மதிப்பீட்டுச் செயல்பா டு:
அ) கோடிட்ட இடங்களை நிரப்பி உரையாடலை நிறைவு செய்க.
[துரித உணவு – விரைவு உணவு கெடுதலை பற்றித்
தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான உரையாடல்]
இளமாறன் : தாத்தா எனக்கு வயிறு மிகவும் வலிக்கிறது.
தாத்தா : இரு, இதோ வருகிறேன் வீட்டிற்குள் சென்று ஒரு
பாத்திரத்தில் மருந்து எடுத்து வருகிறார் . இளமாறா! இந்தா இதைச்
சாப்பிடு ! வயிற்றுவலி சிறிது நேரத்தில் சரியாகிவிடும்.
இளமாறன் : தாத்தா இது என்ன ?
தாத்தா : வயிற்றுவலிக்காக நம் வீட்டில் இருக்கும் மருந்து, சரி நேற்று
இரவு நீ என்ன சாப்பிட்டாய்?
இளமாறன் : நேற்று நான் அப்பாவுடன் துரித உணவு கடைக்குச் சென்று
விரைவு உணவு சாப்பிட்டேன் .
தாத்தா : நான் நினைத்தது சரிதான் . அந்த விரைவு உணவுதான்
வயிற்று வலிக்குக் காரணம்.
இளமாறன் : ஏன் தாத்தா ! விரைவு உணவு கெடுதியா ?
தாத்தா : ஆம். விரைவு உணவில் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும்
மீண்டும் பயன்படுத்துதல்; அதிகக் காரமும் அவ்வுணவில்
சேர்க்கப்படும் சில செயற்கைச் சுவையூட்டிகள்
போன்றவையும்தான் நம் உடலுக்குக் கேடு விளைவிக்கும்.
இளமாறன் : வகுப்பில் ஆசிரியரும் இதைத் தான் கூறினார் .
தாத்தா : இனி மேல் விரைவு உணவு உண்ணாதே.
இளமாறன் : சரி தாத்தா .
ஆ. உரையாடலை நிறைவு செய்க.
(புவி வெப்பமடைதல் பற்றி நண்பர்கள் இருவருக்கு இடையிலான உரையாடல்)
கந்தன் மாலையில் பள்ளியிலிருந்து தாமதமாக வீடு
திரும்புகிறான் . வழியில் தனது நண்பன் சங்கரைச்
சந்திக்கிறான் ........
சங்கர் : என்ன கந்தா ! பள்ளியிலிருந்து இவ்வளவு
தாமதமாக வருகிறாய்?
கந்தன் : வெயில் அதிகமாக இருந்ததால்
பள்ளியிலுள்ள மரத்தடியில் அமர்ந்து
வீட்டுப்பாடம் எழுதிவிட்டு வருகிறேன் .
சங்கர் : ஆமாம். நீ சொல்வது உண்மைதான் .
நேற்று முனியாண்டி தாத்தா வெயில்
தாங்காமல் மயங்கி விழுந்துவிட்டார் .
கந்தன் : பூமி அதிக சூடாகி விட்டதுபோல.....
சங்கர் : ஆமாம். அதற்குப் பெயர்தான் புவி வெப்பமடைதல் என்று சொல்வார்கள்.
கந்தன் : அப்படியா அதை எப்படித் தடுப்பது?
சங்கர் : குளிர்சாதனப்பெட்டி, குளிரூட்டி இவைகளின் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும். இவற்றால் புவி வெப்பமடைகிறது.
கந்தன் : வேறு என்ன செய்யலாம்?
சங்கர் : மரங்கள் வளர்க்கலாம், இயற்கையைக் காப்பதே புவியைக் காக்கும் ஒரே வழி.