல்லா ஊரும் நம்முடைய ஊரே . உலகில்
உள்ள எல்லா மக்களும் நம் உறவினர்களே ! என்பதுதான் அக்கருத்து.
1. தமிழ் என்னும் சொல்லின் பொருள் யாது?
இனிமை
2. “உறவினர்” என்னும் பொருள் தரும் சொல்லைப் பத்தியிலிருந்து எடுத்தெழுதுக.
கேளிர்
3. தமிழ்மொழியில் என்னென்ன இலக்கணப் பிரிவுகள் உள்ளன?
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.
4. தமிழிலக்கணம், புறநானூறு – சொற்களைப் பிரித்து எழுதுக.
தமிழ்+இலக்கணம்
புறம்+நானூறு
5. உலகிற்கான உயர்ந்த கருத்தை உணர்த்திய பாடலடியை எழுதுக.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
6. பத்தியில் உள்ள பெயர்ச்சொற்கள் ஐந்தினை எடுத்து எழுதுக
தமிழ்
இனிமை
ஊர்
அணி
வாழ்க்கை